Articles Archive for July 2009
அனுபவம் »
இந்த பாகத்தில் என்னுடைய வாடிக்கையாளர் அலுவகத்தில் அனுபவங்களையும், நான் மீண்டும் குறுகிய காலகட்டத்திற்கு மும்பை சென்று வந்ததையும் சொல்லி இத்துடன் இந்த செ.டூ.மு வை முடித்துக்கொள்கிறேன். நிறைய விஷயங்களை பற்றி எழுதவேண்டுமாதலால் இந்த முடிவு. அது மட்டுமில்லாமல் ஒரே விஷயத்தில் எழுதி கொண்டிருந்தால் எனக்கே போரடிக்கிறது, படிக்கும் உங்களுக்கு? தன்னைப் போல பிறரையும் நினை என்ற பழைய மொழி ஒன்று நினைவுக்கு வந்ததே இந்த முடிவுக்கு முக்கிய காரணம்.
இந்த பிரயாணங்கள் அதில் கிடைத்த கஷ்டமான இருந்தும் சுவாரஸ்யமான அனுபவங்களை தவிர்த்து, அலுவகத்தில் நாம் பொதுவாக எப்படி நடந்துகொள்கிறோம் என்பதே இந்த பாகத்தின் முக்கிய அம்சம். இது தவிர அப்படியொன்றும் பெரிதாக அனுபவம் கிடைத்துவிட போவதில்லை.
முதல் நாளிலிருந்து கடைசி நாள் வரையிலும் நாம் அதிகம் விஷயம் தெரிந்தவர்கள் என்ற பொய்யான கூற்றை உண்மையாக்க நாம் படும்பாடு இந்த உத்தியோகத்தில் …
