Home » பொது

நாங்களும் குருவிகள்தான்

29 July 2009 2 Comments

சிறுகச்சிறுக சேமிக்கும் இந்த சிட்டுக்குறுவிய பாருங்க….அப்பாவுக்கு அறுபதாம் கல்யாணம், அக்காவுக்கு அடுத்த வாரம் கல்யாணம், தம்பிய படிக்க வெக்கணும் என்று இதுபோல எந்த கவலையும் இல்லாத…ன்ற விளம்பரத்த பத்தி பேசப்போறோம்னு தலைப்பை பார்த்து ஏமாந்தா அதற்கு நான் பருப்பு..ச்சீ..இது….பொறுப்பில்ல.

ஏதோ பல பிகர்ங்களோட ப்ராகெட்ல மாட்டாம கஷ்டப்பட்டு திண்டாடி தெருப்பொறுக்காம, தண்ணில கொஞ்சமா மூழ்கி, படிச்சி முடிச்சி,பாரின்ல ஒரு வேலையும் தேடிக்கொண்டு போயி உட்காந்தா நம்ம பாசக்கார (நண்பர்கள்தான்யா…நண்வர்கள்தான்) புள்ளைங்க கொடுக்குற கொடாசல் இருக்குதே……தாங்கலைபா.

ஒரு வருஷம் முடிஞ்சி லீவுல வர்றேன்னு குமாருக்கு ஃபோனப் பண்ணினா…..அத எல்லா ஃப்ரெண்ட்ஸ் கிட்டேயும் வத்தி வெச்சிட்டான் பயபுள்ள. அவனவன் ஒரு ஐட்டத்தை வாங்கிட்டு வாடா மச்சான்னு சாட்டு, மெயிலுன்னு அன்புத் தொல்லைகள்.

பக்கத்து வீட்டு பார்வதி (பங்கஜம் வாய்தா வாங்கிண்டு ஊரப்பாத்து போயிட்டதால) அடுத்த வீட்டு அலமுன்னு (அம்புஜம் ஆத்துக்காருக்கு உடம்பு சரியில்லன்னு மன்னார்குடி போயிட்டாங்க மாப்ளே) அறிஞ்சவங்க தெரிஞ்சவங்கன்னு எல்லாரும் ஒரு தங்கக் காசு, 2 பவுன்ல செயின், பையனுக்கு சைண்டிஃபிக் கால்குலேட்டர், அது இதுன்னு லிஸ்ட்டு அனுப்பிட்டாங்க.

கிட்டதட்ட நம்மள (பாரின்ல வேலை செய்யறவன) ஒரு கொரியர் பாய்ஸ் மாதிரிதான் பார்க்கறாங்க. அட வீட்லயே அப்படிதான்னா அப்புறம் மத்தவங்கள பத்தி சொல்லணுமா…..ஒரு பாட்டில் பீர மூச்சு வுடாம குட்ச அட்த 5 நிமிசத்துக்கு தல சுத்துமே அது மாதிரி வந்திரும்.

இங்க நம்ம ஊர்ல எதை எதையோ செஞ்சு ஆஃபர்ல அயிட்டங்கள கொடுக்கறதா சொன்னா, யப்பா….என்ன சீன் போடுவோம் நம்ம…அது இருக்குதா இது இருக்குதா, ஃபேன் ஓடுமா? எத்தன க்ளோமீட்டரு ஓடும்ங்கற அளவுக்கு எக்குதப்பா ரவுசு காட்டுவோம் இல்ல.

அதையே பாரின்லேர்ந்து மண்ணாங்கட்டி கம்பெனி ஒண்ணு ஆஃபர்ல மைக்ரோவேவ் வோவன் போட்டிருப்பான், அது வாங்கி கொடுத்தா நம்ம மக்கள் ரொம்ப குஷியா தரைக்கும் வானத்துக்கும் குதிப்பாங்க. அந்த கம்பெனி யாருது? என்ன தரம்? அதெல்லாம் ஒண்ணுத்தையும் கேள்வி கேட்காம வாங்கி வெச்சிப்பாங்க…அக்கம் பக்கம் உள்ளவங்க்கிட்ட காண்பிச்சு மெச்சிப்பாங்க.

இது ஒரு வகையான கொரியர் சர்வீஸ்னா, இன்னொன்னு இருக்கு. அது இதவிட செம கடி. இதுல கோச்சாக்கள் யாருன்னா நம்ம ரூம்மேட்ஸ் மற்றும் ஆஃபிஸ்ல கூட வேல செய்யற மேட்ஸுங்கதான்.

நாமளே நம்ம வீட்ல கேட்ட எல்லாத்தையும் வாங்கிக் கொண்டு போகமுடியலயேன்னு ஃபீல் பண்ணிக்கிட்டு இருக்கம்போது……

1.மச்சான் இந்த சொட்டர எங்க வீட்ல குடுத்துடுடான்னு ஒருத்தன் முதல்ல வருவான்.

2.”சார்..கொஞ்சம் முந்திரி பாதம் பருப்புகளை கொடுத்திருங்களேன். என் பையன வந்து கலெக்ட் பண்ணிக்க சொல்றேன் சார். ”மவனே போன மாசம் எங்க வீட்ல நடந்த ஒரு ஃபங்ஷனுக்கு உன் வீட்லேர்ந்து மொய் வெக்கணும்னே ஒருத்தன் வரல…இப்ப இத வாங்கிக்க உன் மவன் வருவானான்னு மனசுல தோணினாலும்…”அதுக்கென்ன சார்…எடுத்திட்டு போறேன்”னுதான் சொல்லுவோம்.

3.இன்னொருத்தர் “சார் நீங்க மாம்பலம் தானே….ஒரு உதவி சார்…உங்க லக்கேஜ் வெயிட் பர்மிட் பண்ணிச்சினாக்கா…ஒரு ப்ளேஸ்டேஷன் எடுத்துட்டு போறீங்களான்னு” கேட்கும் போது…பரவாயில்லயே…நமக்கு ப்ரசெண்ட் எல்லாம் கொடுத்தனுப்ப ஒரு தங்கமான மனசும் நடுவுல இருக்கேன்னு சந்தோஷப்படுவோம். அது 2 செகண்டு தான் அண்ணாத்தே….ஆமா…அவரு “என் பையன் அங்க வீட்ல ரொம்ப படுத்தறானாம். முடிஞ்சா பாருங்க..சொல்லுங்க…(இது கொஞ்சம் பரவாயில்லீங்க).

4.இதெல்லாம் கூட ஓகேதாங்க…..ஒருத்தன் எங்கிட்ட மச்சான் எங்க வீட்ல இங்க கிடைக்கிற மோர் கேன் பத்தியெல்லாம் சொன்னப்போ ரொம்ப குஷியாயிட்டாங்கடா…ஒண்ணு எடுத்துட்டு போறியான்னு சொன்னத கேட்டு..மூணு நாள் ஆபிஸ் லீவு போட்டு அழுதுருக்கேன் தெரியுமா? இப்ப நினைச்சா கூட….தாங்கலை…எது எப்படிடா எங்கிட்ட அத கேட்டான்னு எனக்கு நானே பல தடவை கேட்டுக்கிட்டேன் தெரியுமா? விட்டா அங்க கிடைக்கிற பெரிய சைஸ் வெங்காயம், உருளைகிழங்கு கூட எடுத்துட்டு போகச் சொல்வானுங்க…

5.நாம் வீடு போய் சேரர வரைக்கும் விடமாட்டாங்க தெரியுமா. ஒரு வழியா டிக்கெட் கவுண்டர்ல வெயிட் ப்ராப்ளத்த சமாளிச்சு, கூடுதல இங்கிலீசுகாரன் கிட்டேயிருந்து இமிக்கிரேஷன்ல தப்பிச்சு அப்படான்னு உட்கார்ந்தா..ஒரு ஃபோன்….விஜய் இப்பத்தான் ஞாபகம் வருது, பாம்பர்ஸ் ஒண்ணு வாங்கிட்டு போறியாடான்னு ஒரு நண்பன் (கடைசி நேர தொல்லை)…இதுல அவனே “உனக்கு லக்கேஜ் ஏறாதுடா…ஹாண்ட் பாகேஜுல போட்டுக்கலாம்னு” ஐடியா கொடுப்பான். நமக்கு தெரியாது பாருங்க.

6.எல்லாத்தையும் விட ஹைலைட்டு, நாமளே சில வீடுகளுக்கு போயி டோர் டெலிவரி பண்ணிட்டு வர்றதுதான். அது என்னவோ தெரியலீங்க…நாம வாங்கி வந்தாலும், நமக்கு யாராவது வாங்கி வந்தாலும் நாமதான் போகணும். இத கேட்க நாதியில்லையா சாமி….
யப்பா..இனிமே ஊருக்கு கிளம்பினா சொல்லிக்காம சைலண்டா கிளம்பணும்டா சாமின்னு ஒரு முடிவுக்கு வந்துட்டேன். இப்படியே போச்சுன்னா…நம்மகிட்ட ஒரு ட்ராக்கிங் மெஷின செட் பண்ணி அவங்க கொடுத்தனுப்பினத ஒழுங்கா கொண்டுபோயி சேர்த்தமான்னு செக் பண்ணாலும் ஆச்சரியபடறத்துக்கு இல்ல.

இருங்க..எங்க போறீங்க….இதெல்லாம் அப்படியே ரிடர்ன்ல ரிப்பீட்டு…சாம்பார் பொடி, ரசப்பொடி, கொத்தமல்லிப் பொடி…..மூக்கு பொடி கூட கொடுத்தனுப்பாறாங்க சார்.
இந்த அயிட்டம் எல்லாம் அங்கேயே கிடைக்குது. என்ன கொஞ்சம் விலை கூடுதலா இருக்கு அவ்ளோதான்.

போன தடவை துபாய்க்கு கிளம்பும் போது எங்க போஸ்ட்மேன் என்ன பார்த்து நெக்கலா ஒரு சிரி சிரிச்சுட்டு போனார். அப்பத்தான் கவனிச்சேன். அன்னிக்கு நான் போட்டிருந்த ட்ரெஸ் காம்பினேஷன் நீல சட்டை, கரு நீல பேண்ட்டு. ஒருவேளை நாம் முழுக்க முழுக்க குருவியாவே மாறிட்டோமோன்னு எனக்கே ஒரு சந்தேகம் வந்ததில ஆச்சரியம் இல்லங்க. விஜய் மாதிரி விரல் கூட தானா நீட்டிக்குது, சுழலுது……

2 Comments »

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.