Home » Archive

Articles Archive for June 2009

அனுபவம் »

[18 Jun 2009 | No Comment | 154 views]

ஒரு வழியாக மும்பை ஏர்போர்ட்டிலிருந்து கம்பெனி கார் உதவியுடன் கம்பெனி விருந்தினர் இல்லத்திற்கு வந்து சேர்ந்தேன். வழியில்தான் எத்தனி மேம்பாலங்கள். ஒரு வேளை இங்கே யாரும் கழக கண்மணிகள் இருக்கிறார்களா என்ற சந்தேகம் எழுந்தது. மும்பையை இரண்டு மகுதியாக பிரிக்கப்பட்டதற்கும், இங்கிருந்து அங்கு செல்ல டோல் கட்டணம் செலுத்த வேண்டும் என்பதும் ஆச்ச்ர்யமாக இருக்கிறது. சென்னையிலும் இது இருக்கிறது என்றாலும், ஒரு நகரத்திற்குள் இருக்கும் இரு வெவ்வேறு இடங்களுக்கு செல்ல இது தேவையா?
விமானம் தரையிறங்கியதும், அதிலிருந்து நான் தரையிறங்கி வெளியே எனக்காக கண்கொட்ட கண்கொத்திப் பாம்பை போல என் டிரைவர் மனோகர் (என் என்றால், என் கம்பெனி என்று சொல்வதில்லையா அது போல) காத்துக்கொண்டிருந்தார். மனோகர் பாண்டே என்று நினைக்கிறேன். நெத்தியில் குங்குமப்பொட்டு காரில் கணபதி பப்பாவின் சிறிய சைஸ் பொம்மை என்று அந்த நடு இரவிலும் …