Articles Archive for June 2009
அனுபவம் »
மேலாளர் சொன்ன நேரத்துக்கு சற்று தாமதமாகவே ஃபோன் செய்தார். மேலாளர் என்றால் எதையுமே தாமதமாகச் செய்பவர் என்று தானே பொருள்.
”ஹான் விஜய்….” என்று (முன்னே ஒரு தடவை சென்னையில் நாங்கள் சந்தித்து இருந்தோம்) என்னை அடையாளம் கண்டார். நானும் அவரை “ஹாய்” என்று என் பங்குக்கு அடையாளம் காட்டிக்கொண்டேன். காரில் இருவரும் ஏற அவர் அந்த காரை செலுத்த, காரும் கிளம்ப, மெதுவாக பேச்சை ஆரம்பித்தார் (அட ஆமாங்க சொற்பொழிவுதான்). ஆத்து ஆத்து என்று ஆத்தினார். ஆத்திய ஆத்தில் கார் ஏசி அளவை காட்டிலும் சில்லென்று ஆகிப்போனது.
இந்திய தேர்தல் பற்றியும் ஐபிஎல் ஆட்டம் பற்றியும் பேச்சு திரும்பியது. அவர் கல்கத்தாவை சேர்ந்தவர் என்பதால் அவரிடம் கொஞ்சம் உஷாராகவே பேச முடிவு செய்தேன். தோற்றது கம்யூனிஸ்ட், கல்கத்தா ஐபிஎல்லில் பெற்றது கடைசி இடம். ஆனால் அவரே தான் …
