ஐபிஎல் – ஓஜாரே…ஓஜா.ஓஜா..ஓஜாரே!

30வது ஆட்டம்: கிங்ஸ் லெவன் பஞ்சாப் – ராஜஸ்தான் ராயல்ஸ்

சென்ற முறை இரு அணிகளும் சந்தித்த போது பஞ்சாப் அணி வெற்றி பெற்றதும், அதே வெற்றிக் களிப்பில் வார்னேவை நோக்கி யுவராஜ் “இன்னொரு முறை ஆடலாமா? பார்ப்போமா?” என்ற ரீதியில் செய்கை செய்ததும் நம்மில் பலருக்கு நினைவிருக்கலாம்.

இன்னொரு முறை ஆடியதுதான் இந்த 30வது மேட்ச். யுவராஜ் அன்று கேட்ட கேள்வியை மறந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் நிச்சியமாக அதை மறந்ததை போல நடிக்கலாம். எனக்கு நினைவிருக்கிறது.

ராஜஸ்தானின் இந்த பதிலடி யுவராஜின் மண்டையில் செம இடி. எனக்கு பர்சனலா செம குஷிதான். பஞ்சாப் அணி பந்துவீசவே மறந்து போயிருப்பார்கள்.

ஓஜா மிகவும் கோபக்காரர் போலிருக்கிறது. ஆனாலும் மனுஷனுக்கு இந்தக் கோபம் ஆகாது. இப்படியா வடிவேலுவை புரட்டி எடுப்பதுபோல புரட்டி எடுப்பது பஞ்சாப் போலர்ஸை? ஸ்மித் வேறு. அவர் இந்த ஐபிஎல்லில் எதிர்பார்த்த அளவுக்கு பளபளக்கவில்லை (ஷைன்) என்ற ஒரு குற்றச்சாட்டு இருந்து வந்தது. இந்த ஒரே மேட்ச்சில் அதை மூடி மறைத்துவிட்டார்.

முழு பூசனிக்காய்தான். இருந்தாலும் சோறு மிக அதிகம் என்பதால், பூசனி கலாக்காயைப் போல மறைந்துதான் போனது.

இந்த 211க்கும் வார்னேவையே மூலக்காரணம் என்று நிச்சயமாக சொல்வேன். சென்ற முறை இழந்ததை நாம் இந்த முறை அதிகாரப்பூர்வமாக வீருகொண்டு எழவேண்டும் என்று கூறியிருப்பார் போலும்.

அடித்து துவைத்து பிழிந்து காயப்போட்டுவிட்டார்கள் பஞ்சாப்பை. இல்லை இல்லை காயப்போடவில்லை…காயப்படுத்திவிட்டு போனார்கள்.

என்னதான் யுவராஜ் சிங் 6 பந்துகளில் 6 சிக்ஸர் அடித்தவரானாலும் 211 அதிகம் தான். 6க்கு 6 அம்மாவாசை சோறு. அதே போல இப்பவும் அடிப்பார் என்று நினைப்பது தவறு.

ஆனால் பஞ்சாப்பிலிருந்து ஒருவர் 211ஐ துரத்தினார் என்றால் அது யுவராஜ் மட்டுமே. அவரும் அவருக்கு முடிந்தவரை 4 சிக்ஸர்களை அடித்தார். எப்பொழுதோ ஆட்டம் முடிந்திருக்க வேண்டும். அப்படித்தான் ஆடினார்கள் பஞ்சாப் அணியினர்.

133 வந்ததே பெரிய ஆச்சரியம்தான். 78 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி எளிதாக ஜெயித்துவிட்டது. இதில் வார்னே தன் 3 ஓவர்களில் 38 ரன் கொடுத்தது குறிப்பிடதக்கது. அது மட்டுமின்றி யூசுப் பதான் 12 மட்டுமே அடித்தார் என்பதும் குறிப்பிடதக்கது.

31வது ஆட்டம்: டெல்லி டேர் டெவில்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

நான் கடைசியில் என்ன எழுதப்போகிறேன் என்று உங்களுக்கே தெரியும். இருந்தாலும் சொல்வது என் கடமை. படிப்பது உங்கள் தலையெழுத்து. அவரவர் பிறவிப்பயனை அவரவரே அனுபவிக்க வேண்டும். என்ன நான் சொல்வது?

சொன்னா நம்புங்க…மெக்கல்லம் ரன் அடித்தார். அட ஆமாங்க. இல்ல…இல்ல அவர் பனியன் போட்டுகிட்டு யாரும் வந்து ஆடல. அவருதான். நான் நல்லா பார்த்தேன். சொல்றேன் இல்ல..ப்ளீஸ்…பாவங்க அவரு.

அப்படியொன்றும் குறைவாக அடிக்கவில்லை கொல்கத்தா அணி. 154 அடித்திருந்தது. அதான் அந்த பெயர்(WYK) கொண்டவர் 74 அடித்தார், அதுவும் 48 பந்துகளில். நம்ம மெக்கல்லம் அண்ணே மூன்று டிஎல்எஃப் காட்டினார்.

154 அடித்து என்ன பயன்? ஃபீல்டிங்கில் கோட்டை விட்டுவிட்டார்கள். இந்த மேட்ச்சிலும் மெக்கல்லத்தை குறை சொல்வது தவறு. அவர் அவர் பங்குக்கு ஒரு கேட்ச் விட்டார் அவ்வளவுதான், அதுவும் கம்பீர் கேட்ச்சுதான். அதற்கப்புறம் கம்பீர் விளாசி தள்ளி பேட்டின் நுனியிலேயே ஆடி பல பவுண்டரிகளை சேகரித்து ஆட்டத்தையும் முடித்தார். அதனால் என்ன?

அதனால் ஒண்ணுமில்லை…நீங்க உங்க நிலையிலிருந்து (புள்ளிகள்) கொஞ்சம் கூட மாறவில்லை. அடுத்த ஐபிஎல்லில் பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டார்கள் போலும்.

ஓட்டு போட இந்தியா வந்தால் அப்போதும் ஜெயிக்க இருந்த மேட்ச்சை கோட்டை விட்டீர்களே என்று ஷாருக்கான் புலம்ப வேண்டியதுதான்.

கொல்கத்தா அணியின் 154ஐ அடித்தது நான்கு வெளிநாட்டு வீரர்களே என்பது மற்றொரு சிறப்பு. கங்குலிக்கு ஆட, போட வாய்ப்புகள் அளிக்கவடவில்லை.

அகர்க்கர் அதிசயமாக ”ஆகும்”கர் ஆன கதை இந்த மேட்ச்சில் நடந்தது. முதல் ஓவரிலியே ஒரு விக்கெட் எடுக்க, அடுத்த ஓவரில் கம்பீர் கேட்ச்சை (மெக்கல்லம்) விட்டது அவரது துரதிருஷ்டம்.

வழக்கமாக கொல்கத்தாவை மற்ற அணிகள்தான் தோற்கடிக்கும். இந்த முறை அதிலும் வித்தியாசத்தை காட்ட எண்ணி தன்னைத்தானே தோற்கடித்துக் கொண்டது பரிதாபம்.

தில்ஷான் அகோரப்பசியில் இருக்கிறார் என்று நினைக்கிறேன். இந்த போட்டியில் அதிக ரன் எடுத்த வீரர் என்ற விருதை வாங்காமல் விடமாட்டேன் என்கிறார் (பேட்டிங் மூலமாகத்தான்). ஹேடனா தில்ஷானா? பார்ப்போம்.

This entry was posted in பொது and tagged , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to ஐபிஎல் – ஓஜாரே…ஓஜா.ஓஜா..ஓஜாரே!

  1. R.Sridhar says:

    இன்று போல் என்றும் வாழ்க வளமுடன். பிறந்த நாள் வாழ்த்துகள்.

  2. Ram N says:

    Hi Vijay … Many more happy returns of the day …. have a wonderful year ahead ….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *