Home » ஐபிஎல்2, கிரிகெட்

ஐபில் – சாத்தான்கள் முன்னேற நின்றது சென்னை எக்ஸ்பிரஸ்

15 May 2009 One Comment

ஏதோ வாலியோட புக்கெல்லாம் படிச்சுட்டு சும்மா அனுபவிக்காம, இதோ நானும் கிளம்பிட்டேன்னு போன ஐபிஎல் பதிவுல கவிதை நடையில ஆட்டங்கள விமர்சனம் பண்ணினத படிச்ச என் நண்பர் செந்தில், அது கவிதை நடையில்ல, கழுதை நடையா இருக்குன்னு சொன்னார். மேலும் வாலி கீலின்னு இனிமே வாயத்தொறந்த நீ காலின்னு செல்லமா தன் கையிலிருந்த ஹெல்மட்டால ஜாலியா ஒரு தட்டு தட்டிக் கொடுத்துவிட்டு போனார்.

அதனால கவிதையெல்லாம் கொஞ்சம் ஓரங்கட்டி வெச்சுட்டு ஒழுங்கு மரியாதையா வர்றத எழுதிட்டு போகலாம்னு முடிவு செஞ்சுட்டேன்.

கம்பீர் வழக்கம் போல “அவுட் ஆஃப் சார்ட்ஸ்”, செம்ம கட்டைய போட்டுட்டு போயிட்டாரு. வெளுத்து வாங்கற வார்னரும் வார்னர் ப்ரதர்ஸ் படம் பார்க்க அவசராம உள்ளே போக, வந்தாரு நம்ம ஆளு டிவி. மனுஷன் செம ஃபார்ம்ல இருக்காரு.

இந்த இனிங்ஸும் 44 அடிச்சு டெல்லியின் மானத்த காப்பாத்தினார். “தில்ஷன்”னு சொல்றதுக்கு பதிலா “தில்ரன்”னு சொல்லலாம். ரெய்னா, ஹேடனுக்கு பிறகு களமிறங்கினாலே ரன் அடிக்கறதுன்னா இவங்க ரெண்டு பேருதான்.

எல கார்த்திக்கு என்னத்த தின்னுபுட்டு வந்துட்ட? இப்படி கிழிகிழின்னு கிழிக்கற? என்னவோ போ இந்தியாவுக்காக இப்படி ஆடியிருந்தா எத்தினி மேட்ச் நாம கெலிச்சிருப்போம்? பார்க்க சின்னதா இருந்தாலும் உன் சிக்ஸரு படு ஜோருலே.

அடிச்சி புடிச்சி 173ல முடிச்சாச்சி. இனிமே நீங்கதான்னு பந்த தூக்கி போலருங்க கையில கொடுத்துபுட்டுது டெல்லி.

கில்லி கணக்கா ஆடின கிலி (64) அவுட்டாச்சு டெல்லியின் கனவு பொழச்சிச்சி. ஷர்மா – ரொம்ப களைச்சி போயிருச்சு புள்ள. அதான் இந்த மேட்ச்சும் நான் அடிக்கல அதான் நம்ம சிமெண்ட்ஸ் அண்ணே வந்திருக்காக இல்ல, அவுகள அடிக்க வெச்சு வேடிக்கை பார்ப்போம்னு ஒதுங்கிருச்சி.

சிங்கம் போல வந்தாரு சிக்ஸரா அடிச்சாரு சிமெண்ட்ஸ். சிங்கிளா நின்னு சீக்கிரமா ஆட்டத்த முடிப்பாருன்னு பார்த்தேன். சிக்குனு ஜோரா சில்லுனு கூலா வந்த பாட்டியா ”நம்மகிட்ட உன் பப்பு வேகாது பார்த்தியா”ன்னு கேட்டுட்டு போயிட்டாரு. 40ல சிங்கம் வெளியேற மீதியெல்லாம் அசிங்கமா அவுட்டாகி தோத்துப்போச்சு ஹைதராபாத்.

====================================================================

ஒரு ட்ரெயினிங் செஷன்ல இருந்தப்ப நண்பன் ஃபோன் பண்ணிணான். இந்த மேட்ச்சுல நிச்சயம் பெங்களூரு வின்னு, நீங்க வேணும்னா பாருங்கன்னு. ஏற்கனவே நான் கொளுத்தற வெயில்ல ட்ரெய்ன் ஆயிட்டுத்தான் இருக்கேன், இதுல ட்ரெயினிங் வேறயான்னு நினைச்சுக்கிட்டு இருக்கும் போது சென்னை எக்ஸ்பிரஸ் கவுந்திடும்னு போன் பண்ணா, எப்படி இருக்கும்? நீங்களே சொல்லுங்க.

இருந்தாலும் நான் திரும்ப சிமசே பண்ணி ”என்ன தம்பி ஏதாவது போதையில இருக்கியா என்ன? ஆடறது நானு போடறது நீயாயிருந்தா எல்லா பாலுமே சிக்ஸருதான் மாமேன்னு” சொன்னேன்.

சத்தியமா சென்னை மேலே இருந்த நம்பிக்கையில நான் சென்னை ஜெயிக்கும்னு சொல்லல. பெங்களூரு பெங்காலுக்கு அடுத்தபடியா மோசமா தோத்துக்கிட்டு இருக்கறத வெச்சுதான் அப்படி தெனாவட்டா பேசினேன்.

129 அதுவும் சென்னை, அதுவும் பெங்களூரு போலிங்ல. பக்கத்துல இருந்த என் ஃப்ரெண்ட இரு தடவை கிள்ளி பார்த்துக்கிட்டேன். அவனும் ஆ..ஆ…ன்னு ஏஆர் ரஹ்மான் பாடல் போல கத்த, இது நெஜந்தான். நம்ம சென்னை 129தான் அடிச்சுது. அதுலயும் நம்ம தல ஹேடன் தான் அதிகபட்சமா ரன் எடுத்திருக்காரு.

13 ஓவர்ல 107 சென்னை. 170 அடிக்கும்னு நெனச்சு சிமசே செஞ்ச என் நண்பனுக்கு பதில் சிமசே செஞ்சேன். ”கார்த்தி…மால்யா டீமுக்கு டிக்கெட்டெல்லாம் போட்டுட்டாராம்”னேன். அவன் திரும்ப ”நீங்க வேண்ணா பாருங்க. இந்த மேட்ச் நாங்கதான் (பெங்களூரு) ஜெயிக்கப் போறோம். என் உள்மனசு சொல்லுது”னு சொன்னான்.

நான் கூட ஹேடன் போறபோக்க பார்த்தா இன்னிக்கு மகனே சென்னை மட்டும் ஜெயிக்கட்டும் உனக்கு இருக்கு தீவாளின்னு பையனுக்கு செல்ல மிரட்டல் செல் மூலமா செண்ட் பண்ணினேன்.

எல்லாம் முடிஞ்சு போச்சு வாத்தியாரே. ஒண்ணும் பேச முடியல அவன்கிட்ட. ”என்னவோ நக்கலடிச்சீங்க? இப்ப என்ன சொல்றீங்க”ண்ணு மெஸேஜ் பண்ணினான். ஸ்கோர பார்த்தா 129. அடபடுபாவிங்களா, இப்படி பொட்டுனு போயிட்டீங்களேடா. இப்பத்தானே ரெண்டு மூணு பதிவா உங்களப் போல பசங்க இல்லன்னு மார்த்தட்டிக்கிட்டேன்னு புலம்ப வேண்டியதாயிச்சு.

ஆனா சும்ம சொல்லக் கூடாது நம்ம பசங்க அவ்ளோ சுளுவா பெங்களூர ஜெயிக்க விடல. விடலப்புள்ள பாலாஜி அந்த அப்பாவித்தனமான சிரிப்போட சிக்ஸர் ஒண்ண கொடுத்து சென்னையோட வெற்றிய கெடுத்துடிச்சு. அத சொல்லி என்ன செய்ய. நாம் இன்னும் கொஞ்சம் ரன்ன தேத்தியிருக்கணும்.

ராஸ் டெய்லரும் கோலியும் அட்டகாசமா விளையாடி திரும்பி போற(ஊருக்கு) வழிக்கு வெற்றிய தேடிக்கிட்டு போயிட்டாங்க.
=====================================================================

மும்பை எல்லா மேட்ச்சுமே ஜெயிக்க வேண்டிய நிலையில் ராஜஸ்தான் கூட 45வது ஆட்டம். 40 அடிச்ச டெண்டுல்கர் இன்னும் அஞ்சு அடிச்சிருந்தா 45வது ஆட்டத்துல 45ன்னு ஒரு ரெக்கார்டு வந்திருக்கும் கூடவே மும்பையும் ஜெயிச்சிருக்கும்.

ஜெயசூர்யாவ ஏன் பின்னாடி இறக்கினாங்கண்ணு தெரியல. அவருக்கு அங்க பேட்டிங்கே வரல. ஏற்கனவே குளிர் அங்க, அவரு வீசற வீச்சுல கீப்பருக்கு(ஓஜா) இன்னும் குளிரெடுத்துபோச்சாம்.

நய்யார் அடிச்சிட்டாருப்பா. ஆனா அவர் நேரம் டீம் 2 ரன்ல கவுந்திடிச்சு.

நல்லாதான் போலிங் போட்டாங்க மும்பை. கடைசி ஓவர்கள்ள இன்னும் இழுத்து பிடிச்சிருந்தா இலக்க கம்மியாக்கி இருக்கலாம். தோக்கணும்னு இருந்தா யாரு எப்படி போட்டாலும் என்ன பேட்டிங் ஆடினாலும் ஒண்ணும் செய்யமுடியாது.

டெண்டுல்கர் நய்யார தவிர மும்பைல யாருக்குமே செமி ஃபைனல்ஸ்க்கு போறதுக்கு விருப்பமில்ல போல இருக்கு. எங்கயோ வைட் ஆஃப்ல வந்த பந்த ப்ரவோ திருப்பி லெக்சைட்ல அடிக்க பார்த்தார். ஆனா அது அவர் தலைக்குமேலேயே கிளம்ப முனாஃப் பட்டேலே பிடிச்சிட்டாரு.

நய்யார் ரன் அவுட்டுல அவுட்டானது மும்பையின் துரதிருஷ்டம்னுதான் சொல்லணும். ஷேன் வார்னேவோட ஃபீல்டிங் செட்டப் பிரமாதம். அவரு போலிங் இன்னும் பிரமாதம். முக்கியமா டெண்டுல்கர் விக்கெட்ட எடுத்து அணிக்கு வெற்றிய நிச்சயம் பண்ணிட்டாரு.

என்னடா இவன் மெட்ராஸ் பாஷ, பேசும் தமிழ், கொஞ்சம் இலக்கிய சொற்கள்னு கலவையா எழுதியிருக்கானேன்னு திட்டாதிங்க. எனக்கு தோணினத அப்படியே பதிவு செஞ்சிட்டேன்.

One Comment »

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.