ஐபிஎல் – ஓட்டுதான் போடமுடியல, மேட்ச் ரிப்போர்டாவது போடேன்

தேர்தல் ஜூரம் 108 டிகிரியை தாண்ட நம்ம அந்தணன் சொல்றாப்ல வெந்தபுண்ணுல வெங்காயத்த பாய்ச்சராப்ல தேர்தலுக்கு முந்தின இரவு இருட்டின இரவா மாறி இன்னும் சூட்டக்(கோவத்த சொன்னேன்)கிளப்ப, நாளை (மே 13) ஓட்டுல நம்ம திறமைய காண்பிச்சு மின்சாரத்த இல்லாம செய்த கட்சிக்கு ஒட்ட போடலாம்னு நினைச்சிருந்தேன். ஆனா நரேஷ் குப்தா வேறே நினைச்சிட்டாரு. உனக்கு ஓட்டெல்லாம் கிடையாது போடான்னுட்டார்.

வேறே ஒண்ணும் செய்ய முடியாததுனால அட்லீஸ்ட் ஐபிஎல் பதிவு போடலாம்னு உட்கார்ந்துட்டேன்.

டெக்கானின் ஃபுல் சார்ஜுல
ட்வைன் அடிச்ச ஃப்ளிக்குல
பந்தெல்லாம் சிக்ஸர்
வார்னேயின் முகமோ பஞ்சர்
டெக்கான் அடிச்சது நூற்றிஅறுபத்தி ஆறு
ராஜஸ்தான் அடிச்சதோ ஒரே ஒரு ஆறு
கிலி டீம் ஃபுல் ரன் மப்புல
வார்னேவால தாக்குபிடிக்க முடியல மாப்ளே
சிமண்ட்ஸ் கையில இருப்பது மட்டையா
இல்ல இரும்புல செஞ்ச கட்டையா
மூணு விக்கெட் எடுத்த ஷர்மா
ஹைதராபாதுக்கு ஒத்த சுவையான குர்மா
அஸ்நோட்கர் –
ஆட்டத்துல பழைய கவாஸ்கர்
ராஜஸ்தான் –
வந்தவழி போனது தேரா
இது என்ன டீமா
இல்ல மைலாப்பூர் அறுபத்திமூவரா?
யூசுப் பதானும் ஜொலிக்கல
ஓஜாகிட்ட உன் ஆட்டம் பலிக்கல
போன ஐபிஎல்ல வெற்றி வார்னே
இப்ப மட்டும் ஏன் தோல்விய வாரினே
ராஜஸ்தான் ஆரம்பம் முதலே
டெக்கானின் ஆட்டம் கண்டது
கண்டவுடன் பேட்டிங் ஆட்டங்கண்டது

மெக்கல்லம் நீ ஃபார்முக்கு வந்துட்ட
கேப்டன் செய்யறத மறந்துட்ட
173 அடிச்சும் பத்தல
கொல்கத்தா –
டெய்லர் வாயில வெத்தல
கொல்கத்தா ஜெயிக்கல – மாறா
பந்து பறந்தது ஆறா
நாங்களும் ஜெயிப்போம்னு
காண்பிச்சது ராயல்
அன்று மட்டும்
அவர்கள் ஆட்டத்தில்
சென்னையின் சாயல்
நாங்க எப்பவுமே இப்படித்தான்னு
சொல்லுது கொல்கத்தா
இது என்ன டீமா
இல்ல கொத்தமல்லி கொத்தா
தையல் விட்டுப்போன தெக்கறது
நம்ம மூலக்கடை டெய்லர்
தெச்சிருந்த தையல
பிரிச்சு மேஞ்சது
ராயல் சேலஞ் டெய்லர்
கொல்கத்தாவ ஜெயிச்சது ராயல்
ராயல் ஆட்டத்தில் சிங்கப்பாயச்சல்

கிங்ஸ் லெவன்
ஜெயிச்சுக்கிட்டிருந்தது முன்ன
சடாருன்னு தோத்துடிச்சே
கண்ணு பட்டுப்போச்சா என்ன
ஜெயவர்த்தனே காயம்
பஞ்சாப்புக்கு குறை
ஹர்பஜன் டூமினி
மும்பைக்கு நிறை
119 ரொம்ப குறைவு
நல்ல நேரத்தில்
சச்சினின் ஆட்டம் நிறைவு
வந்தாரு ப்ராவோ நேரா
ஆடி ஜெயிச்சாரு ஜோரா
மும்பை போன ஐபிஎல்லில்
தோத்துக்கிட்டே இருந்தது முன்பு
இந்த ஐபிஎல்லில் அவங்க
வில்லிலிருந்து கிளம்பிய அம்பு
ஸ்ரீசாந்த் போட்ட ஓவர்
ஒண்ணே ஒண்ணு
அதையும் விட்டுவைக்கல
அடிச்சுட்டாங்க இருபத்தி ஒண்ணு
மும்பை –
பார்க்கத்தான் டீம் லைட்டு
ஆட்டத்துல செம வெய்ட்டு

This entry was posted in பொது and tagged , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *