ஐபிஎல் – மும்பைக்கு வாய்ப்பு கொல்கத்தாவுக்கு ஆப்பு

இனிமேல் கொல்கத்தா தலைகீழாக நின்றாலும் இந்த ஐபிஎல்லில் ஒன்றும் செய்யமுடியாது. ஆடிய 10 ஆட்டங்களில் 1 வெற்றி மட்டுமே பெற்று 3 புள்ளிகளை பெற்று அட்டவணையில் கடைசி கட்டத்தில் இருக்கிறது. மீதம் உள்ள ஆட்டங்களில் எல்லாம் ஜெயித்தால் கூட முதல் நான்கு இடங்களில் இடம் பெறுவது கடினம்.

கொல்கத்தாவை விட சற்று நல்ல நிலையில் உள்ளது பெங்களூரு.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அடுத்து வரும் ஆட்டங்களில் எப்படி ஆடப்போகிறது என்பதை வைத்துதான் முதல் நான்கு இடங்களில் இடம் பிடிக்குமா என்பது தெரியவரும்.

மும்பை இனிமேல் ஆடும் எல்லா ஆட்டங்களிலும் வெற்றி பெற என்ற நிலையில் ராயல் சேலஞை எதிர்கொண்டது ஐபிஎல்லின் 38வது ஆட்டம்.

டெண்டுல்கரை ஆட்டத்தின் ஆரம்பத்திலேயே இழந்த மும்பை ஜெயசூர்யாவின் பொறுமையான (27 பந்துகளில் 29) ஆட்டத்தினாலும் உடன் சேர்ந்த ரஹானேவின்(49 பந்துகளில் 62, 4 பவுண்டரி, 1 சிக்ஸர்) திறமையான பேட்டிங்கினாலும் ஒரு நிலைக்கு வந்தது மும்பை.

8வது ஓவரில் ஜெயசூர்யாவையும் இழக்க ரஹானேவுடன் ஜோடி சேர்ந்த டூமினி பிரமாதமாக விளையாடி 59 ரன்களை குவித்தார்.

டூமினியின் 3 சிக்ஸர்கள் அணிக்கு நல்ல ஸ்கோரை எட்ட உதவியது. டூமினி டெல்லியின் டிவில்லியர்ஸை போல அணியின் தூணாக விளங்குகிறார் என்பதில் சிறுதும் சந்தேகமில்லை.

157 டெண்டுல்கருக்கு நிச்சயமாக நம்பிக்கை அளித்திருக்க வேண்டும். மார்க் பவுச்சரைத் தவிர ராயல் சேல்ஞ் அணியில் யாருக்கும் வெற்றி பெறத் தேவையான வெறியில்லாதது அணியின் தோல்வியை ஊர்ஜிதம் செய்தது.

ஹர்பஜன் மிக துல்லியமாக பந்து வீசி அவர் தன் நான்கு ஓவரில் 15 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

மும்பையின் போலிங் மற்ற அணிகளை விட சிறந்ததே. அறுபத்தி மூவரில் கூட கொஞ்சம் இடைவெளி அதிகமாக இருந்திருக்குமோ என்னவோ. இங்கே ராயல் சேலஞ்சின் விக்கெட் வீழ்ச்சியின் இடைவெளி அதை விட குறைவு. டிராவிட்டின் ரன் அவுட் ராயலுக்கு பெரும் அதிர்ச்சி.

மும்பை அணி 16 ரன்னில் வெற்றி பெற்றது. டூமினி ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மற்றொரு ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவின் சாயங்காலம் கொல்கத்தாவின் சாயும் காலமாக மாறியது. ஏற்கனவே வெற்றி என்றால் என்னவென்று மறந்தே போயிருந்த கொல்கத்தா அதிரடி ஃபார்மில் இருக்கும் டெல்லியை எதிர்கொள்வதென்பது கடினம் தான்.

கொல்கத்தா வெற்றி பெறவில்லையே தவிர அவர்களின் அணி நல்ல திறமையானவர்களை கொண்டதுதான். இந்த ஆட்டத்தை மட்டும் வைத்து பார்க்கும் போது டெல்லிக்கு வெற்றி பெறுவது அப்படியொன்றும் சுலபமல்ல. அதிலும் இன்னும் சேவாக் ஆட்டத்துக்கு தயாரில்லை என்பது கொல்கத்தாவுக்கு நல்ல வாய்ப்புதான்.

கொல்கத்தாவுக்கு தேவை ஒரு நல்ல அணித் தலைவர், ஒரு திறமையான கோச். முதலில் மெக்கல்லம் மற்றும் பொக்கைனன் இரண்டு பேருக்கும் டாடா காட்டிவிட்டு வேறு ஆட்களை பார்க்கவேண்டும். அப்படி செய்யாவிட்டால் இந்த ஐபிஎல் மட்டுமல்ல எந்த ஐபிஎல்லும் சாத்தியமில்லை. மெக்கல்லம் ஒரு நல்ல விக்கெட் கீப்பர் பேட்ஸ்மன் என்பதில் எனக்கு எந்த மாற்று கருத்துமில்லை.

ஆட்டத்துக்கு வந்தால், கங்குலி, அகர்க்கர் தவிர யாரும் களமிறங்கியதாக தெரியவில்லை. மன்னியுங்கள் என்னை. களமிறங்கினார்களாம். நான் அப்படி இப்படி கண்ணை திசை திருப்பி மறுபடியும் தொலைக்காட்சிக்கு கொண்டு வருவதற்குள் அவுட்டாகி போயிவிட்டார்களாம்.

123 டெல்லியின் பேட்டிங்கிற்கு பெரிய சவாலாக அமையவில்லை. இருந்தும் ஆடுகளம் பந்துவிச்சிற்கு உதவிகரமாக இருந்ததால் இலக்கு கொஞ்சம் கடினமாகத்தான் இருந்தது.

எத்தனை முறைதான் எழுதுவது. ஆமாம். அதே டிவில்லியர்ஸ்தான். வார்னர் தன் அதிரடி ஆட்டத்தை முழுவதுமாக காண்பிக்கவில்லை. ஆனால் அவரின் 36 டெல்லி வெற்றியை எட்ட போதுமானதாக இருந்தது.

டிவில்லியர்ஸ் நேரம் எடுத்துக்கொண்டு ஆட உதவியது. கம்பீர் சேவாக் இரண்டு பேரும் சற்று ஓரமாக இருத்தல் ராஜஸ்தானின் ஜடேஜா போன்ற நல்ல வீரர்களுக்கு நல்லது.

அல்லது டீவில்லியர்ஸ் மற்றும் தில்ஷான் ஓரிரு ஆட்டங்கள் வேண்டுமென்றே விளையாடாமல் ஆட்டம் காட்டினால், அவ்விருவருக்கும் (சேவாக், கம்பீர்) நல்ல பாடம் புகட்ட உதவும்.

இப்பொழுது டிவில்லியர்ஸ் இருக்கும் ஃபாமிலிருந்து சற்று தளர்ந்தாலும் டெல்லி திக்குமுக்காடுவது நிச்சயம். செமி ஃபனைல்களில் நுழையப்போகும் தருவாயில் சேவாக் ஆடாததும் கம்பீர் பேட்டின் நுனியிலேயே ஆடுவதும் டெல்லிக்கு நல்லதல்ல.

டிவில்லியர்ஸின் 40ம் கார்த்திக்கின் கடைசி நேர 17ம் டெல்லிக்கு வெற்றியை கொடுத்தது. டெல்லி இப்பொழுது அட்டவணையில் முதலிடத்தில் இருக்கிறது.

This entry was posted in ஐபிஎல்2, கிரிகெட் and tagged , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

One Response to ஐபிஎல் – மும்பைக்கு வாய்ப்பு கொல்கத்தாவுக்கு ஆப்பு

  1. மெக்கல்லம் – மெத்தல்லம் ஆகிவிட்டார். ”பொக்கைனன்” பட்டம் சூப்பர்.

    //கம்பீர் பேட்டின் நுனியிலேயே ஆடுவதும்//

    கம்பீர் பேட் நுனியில்தான ஆடுகிறார், இருந்தபோதும் அவர் விக்கெட்டைக் கூட எடுக்க முடியாத கேடு கெட்ட பொக்கை அணியாக கொல்கத்தா!

    ஷாரூக்குக்கு இந்த அணி மூலம் விளம்பரம் கிடைப்பது கூட சந்தேகம்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *