Home » ஐபிஎல்2, கிரிகெட்

ஐபிஎல் – ரன்ன ரெய்னா கொட்டின ரைனா

3 May 2009 2 Comments

இந்த ஐபிஎல்லில் ஒன்று ஊர்ஜிதமாகிறது. முதலில் ஆடும் அணி குறைந்தபட்சம் 140க்கு மேல் ரன் சேர்த்தால் போதுமானதாக இருக்கிறது. ஒன்று மட்டும் புரியவில்லை. இரண்டாவதாக ஆடும் அணிகள் தன் நிலையறிந்து விக்கெட்டுகளை பறிகொடிக்காமல் ஆடினாலே இந்த 140லிருந்து 150 வரையான இலக்குகளை எட்டிவிடலாம்.

ஏனோ தெரியவில்லை மீண்டும் மீண்டும் எந்த அணி எப்போது ஆடினாலும் அந்த 10வது ஓவர் முடிந்து வரும் ப்ரேக்குக்கு பிறகு தானாகவே முன்வந்து விக்கெட்டை பறிகொடுக்கின்றன.

ஒருவேளை இது மோடியின் கட்டளையா என்று சந்தேகம் கூட வருகிறது. எல்லா இன்னிங்ஸிலும் இப்படி ஆகும் என்று தெரிந்தால் நிச்சயமாக நாம் யூகிப்பது நடக்குமா என்பதற்காகவாவது பார்வையாளர்கள் குறைந்தபட்சம் பத்து ஓவர் பார்ப்பது உறுதி.

அதற்கு பிறகு ஆட்டம் தன்னாலே விறுவிறுப்படைந்து விடுகிறது. இழுத்து கட்டிப்போட வேண்டிய அவசியம் இல்லை.

இன்னொரு சந்தேகம். நம்ம கம்ரான் கான் இந்தியர்தானா? ஷோயிப் என்றொருவர் மீதும் சந்தேகம் வருகிறது. இருவருமே இந்தியர்கள்தான் என்றால், எனக்கு மற்றற்ற மகிழ்ச்சிதான்.

23வது ஆட்டம்: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – மும்பை இந்தியன்ஸ்

சுருங்கச் சொன்னால் டூமினியின் 52தான் மேட்ச்சின் முடிவை முடிவு செய்தது. அவர் கடைசி இரண்டு ஓவரில் அடித்த ரன்கள் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மிகவும் உதவியாக இருந்தது என்றால் அது மிகையில்லை.

முதலில் சச்சின் விளாசியதை பார்த்த போது இன்றும் நமக்கு ஒரு விருந்து காத்திருக்கிறது என்றெண்ணி சிப்ஸ் வகையாறக்களை (மட்டும் தான்) வாங்கி வைத்து உட்கார்ந்தேன். நான் கால்கிலோதான் வாங்கியிருக்கிறேன் என்று சச்சினுக்கு எப்படியோ தெரிய 34லிலேயே அவுட்டானார். என் சிப்ஸும் காலியாயிற்று.

ஹர்பஜன் போனதடவை போல இந்த மேட்ச்சிலும் சிலபல சிக்ஸர்களை பார்த்துவிட்டு போகலாம் என்று வர, இந்த முறை அவர் பஜனை நடக்கவில்லை. பிறகு வந்த நய்யார், நேபியர் மற்றும் ரஹானே ஆளுக்கு 10,15 & 10 எடுத்து அவுட்டானார்கள். டூமினி எல்லாரோடையும் சேர்ந்து விளையாடினார்.

டூமினி ஸ்ரீலங்காவின் ஹஷான் திலக்கரத்தனேவை ஞாபகப்படுத்துகிறார். அவரைப் போலவே பின்பக்கத்தை தூக்கிக் கொண்டு நிற்பது, பின்னாடி வரும் வீரர்களுடன் நின்று விளையாடுவது, கடைசிவரை விட்டுக்கொடுக்காமல் இருப்பது மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பிரமாதமக ஆடியது என்று எல்லாம் அவரைப் போலவே.

ஸ்ட்ரா இல்லாமல் உறிஞ்சிய 13 எக்ஸ்ட்ராக்களின் உதவியுடன் மும்பை 148ஐ சேர்த்தது.

பின் வந்தாடிய கொல்கத்தாவின் வெற்றிக் கனவை கங்குலி 0த்தில் அவுட்டாகி கெடுத்தார். அவர் செய்தது சரியே என்று கேலும் வழிமொழிய கொல்கத்தா வழக்கம் போல் தள்ளாடியது.

ஹாட்ஜ் அற்புதமாகவும், நிதானமாகவும் அதே சமயத்தில் பொறுப்பாகவும் ஆடி 73ஐ சேர்த்து கொண்டிருந்தபோது கொல்கத்தாவுக்கு மங்கிய வெற்றி வாய்ப்பு மீண்டும் பிரகாசித்தது.

அவருடன் ஜோடி சேர்ந்து (நீங்களே சொல்லிப் பார்த்துக்கோங்க) WYK 32 சேர்த்தார். எனக்கு பிடித்த சச்சின் அணி தோல்வியை தழுவிவிடுமோ என்ற அச்சம் என் மனதில் துளிர்விட்டாலும், ஏதோ ஒரு மூலையில் கொல்கத்தா மீதான நம்பிக்கை இருந்தது.

என் நம்பிக்கை வீண்போகவில்லை. மெக்கல்லம் தன்னை வரிசையில் கொஞ்சம் பின்னுக்கு தள்ளிக்கொண்டு வந்து மின்னுவார் என்று பார்த்தால் பன்னுக்குக் கூட ஆகாமல் போனார்.

அபப்டி இப்படி ஆடிக்கொண்டு என்று ஐயப்பன் பாட்டில் வருவது போல 139ஐ மட்டுமே எடுக்க முடிந்தது கொல்கத்தாவினால். மும்பை இந்தியன்ஸ் 9 ரன்னில் வெற்றி பெற்றது.

24வது ஆட்டம்: பெங்களூரு ராயல் சாலஞர்ஸ் – கிங்ஸ் லெவன் பஞ்சாப்

இந்த இரண்டு அணிகளும் ஆடுகிற மேட்ச்சுகளில் எதிரணிக்கு கஷ்டம் உண்டாக்குகிறதோ இல்லையோ என்னைப்போல தமிழில் விமர்சனம் செய்யும் ஆட்களுக்கு தங்கள் பெயர்களின் மூலம் கஷ்டத்தை கொடுக்கின்றன.

இருந்தாலும் பெங்களூரு மற்றவர்கள் கஷ்டபடுவதை விரும்பவதில்லை. அது ஸ்கோரர் ஆனாலும் சரி எதிரணி போலர்களானாலும் சரி. இந்த மேட்ச்சிலும் தன் கொள்கையான அதிக ரன் எடுக்காமல் அவுட்டாவதை தொடர்ந்தார் ரைடர்.

இவர்களையெல்லாம் இவ்வளவு பணம் கொடுத்து வாங்கும் ஸ்பான்ஸர்சை சொல்ல வேண்டும். அவரவர் தலையெழுத்து. நாம் என்ன செய்ய முடியும்.

வந்த வீரர்களெல்லாம் சொற்ப ரன்களில் அவுட்டாகிப்போக திக்கித்திணறி வாண்டர் மெர்வின் அதிரடி ஆட்டத்தினால் பெங்களூரு தாக்குபிடிக்கும் ஸ்கோரை தாண்டி, ஜெயிக்க வாய்ப்புள்ள ஸ்கோரான 145 எட்டியது.

பஞ்சாப் அணியின் அப்துல்லாவும் ஒரு நல்ல கண்டுபிடிப்பு. தன் பங்குக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அவ்வப்பொழுது பெங்களூருக்கு ஒரு ப்ரேக் போட்டார்.

யுவராஜின் ஹாட்-ட்ரிக் தான் மேட்ச்சின் ஹைலைட். ட்ரிக்கெல்லாம் ஒன்றும் கிடையாது. அவர் பாட்டுக்கு அவருக்கு தெரிந்ததை போட்டார். நம்ம பெங்களூரு அணிதான் ரொம்ப நல்ல டீம்மாயிற்றே. இந்தா பிடி என்று மூன்று பேரை காவு கொடுத்தது. யுவராஜுக்கெல்லாம் ஹாட்-ட்ரிக் என்று நினைத்தால், உவ்வே…என்னை எடுங்க, நான் வாங்கு வாங்குன்னு வாங்கறேன் அவர.

பின் வந்த பஞ்சாப் அணிக்கு இது ஒன்றும் பெரிய இலக்கல்ல என்று நினைத்தற்கேற்ப யுவராஜ் பேட்டிங்கிலும் வெளுத்து வாங்க ஆரம்பித்தார். அவர் இந்த ஐபிஎல்லில் அடித்த முதல் அரை சதம் என்று நினைக்கிறேன்.

முதல் விக்கெட்டுக்கு அவருடன் ஜோடி சேர்ந்த கோயல் 20 ரன் சேர்த்தார். முதல் விக்கெட்டே 70ல் தான் வீழ்ந்தது. ”இனிமே எங்க ஜெயிக்க போவுது” என்று பலர் புலம்ப ஆரம்பித்த நேரம் ரன் எடுத்துக் கொண்டிருக்கும் அதே தருணத்தில் விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது பஞ்சாப்.

25 பந்துகளில் 46 ரன் என்ற நிலையில் இருந்த பஞ்சாப் சடசடவென்று ஜெயவர்த்தனே, சங்கக்காரா பதான் என்று கிட்டத்தட்ட அடுத்தடுத்த ஓவர்களில் மூவரையும் இழக்க இலக்கு மேலும் கஷ்டமானது.

8 ரன்களில் தோவில்யை தழுவியது பஞ்சாப் அணி. யுவராஜ் இப்படியே பண்ணிக்கிட்டு இருந்தீங்க அப்புறம் ஜிந்தா கல்தா கொடுதிட்டு கோலிவுட் பக்கம் போயிரும்.

25வது ஆட்டம்: டெக்கான் சார்ஜர்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ்

மேலே நான் எழுதிய முன்னுரையை மறுபடியும் ஒரு முறை படித்துவிடுங்கள். இந்த மேட்ச்சும் 140களில் தான்.

142ஐ எடுக்க எதிரணியான ராஜஸ்தான் ராயல்ஸுக்கு தேவைப்பட்ட ஓவர்கள் 19.4.

முதலில் டெக்கான் கிப்ஸை சீக்கிரமே இழக்க எதற்கும் மனதளராமல் எதிரணியை மட்டுமே தளர வைக்கும் கில்லியும் ரோஹித்தும் அணி நல்ல ரன்ரேட்டில் இட்டுச்சென்றது. அதுவே வெற்றிக்கோட்டிலும் பயணிக்க செய்யும் என்று நினைத்தேன். பின்பு வந்த சுமன் பிரமாதமாக ஆடி எல்லோரையும் ஆச்சரியத்தில் தள்ளினார்.

டெக்கானின் பேட்டிங் தேரிவிட்டது. போன ஐபிஎல் போல இல்லை. ஒருவர் விட்டால் ஒருவர் அடிக்க குறைந்தபட்சம் 140களில் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.

வார்னேயின் ஃபீல்டிங் செட்டப் நன்றாக இருந்தது. ராஜஸ்தான் அணியின் பந்து வீச்சும் அதற்கேற்றார்போல் அமைந்தது.

முனாஃப் படேலை கிரிக்கெட்டை விட்டு கொஞ்ச நாள் தள்ளிவைக்க வேண்டும். அவர் திரும்பவும் கிரிக்கெட் ஆட கெஞ்ச வேண்டும். அப்படித்தான் சொல்ல வைக்கிறது அவரின் போக்கு. பந்தை எட்டி உதைப்பதும், அவரிடம் வரும் பந்துகளை உதாசினபடுத்தவுதும்.

இவரெல்லாம் இந்தியாவுக்கு விளையாடினால் மற்ற வீரர்களுக்கும் அந்த வியாதி தொற்றிக் கொள்ளும்.

ராவுத்தான் மேன் ஆஃப் த மேட்ச். பிரமாதமாக விளையாடினார். தன் நிலையை சற்றும் இழக்காமல் நிதானமாக விளையாடி அணிக்கு வெற்றியை தேடித்தந்தார்.

வெற்றி கோட்டில் தொடர்ந்து பயணிக்க வேண்டிய டெக்கான் ராவுத்திடம் தோற்றது. அதுவே அவர்களின் அணியின் வெற்றிப் பயணமும் நின்றது.

ராஜஸ்தானுக்காக கார்ஸ்சல்டைன் மற்றும் வார்னே தலா 39ம் 21ம் சேர்த்தனர். கடைசியில் 7 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 19.4 ஓவர்களில் வெற்றி ஸ்கோரான 142ஐ அட்டியது ராஜஸ்தான்.

26வது ஆட்டம்: சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி டேர் டெவில்ஸ்

டெல்லி டேர் டெவில்ஸ் டாஸ் ஜெயித்தும் பேட்டிங் ஆடாமல் ஃபீல்டிங்கை தேர்வு செய்ததே முதலில் தவறு.

20 ஓவர் ஓவர் டென்ஷன், 10 ஓவருக்கு பிறகு வரும் ப்ரேக்கினால் வரும் ப்ரேக், அதனால் வரும் டென்ஷன் என்று டென்ஷனுக்கு மேல் டென்ஷனை ஏற்றிகொள்ள வேண்டுமானால் ஃபீல்டிங்கை தேர்வு செய்யலாம்.

சென்னை அணியின் போலிங் அப்படியொன்றும் ஆஹா ஓஹோ இல்லை, பார்த்துக்கொள்ளலாம் என்ற எண்ணமே டெல்லியை ஃபீல்டிங் செய்ய தூண்டியிருக்க வேண்டும்.

என் கணக்குத்தான் தப்பாதப்பா அட உன் கணக்குத்தான் தப்பாச்சப்பா என்று தோனி போட்ட கணக்கே ஜெயித்தது கடைசியில். இருந்தாலும் வார்னரும் கார்த்திக்கும் சென்னைக்கு கொடுத்த கஷ்டம் கொஞ்சநஞ்சமல்ல.

உறித்து எடுத்தார் வார்னர். அவர் அடித்த ஒவ்வொரு ஷாட்டும் இடி என்றுதான் சொல்ல தோன்றுகிறது. யரையும் விட்டுவைக்கவில்லை அவர். வெற்றிக்கு 164 தேவை என்று ஆரம்பித்த சாத்தான்கள் விக்கெட்டுகளை குறுகிய காலகட்டத்தில் இழந்தாலும் கார்த்திக் சென்னைக்கு த்ரோகம் இழைக்க சற்றும் யோசிக்கவில்லை.

இருவரும் வாட்டி எடுத்தனர். அவ்வளவுதான் முடிஞ்சது மேட்ச் என்றெண்ணிக் கொண்டிருக்கும் பொழுது, சாத்தான்களை திணறடிக்கும் தேவைதயாய் வந்தார் ஜகாதி.

ஜகாதி – அவர் சைலண்ட் கில்லர் ஜாதி. அதனால் தானோ என்னவோ ரியாக்‌ஷனை முகத்தில் காட்டாமல் தன் பந்துவீச்சில் காட்டினார்.

கோவா சிங்கம் நன்றாக ஆடிக்கொண்டிருந்த ஆஸ்திரேலிய கங்காரவை ”போய்வா” என்றது. அது சென்னைக்கும் வெண்ணை கொடுத்தது.

இதற்கெல்லாம் முன்னதாக கார்த்திக் வாட்டி வறுத்தெடுத்தது குறிப்பிடதக்கது. கார்த்திக்குக்கு இந்திய அணியில் பல வாய்ப்புகள் கொடுத்தும் அவர் சரியாக உபயோகபடுத்திக் கொள்ளவில்லை.

தோனி மெள்ள இந்திய அணியில் பசுமரத்து ஆணியை போல ஒட்டிக்கொண்டார். கார்த்திக் தோனியைவிட சீனியர். அதெல்லாம் பழைய கதை. இப்போது மறுபடியும் ஆடிக்காட்டுகிறார். இந்த முறை தோனிக்கு.

கார்த்திக் நல்ல ஆட்டக்காரர். எனக்கு அவர்மீது பெரும் நம்பிக்கை இருக்கிறது. வாய்ப்பு கொடுத்தால் அதை சரிவர பயன்படுத்திக் கொள்வதை தவிர அவர் வேறொன்றும் பாவம் அறியாதவர். அவருக்கு ஒரு வைல்டு கார்டு ரவுண்டு கொடுத்து பார்க்கலாம்.

முன்னதாக சென்னை அணியின் ரைனா இந்த முறையுன் ரன்னை ரெய்னாக பொழிந்தார். இன்னும் கொஞ்ச நேரம் நின்றிருந்தால்

பத்ரிநாத் ரைனா நல்ல காம்பினேஷன். ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொண்டு விளையாடுகிறார்கள். தோனியிடம் எதிர்பார்த்து கொண்டிருக்கும் தீபாவளி சரவேடி இந்த மேட்ச்சிலும் மிஸ்ஸிங்.

ஹேடன் தன் ஆரஞ்சு கேப்பை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். அவரின் மளமள 30 சூப்பரப்பு.

தியாகியும் ஜகாதியும் தான் சென்னை எக்ஸ்பிரஸ் நிற்காமல் ஓட காரணமானவர்கள். சென்னை 18 ரன் வித்தியாசத்தில் வென்றது.

2 Comments »

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.