ஐபிஎல் – சுருண்ட மும்பை, மீண்ட ராஜஸ்தான்

ஐபிஎல் கொஞ்சம் கொஞ்சமாக சூடுபிடித்துக் கொண்டிருக்கிறது. சென்ற முறையே மிகவும் எதிர்பார்த்த ஆனால் அந்தளவிற்கு ஜொலிக்காத கொல்கத்தா மற்றும் மும்பை இந்த முறையாவது ஜொலிக்கும் என்று மீண்டும் எதிர்பார்ப்பட்டது.

கொல்கத்தா மொத்தமாக வழிய மும்பை நம்பிக்கை கொடுத்தது. ஜெயசூர்யாவும் டெண்டுல்கரும் இருந்த ஃபார்மில் நிச்சயம் செமிக்கு போகும் என்று நான் கூட எதிர்பார்த்தேன். கடந்த சில ஆட்டங்களில் சச்சின் ஆட்டம் காண டிவியை ஆன் செய்தால் சச்சின் அங்கு எதிரணியின் போலிங்கில் ஆட்டம் காண மும்பை திக்குகுக்காடியது.

செமிஸ்க்கு எண்ணுடைய கணிப்பு சென்னை, ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் டெல்லி. டெக்கானை அவ்வளவு எளிதாக விட்டுவிட முடியாதானாலும், அவர்களுக்கு நல்ல திறமையிருந்தாலும் ஏதோ ஒன்று மிஸ்ஸிங்.

32வது ஆட்டத்தில் டெக்கானின் கில்லி அதிகம் அடிக்காமல் போனாலும், தாக்கு பிடித்து ரோஹித் ஷர்மாவின் ஆட்டத்தால் 145ஐ தொட்டது.

சச்சினும் ஜெயச்சுர்யாவும் இருக்கிறார்கள். இது ஒன்றும் பெரிய இலக்கல்ல என்று நினைத்தால், நம் நினைப்பில் மண். ஏதோ டூமினி பொறுமையாக ஆட மும்பை 126ஐ மட்டுமே எட்டி தோலிவியை தழுவியது.

தென் ஆப்பிரிக்காவுக்கு டூமினி இந்தியாவிற்கு பல இளைய ரத்தங்களில் ஒன்று ரோஹித் ஷர்மா. ஷர்மா அவ்வளவு அலட்டிக் கொள்வதாக தெரியவில்லை. அவருக்கு கிரிக்கெட் இயற்கையாகவே வருகிறது. இன்னொரு சச்சினாக எனக்கு தோன்றுகிறது.

33வது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸும் பெங்களூரு ராயல்ஸும் மோதியதில், மோதல் தாங்காமல் மொதலுக்கே மோசம் போன மாதிரி சொற்ப 105க்கு ஆட்டத்தை முடித்துக் கொண்டது ராயல் சேல்ஞ் அணி.

முன்னொரு பதிவில் சொன்னது போல ராயல் சேல்ஞ் அணியில் பலர் 10-15 எடுத்தார்கள். ஆனால் அந்த அரைசதம்தான் இல்லை.

ராயல் சேலஞ்சுக்கு எமன் போல வந்த நமன் வெற்றியை எளிதாக்கிவிட்டு போனார். தன் பங்குக்கு தன் அணி எடுக்க வேண்டிய ரன்னில் கிட்டதட்ட பாதியை அவரே குவித்தார்.

மற்றபடி வழக்கம் போல பதான் 22 எடுக்க 15 ஓவரிலேயே ஆட்டம் முடிந்து போனது. ராயல் சேலஞ் அடுத்த முறையாவது நன்றாக ஆடி போட்டிய கடுமையாக்க வேண்டும். கும்ப்ளே ராகுல் இருப்பது சந்தேகம்தான்.

34வது ஆட்டம் சென்னை சுப்பர் எக்ஸ்பிரஸ் அணிக்கும் யுவராஜாக்கள் லெவன் அணிக்கும் நடந்தது. சென்னை ஆரம்பத்தில் பத்ரியை பறிகொடுத்தாலும், பின்னர் வந்த ரெயனா ஹேடனுடன் சேர்ந்து பழிவாங்கியது.

மனிதருக்கு 39 வயது (சரிதானே) என்றால் நம்புவது மிகக்கடினம். அவர் அடித்தால் பந்து போகும் வேகம்/தூரம் ஆகட்டும், அவர் ஓடும் வேகம் ஆகட்டும் அல்லது அவர் ஃபீல்டிங்கில் காட்டும் திறன் ஆகட்டும். எதுவுமே அவர் வயதை ஊர்ஜிதபடுத்த உதவுவதில்லை.

ஸ்ரீசாந்த தேவையில்லாமல் அதிகமாக பேசப்படுகிறார் என்பது ஹேடனின் கருத்து. அது எந்த அளவிற்கு உண்மையென்று தெரியவில்லை. ஆனால் அவரை பொறுத்தவரை அவர் ஆடும்போது அப்படித்தான் தெரிகிறது.

ஆரஞ்சு கேப் ஹேடனிடம் கடைசிவரை தங்குமானால நிச்சயமாக சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த போட்டியை வெல்வது உறுதி. சென்னை ஜெயிக்குமா என்பத்இல் கூட சந்தேகம் வரலாம் ஆனால ஹேடன் மீது வராது.

தோனி ஆடவில்லை ஆடவில்லை என்று சொல்லிக்கொண்டிருந்த எனக்கு கடந்த சில ஆட்டங்களில் தோனி பந்தை மட்டுமல்ல என் மூக்கையும் சேர்த்து உடைத்துக்கொண்டிருக்கிறார், ஆட்டத்தின் போக்கை மாற்றிவிடுகிறார்.

185 கடினமான இலக்குதான். ஆனாக் யுவராஜ் இருக்கிறார். அவரின் திறமையை அனைவருமே அறிவோம். அவர் ஆட ஆரம்பித்தால் சிவனின் ருத்ரதாண்டவமும் தோற்றும் போகும்.

காட்டிச் இப்படியும் ஆடுவார் என்பதை பார்த்து ஆச்சர்யம் அடைந்தேன். மிகப்பிரமாதமாக விளையாடி தான் அடித்த மொத்த ரன்னின் பாதி எண்ணிக்கையான 25 பந்துகளில் அதிரடி திருவிழா நடத்தினார்.

கூட சேர்ந்த யுவராஜ் தன் அணிக்கு வெற்றியை தேடித்தந்துவிடுவார் என்றே எதிர்பார்த்தேன். கோனி அந்த கேட்ச்சை விட்டதற்கு ரூம் போட்டு அழுதிருப்பார். தோனி முறைத்த முறையில் அண்டமும் கலங்கி போயிருக்கும் கோனிக்கு.

தப்பித்தது சென்னை. உபயம் சுரேஷ் ரெய்னா. இந்த ஐபில் என்ன ரெய்னாவின் ரெய்னா? ரெய்னா மெய்னா அந்த இரண்டு ஓவரில் கலக்கியதே சென்னையின் வெற்றிக்கு மூலக்காரணம்.

தோனி சொன்னது போல ஆட்டம் யார் பக்கம் வேண்டுமானாலும் போயிருக்க வாய்ப்பு இருந்தது. ரெய்னா புண்ணியத்தில் அது சென்னை பக்கம்.

This entry was posted in ஐபிஎல்2, கிரிகெட் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *