ஐபிஎல் – சச்சின் + 1 ஓவர் = தோல்வி

சச்சின் பல ஆட்டங்களில் தன் அற்புதமான பேட்டிங் திறமையாலும் போலிங் திறமையாலும் இந்தியாவிற்கு பல வெற்றிகளை அள்ளிக்கொடுத்துள்ளார்.

ஆனால் அதே சமயம் அவரின் பந்து வீச்சினால் வெகு சில வெற்றி பெற வேண்டிய ஆட்டங்களிலும் தோல்வியை தேடித்தந்தார் என்பது நம் எல்லோருக்குமே தெரியும்.

அந்த லிஸ்ட்டில் சேர்த்துக்கொள்ளவேண்டிய ஒன்றுதான் ஐபிஎல்லின் 35வது ஆட்டம்.

அப்படி அவர் அந்த ஓவரை போட்டிருக்கவில்லையென்றால் மும்பை ஜெயித்திருக்குமா என்றால், அது 40% வாய்ப்பே. ஜெயசூர்யா இருந்திருந்தால், சச்சின் அந்த ஓவரை போடாமலிருந்திருந்தால், டெல்லி இன்னும் ஒன்றிரண்டு விக்கெட்டுகளை இழந்திருந்தால் என்று அந்த பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

டெல்லிக்கு 116 கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. டிவில்லியர்ஸ் இன்னொரு முறை காப்பாற்றிவிட்டுப் போனார். அவரும் தில்ஷானும் இல்லையென்றால் டெல்லி இல்லை. ஆடி அம்மாவாசைக்கு கம்பிர் எட்ஜிலேயே 30-40 அடிப்பார். சேவாக் வீணாக அலட்டிக்கொள்வதே இல்லை. காலில் கரண்டி விழுந்துவிட்டது, கையில் ஷேவ் செய்யும் போது ப்ளேடு கிழித்துவிட்டது போன்ற காரணங்களை சொல்ல இயலாததால் விரலில் வீக்கம் என்று வேறொரு பொய்யைச் சொல்லி நிம்மதியாக உட்கார்ந்து கொண்டார்.

மும்பைக்காக ப்ராவோ நன்றாக விளையாடி 35 ரன்கள் குவித்தார். அதுவே அணியின் சிறந்த ஸ்கோர்.மற்றபடி ஆளுக்கொரு 10 அடிக்க, மும்பை 116ஐ சேர்த்தது.

சச்சின் டெண்டுல்கர் அவுட்டான விதம் படு மோசம், இவ்வளவு அலட்சியம் ஆகாது. அதுவும் தான் நடுவில் வந்து டீமை காப்பாற்றும் எண்ணத்துடன் வந்தது இப்படி அவுட்டாகி போக அல்ல. அவருக்கே அரிச்சல் வந்திருக்கும் அவர் மீது.

மும்பைக்காக டூமினி வழக்கமாக தன் பேட்டிங் மூலம் பேசுபவர் இந்த ஆட்டத்தில் போலிங்கில் காண்பித்தார். சும்மா சொல்லக் கூடாது மனிதர் நன்றாகவே போடுகிறார். அவரும் ஹர்பஜனும் டெல்லியை 8 ஓவருக்கு கட்டிப்போட்டனர். சச்சின் வந்தார் சிக்கலை அகற்றினார். அவர் அகற்றியது டெல்லியின் சிக்கலை.

36வது ஆட்டத்தில் பஞ்சாப் அணியும் டெக்கானும் மோதியது. பஞ்சாப் அணிக்குள் ப்ரெட் லீயும் டெக்கானுக்குள் சிமண்ட்ஸும் இடம்பெற்றனர். இது போட்டியை மேலும் சிறப்பாக்கியது. இருவரிடமிருந்தும் அதிக எதிர்பார்ப்புகள். ஒருவர் போலர் மற்றொருவர் பேட்ஸ்மன். சிமண்ட்ஸ் போலிங்கும் போடுவார் என்பது கூடுதல் பலம் டெக்கானுக்கு.

ப்ரெட் லீ அதிகம் ஜொலிக்கவில்லை என்றாலும் சிமண்ட்ஸ் தவறவில்லை. அவர் முதல் மேட்ச்சிலேயே சிக்ஸ்மண்ட்ஸ் என்று நிரூபித்துவிட்டார். அதிகம் இல்லை ஜெண்டில்மேன் 36 பந்துகள்தான் அவர் எடுத்துக் கொண்டது. ஆனால் அவர் அடித்த ரன்னோ 60. பவுண்டரிகளில் அதிகம் நாட்டமில்லைப் போலும். அதுதான் சிக்ஸர்களாக பிய்த்து உதறிவிட்டார்.

மொத்தம் 168 ரன்களை குவித்தது டெக்கான். 140 ரன் எடுத்தாலே போதுமானதாக இருக்கும் தென் ஆப்பிரிக்க ஆடுகளத்தில் 168 நிச்சயமாக வெற்றிபெறக் கூடிய ஸ்கோர்தான்.

பஞ்சாப் அணியில் டிவில்லியர்ஸும் இல்லை. இலக்கோ ஆரம்பம் முதலே ஓவருக்கு 8க்கும் சற்று அதிகமான ரன் தேவை. இந்த முறை அவர்களை காப்பாற்ற வந்தவர் ஜெயவர்த்தனே. அவர் இன்னிங்ஸை மிகச்சரியாக கொண்டு சென்று பஞ்சாப்பிற்கு வெற்றியை தேடித்தந்தார்.

டெக்கானுக்காக ரோஹித் 27 ரன்கள் எடுத்து 168ஐ குவிக்க உதவினார். அதோடு மட்டுமில்லாமல் அவர் போலிங்கிலும் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

மிகவும் எதிர்பார்க்கபட்ட ஆர்பி சிங் இந்த மேட்சி சோபிக்காததே டெக்கானின் தோல்விக்கு காரணாமாக நான் கருதுவது. அவரிடமிருந்து இரண்டு விக்கெட்டுகள் வந்திருந்தால் டெக்கானுக்கு உதவியாக இருந்திருக்கும்.

இன்னும் ஒரு முறை இன்னொரு மேட்ச்சில் இன்னொரு அணி கடைசிக்கு முதல் பந்தில் வெற்றி பெற்றது.

என்னவோ முதல் ஒன்றிரண்டு ஆட்டங்களில் போனால் போகிறது என்று விட்டுக் கொடுத்தாற்ப்போல ஆடியதோ என்றுதான் தோன்றுகிறது இப்பொழுது சென்னை ஆடிக்கொண்டிருக்கும் விதத்தை பார்த்தால்.

சென்னை எக்ஸ்பிரஸ் என்று எழுதியாகிவிட்டது, சென்னை சுப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் என்றும் எழுதியாகிவிட்டது, இப்பொழுது என்ன எழுதுவது? சென்னை சுப்பர் நான்ஸ்டாப் எக்ஸ்பிரஸ் என்றுதான் சொல்லவேண்டும்.

அப்படித்தான் ஆடிக்கொண்டிருக்கிறது சென்னையும். ஹேடனின் இந்த ஃபார்ம் அவர் ஒருவேளை சச்சினை போல சிறுவயதில் தன் நாட்டு கிரிக்கெட் அணியில் இடம்பெற்றிருந்தால், சச்சினுக்கு நிச்சயம் பெரிய போட்டியாக இருந்திருப்பார். மனிதர் போலர்களை மதிப்பதே இல்லை.

தன்னுடன் ஆடிய ஷேன் வார்னேவை நடந்து வந்து ஆடினார். அது மட்டுமில்லாமல் எதிர்பக்கம் ஆடிக்கொண்டிருந்த பத்ரிக்கு டிப்ஸும் கொடுத்து ஊக்குவித்தார். வார்னேவின் அடுத்த பந்து என்னவாக இருக்கும் என்று யோசனைகளும் வழங்கி சென்னை வெற்றி பெற எல்லா வகையிலும் துணையாக இருந்தார்.

பத்ரி தேர்ட் மேனிலும் ஃபைன் லெக்கிலும் பவுண்டரிகளை அனாயசமாக அடித்து ரன்களை குவித்தார். கடைசிவரை நின்று அணியை வெற்றி பெறச் செய்தார். அவரின் சில பவுண்டரிகளை சரியாக கவனிக்காமல் வர்ணனையாளர்கள் எட்ஜ் அன்று கூறியது மனதுக்கு வேதனைதான்.

முன்னதாக ஆடிய ராஜஸ்தான் ஸ்மித்தின் உதவியுடன் 140ஐ எட்டியது. அஸ்நோட்கர் தன்னை டெண்டுல்கராக நினைத்து கொள்வது உங்களுக்கு தெரிகிறதா? எனக்கு போன ஐபிஎல்லிருந்தே இந்த சந்தேகம் இருக்கிறது.

அவருக்கு நல்ல திறமை இருக்கிறது. பெயரும் “கர்” என்று முடிகிறது. மனிதரும் குள்ளமாக இருப்பதால் அந்த நினைப்பா என்று தெரியவில்லை. அஸ்நோட்கர், ஜடேஜா மற்றும் அணித்தலைவர் ஷேன் வார்னே உதவியுடன் 140.

ஷேன் வார்னே என்னதான் திறமையான கேப்டனாக இருந்தாலும் அவர் ஒரு மேட்ச்சில் யூசுப் பதான் முதலில் விக்கெட் எடுத்தார், ஸ்பின் வேலை செய்தது என்றாலும், அதையே எல்லா மேட்ச்சிலும் முயற்சிப்பது அவரின் சிந்தனை காலியாகிப் போனதை காட்டுகிறது.

அதே சமயம் தோனி சமயோஜிதமாக யோசித்து காய்களை நகர்த்துவது மிகவும் அருமை.

இன்னும் ஒரு முறை ஒரு அணிகளும் சந்தித்தால் பார்ப்பதற்கு நமக்கு விருந்தே.

This entry was posted in ஐபிஎல்2, கிரிகெட் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

One Response to ஐபிஎல் – சச்சின் + 1 ஓவர் = தோல்வி

  1. //பத்ரி தேர்ட் மேனிலும் ஃபைன் லெக்கிலும் பவுண்டரிகளை அனாயசமாக அடித்து ரன்களை குவித்தார். கடைசிவரை நின்று அணியை வெற்றி பெறச் செய்தார். அவரின் சில பவுண்டரிகளை சரியாக கவனிக்காமல் வர்ணனையாளர்கள் எட்ஜ் அன்று கூறியது மனதுக்கு வேதனைதான்.//

    நான் நெனச்சேன் நீங்க சொல்லிட்டிங்க. இந்த ஐ பி எல்லின் பெரிய வேதனையே மட்டமான வர்ணனைதான். ஒரு டெக்னிகல் சமாசாரமும் காணோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *