ஏசூசி – கலர்கலரா கருப்பு வெள்ளை

ஐந்து போட்டியாளர்கள், தேவைக்கு அதிகமான அவர்களின் மேக்கப், நிகழச்சியின் பிரபலத்தை உபயோகபடுத்திக் கொண்டு சென்ற சில வாரங்களாக தேவையில்லாத விளம்பர வாரங்கள் என்று ஏர்டெல் போய்க்கொண்டிருக்கிறது.

ஒரு வழியாக ஃபைனல்ஸ் ஆரம்பித்துவிட்டது என்பதற்கு சான்றாக நேற்றிலிருந்து போட்டியாளர்கள் மறுபடியும் கருப்பு வெள்ளை சுற்றில் கலர்கலராக வந்து இன்னும் வண்ணம் குறையாத கருப்பு வெள்ளைக்கால பாடல்களை பாடினார்கள்.

சென்ற முறை இறுதி சுற்றும் இதுபோலத்தான் இருந்ததா என்று தெரியவில்லை. ஆனால் இந்த முறை கூச்சலும் கும்மாளமும் நிகழ்ச்சியின் தரத்தை முற்றிலுமாக குறைத்துவிட்டது மறுக்க முடியாத உண்மை.

ஆளாளுக்கு ஒவ்வொரு வண்ணம் என்று ஒரு வண்ணத்துக்கு சுமார் 50 பேரை கத்தவிட்டு வேடிக்கை பார்க்கிறது. நாம் ரசித்த சூப்பர் சிங்கரா இது என்று நினைக்கும் அளவுக்கு கேவலாமாக இருக்கிறது. இதை தவிர்த்திருக்கலாம்.

நேற்றைய நிலையில் எனக்கு பிடித்த பாடல் “உன்னிடம் மயங்குகிறேன்”. பிடித்த பாடகர் அந்த பாடலைப் பாடிய அஜீஷ். இன்றைய நிலையில் கொஞ்சம் குழப்பம்தான்.

இருந்தாலும் “உயிரிலே என் உயிரிலே” என்று உயிரை உள் சென்று குடித்த ரவியே இருப்பதிலேயே சிறப்பாக பாடினார். அதற்கு அடுத்தபடியாக ஒரே நிலையில் ப்ரசன்னாவும் அஜீஷும்.

என்னவென்று சொல்லத்தெரியவில்லை ஆனால் நிச்சயமாக ஏற்ற இறக்கங்களில் ரவி ஒரு பிழை செய்கிறார் அல்லது மாற்று வழியில் பாடுகிறார். கீழ்ஸ்தாயிலிருந்து மேல்ஸ்தாயிக்கு செல்லும்போது ஒரு மிகச்சிறிய இடைவெளி கொடுத்துக் கொள்கிறார். அது அவருக்கு பாடத் தெரியாததால் அல்ல அவருடைய குரல் அமைப்பினால் என்வது என் கருத்து.

நான் ரவி மற்றும் ப்ரசன்னாவின் மிகப்பெரிய விசிறி என்றாலும், ப்ரசன்னாவே வெற்றி பெற வேண்டுமென்று எண்ணினாலும், என்னவோ அஜீஷ்தான் வெற்றி பெறுவார் என்று உள்மனது சொல்கிறது.

உள்ளிருக்கும் என் ஆசை வெற்றி வெறுகிறதா அல்லது உள்மனது வெற்றி பெறுகிறதா என்று பார்ப்போம். நாளை கர்நாடிக் ரவுண்ட்.

This entry was posted in பொது and tagged , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

3 Responses to ஏசூசி – கலர்கலரா கருப்பு வெள்ளை

  1. எனக்கும் கூட இறுதி சுற்று சற்று ஏமாற்றம்தான். மெல்லிசை மன்னரை வரவழைத்து, அவர் ஒன்றுமே பேசாமல் (அல்லது அவரை பேச விடாமல்), “நல்லா பாடினீங்க” “நல்லா பாடினீங்க” என்று மட்டும் சொல்லியது (சொல்லவைத்தது) மிகுந்த ஏமாற்றம்.

    மற்றவை என் பதிவில். (என்ன ஆளு நாங்க. சான்ஸ் வுட்டுருவமா?)

  2. அண்ணே… நான் ஐபில் மற்றும் ஏசூசி ரெண்டையுமே பாக்கறதில்லே… அதனால் அது சம்மந்தப்பட்ட இடுகையையும் முழுசா படிக்கறதில்லே… கமெண்டறதுமில்லே… தப்பா எடுத்துக்காதீங்க… வேறே ஏதாவது விஷயமா இருந்தா கண்டிப்பா படிச்சி கமெண்டுவேன்….

  3. T.P. Anand says:

    I agree with Chinnappaiyan why dont we move from Super Singer and IPL (now that both are over) and look around – economy, politics, future – many schools are starting e-learning and i wonder if after 10 years there will be any schools…………

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *