Home » General, ஐபிஎல்2, கிரிகெட், நகைச்சுவை, பொது

அதிரடிக்காரன் (ஐபிஎல்) மச்சான் மச்சான் மச்சானே

18 April 2009 7 Comments

சத்தியமூர்த்தி லாஜிக் இல்லா மாஜிக்கில் எங்க இந்த விஜயசாரதி நாம ரூம் போட்டு யோசிச்ச ஐடியாவ போட்டுறப்போறான்னு இப்பவே புலம்ப ஆரம்பிக்க…என் இன்னொரு சகோவும் தனக்குன்னு ஒரு ப்ளாக ப்ளாக் பண்ணி ஒரு பதிவும் போட்டு ஆரம்பிக்க……ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஒரு வழியா இறுதி சுற்றுக்கு ஒரு ஆளா தேர்வு செய்ய காட்டு அட்டை சுற்றுக்கள நாளையிலிருந்து ஆரம்பிக்க…..தோ நானும் வந்துட்டேன் விளையாட்டுக்குன்னு சச்சினும் தன் ஐபிஎல் அக்கவுண்ட்டை ஆரம்பிக்க…

காக்க காக்க கனகவேல் காக்க..நோக்க நோக்க…மத்தவங்களெல்லாம் ஆரம்பிக்க…இதோ நானும் என் ஐபிஎல் அக்கவுண்ட்ட ஆரம்பிக்க போறேன். ஏன் லேட்டுன்னு செல்லமா பல வாசகர்கள் நேத்து ராத்திரிலேர்ந்து ஒரே தொல்லை. அதுல ஒரு வாசகர் “எந்த ஆணியும் புடுங்க வேணாம், ஒழுங்கா ஒரு பதிவ போடு தம்பி”ன்னு ஸ்ட்ராங்காவே போட்டிருக்கார்.

இதுக்கு மேல நான் பதிவ போடலைன்னா…நான் ஒரு பதிவரா எனக்கு வலை தேவையான்னு எனக்கு நான் ”தில்லு முல்லு தேங்காய் சீனிவாசன்” கணக்கா கேட்டுக்கிட்டதன் விளைவு இந்த ஐபிஎல் ஆரம்பம்.

சுஜாதா மெக்ஸிக்கோ சலவைக்காரி மாதிரி எப்போதாவது “ஆப்பிரிக்க அழகி”ன்னு ஜோக் ஏதாவது சொல்லிட்டு போயிருந்தா நமக்கு இப்ப உபயோகமா இருந்திருக்கும். இருந்தாலும் பரவாயில்லை. அத நான் சொல்றேன். அவருடைய தீவிர ரசிகன் என்ற முறையில் அந்த பொறுப்பை நான் எடுத்துக்கறேன். ஆனா இப்ப இல்ல ஐபிஎல் முடியறத்துக்குள்ள. சரியா? ஞாபகத்துல வெச்சிக்கிட்டு கேளுங்க.

தென் ஆப்பிரிக்காவுல ஆட்டங்களை நேரில் சென்று பார்க்கும் கூட்டம் ஒண்ணும் பெரிசா கூடப்போறதில்ல. ஆனா அதுக்காக இந்த போட்டி களகட்டாம போயிடும்னு சொல்லிட முடியாது.

சென்னையில் ஆட்டங்கள் நடந்தப்பவே எத்தன பேரு நேரா பார்த்தாங்க. சரி அரங்கம் நிறைய நிறைய பேர் பார்த்தாங்கன்னே வைங்க. அவங்க எல்லாருமே அடுத்தக்கட்ட நடவடிக்கையா டிவியில ஹைலைட்ஸ் பார்த்ததுதான் ஹைலைட்டு. அதனால டிவி ரசிகர்கள்தான் எப்படியும் மோடியோட இலக்கா இருக்கணும். அதுக்குத்தானே இந்திய மாலை நேரமும் அண்டை நாட்டு நேரமும் கிட்டத்தட்ட கிட்ட வர்றா மாதிரி தென் ஆப்பிரிக்காவா இல்ல இங்கிலாந்தான்னு பட்டிமன்றம் (ராஜவையும் பாப்பைய்யாவையும் பழக்க் கூப்பிடல) எதுவும் வைக்காம தென்.ஆகத்தில் களம் இறங்கியிருக்கிறார்கள்.

அது மட்டுமா மது, மாது, மதுவுடன் மாது இதெல்லாம் ஆட்ட நேரம் போது(ம்) அதிகம் காணப்படுகின்ற இடமாச்சே. சந்தேகம் இருந்தா உங்க டிவில சோனி செட் மாக்ஸ் திருப்புங்க. திருப்பினீங்களா? என்ன தெரியுதா? அ..அ…என்ன சொர்க்கமே தெரியுதா? ஹலோ ஆட்டத்துக்கு நடவுல அப்போ அப்போ பார்க்கச் சொன்னா, அதையேவா தேடறது.

ஒரு விஷயம், அங்க சியர் கேள்ஸ் எந்தளவிற்கு எடுபடுவார்கள் என்று தெரியவில்லை. நான் சொல்வது ஆட்டத்தை நேரே காணவரும் ரசிகர்கள் மத்தியில். நம்ம ஊரில் நடந்தால், நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு பார்ப்போம். ஆனால் அங்க அதானே சார் அவங்க (தெ.ஆ வாழ் இந்தியர்கள்) தெனமும் பார்த்துக்கிட்டு இருக்குறது?

தென் ஆப்பிரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் மாபெரும் ஒற்றுமை லஞ்ச வாவண்யம். வேறே என்னவா? என்ன நான் இங்க ஆறு ஒற்றுமை பதிவா போடறேன். சரி உங்களுக்காக. திருட்டு, கொள்ளை. போதுமா?

எனக்கென்னவோ சென்னை சூப்பர் கிங்ஸ்தான் இந்த முறை கோப்பைய வெல்லும்னு தோணுது. போன வாரம் இங்க தெருவில் வந்த குடுகுடுப்பை மணி கூட இத பத்தி ரொம்ப சிலாகிச்சு சொல்லலை.

    இந்த ஐபிஎல் போட்டியில் என்னுடைய ஃபேவரைட்ஸ்”

சென்னை சூப்பர் கிங்ஸ்
கொல்(வார்த்தையே சரியில்லயே)கத்தா நைட் ரைடர்ஸ்
கிங்ஸ் லெவன் பஞ்சாப்
ராஜஸ்த்தான் ராயல்ஸ்

ஆட்டங்கள் எப்படி போகுது, யார் ஆட்டங்காணாம ஆடறாங்க, ஆடிப்போக போறவங்க யாருன்றதையெல்லாம் வரும் ஐபிஎல் அப்டேட் பதிவுகளில்.

தற்போதைக்கு உங்களின் கிரிகெட் போதைக்கு, சென்னை மும்பை போட்டியும் அதை போதையுடன் காண வந்திருக்கும் சில பல ரசிகர்களும் கண்களின் விருந்தாக சோனி செட்மாக்ஸ்…

எப்படியிருந்தாலும் போகப்போக அடுப்பில் இருபது நிமிஷமா காய்கிற சப்பாத்தி கல்லு கணக்கா போட்டி சூடுபிடிக்க போவது உறுதி. இந்த கொளுத்தற கோடையில நாமளும் அதை உணரப்போவது உறுதி. வடிவேலு சொன்னா மாதிரி சுட்டெரிக்கும் சூட்டுல சூடா ஒரு கிளாஸ் வெண்ணீர குடிச்சு சூட்ட ஏத்திக்க வேண்டியதுதான்.

அவசர அவசரமா போட்ட பதிவு இது. அதனால பிழைகள பொறுத்து படிச்சு பின்னூட்டங்களும் தவறாம போடுங்க. எல்லா பதிவுகளுக்கும் பின்னூட்டம் போடறவங்களுக்கு மட்டும்தான் நான் அந்த ”ஆப்பிரிக்க அழகி” ஜோக் மெயில் அனுப்புவேன்.

அதனால் என் வலையை ஃபேவரைட்ஸ்ல புக்மார்க் பண்ணிக்கோங்க.

7 Comments »

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.