Home » ஐபிஎல்2

ஐபிஎல் – சச்சின், பொப்பாரா, ஓஜா

26 April 2009 4 Comments

தினமும் ஐபிஎல் ஆட்டங்களை பார்த்து அதற்கு விமர்சனம் அன்றே எழுதுவது கொஞ்சம் சிரமமாகத்தான் இருக்கிறது. முதல் ஐபிஎல் பதிவிலேயே நான் இதை உண்ரந்ததால்தானோ என்னவோ, என் விமர்சன நடையை மாற்றி காலபோக்கில் ஐபிஎல் முடிந்து போனாலும் போகிறபோக்கில் பொழுதுபோக்காக இதை நீங்கள் படிக்கறபடி எழுத முடிவு செய்துவிட்டேன்.

முழுக்க முழுக்க கிரிக்கெட்…கிரிக்கெட் தான். ஆனால் அது நான் ரசித்ததை அப்படியே எழுத்து வடிவத்தில் கடுகளவு நகைச்சுவையையும் கலந்து அளிக்க வேண்டும் என்று முடிவு செய்து எழுத ஆரம்பித்து ஒரு ஆறு ஏழு பதிவு ஆகிவிட்டது.

அதான் எழுதிட்டியே இப்ப என்ன திடீர்னு விளக்கம்னு நீங்க கேட்கலாம். உண்மை என்னன்னா கடைசி ரெண்டு மேட்ச் பத்தி எழுத சுவாரஸ்யமா எதுவும் இல்லங்கறது உங்களுக்கும் தெரியும் எனக்கும் தெரியும்.

11வது ஆட்டம்: பஞ்சாப் கிங்ஸ் – ராயல் சாலஞ்சர்ஸ்

இந்த மேட்ச்ல சிலாகிச்சு சொல்லணும்னா அது ரெண்டு விஷயம் தான் இருக்கு. ஒண்ணு ஜெஸ்ஸி ரைடர் முதல் பந்துலயோ அல்லது ரெண்டாவது பந்துலயோ அவுட் ஆகாம, இந்த முறை அணிக்காக ஒர் 32ஐ சேர்த்துட்டு போனார்.

ரெண்டாவதா இப்ப அடிப்பாரா அப்ப அடிப்பாரா என்று காத்துக்கொண்டிருந்த பொப்பாரா இந்த மேட்ச்ல அடித்தார். பொளந்தார்னு கூட சொல்லலாம்.

காலீஸ் காலியாகாம கடைசி வரை நின்னு 62 அடிச்சது ராயல் சேலஞ்க்கு நல்ல ஸ்கோர் மட்டும் தரமா, நல்ல போலிங் போட ஒரு வாய்ப்பையும் தந்தது.

ஏதோ ஒரு வியாக்யானத்துல நடுவுல “As Usual Unusual” என்று சொன்னதை கவனித்தேன். இங்க ராயல் சேலஞ் அணியினருக்கு இதை பொறுத்தலாம். “Usual” ஆக எல்லா வீரர்களும் சரியாக விளையாடாமல் விக்கெட்டை பறிகொடுத்தனர். “Unusual” ஆக ரைடரின் 32 மற்றும் டைலரின் 35.

நிறைய ஆடி களைத்த ராகுல் அன்று நாள் சரியில்லை என்று விட்டுவிட்டாரோ?

காலிஸும் டைலரும் சேர்ந்து ஸ்கோரை ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வந்தனர். பஞ்சாப் அணிக்கு இலக்கு 169ஐ நிர்ணயம் செய்தது.

பஞ்சாப் அணியின் யூசுப் அப்துல்லா நன்றாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இர்ஃபான் பதானும் 3 விக்கெட் எடுத்தார்.

பின் களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டம் பொறுமையாகத்தான் இருந்தது. மழை பெய்யாமல் இருந்ததே பஞ்சாம் அணிக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்திருக்கும்.

பொப்பாரா இயற்கையாகவே அடித்து ஆடும் ஆட்டக்காரர். ப்ரீத்தி ஜிந்தா தான் இந்த போட்டிக்காக கட்டியிருக்கும் பணத்தையும் அதற்காக அவர் பட்டிருக்கும் கடன் பத்திரத்தையும் காட்டி அனுப்பினாரோ என்னவோ, பொப்பாரா மிக ஜாக்கிரதையாக பொறுமையாக விளையாடினார். கோயலும் கேல் போல இல்லாமல் காமாக இருந்தார்.

பொப்பாரா திடீரென்று வீருகொண்டு எழுந்து விளாசி தள்ளிவிட்டார். கும்பளேவை தவிர யாரையும் விட்டு வைக்கவில்லை. முக்கியமாக காலிஸ் ஓவர்களின் மொத்தம் 51 ரன்கள்.

பொப்பாரா தன் 84ல் 4 பவுண்டடிகளும் 5 சிக்ஸரும் விளாசினார். முழுக்க முழுக்க அதிரடி ஆட்டமாக அதை சொல்லிவிட முடியாது. கண்டிப்பாக சிறப்பான ஒரு இன்னிங்க்ஸ் என்று சொல்லலாம். நடுவில் வந்த சங்கக்காரா உபயோகமான 26 ரன்கள் சேர்த்தார்.

யுவராஜுக்கு இந்த ஆடுகளம் கிரவுண்ட் ஒன்றும் புதிதல்ல. இங்கதானே 6 பந்துகளில் 6 சிக்ஸர் அடித்தார். அதிலிருந்து ஒரு மாற்றமும் இல்லை. 17 பந்துகளில் 30 ரன்களை ஒரு சிக்ஸரோடு அடித்து, அணியை வெற்றிக்கு இட்டுச்சென்றார்.

ராயல் சேலஞ் அணியின் சார்பாக நன்றாக பந்து வீசயவர் கும்ப்ளே ஒருவரே.

12வது ஆட்டம்: டெக்கான் சார்ஜர்ஸ் – மும்பை இந்தியன்ஸ்

24ஆம் தேதி சச்சின் டெண்டுல்கரின் பிறந்தநாள். முதலில் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். என்னவோ அவருக்கு வேறு வேலையில்லாமல் உன் ப்ளாகைத்தான் படிக்கப் போகிறார் ரேஞ்சுக்கு பேசறியே என்று நீங்கள் மனதில் நினைத்தது எனக்கு டெலிபதி மூலம் தெரிந்துவிட்டது. எல்லாம் ஒரு நம்பிக்கைதாங்க.

தன் பிறந்தநாள் அதுவுமா இந்த மேட்ச்சை ஜெயிச்சு, ஆட்டம் முடிவுல வர்ணனையாளர், “Its a perfect gift for his birthday” என்று சொல்வார் என்று சச்சின் நினைத்திருக்க வேண்டும். அது தலைகீழாக மாறி அவர்கள் தோல்வியை தழுவியது சச்சினுக்கு வருத்ததை தந்திருக்க வேண்டும்.

முதலில் பேட் செய்த டெக்கன் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 168ஐ சேர்த்தது.

வழக்கம் போல தன் அதிரடி ஆட்டத்தால கில்கிறிஸ்ட் கிலிய ஏற்படுத்தினார். அவரது மூன்று சிக்ஸர்களும் நம் கண்களுக்கு விருந்தாக அமைந்தது. டெக்கன் சார்ஜர்ஸ் நான் முன்பொரு பதிவில் சொன்னது போல சார்ஜாகி தான் இருக்காங்க.

கிப்ஸ் அடித்தும் அடிக்காமலும் நிதானமாக ஆடி அரைசதம் அடித்தார். அவர் பங்குக்கு 58ஐ சேர்த்துக் கொண்டார்.

ரோஹித் ஷர்மா நிச்சயம் நெடுங்காலம் இந்திய அணியில் விளையாடுவார் என்று நிச்சயமாக சொல்லலாம். இருந்தாலும் இந்த மேட்ச்சில் அவரது பங்கு பெரிதாக ஒன்றும் இல்லை. மாறாக இந்த தடவை ஸ்மித் வந்தார், அவர் பங்குக்கு ரெண்டு பந்துகளை பவுண்டரிகளுக்கு அப்பால் விரட்டினார். ஒரு வழியாக தன்னால் முடிந்தவரை முயன்று 168ஐ சேர்த்தது டெக்கான்.

சச்சின் இலக்கான 169ஐ மனதில் வைத்து கொண்டு களமிறங்கி தடாலடியாக 36 ரன்களை அடித்தார். அவரது 36ல் 3 பவுண்டரிகளும், 2 மாக்ஸிமம்களும் அடக்கம். அற்புதமாக போய்க்கொண்டிருந்த மும்பை இன்னிங்க்ஸ் அணி “ஸ்ட்ராடஜிக் ப்ரேக்”க்கு பிறகு தள்ளாடியது.

இன்று மும்பை அணிக்கு வெற்றியை தேடித்தந்துவிடுவார் என்று எதிர்பார்த்த நமக்கு ஏமாற்றம். இது முதல் முறையல்ல. அவர் ஜெயித்து தரவேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால அவர் சிறப்பாக ஆடிக்கொண்டிருக்கும் போது சடாரென்று அவர் அவுட்டாகும் முறைதான் எனக்கு பிடிக்கவில்லை. அன்றும் அப்படியே.

டுமினியும் சச்சினும் சிறப்பாக விளையாடி வெற்றி இலக்கை தன் அணி வீரர்களுக்கு காட்டினர். கயிறு கொடுத்தாகிவிட்டது. பிடித்து கொண்டு மேலே வா என்று சொல்லியாயிற்று. இதற்கு மேல் என்ன வேண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு.

அங்கும் இங்கும் ப்ராவோ ஹர்பஜன் 20களில்வந்து ஆட்டமிழக்க, மற்ற வீரர்களிடமிருந்து ஒன்றும் இல்லை. சென்ற ஐபிஎல்லில் சிறப்பாக ஆடிய அபிஷேக் நய்யார் இந்த முறை இதுவரை சோபிக்காதது மும்பை அணிக்கு இழப்புதான். இருந்தாலும் மும்பை முண்டியடித்துக் கொண்டு 150களில் முடித்து கொண்டது. 12 ரன்களில் தோல்வியைத் தழுவியது மும்பை.

13வது ஐபிஎல் ஆட்டம்: சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நை ரைடர்ஸ்

நான் மிகவும் எதிர்ப்பார்த்த ஆட்டம். கேல், கங்குலி, தோனி, ஹேடன் என்றும் எனக்கு பிடித்த எல்லாரும் வெற்றிக்காக போரடப்போகும் மேட்ச். விறுவிறுப்புக்கு குறைச்சலே இருக்காது என்று பார்த்தால் மழைக்கு குறைச்சலே இல்லை. ஆளுக்கொரு பாயிண்ட் என்று முடிவாகி போனது.

ஒரு விதத்தில் இதுவும் நல்லது தான். அடுத்த மேட்ச்சில் ரெண்டு அணியும் வெற்றி பெற மேலும் உழைக்க வேண்டும்.

நான் ஆவலுடன் இரு அணிகளின் அடுத்த மேட்ச்சை எதிர்ப்பார்க்கிறேன்.

4 Comments »

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.