ரம்யக்குரலோன் ரவி – ஏர்டெல் சூப்பர் சிங்கர் 2008

airtel-super-singer-2008”வணக்கம் அண்ட் வெல்கம் டூ ஏர்டெல் சூப்பர் சிங்கர் 2008, இது தமிழகத்தின் பிரமாண்டமான குரல் தேடல்”. இந்த வாசகத்தை தெரியாத தமிழர்கள் மிகச் சிலரே. நீண்ட நாட்களாக நடந்து கொண்டிருக்கும் இந்த சிறந்த பாடகர் போட்டி இப்பொழுது கிட்டதட்ட முடிவை நெருங்கிக் கொண்டிருக்கிறது. நாம் இனி பார்க்க போகும் வாரங்கள் அரையிறுதி மற்றும் இறுதி சுற்றுக்களே. மாவு நைஸாக வரவில்லை என்று இதனிடயேயும் வைல்ட் கார்டு என்று ஒன்றை புகுத்தி இன்னும் அரைக்கலாம். அதை நிச்சயமாக எதிர்பார்க்கலாம்.

என்ன பேசினாலும் எழுதினாலும், நாம் திட்டிக் கொண்டே அதையும் பார்ப்பது உறுதி. ஸ்டார் விஜய் போலவே மற்ற தொலைக்காட்சிகளிலும் இது போன்ற போட்டிகள் நடைப்பெற்று கொண்டிருந்தாலும், தரம் ஸ்டாரிலேயே சிறந்ததாக இருக்கிறது. இதற்காக நிகழ்ச்சியின் இயக்குனரை நாம் பாராட்டியே ஆகவேண்டும்.

எப்போதாவது மற்ற சானல்களில் காமெடி க்ளிப்ஸ் போரடித்தால் சன் டிவியில் அதிரடி சிங்கர் பார்ப்பேன். சும்மா சொல்லக் கூடாது, காமெடியின் உச்சம் அது. தொகுப்பாளர் மகேஷ் அசத்தபோவது யாரில் கூட அப்படி காமெடி பண்ணியதில்லை.

தங்கமான குரல் வேட்டை ராஜ் டிவியில். இன்றளவில் ராஜ் டிவியியையும் சிலர் பார்க்கிறார்கள் என்று அதை பார்க்கும் போதுதான் தெரிகிறது. நிகழ்ச்சி ஆரம்பித்தவுடன் அதை பார்ப்பதும் தப்பான முடிவென்று தெரிகிறது.

தமிழ்நாட்டிலிருந்து ஏறத்தாழ 10000 பேர் கலந்து கொண்டனர். அதில் சென்னையிலிருந்து மட்டும் கிட்டதட்ட 2000 பேர். இதிலிருந்து ஒருவர் மட்டுமே ஜெயிக்கப் போகிறார். ஜெயிக்க அந்த நபர் 9999 பேரையும் விட சிறப்பாக பாட வேண்டும். தொடர்ந்து பாட வேண்டும். இதற்கு அவருக்கு பல தரப்பிலிருந்து ஒத்துழைப்பு வேண்டும். முக்கியமாக நான் நம்புவது கடவுள் அருள் வேண்டும்.

இந்த இரண்டாயிரத்திலிருந்து ஆடிஷன், லீக் மற்றும் கால் இறுதி தாண்டி, அரையிறுதி வந்திருக்கிறோம். போட்டியாளர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்திலிருந்து மூன்றாகி நிற்கிறது. இந்த மூவருடன் ஒருவர் சேரப்போகிறார். அவர் வைல்ட் கார்ட் மூலம் பாடப்போகும் ப்ரசன்னா, ரஞ்சனி, விஜய் அல்லது ராகினியாக இருக்க்க் கூடும்.இந்த நால்வரில் ஒருவர் தான் கூடிய விரைவில் ஏர்டெல் சூப்பர் சிங்கர் 2008. அவர்தான் யுவனின் இசையில் பாடப் போகிறவர்.

அந்த நால்வரில் ஒருவர் தான் எனக்கும் பிடித்தமான ரவி. கூடுதல் சந்தோஷம் (நான் முன்னமே ஒரு பதிவில் மூவர் எனக்கு மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ தெரிந்தவர்கள் என்று குறிப்பிட்டு இருக்கிறேன்) ரவி என் கம்பெனியில் சக ஊழியர் (நேரடியாக). அவன் இவன் என்று ஏகவசனத்தில் பேசும்போது நெருக்கம் கிடைக்கிறது என்று நினைத்தாலும், அதை ரவி எப்படி எடுத்துக்கொள்வாரோ என்ற எண்ணத்தினால் அவர் இவர்.

பல முறை ரவியை பல தருணங்களில் சந்தித்திருக்கிறேன். இவ்வளவு ஏன், கம்பெனியில் நடந்த airtel-super-singer-ravi1கிரிக்கெட் போட்டியில் நானும் அவரும் எதிர் எதிர் அணி. அந்த போட்டியில் சில பல சின்னச் சின்ன விளையாட்டுதனமான சண்டைகளும் அடக்கம். காண்டீனில் சில முறை பார்த்து பேசியதுண்டு. நிகழ்ச்சியின் போக்கை பற்றியும் அவரின் நிலை பற்றியும் கொஞ்சமாக கேட்பதுண்டு.
ரவி எர்கோ என்ற ஒரு பத்திரிகை (இது ஐடி கம்பெனிக்கு மட்டும் இலவசமாக தரப்படுகின்ற ஒன்று) நடத்திய போட்டியில் வெற்றி பெற்றவர். அவர் கூடவே எங்கள் கம்பெனியின் வைதேகியும் பெண்கள் தரப்பில் வெற்றி பெற்றார்.

பல முறை சந்தித்த போதும் ரவியை இதுவரை ஒருதடவை கூட பாராட்டி ஓரிரு வார்த்தை பேசியதில்லை. அதை நினைத்து நான் வருத்தப்படுகிறேன். இருந்தாலும் மனதளவில் அவரும் ப்ரசன்னாவும் வெற்றிபெற வேண்டும் என்று வேண்டியதுண்டு. வேண்டியதில் ஒரு பாதி நிறைவேறாவிட்டாலும் மீதிப் பாதி நிறைவேறியதில் (நிறைவேறும் என்று நம்பிக்கைதான்).
ரவி தான் பாடும் போது அந்த பாடலை ஒரிஜினலாக பாடியவரின் சாயல் துளியும் வராமல் விழாமல் பார்த்துக் கொள்வார். இது தன் மீதுள்ள நம்பிக்கை (தன்னம்பிக்கை என்று சுருங்க சொல்லியிருக்கலாம் என்று புலம்பாதீர்கள். இத மாதிரி நீட்டி முழக்கி எழுதினால் தானே மூன்று பக்கங்கள் குறையாமல் எழுதலாம்) என்றே நான் நினைக்கிறேன்.

தொழில்நுட்பமும் தொலைக்காட்சியும் உலகத்தை எவ்வளவு சிறியதாக்கி விட்டது பாருங்கள். பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பாடகர்களில் கடைசி நான்கு பேர்களில் ஒருவரான ரவி என் கம்பெனியிலேயே வேலை செய்கிறார், அவரை நான் நிதமும் சந்திக்கிறேன்.
அவரின் இந்த பயணத்தில் பாடிய பாடல்கள் ஒவ்வொன்றும் இந்த நிலைக்கு காரணமாகின்றன. ஆரம்ப கட்டத்தில் ப்ரசன்னாவுடன் சேர்ந்து ”பொன்னொன்று கண்டேன் பெண்ணங்கு இல்லை” பாடலே அப்போதைய நடுவர்களில் ஒருவரான ஸ்ரீராம் பார்த்தசாரதியை மயக்கியது. கட்டிபிடித்து தட்டிக் கொடுத்தார் ஸ்ரீராம்.

முக்கால்வாசி பாடல்களை பாடி முடித்தப்பின் ரவிக்கு நடுவர்கள் தரும் கருத்துரை “ரவி நன்னா பாடினிங்க, ஃப்ளாலஸ் சிங்கிங்” போன்றவைகள்தான்.

ரவி இதுவரை எலிமினேட் செய்யப்படாத ஒரே பாடகர் என்பது அவரின் வாய்ப்பாட்டுத் திறமைக்கு சான்று. ரவிக்கு இசையமைக்கவும் தெரியும். அவர் இசையமைத்த பாடலையும் ஒருமுறை பாடி காண்பித்தார்.

மெட்லி சுற்றில் அவர் பாடிய “ஆடல் கலையே தெய்வம் தந்தது” என்னை மிகவும் கவர்ந்தது, கேட்ட பலருக்கு வியப்பைத் தந்தது.

அவர் “இசை கேட்டால் புவி அசைந்தாடும்” உண்மையாகி விட்டது. இப்போது அவரின் இசை கேட்ட புவி அவர் கூடவே (பாடும் போது) அசைந்தாடிக் கொண்டிருப்பது உண்மை. மனோரமா ஆச்சி எழுந்து நின்று கைத்தட்டி தன் பாராட்டுக்களை தெரிவித்தார். உன்னி, “டி எம் எஸ் ஓபன் வாய்ஸ்ல பாடியிருப்பார், நீங்களும் நன்னா பாடினீங்க ரவி” என்றார்.

இந்நிகழ்ச்சி போன சூப்பர் சிங்கர் போல இல்லாமல், இளமை ரத்தத்துடன் ஒடிக்கொண்டிருக்கிறது. பல இளமைகளில் ஒரு இளமை பாடிய ”இளமை இதோ இதோ” அற்புதம். பாடல் பகவான் எஸ்பிபியின் சாயல் கொஞ்சமும் இல்லாமல் ரவி பாடிக்காட்டினார். இதையே ஒரு முறை அஜீஷ் பாடிய போது, ஸ்ரீனிவாஸ் ரவி பாடியது போல இல்லை என்று சொன்னது ரவியின் குரலுக்கு பெருமை சேர்த்தது.

”நினைத்து நினைத்து பார்த்தேன்” என்னை நினைத்து நினைத்து ரவியை ரசிக்க வைத்தது. ஒரிஜினல் பாடலில் உள்ள அந்த இனிமையை அப்படியே கொஞ்சமும் குறையாமல் அளித்தார்.
நிச்சயமாக ஒருமுறை அந்நிகழ்ச்சியில் ரவி பாடியதை கேட்டால் “இசை கேட்க எழுந்தோடி வருவாரன்றோ”. மாமா அந்த ”ஓ! மாமா மாமா” பாட்டில் மட்டும் மிஸ் பண்ணிட்டார். உன்னி ஜோஷ் மிஸ்ஸிங்னு சொல்லிட்டார். ஆனால் அந்த பாடலே ரவி தேர்வு செய்திருக்கக் கூடாது என்பது என் தாழ்மையான கருத்து.

”என்னடி மீனாச்சி சொன்னது என்னாச்சி” என்று பாடியது மட்டும் எனக்கு தமிழின்பால் கொண்ட பற்றினால் உறுத்தியது. மற்றபடி அதிலும் குறை சொல்லும்படி எதுவும் இல்லை.

ப்ரசன்னா லஜ்ஜியாவதியே பாட, பதிலுக்கு ரவி ”ப்ரமத மனம் வேண்டும்” என்று பதில் போட்டார். இருவரும் ஒன்று சேர்ந்து கலக்கிய வாரம் அது. ப்ரமத மனம் மறுபடியும் வேண்டும் ரவி..எனக்காக..ஒருமுறை நம் காண்டீனில்…முடியுமா? இந்நிரா…….என்று நீங்கள் உச்சஸ்தாயியில் இழுத்தபோது, இன்னும் கொஞ்சம் இழுத்திருக்கக் கூடாதா என்று ஆசைப்பட்டேன்.
அதற்கு கருத்துரையிட்ட சுஜாதா, “தாஸண்ணா அந்த பாட்டிலே கிர்கிர்கிர்கிர்னு போயிட்டு இருக்கும், எப்படி அந்த சங்கதியெல்லாம் புடிச்சுது ரவி” என்றதை கேட்டவுடன் அந்த கிர்கிர் சந்திரபாபுவை ஞாபகப்படுத்தியது தனிக்கதை.

பாவம், உணர்ச்சி, வார்த்தை சுத்தம், ஸ்ருதி சுத்தம் என்று அனைத்திலும் சிறப்பாக விளங்கினார் ரவி என்றால் அது முற்றிலும் உண்மை. இதெல்லாம் போதாதென்று கொஞ்சம் ”உப்பு கருவாடும் ஊற வெச்ச சோறும்” வேண்டும் என்றெண்ணி அதையும் பாடலின் மூலம் கொடுத்தார்.

இசை மட்டுமல்ல கள்ளமும் கற்க வேண்டுமென்றார் ரவி. அதில் வரும் ராப்பை பாடி ஸ்ரீனிவாஸின் பாராட்டுக்களை பெற்றார். ஏஆர் ரஹ்மானை சிறப்பிக்கும் விதமாக ரஹ்மான் உள்பட எல்லோர் மனதிலும் இருந்த தேசபக்தியை தட்டி எழுப்பிய ”வந்தே மாதரம்” பாடலை பாடி தனக்கு தேசத்தின் மீதுள்ள மதிப்பையும் ரஹ்மான் மேல் கொண்ட மதிப்பையும் வெளிபடுத்தினார்.

அஜீஷின் குரல் இன்னும் மெருகேர வேண்டும். அவர் “மா” என்று சொல்லும் போது சில சமயங்களில் “பா”வாக கேட்கிறது. விஜயின் குரல் எல்லா பாடல்களுக்கும் பொருந்தும் வகையில் இல்லை. ரஞ்சனியின் குரலை நேராக ரவியின் குரலோடு ஒப்பிட முடியாதென்றாலும் கர்நாடக சங்கீதத்தில் திறமை ரவிக்கே அதிகம். ரேணுவையும் போட்டியாக நினைக்க முடியாது ஏனென்றால் ரேணுவிற்கு பாடுவதில் ஒரேமாதிரியான செயல்திறன் கிடையாது. என்னை பொறுத்தவரை ரவிக்கு சரியான சவால் கர்நாடக சங்கீதம் தெரியாத போதும் ப்ரசன்னாவாகவே இருப்பார். ஆனால் அவர் திரும்ப போட்டிக்குள் வரவேண்டும்.

ரவிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களும் வெற்றிபெற ப்ரார்த்தனைகளும்.

என் ப்ரார்த்தனை கிட்டதட்ட வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது என்று நினைக்கிறேன். பின்ன, லேட்டஸ்ட்டா நேற்றும் இன்றும் நடந்த அரையிறுதி போட்டியில் டாப் ஸ்கோரில் இருக்கிறார். அதற்கு அடுத்தபடியாக நிற்பது ரேணு. ஆனால் அஜீஷ் எல்லோரையும்விட ஒரு சுற்று குறைச்சலாக பாடியிருக்கிறார் என்பது குறிப்பிட்ததக்கது.

அவர் பாடிய ”ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு” அவரின் குரலுக்கு ஒத்ததாக இல்லை என்பது என் கருத்து. இது அவருக்கும் பாடிய பிறகு தெரிந்திருக்குமென்று நினைக்கிறேன்.
ரவி இந்த ஒற்றைக்கு ஒற்றை சுற்றில் செவ்வாய்க்கிழமை பாடிய ”கலைவாணியே” மற்றும் ”நலம் வாழ” சிறப்பு நடுவர்களிடத்திலும், வழக்கமான நடுவர்களிடத்திலும் நற்பெயரை பெற்றுத்தந்தது.
நேற்று “வெள்ளை புறா ஒன்று” என்று வரியினாலேயே வருடினார் மனோவிற்கும் மிகவும் பிடித்திருந்தது.

இன்றளவில் ஸ்கோர் விவரம்

பாடகர்கள் ஸ்கோர்
ரவி 245
ரேணு 247
ரஞ்சனி 240
விஜய் 220
அஜீஷ் 246

இத்துடன் ரவி, ரேணு மற்றும் அஜீஷ் இறுதி சுற்றுக்குள் நுழைகிறார்கள். அது மட்டுமில்லாமல் முதல் பத்தியில் சொன்னபடி அரைச்ச மாவ அரைப்போம் என்று முடிவு செய்திருக்கிறார்கள். இப்போதைக்கு விஜய் மற்றும் ரஞ்சனி இதில் பாடப்போகிறார்கள். ப்ரசன்னப் ப்ரவேசம் இருக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

மறுபடியும் ரவிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களும் வெற்றிபெற ப்ரார்த்தனைகளும்.

Click here to Read “Ravi my favorite to win Super Singer 2008” by R Sathyamurthy

This entry was posted in அனுபவம், சினிமா இசை, தொ(ல்)லைக்காட்சி, பொது and tagged , , , , , , , , . Bookmark the permalink.

24 Responses to ரம்யக்குரலோன் ரவி – ஏர்டெல் சூப்பர் சிங்கர் 2008

 1. ரவி பாடிய “உதயா” பாடல் என்னை மிகவும் கவர்ந்தது. ஆனால் நான் ரேணு அவர்களின் விசிறி. எனது அபிமான பாடகி ரேணு அவர்கள் தான்.

  • எனக்கும் ரேணுவின் குரல் மிகவும் பிடித்த ஒன்று. அவரின் குரலில் “ஒன்னவிட இந்த ஒலகத்தில் ஒசந்தது” பாடல் ச்ரேயா கோசலை நினைவுபடுத்தியது. பார்க்கலாம்.

 2. அவர் உங்களுக்கு நண்பர் என்று சொல்வதால் ஒரு வார்த்தை…

  அவரைப் பார்ப்பவர்களுக்கு அவர் தன்னை நடத்திக் கொள்ளும் விதம் மிகவும் தலைக்கனம் பிடித்த பேர்வழி என்ற தோற்றத்தை தருகிறது.

  இது உண்மையில் இல்லாது இருக்கலாம்;ஆனால் பார்வையாளனின் பார்வையில் சொல்கிறேன்…

  இது உயரங்களை அடைய விரும்பும் எந்த நபரும் தவிர்க்க வேண்டிய,கவனமாக இருக்க வேண்டிய ஒன்று..

  முடிந்தால் அவரிடம் சொல்லுங்கள்…

  என்னைப் பொறுத்த வரை விஜயிடம் இருக்கும் வெர்சடாலிட்டி ரவியிடம் இல்லை என்றுதான் சொல்வேன்.

  • அறிவன், சத்தியமூர்த்தி சொல்வது முற்றிலும் சரி.

   நான் ரவியுடன் உரையாடியிருக்கிறேன். அவர் அலுவலகத்தில் அவரின் போட்டி பற்றி அதிகமாக மேசுவதும் கிடையாது, அதற்கான விளம்பரமும் தேடுவது கிடையாது.

 3. இந்த பதிவை படிக்கும்போது கலைஞர் டிவியில் “சொல்ல சொல்ல இனிக்குதடா” என்கிற பாட்டு ஓடிக் கொண்டிருக்கிறது (நிகழ்ச்சி தேனும் பாலும், நேரம்: காலை 9 மணி).

  ரவியை பற்றி நீங்கள் சொல்லியிருப்பதை படிக்கும் போது இந்தப் பாட்டு எத்தனை பொருத்தம்.

  ரவி வெற்றி பெற வேண்டும் என்பதே அவருடைய ரசிகனாகிய என் விருப்பம்.

  • ரொம்ப நன்றி சத்தியமூர்த்தி. நீங்கள் ரசித்தது குறித்து எனக்கு மிக்க மகிழ்ச்சி. பார்ப்போம் நம் எதிர்ப்பார்ப்பும் நினைவாகிறதா என்று.

 4. இது தேர்தல் நேரம். சூப்பர் சிங்கர் 2008 தேர்ந்தெடுப்பது ரசிகர்கள் கையிலேயே வரும் என்று நினைக்கிறேன். கண்டிப்பாக, விஜய் டிவி சிமசே தேர்தல் அறிவித்து அதன் மூலம்தான் தேர்வு செய்வார்கள். காட்டு அட்டை (வைல்ட் கார்ட்) சுற்றுக்கும் அதுதான் நடக்கும் என்று நினைக்கிறேன்.

  இந்த பதிவை இப்போதே ஹெக்சாவேர் நண்பர்களுக்கு அனுப்பி தேர்தல் பிரசாரத்தை ரவியும், நீங்களும் தொடங்கிவிடுங்கள்.

  :)

  • என் கம்பெனியில் எனக்கு தெரிந்தவர்கள் அனைவருக்கும் (சுமார் 25 பேர்) அனுப்பியுள்ளேன். அனைவரும் படித்து பிடித்தது என்றார்கள். அவர்களும் கூட நிகழ்ச்சியை பார்ப்பதாகவும் இருந்தாலும் நான் இந்த பதிவுக்கு மெனக்கெட்டிருப்பது நன்றாக இருக்கிறது என்றும் பாராட்டினர்.

 5. R.Sridhar says:

  அருமை விஜய். ரவி (யும்) உங்கள் நண்பர் எனதறிந்து மகிழ்ந்தேன். எனது பேவரிட் ப்ரசன்னா.

  • எஸ்வி சேகர் ட்ராமாவில் வரும் கதாப்பாத்திரங்கள் போல சட்டென்று காணாமல் போய்விட்டீர்களே? வந்ததற்கும் வாழ்த்தியதற்கும் மிக்க நன்றி ஸ்ரீதர்.

 6. Daari says:

  Prasanna wild card round moolam, re-entry tharugirar. think this week, round relating to wild card would be telecasted.

  My personal favorite is prasanna too. His elimiination is a definitely vindictive.

  • இன்னிக்கு நான் சொன்ன மாதிரி அரைச்ச மாவ அரைச்சாங்க பாத்தீங்களா ப்ரசன்னா?

 7. T.P. Anand says:

  I wish Ravi and Prasanna are declared as Joint Winners

  – T.P.Anand

  • உங்க ஆசை நல்லத்தான் இருக்கு. இப்படி பகிர்ந்து போட்டுக்கவா பசங்க குயிலா பாடறாங்க? என்ன நான் சொல்றது? சரிதானே ஆனந்த்?

 8. Pls let me know your email id.

 9. அறிவன்,

  பார்வையாலும், உடல் மொழியாலும் ஒருவரை எடை போடக்கூடாது.

  அமைதியாக இருப்பதை ஆணவமாக கொள்ளக் கூடாது.

 10. ரவி தான் இந்த வருட சூப்பர் சிங்கர் இதில் சந்தேகமேயில்லை. ஆனால் எப்படி பல காலமாக ராகினி ஸ்ரீயை நடுவர்கள் கட்டிக்காத்தார்களோ அப்படிப்பட்ட கீழ்தரமான முடிவுகள் எடுக்கப்பட்டால் இன்னொருவருக்கு இந்தப் பட்டம் கிடைக்கவும் வாய்ப்புண்டு.

  ரவிக்கு போட்டி பிரசன்னாதான். ரேணுவின் உன்னைவிட மிகவும் நேர்த்தியானதாக இருந்தது. பிரசன்னாவை விட்டால் ரவிக்கு ரேணுதான் போட்டியாளர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *