Home » General, நகைச்சுவை, பொது

ஹலோ…த்துபாயா? ப்ரதர் மார்க் இருக்காரா?

9 April 2009 10 Comments

போன வாரம் ஒரு நாள் என் நண்பனுக்கு அலைபேசினேன். நாங்க கலந்து கொண்ட ஒரு பார்ட்டியில என் அலைபேசியை தவறவிட்டுவிட்டேன். அதை பத்தி கேட்கலாம் என்று டயலினால், ஹலோ ட்யூன்ஸ் போட்டு வைத்திருந்தான். அது போனால் போகட்டும் போடா பாட்டு. அவனுக்கு பழைய தத்துவப்பாடல்கள் மீது இருக்கும் மோகம் தெரிந்திருந்தாலும், அந்த சமயத்தில் எனக்கு நக்கல் செய்யும் ஒன்றாகவே இருந்தது. தொலைஞ்சது நம்ம அலைபேசிதானே. இவனுக்கு என்ன போச்சு. அவனுக்காகவே ஒரு ஹலோ ட்யூன்ஸ் பிடிக்கணும். அவன் அத நினைச்சு ஆபிஸ் லீவு போட்டு அழணும். இதுதான் என் இப்போதைய வாழ்க்கையின் லட்சியம். ச்ச்….சே….என்ன ஒரு உயரிய லட்சியம்…..போடா….வேறே ஏதாச்சும் வேலை இருந்தா பாரு என்று மனசாட்சி செவுளுள டபுள் ஸ்ட்ராங்க ஒரு அறை விட்டு சொன்னதால, தற்காலிகமா ஒத்தி வெச்சுட்டேன். கூடிய சீக்கிரம் மனசாட்சியிடம் பெர்மிசன் வாங்கி கொண்டுபட்டாஅவன ஒரு கை பாக்குறேன்.

இது போல பல சந்தர்ப்பங்களில் நமக்கு தேவையில்லாத மற்றும் நாம் சொல்ல வரும் செய்திக்கு முற்றிலும் முரணாக அல்லது நாம் சொல்ல வந்த செய்திக்கு உதவக்கூடிய ஹலோ ட்யூன்ஸ் நாம் கேட்க நேரிடுகிறது. இன்றைய வாழ்க்கையில் ஹலோ ட்யூன்ஸ் மற்றும் ரிங்டோன்ஸ் கிட்டத்தட்ட அத்தியாவசமாகி போன ஒன்றாகிவிட்ட்து நாம் எல்லோருமே சொறிவோம்..ச்ச்….சேஅறிவோம். கடுப்பேத்தக்கூடிய சில டோன்ஸும் இதில் அடக்கம் மிஷ்டர்ர்ர்ர்ர்…..

ஆனா சொல்லறோமே ஒழிய அப்படி செட் பண்ணிக்கிறது ஒண்ணும் லேசான காரியம் இல்லீங்கோ….கிட்டதட்ட 30 நிமிஷம் உங்க ஆபரேட்டர் கூட நீங்க உரையாடணும். அதுல ஆட்டமேட்டட் செலக்ஷன் ப்ராசஸ்செத்தோம். நாம தேடற பாட்டு வர்றத்துக்குள்ள பொழுது விடிஞ்சுறும். இதுல நடவுல லைன் கட்டாகிடும். மறுபடி ஆரம்பத்திலிருந்து…..இவ்ளோ கஷ்டம் எதுக்காகநாம வெச்சிகிற ஹலோ ட்யூன்ஸ்ல வெகு சில ஒன்றே காமனா இருக்கும்.

உதாரணத்திற்கு, நான் ஓம் நமோ நாராயணா வெச்சிருக்கேன். எனக்கு வர்ற ஒரு டிசைடிங் இண்டெர்வியூ கால் செய்யறது ஒரு கிரிஸ்துவரோ அல்லது ஒரு முஸ்லிமோன்னு வைங்கமுடிஞ்சுது நம்ம கதை.

இது மாதிரி நிறைய இருக்குங்க. எனக்கே நிறைய அனுபவங்கள் இருக்கு. சில சமயம் இந்த ஹலோ ட்யூன்ஸ் நமக்கு உதவிகரமா கூட இருக்கும். மேலே சொன்ன உதாரணத்த எடுத்துக்கோங்க. நமக்கு போன் செய்தவர் ஒரு இந்துன்னு வைங்க. சூப்பரப்பு..பையன் பக்திமானா இருக்கான். நான் தேடின பார்ட்டி இதுதான்னு அப்படியே நம்மள அந்த ஒரு ஹலோ ட்யூன்ஸ வெச்சி முடிவு பண்ணிடுவார். நாம பண்ற அட்டூழியமும், நமக்கு என்ன சரக்கு இருக்குன்னு நமக்குத்தான் தெரியும்.

நல்ல ஹலோ ட்யூன்ஸ்லாம் வெச்சிருக்கான்….இவன் ரெம்ப நல்லவனா இருக்காண்டான்னு வேலை கிடைக்கவும் வாய்ப்பு இருக்கு. சரி இப்படி பல நேரங்களில் நம் வாழ்க்கையின் பல தருணங்களில் ஒண்றிப்போன முரணாக சில ஹலோ ட்யூன்ஸ இப்ப பார்க்கலாம்.

 

தனக்கு கல்யாணம் என்று சொல்ல ஒரு பெண் போன் செய்யும்போது ஹலோ ட்யூன்ஸில் கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே!” என்று வருவது டைரக்டோரியல் டச்.

இந்த பொருளாதாரா நெருக்கடியில வேலை இழந்த பல பேர்ல என் என் நண்பனும் ஒருத்தன். இருந்தாலும் அவன் கொஞ்சம் ஜாலி டைப். தற்போதைய தன் நிலவரத்த சுட்டிக் காட்டும் வகையில வேலயில்லாதவன்தான் வேல தெரிஞ்சவன்தான் வீரமான வேலக்காரன் பாட்டு வெச்சிருந்தது உண்மையிலேயே அவனின் நகைச்சுவையுணர்வை மெச்ச வைத்தது.

இப்படித்தான் ஒரு போலீஸ்காரர் நைட் ட்யூட்டியில் இருந்தார். அன்றைக்கு பார்த்து அவர் மனைவி வீட்டை சரியாக பூட்டாமல் தூங்கியிருக்கிறார். இந்த காலத்தில் பூட்டியிருந்தாலே கஷ்டம், இங்க கேட்வே வேண்டாம். திருடன் புகுந்து விட்டான். நல்ல வேளையா, ஏதோ விஷயமா போலீஸ் ஐயா ஃபோன் போட, தடால்னு ஃபோன திருடன் எடுத்துட்டான். போலீஸ்கார்ரின் வீட்டம்மா வெச்சிருந்த பாட்டு என்ன தெரியுங்களா? ஐயா வூடு தொறந்துதான் கெடக்கு உள்ள புகுந்து பந்தி போடு”.

பத்தியத்த பத்தி விசாரிக்க டாக்டருக்கு ஃபோன் செய்தேன். ஹலோ ட்யூன்ஸ்ன்ற பேர்ல டாக்டர் என்ன கடுப்பேத்திட்டார். பின்ன என்னங்க கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம்னு பாட்டு வந்தா எப்படி இருக்கும். ஒரு டாக்டர் இப்படி ஹலோ ட்யூன் வெச்சிருந்தா என்ன மாதிரி (95 கிலோ, 42 ()டுப்பு அளவு) ஆளுங்க எப்படி டையட் ஃபாலோ பண்றது. சரின்னு வேறே டாக்டர பிடிச்சா அவர் அதுக்குமேலே…”தொட்டபெட்டா ரோட்டு மேலே முட்ட பரோட்டான்னு பாட்ட போட்டு தாக்கறார். அய்யய்யோதாங்கலைடா சாமி….

இறந்த செய்தியோ அல்லது இரங்கல் செய்தியோ சொல்ல போன் பண்ணினா, நமக்கு கேட்கற பாட்டு, என்றென்றும் புன்னகை, முடிவில்லா புன்னகை”.

வழக்கம் போல வார கடைசியில தீர்த்தவாரிக்கு ஒரு ட்ரிப் போடலாம்னு ஒரு நண்பனுக்கு ஃபோனப் போட்டா…”வாழ்க்கைய யோசிங்கடா, தலையெழுத்த நல்லா வாசிங்கடான்னு பாட்டு வருது….டேய்….டேய்..போன வாரம் நீ என்ன நிலைமையில இருந்த….எத்தன பக்கெட் வாந்தி எடுத்தஇப்ப என்னடான்னாவாழ்க்கைய யோசிக்கணுமாமில்ல…….நல்லா வந்துடும் வாய்லன்னு விட்டு காய்ச்சி எடுத்துட்டேன்.

இப்ப பாட்ட மாத்திட்டான்என்ன பாட்டு தெரியுமா? ஆங்…..அதேதான்…”தண்ணி தொட்டி தேடி வந்த”…எப்படி…?

ஒருத்தன் ஆர் ரஹ்மானோட இந்தி பாட்ட போட்டு வெச்சிருக்கான். நான் தெரியாமத்தான் கேட்கறேன், நீ தமிழன், நீ இருக்கறது தமிழ்நாடு, உனக்கு தமிழத்தவிர தெரிஞ்ச ஒரே பாஷ இங்கிலீசு கடைசியா உனக்கு இந்திக்காரன் எவனும் போன் பண்றதுமில்ல. அப்புறம் ஏன் இந்த கூத்துன்னு கேட்டா….”இல்ல மச்சி ஒரு விளம்பரத்துக்காக….”ன்னு சொல்றான். ஏண்டா ரஹ்மான் தமிழ் பாட்டு போடலியா? அவரே ஆஸ்கர்ல தமிழ்ல பேசிட்டு வந்திருக்காரு. இந்த சினிமாக்காரங்கதான் விளம்பரத்துக்காக பண்றாங்கண்ணாஉனக்கேண்டா?ன்னு சொன்னதுக்கப்புறம் அவன் போட்ட பாட்டுஆறரை கோடி பேர்களில் ஒருவன்

ஒரு அப்பா தன் மகளின் காதல் விவகாரம் தெரிந்து விட, என்ன செய்யப் போகிறேன் பார் என்று உறுமிக்கொண்டே மகளின் அலைபேசியை தொடர்பு கொள்ள, அவர் கேட்ட பாட்டு மனசே மனசே குழப்பமென்ன இதுதான் வயது காதலிக்க”. அவர் ஏற்கனவே சினிமாவுல வர்ற அப்பா மாதிரி ரத்தக்கொதிப்பு உள்ளவர் சொல்லணுமா கோவம் உச்சந்தலைக்கு ஏறிடிச்சு.

கடன கொடுத்துட்டு அத திரும்ப வாங்கறதுக்கு படற பாடு இருக்கே….சும்மாவா சொன்னாங்க கடன் கொடுத்தார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்னு. நம்மாளும் ஒருத்தருக்கு கடன் கொடுத்திட்டு போன் போட்டிருக்கார். ஹலோ ட்யூன்ஸ் கேட்டு நொந்து போயிட்டார் மனுசன். ஆமாங்கறேன். அவர் கேட்ட பாட்டு பணம் என்னடா பணம் பணம்

வாத்தியார் ட்யூஷனுக்கு ஒரு பையன் வரலைன்னு ரொம்ப வருத்தப்பட்டார். பாவம் பரிட்சை நேரமாச்சேன்னு அவர் கவலை. சரி ஃபோன் பண்ணி பார்க்கலாம்னு நம்பர போட்டார்……ஃபோன டப்புன்னு கட் பண்ணி பொத்துன்னு போட்ட்டுடார் மனுஷன். பின்ன, அவர் கேட்ட பாட்டு அந்த மாதிரி. நம்ம ஆளு விவகாரமானவன் தான். இல்லாட்டி வா வாத்தியாரே வூட்டாண்டே நீ வராஙாட்டி நான் வுடமாட்டேன்னு ட்யூன் செட் பண்ணியிருப்பானா?

 

10 Comments »

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.