ஐபிஎல் – ரெண்டும் ரெண்டும் ரெண்டு

கண்ணா வாய்க்கன்றது ஒரு வட்டம் மாதிரி. அதுல கெலிக்கறவன் தோத்துப்போவான் தோத்தாங்கோலி கெலிப்பான். பிரியிதா? அதான் மாமு இந்த ஐபிஎல்ல நட்ந்துகினுகீது.

பின்ன போனதபா எம்மா டக்கரா ஆடி அந்த ராஜஸ்த்தான் பயலுங்க கப்பட்ச்சானுங்க (பிர்ச்சி படி நைனா).

ரெண்டாநாள் ஆட்டத்துல டெல்லி டேர் டெவில்ஸ்க்கும் புஞ்சாப் (இப்படிதான் சொல்லணும்னு எங்கண்ணன் போயிக்காட்டு சொல்லிச்சு) ராஜாக்களும் ஆடினாங்க.

ஆட்ட ஆரம்பத்தில பு.ரா. பசங்க போட்ட போடுல நம்ம டெ.டே அணி கதிகலங்கி போயிருச்சு. என்னா அடின்னு நம்ம வடிவேலு அண்ணன் சொல்றாப்புல சும்மா வெலுத்து வாங்கிடுச்சுங்க.

சேவாக்க அப்பப்ப ஒரு ஒரு சிக்ஸருக்கும் கேமிரால காமிக்கும் போது எனக்கென்னவோ இதுக்கெல்லாம் நீங்க பதில் சொல்லியே தீரணும்னு மனசுக்குள்ள புழுங்கினா மாதிரியே இருந்துச்சு. சேவாக் அடிக்க ஆரம்பிச்சா பு.ரா. அணி வாக்கிங் போகவேண்டியதுதானே.

ஆனாலும் தண்ணியில நேத்து பு.ரா அணிக்கு ஏதோ கண்டம் இருந்திருக்கும்னு நினைக்கிறேன். இல்லைன்னா அவ்ளோ அடிச்சும் நல்லா விளையாடியும் வருண பகவான் வர்றேன் என்னன்னு ஏதோ அப்பாயிண்ட்மெண்ட் வாங்கினாப்போல சார்ப்பா டையத்துக்கு வந்து நிப்பாரா?

இன்னொன்னு பாரு ராஜா, நல்லா போயினு இருந்த இன்னிங்கஸ முட்டுக்கட்ட போட்டது டெ.டே.யோட “வெட்”டோரி.

இன்னிக்கு பொ(ள)ப்பாரா (22) நாள் நெனச்சுக்கிட்டு இருந்தா…இப்படி பொட்டுன்னு போவாரா?

யுவராஜ்(16) வுட்ட ஒரு பானம் திரும்பி பார்த்தாலும் பார்க்காட்டிலும் காணாமத்தான் போச்சு. அந்த புள்ள ஒண்ணு ஆடிச்சே பேரு கூட கோயல்(38) தல. எப்பப்போ..எப்பப்போ…கிழி கிழின்னு கிழிச்சிக்கோ…ன்ற கணக்கா பொளந்து கட்டிடிச்சு. அதுக்கப்புறம் தான் நான் சொன்ன யுவராஜ் பானம்.

என்ன ஆடி என்ன பிரியோஜனம். அதான் வந்த மழ தண்ணில எல்லாம் அடிச்சிக்கிட்டு போயிருச்சே பாவம். ப்ரீத்தி ஜிந்தா அங்க நின்னு தன் டீம் தோக்கறத பார்த்து ரொம்ப சேடாயிருச்சி மச்சி. எனக்கே பாவமா இருந்துச்சு தெரியுமா? அதான் உங்க எல்லாருக்குமே தெரியுமே எனக்கு (அழகான) பொண்ணுங்க அழுதா தாங்காதுன்னு.

பு.ரா 104 (கஷ்டப்பட்டு)அடிச்சாலும் டெ.டேக்கு தேவையா இருந்தது 54தான். நம்ம சேவாக்(38) க்ளீனா ஷேவ் பண்ணிட்டு போயிட்டார். கூட கம்பீர்(15) வேறே. தக்குணூண்டு இருந்தாலும் ஆட்டத்துல கம்பீரமுண்டு.

மொத்தத்துல இந்த ஐபிஎல் தண்ணி சார்ந்ததாகவே இருக்கு. ஒருவேள நம்ம மருத்துவர் தண்ணி(கள்ளு) இறக்குமதி விஷயத்துல தனக்கு சாதகமா தீர்ப்பு வர்றாததுனால ஏதும் சாபம் விட்டுட்டாரா?

அடுத்து நம்ம ஹைதராபாத் பிரியாணி..சாரி சார்..ஹைதராபத்னாலே நினைவுக்கு வர்றது அதுதானே. டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் மேட்ச் நடந்தது.

கொல்கத்தா பயங்கரமா ஆடி டெக்கான் பவுலர்ஸ கொல்லப் போறாங்கண்ணு பார்த்தா தன் கண்ணை தன் கைக்கொண்டு தானே குத்திக்கிட்டது தான் மிச்சம். மிச்ச சொச்சத்தக்கு இன்னொரு கண்ணை டெக்கான் குத்திடிச்சி.

கொல்கத்தா மெக்கல்லம்(1) பிரமாதமா ஆடி வெல்லமாக இனிப்பாருன்னு நெனைச்சேன். ஆனா அவரு வேறே நெனச்சுட்டாரு. இதுக்கெல்லாம் அலட்டிக்க முடியாதுன்னு டப்புனு அவுட்டாகி கப்சிப்புனு உள்ள போயிட்டார்.

ஹாட்ஜ்தான்(31) ஒரளவுக்கு விளையாடினார். பாவம் அவர் கூட நிக்கறதுக்கு யாருக்கும் பிடிக்கலை போல. ஹாட்ஜ் பேச்சி க்கா விட்டா மாதிரி விக்கெட்ட விட்டுட்டு போனாங்க.

கங்கூலி(1) அது இதுன்னு அப்படி இப்படி, கேப்டன் அவருதான், இல்ல அவர் கேப்டன் இல்லன்னு போட்டி ஆரம்பிக்கறத்க்கு முன்னாடியே அவர மெள்ள மெள்ள மெல்ல ஆரம்பிச்சுட்டாங்க. வெறும் வாயிலயே முழம் போடற ஆளுங்க நாம, அவுல் கெடைச்சா?

மொத்தமா சேர்ந்து போதுமா போதாதான்னு நூத்தியொண்ண(101) சேர்த்து, இந்தாப்பா டெக்கன் பாய்ஸ் இனி உங்க சாமர்த்தியம்னு கொடுத்துட்டாங்க.

இன்னைக்கும் கில்கிறிஸ்ட்டுனால( கிலிதான். அவரோட இன்னொரு கிலி(கிப்ஸ்)யும் சேர்ந்தா? சரி சட்டுபுட்டுனு ரெண்டு ஃபோர் காட்டிட்டு போயிடுவானுங்க நெனச்சுருப்பாங்க நைட் ரைடர்ஸ்.

அப்படியெல்லாம் இல்ல ராசா, இன்னிக்கு ஒரு வழி பண்ணிட்டுதான் மறுவேலை. கொஞ்சநாளா ரன் அடிக்கறதே இல்லை..போன ஐபிஎல்லக் கூட நீங்க சரியா ஆடலைன்னு கிலியோட வீட்ல சொல்லி அனுப்பியிருக்கணும். தங்கமணி சொல்ல காப்பத்த முடியாம இன்னிக்கும் 13ல லோக்கல் சிக்ஸர் ஒண்ணு அடிச்சு அந்நியாயமா புட்டுக்கிட்டார்.

என்னாடா இது இன்னும் இவங்க பழச மறக்கலையோன்னு நெனச்சேன். பரவாயில்ல நம்ம கிப்ஸும் ரோஹித்தும் நான் நெனச்சது தப்புன்னு புரிய வெச்சுட்டாங்க.

கிப்ஸ் தன்னை நோக்கி வந்த பந்துகளை எல்லாம் சிப்ஸ் மாதிரி வருத்து எடுத்துட்டார். மொட்ட மண்டையோட வந்தாலும் அவரோட மட்ட மொக்க போடாம 43 ரன் சேர்த்து தன் அணிக்கு வெற்றியையும் சேர்த்துட்டார்.

ஹைதராபாத் பிரியாணிய பொட்டலம் பொட்டலமா சிக்ஸர் ஃபோருன்ற பேர்ல பேக் பண்ணி கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு நைட் டின்னருக்கு கொடுத்திட்டு போனார்.

அப்புறம் என்ன 14வது ஓவர்ல ஓவர் ரன்ரேட்டுல வெற்றிக்கணிய பறிச்சுகிட்டு பசியார போயிடிச்சி நம்ம டெக்கான் சார்ஜர்ஸ். அதென்ன சார்ஜர்ஸ்? என் மொபைல சார்ஜ் பண்ணி தருவாங்களா?

கடைசில கொல்கத்தாவின் இன்றைய ஆட்டம் கொல் கொல்லென்று சிரிக்கும்படி ஆகிவிட்டது. இதுல ஒரு விசேஷம் பாருங்க…கொஞ்சம் பெயர மாத்தினா கொள்-காத்த-நைட்(குதிரை) ரைடர்ஸ். ச்சே..எங்கயோ போயிட்டடா விஜயசாரதி…

சரி மூணாம் நாள் ஆட்டம் என்ன சொல்லுதுன்னு நாளை பார்ப்போம்.

This entry was posted in General, அனுபவம், ஐபிஎல்2, கிரிகெட், பொது and tagged , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

7 Responses to ஐபிஎல் – ரெண்டும் ரெண்டும் ரெண்டு

 1. அது என்ன சோம பானம் / சுரா பானம் மாதிரியா யுவராஜ் பானம்?.

  :-))

 2. யாரு யாரு எந்த எந்த அணியில் விளையாடறாங்கன்னு எப்படி குய்ப்பமில்லாமே சொல்றீங்க? மனப்பாடமாவா இருக்கு?????????

  • நம்ம நாட்டு அரசியல் கூட்டணிகள்ள யார் யார் எந்த பக்கம் யாரோட யார் கூட்டணி வெச்சிருக்காங்கண்ணு தெரிஞ்சுக்கறத விட இது ஒண்ணும் பெரிசில்ல.

 3. தல,

  நெதானத்துல எள்தினியா, தண்ணில எள்தினியான்னு புரியாதமேரி ச்ச்ச்சும்மா கலக்கலா(!) எள்தி கீஸிட்ட!

  இவ்ளோ தண்ணிமேரி எள்தின நீ அகர்கர்ங்கற சொம்ப வுட்டிட்டியே கண்ணா…

  • சர்தாம்பா அகர்கர அவர் கர் பார்த்து போக சொல்ல வேண்டியதுதான். அதான் அவர நம்ம தெரு கிரிக்கெட்டுல கூட சேர்த்துகறது இல்லன்னு நீயே எய்திட்டீயே வாத்தியாரே. தெரு கிரிக்கெட்டு இல்ல புக் கிரிக்கெட்டுலையே பசங்க சேர்த்துகறது இல்லையாம்.

   படா டமாஸா இருந்துச்சு உன் ப்ளாகு.

 4. புக் கிரிக்கெட்லகூட சேக்கக்கூடாத ஆள “புக்கிஸ்” சேத்துக்கினாங்களோ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *