ஐபிஎல் – மழை வருது மழை வருது குடை கொண்டுவா!!!

நாந்தான் மொதல்லையே சொன்னேன் இல்ல. செ.சூ.கி ஒரு மேட்ச் தோற்றதினால அவங்கள குறைச்சி மதிப்பிட முடியாதுன்னு. பார்த்தீங்களா எப்படி சூப்பர் கிங்ஸ் சூப்பரா ஆடி ஜெயிச்சிட்டாங்க.

ராகுல் ட்ராவிட் கிட்டேயிருந்து ஹேடன் ஆரஞ்சு கேப் தட்டி பறிச்சுட்டார்.

இந்த 20-20 கிரிக்கெட்டுல ஒரு தனி நபர் (ப்ளேயர்) குறைந்தபட்சம் 20 ரன் எடுத்தா போதும். யாரவது ஒருத்தர் ரெண்டு பேர் 50 அல்லது 60 அடிச்சா டீம் ஸ்கோர் 150 தாண்டிடும். தென் ஆப்பிரிக்கா பிட்ச்ல அந்த ஸ்கோர் ரொம்ப ஜாஸ்தி. சொல்றதுக்கு ரொம்ப சுளுவா இருந்தாலும் அங்க போயி நின்னு அடிக்கணுமே.

நம்ம செ.சூ.கி கனகச்சிதமா அதையே தான் செஞ்சாங்க. விளைவு 179. ரா.சே அணியின் போலிங் அட்டாக் ஒண்ணும் அவ்ளோ மட்டமானது கிடையாது. பிரவீன் குமார் நல்ல ஸ்விங் செய்வார். ஸ்டெயின் இருக்கார். ஆனா என்னவோ அன்னிக்கு அவங்க போலிங் எடுபடல. ஹேடன்(65) செஞ்சுட்டார்.

அவர் அடிச்ச 65ல 48 ரன்கள் ஃபோர்ஸ்(9) மற்றும் சிக்ஸர்(2). பார்த்தீவ் பட்டேல் எட்ஜ்ல ஆடியே 30 சேர்த்துட்டு போயிட்டார். மிச்சம் மீதிய் தோனி மற்றும் ஃப்ளிண்டாஃப் அடிச்சாங்க. மேலே சொன்னத இப்ப திரும்பப் படிங்க.

பீட்டர்சன் மேலே எனக்கு தனி மரியாத உண்டு. தன் மனசுல பட்டத பட்டுனு பேசுவார். பேச்சுல மட்டும் இல்ல அவர் பேட்டிங்கும் அப்படித்தான். இன்னிக்கு தன் அதிரடி ஆட்ட திறமைய காட்டப்போறார்னு நினைச்சா ஏமாற்றம் தான்.

இந்த மேட்ச்லையும் டிராவிட் தான் நிலைத்து நின்று ஆடினார். நல்லா படிங்க ஆடினார்னு சொன்னேன். அடிச்சார்னு சொல்லலை. அவர் கூட நின்னு ஆடி டீம காப்பாத்த யாரும் விருப்பப்படல. சட்டுபுட்டுனு வந்தமா போனமான்னு தன் கடமைய(அவுட்டாகறதுதான்) செஞ்சுட்டு போனாங்க.

முரளி சொழட்டின சொழட்டுல திக்குமுக்காடி போச்சு ரா.சே. 92 ரன் வித்தியாசத்துல செ.சூ.கி வெற்றி பெற்றது. என்னவோ இந்த ஐபிஎல்ல சுழற்பந்து வீச்சுக்குதான் பேட்டிங் எவ்வளோ கட்டுபடுது பார்த்தீங்களா?

அடுத்து தண்ணியால(மழ) பாதிக்கப்பட்ட மேட்ச். பு.ரா வுக்கும் கொ.நை.ரை. க்கும்.

இன்னிக்கும் பொப்பாரா 15 ரன் வேகமா அடிச்சார். அதே வேகத்துல அவுட்டும் ஆகணும்னு அவசியம் இல்லைன்னு யாரவது அவருக்கு தெரிஞ்சவங்க இத படிச்சா போய் சொல்லுங்க. அவர்கிட்டேயிருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன். போன மேட்ச்ல வெளுத்து வாங்கின பயல் கோயல் இந்த தடவை ஜொலிக்கல.

மட்டை கொண்டு கட்டை போடாமல் வித்தை காட்டுவார்னு நினைச்சேன். ஆனா அவர் முட்டை போட்டுட்டு போயிட்டார்.அடுத்து வந்த நாலு கில்லாடிகளும் ஜோரா ஆடி பு.ராவுக்கு நல்லதொரு ஸ்கோர கொடுத்தாங்க.

158 ரன் சேர்த்து இன்னிக்கு நம்ம ரொம்ப நல்லா ஆடியிருக்கோம் இத உபயோகபடுத்தி ஜெயிச்சுறலாம்னு நினைச்சிருப்பாங்க. ஆனா மறுபடியும் மருத்தவர் ஐயாவோட சாபம் அவங்கள படுத்தும்னு நினைச்சிருக்க மாட்டாங்க.

கங்குலி நல்லா போலிங் போட்டு ரெண்டு விக்கெட்ட எடுத்தார். மறுபடியும் ஒரு சீனியர் இள ரத்தங்களுக்கு நடுவுல தன் அனுபவம் மொத்தத்தையும் உபயோகபடுத்தி எதிரணிய கட்டிப்போட்டார்.

மழை வந்து பழைய குருடி கதவ திறடின்ற கதையா மறுபடியும் பு.ரா தோத்து போனது. ஆனா இந்த தடவை மொத்தமா மழைய குறை சொல்ல முடியாது. மழை எப்பவேணும்னா பெய்யும்னு வானிலை சொல்ல, அதற்கேற்றா மாதிரி எந்த ஓவர்ல கொ.நை.ரை எவ்ளோ ஸ்கோர்ல இருந்தா முடிவு பு.ராவுக்கு சாதகமா வரும்னு ப்ளான் பண்ணிட்டுதான் வந்திருக்கணும்.

மெக்கல்லம் 21தான் அடிச்சாலும், டக்வொர்த் லீவிஸ் மெத்தட்ல அது மிக முக்கியமான பெரிய ஸ்கோர்தான். கலக்கினது கேல் (44) கலங்கினது யுவராஜ். வேறே என்ன சொல்ல. 4 சிக்ஸர் போதும் போதும்றளவுக்கு சும்ம பறந்துகிட்டே இருந்தது.

ஹும்…இதுக்கு மேல நாம என்னதான் செய்யறது சொல்லுங்க…நாங்களும் எங்களால எவ்ளோ முடியுமோ அவ்ளோ நல்லாத்தான் ஆடறோம். ஆனா இந்த மழ வந்து எல்லாத்தையும் கெடுத்திடுதுமான்னு ப்ரீத்தி ஜிந்தாவுக்கு சமாதானம் சொல்ல வேண்டியதுதான். மழை கணக்கா ப்ரீத்தி கண்ல கண்ணீர் ஊத்திருக்குமோ. நாம சம்பாதிச்ச பைசாவெல்லாம் இப்படி தண்ணியா கரையுதேன்னு கண்டிப்பா நினைச்சிருக்கணும்.

158 அடிச்சும் தண்ணில போட்ட கோலமா பு.ரா அணியின் வெற்றி வாய்ப்பு கரஞ்சு போச்சு.

மழை பு.ரா வ இப்படி கஷ்டபடுத்தினா எல்லாருமே ரொம்ப ஆவலா எதிர்பார்த்த சச்சின்-வார்ன் போட்டி டோட்டல் டாமேஜ் பண்ணிருச்சு. மேட்ச் ஆடவேயில்ல. ஆளுக்கொரு பாயிண்ட்.

ஆனா சச்சின் ஷேன் வார்ன் ரெண்டு பேரும் மனசோரத்துல சந்தோஷப்பட்டிருப்பாங்க. சச்சின் அவுட்டாயிருந்தா அவருக்கு பேஜாரு, வார்ன் போலிங் சரியா போடமா இருந்தா அவர் பேஜாராயிருப்பாரு. இப்படி சும்மா நாம எழுதலாம். ஆனா உன்மையிலேயே ரெண்டு பேரும் போட்டிய விரும்பறவங்க அதனால வருத்தப்பட்டிருப்பாங்க.

இன்னொரு விஷயம் மு.இ இப்போ ஜெயிச்சுகிட்டு இருக்கு. இப்ப இந்த ப்ரேக்கு அவங்களுக்கு இழப்புதான். நிச்சயமா இன்னிக்கு ரெண்டு பாயிண்ட்டு நமக்குதான் புட்சிக்கன்னு சச்சின் தன் டீம் கோச்சுக்கிட்ட சொல்லியிருப்பார்.

நாம ஒண்ணு நினைக்க, அவங்க ஒண்ணு நினைக்க, வருண பகவான் ஒண்ணு நினைக்க மொத்தத்துல நினைக்கும்படியா ஒண்ணுமே நடக்கல. அங்க சர்ர்ருனு மழைக்கொட்டி கிரவுண்டயே தண்ணிதொட்டியா மாத்திடுச்சு.

This entry was posted in ஐபிஎல்2, பொது and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *