Home » ஐபிஎல்2, கிரிகெட், பொது

ஐபிஎல் – கிலிக்ரிஸ்ட் என்ற சூறாவளி

23 April 2009 3 Comments

Old is Gold என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. அதை உன்மை என்று நிரூபித்தவர் ஆ(ட்)டம் கில்கிரிஸ்ட். மனுஷன் பழசு எதையும் மறக்கல. அதே வேகம் நடையிலும் சரி ஆட்டத்திலும் சரி ஆட்டத்தை கட்டுபடுத்த தான் எடுக்கும் அதிரடி முடிவுகளும் சரி.

நான் போன பதிவுகள்ள எழுதினத யாரோ படிச்சு காட்டியிருப்பாங்கன்னு தோணுது. ஆமாங்க ட்ரான்ஸ்லேட் பண்ணித்தான்.

கிலி 45 பந்துகளில் ராயல் சேலஞ் அணிக்கு கிலி எற்படுத்திட்டு போயிட்டார். சிவகாசி பட்டாசுப்பா வெடிக்காதுன்னு சொல்லிட்டு நம்ம விசு குடும்ப ஒரு கதம்பம் படத்துல அந்த சரத்த எடுத்து தன் பாக்கெட்டுல போட்டுப்பார். கரெக்ட்டா அது அவர் பாக்கெட்டுல போனதும் வெடிச்சு சிதறும்.

கிலியோட இந்த ஆட்டம் கிட்டதட்ட அப்படித்தான். போன ஐபிஎல்ல ரொம்ப ஜொலிக்காத கிலி இந்த முறையும் வெளுத்து போயிடுவார்னு நினைச்சிருப்பாங்க. இருந்தாலும் அப்படியே அவர் ஆடினாலும் ஒரு 30-35 அடிச்சுட்டு விட்டுருவார் என்று எதிர்பார்த்திருப்பாங்க.

ஆனா நடந்தது வேறே. கிழி கிழின்னு கிழிச்சிட்டார். 5 சிக்ஸர்களும், 6 பவுண்ட்ரிகளும்னு விளாசி தள்ளிட்டார். போன தடவை கொல்கத்தா அணிக்கு பிரியாணி கிண்டி கொடுத்த ரோஹித் இந்த முறை இன்னும் கொஞ்ச தூக்கலா மசாலா கலந்து அதவிட சூப்பரா ரா.சேக்கு கொடுத்தார்.

வயதிலும் அனுபவத்திலும் சின்னவரா இருந்தாலும் ஆட்டத்திறமையில தான் யாருக்கும் சலைத்தவர் அல்ல என்று திட்டவட்டமாக தன் மட்டை மூலமாக அறிவிப்ப விடுக்கிறார் இந்த விடலை நாயகன்.

இவரும் தன் பங்குக்கு 5 சிக்ஸர்கள சுழட்டி சுழட்டி அடிச்சார். முக்கியமா கும்ப்ளேயோட ஒரு ஓவர்ல 3 மாக்ஸிமம் அடிச்சது டாப்பு. அதுவே ரா.சேக்கு டெ.சா வெச்ச முதல் ஆப்பு. 185 அடிக்கணும், முடியுமா மாப்பு என்று டிஆர் கணக்கா கவித பாடலாம் போங்க.

வெற்றிக்கு 185 ரன்கள் தேவையென்ற இலக்கோடயும் சற்றே முடியுமா என்ற கலக்கத்தோடையும் களமிறங்கியது ராயல் சேலஞ் அணி. சேலஞ் கொஞ்சம் கஷ்டமானதுதான்.

ரைடர் ரா.சே அணிய வெற்றி பாதையில் ஒரு ரைட் கூட்டிகிட்டு போக வேண்டியவர் பொசுக்குனு அவுட்டாயிட்டார். கொஞ்ச நேர இடைவெளியில ஊத்தப்பாவும் ஊத்திக்க தொடக்க ஆட்டக்காரர்களை இழந்த ரா.சே வீழப்போகிறது என்று நினைத்திருந்த போது காலீஸ் வந்து அமர்க்களப்படுத்தினார்.

அவர் ஆரம்பித்த போது..ஆஹா நம்ம காலீஸோட சுப்பர் இனிங்க்ஸ் ஒண்ண பார்க்க போறோம்னு குஷியாயிட்டேன். என்னவோ நான் கண்டது ஒரு பகல் கனவு போல காலீஸ் காலியாயிட்டார்.

பீட்டர்சன் இப்படியே ஆடினாருன்னு வைங்க…அவர கேட்காமயே அவருக்கு இங்கிலாந்துக்கு ஒரு டிக்கெட் போட்ருவாங்க. எப்படியும் அவர் நடுவுல கழட்டிகிட்டு போகப்போறவருதான்.

மறுபடியும் ராகுல். என்னவோ சுஜாதா கதை தலைப்புப் போல பாவம் கஷ்டப்படுத்தறாங்க. நானும் பார்த்துட்டேன். அவர் எந்த விதமான மேட்ச் விளையாடினாலும் எங்க விளையாடினாலும் யாருக்கு விளையாடினாலும், அவர் மேலே முழு சுமையும் வந்து விழறது அவர் தலையெழுத்தா?

இந்த மேட்ச்ல அவர் இன்னும் வேகத்தை கூட்டினார். அவருக்கும் பக்க பலமா கோலியும் தன்னால முடிஞ்ச அளவுக்கு அந்த பெரிய சைஸ் கோலிய மூலைக்கு மூலை துரத்தி அடிச்சாங்க.

ரன்ரேட் காரணமா அவங்க எவ்வளோ அடிச்சாலும் இலக்கு அவங்க கிட்ட வரவேயில்ல. ஆரம்பத்திகிருந்தே அடிச்சிருக்கணும். அப்ப விட்டுட்டாங்க.

அப்படி இப்படி 160 ரன் அடிச்சாங்க. ஆனா 185 யாருக்குமே கஷ்டம்தான். என்ன பீட்டர்சன் கொஞ்ச நேரம் விளையாயிருந்தா மேட்ச் களைகட்டியிருக்கும்.

24 ரன் வித்தியாசத்துல டெக்கன் சார்ஜர்ஸ் ஜெயிச்சுது. டெக்கன் சார்ஜர்ஸ் ஃபுல் சார்ஜ்ல இருக்காங்க போலிருக்கு.

கோலிய இந்நேரம் ஸ்ரீகாந்த் கவனிச்சிருப்பர். தோனியும் தான். கோலிக்கு நல்லதொரு எதிர்காலம் காத்துகிட்டு இருக்கு.

ருத்ரபிரதாப் சிங் வழக்கம் போல ரெண்டு விக்கெட்ட எடுத்திட்டு போக அவருக்கும் பர்பில் நிற கேப். ராகுல் ஹேடனுக்கு கொடுத்த ஆரஞ்சு கேப்ப திரும்ப வாங்கிட்டார். வாங்கிட்டு சொன்னார் “நான் இத திரும்ப ஹேடனுக்கு கொடுக்க எனக்கு ஆட்சேபணையில்ல்”

இன்னைக்கு தெரிஞ்சுடும் ஹேடன் வாங்கறாரா இல்ல அது ராகுலிடமே தங்குமான்னு. பொறுத்திருந்து பார்ப்போம்.

3 Comments »

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.