Home » ஐபிஎல்2, கிரிகெட், பொது

ஐபிஎல் – சாத்தானின் ஆதிக்கம்

29 April 2009 No Comment

அலுவலக வேலை காரணமாக கடந்த சில நாட்களாக நம்ம ஐபிஎல் ஆட்டங்கள பார்க்கவும் முடியல எழுதவும் முடியல. அதனால நாம பதிவு போடாம விட்ட நம்ம வருங்கால சந்ததியினர் தகவல்கள் இல்லாம திண்டாடி போயிடுவாங்களேன்னு சும்மா சின்னதா மேட்ச் ஸ்கோர மட்டும் போட்டி விட்டுறலாம்னு நம்ம ம.ஆ. சொல்ல..ஒகே ட மச்சின்னு நானும் இறங்கிட்டேன்.

நம்ம வலைக்கு புதுசா வர்றவங்க இப்ப எதுக்கு தேவை இல்லாம பேசிகிட்டு இருக்கான்னு நினைப்பாங்க. வழக்கமா வர்றவங்க கவலையேபடாம காரி உமிஞ்சிட்டு நியூஸுக்கு போயிடுன்வாங்கங்கறது வேறே மேட்டர்.

புதுசா வர்றவங்களுக்கு நான் சொல்லிக்கறது என்னன்னா..எழுத ஒண்னும் பெரிசா நியூஸ் இல்லைன்னு வைங்க..இப்படித்தான் கொஞ்சம் ப்ளேடு போடுவேன். கவலப்படாதிங்க பர்ஸ அடிக்கமாட்டேன்.

இப்போ ஐபிஎல்.

14வது ஆட்டம்: ராயல் சேலஞர்ஸ் – டெல்லி டேர் டெவில்ஸ்

என்ன ஆச்சரியம் நம்ம பீட்டர் சோக்கா பீட்டர் விட்டுட்டு போனார் அன்னிக்கு. உண்மையா பார்த்தா தெ.ஆல அன்னிக்கு கொட்டோ கொட்டுன்னு மழை பிச்சிகிட்டு இருக்கணும்..ஆனா பாருங்க சொட்டு கூட விழல.

பீட்டரோட டெய்லர் (என்ன பேரோ?) வந்து கொஞ்சம் பீட்டர் விட, நம்ம பவுச்சர் 36 மார்க் எடுத்துட்டு போனார். பரவாயில்லையே பெங்களூரு அணி தன்மானத்த்த விட்டுக் கொடுக்காம தன் மானத்த காப்பாத்திகும் போல இருக்கேன்னு நினைச்சேன்.

பவுச்சரும் கோலியும் பொறுப்பா விளையாடி தள்ளாடிப் போயிருந்த அணிய தூக்கி நிறுத்தினாங்க (149 ரன்).

சாத்தான் அணி வந்தது வென்றது.

இப்படி ஒரே வரியிலயும் எழுதலாம். ஆனால் என் இனிய வலைப்பிரியர்களுக்கு பொழுது போக்க முடியாம போயிடுங்கற ஒரே காரணத்துக்காக கொஞ்சம் நீட்டி முழக்கி…

தூக்கி நிறுத்தினாங்க சரி, நல்ல உயரமான்னா அதான் இல்ல. அந்த உயரம் சேவாக் கம்பீருக்கு எட்டவில்லையானாலும் நம்ம “தில்”ஷானுக்கு எட்டியது. அவரு தில்ஷானாச்சே. ஒருவேளை தில்ஜானா இருந்தா ரா.சேக்கு சாதகமா போயிருக்கும் முடிவு.

நான் இருக்குற வரைக்கும் ஜெயிக்க விட்றுவனான்னு பீட்டர் அண்ண பிடிவாதமா இருக்காருபா. அதுக்கு மேலே என்னத்த சொல்றது. கையில இருந்த மேட்ச்ச சாத்தான்களுக்கு இரையாக்கின பெருமை நம்ம காலில் அண்ணணுக்குதான். வாரி வழங்கும் பாரி வள்ளலையும் வாரன் பஃபட்டையும் மிஞ்சறார்.

கும்பளேவ வயசனாவர், ரிட்டையர்டு ஆகிட்டார்னு சொல்ல ஒருத்தனுக்கும் தகுதியே கிடையாது. மனுஷன் அப்படி வெளுத்து வாங்குகிறார். சிக்கனமான எகானமியில பவுலிங் போட்டு அணியின் வெற்றியை நிர்ணயம் பண்றதில்லைனாலும் தோல்விய கொஞ்ச தூரம் தள்ளிவைக்கிறார்.

15வது ஆட்டம்: பஞ்சாப் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ்

பதானுக்கு பதான் விட்டுகொடுத்ததாக சத்தியமூர்த்தி எழுதப்போவதாக சொன்னார். அன்றைய ஆட்ட நாயகனாக இபதானை தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். ஏனோ சங்கக்காரா. ”சங்கக்காரா டீம்ல இருக்காரா”ங்கற அளவுக்கு சைலண்ட்டா இருந்தார். தக்க சமயத்துல விளையாடி ஜமாய்ச்சிட்டார்.

அதிக ரன் எடுத்திருக்காவிட்டாலும் பஞ்சாபின் பந்து வீச்சு படு பிரமாதம். ஜடேஜான்வும் வார்னேவும் சேர்ந்து போராசினார்கள். முடிவு பஞ்சாப் அணிக்கு சாதகமாகவே இருந்தது.

139 அடித்தார்கள் பஞ்சாப். அதிகமில்லை ஜெண்டிமேன் 140தான். ஆனா அதுவே ரொம்பப் பெரியா ஸ்கோரானது நம்ம ராஜஸ்தான் அணி வீரர்களின் ஆட்டத் தெரியாமையினால்தான்.

ஆனால வார்னே களத்தில் இருந்தவரை எனக்கு நம்பிக்கை இருந்தது. எந்த நேரத்திலும் ராஜஸ்தான் திரும்ப எழும் என்று. நம்பிக்கை நட்சத்திரத்துக்கு அன்றைய தினம் அவர் மட்டைக் கூட ஒரு கை கொடுக்கவில்லை.

இபதான் சுப்பராய் பந்து வீச யுபதான் இப்பதான் ஆட ஆரம்பிச்சவரைப் போல அவுட்டானது என்று இரண்டுமே ராஜஸ்தானுக்கு பேரிடியாய் இருந்தது. அதுவே அவர்களின் தோல்விக்கு ஒரு காரணனாகவும் இருந்தது.

வார்னே நிலைத்து நின்றாடியதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. அசிங்கமாக குறைந்த ஸ்கோருக்கு ஆல்(ள்)-அவுட்டாகாமல் ”நாங்கள் கடைசி வரை போராடுவோம்” என்று எதிரிகளுக்கும், இப்படித்தான் போராட வேண்டும் என்று இந்திய இளைஞர்களுக்கு எடுத்துக் காட்டினார்..இல்லை இல்லை ஆடிக்காட்டினார்.

அவர் மீதான என் மதிப்பு மேட்ச்சுக்கு மேட்ச் வளர்ந்து கொண்டே போகிறது.

தோற்றது ராஜஸ்தானாயினும் வென்றது வார்னேயின் இறுதி வரை போராடும் குணமே.

16வது ஆட்டம்: சென்னை சூப்பர் கிங்ஸ் – டெக்கான் சார்ஜர்ஸ்

வேணாம்…வேணாம்…அழுதுறுவேன்…வலிக்குது ரேஞ்சுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ கில்கிற்ஸ்ட் வறுத்து எடுத்தது நமக்கே லேசா வலிக்கற மாதிரிதான் இருக்குது.

நான் கூட நம்ம ஸ்ரீதர் சொன்னப்ப, அதெல்லாம் ஒண்ணுமில்ல கவலப்படாதிங்க ஸ்ரீதர் சென்னை எல்லாரையும் போட வெண்ணைனு சொல்லும் பாருங்கன்னு ஆறுதல் (சொல்லிக்கிட்டேன்) சொன்னேன்.

இருந்தாலும் இப்படி தோத்துக்கிட்டே இருக்கக் கூடாது. ரெண்டு நாள் முன்ன எனக்கொரு மெயில் வந்தது. நம்ம ப்ளாக் நபர் யாரோ ஒருத்தர் ஐபிஎல் படங்களை போட்டு டமாஸ் பண்ணியிருந்தார். சிரிச்சு சிரிச்சு வயிறு வலிச்சு வலிச்சு (இது மலையாள வலிச்சு).

அதுல நம்ம சென்னை சூப்பர் கிங்ஸ் தோனி படம் போட்டு ஒரு கமெண்ட் இப்படி இருந்துச்சு:

“கண்ணா இப்படியே ஆடிக்கிட்டிருந்தோம்னு வை…நம்ம நேஷனல் டீம்ல ஒரு பய நம்மள மதிக்க மாட்டான்”.

ஹேடன்ற தூண் சாஞ்சிதுன்னு வைங்க…உண்மையிலேயே சென்னை செமி போறது செம கஷ்டம். ஆடிய ஆட்டம் என்ன என்ன என்னன்னு உசுப்பேத்தி உசுபேத்தியே தோனிய நாம உயரத்துல தூக்கி வெச்சுட்டமோன்னு தோணுது.

ஓரம் தனக்கென்ன என்று ஓரமாகப் போகாமல் 41 அடித்தது மனதுக்கு நிறைவு தந்தது. நினைவிருக்கட்டும் இவர் இப்போது எஜமான் ஃபிளிண்டாஃப் இடத்துல ஆடறாரு. எப்படி? ஏன்? ஏன்யா? எதுக்கு ஏழரைக்கோடி? தெருக்கோடில நிக்கறதுக்கா?

சரி அதான் 165 ரன் ஹேடன், ஓரம், ரைனா உதவியுடன் அடிச்சாச்சு. அத காப்பாத்திக்க வேணாமா?

பாவம் இதுக்கெல்லாம் நாம் தோனிய குத்தஞ்சொல்லக் கூடாது. பேயாட்டம் வந்து பேயாட்டம் ஒண்ண ஆடி சென்னையின் தோல்விய நோயாட்டமா பரப்பிட்டு போன கிலிய சொல்லணும். கிலியினால வர்ற கிலி அதோட நிக்குதான்னா அதான் இல்ல. அது சிக்ஸர சிப்ஸ் மாதிரி ஊதித்தள்ற நம்ம கிப்ஸ்க்கும் பரவிடுது.

பன்றி காய்ச்சலோட வேகமா பரவுது இந்த கிலி காய்ச்சல். பாலாஜி அந்த காய்ச்சல்ல மாட்டி முழிச்ச ஒருத்தர்.

அந்த ஜோகிந்தர் ஷர்மா யாரோ ஒரு பெரிய பார்ட்டி சிபாரிசா இல்ல மேட்ச் தோக்கறதுக்குன்னே எடுக்கறாய்ங்களா? வர்றாரு தர்றாரு போறாரு…

ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும்னு சொல்றாப்ல முரளி இருந்தும் நம்ம நைனா ரைனா நல்லா போட்டும்..ஜெயிக்க முடியலயே!!!!

அவங்க ரெண்டே பேரு…அவங்களுக்கு பயம்னா என்னான்னே தெரியாது, பாவம் பாக்கறது கிடையாது. வருவாங்களாம் உறிப்பாங்களாம் போவாங்களாம். பாவம்யா சென்னை அணி…விடுங்கைய்யா…எல்லாம் சேர்ந்து இப்படி வடிவேலுவ மூத்தர சந்துக்குள்ள கூட்டிகிட்டு போயி அடிச்சாப்ல அடிச்சா…பசங்க சிறுசுங்க…தாங்காதுங்க..விட்ருங்க…

அதான் சொல்லிட்டேனே..இன்னும் என்ன..டெக்காந்தான் வெற்றி படிக்கட்டுல உக்காந்தான்.

17வது ஆட்டம்: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – மும்பை இந்தியன்ஸ்

கங்குலி – சச்சின். ஜெயசூரியா – இஷாந்த். கேல் – மலிங்கா.

இதுக்குமேல இந்த மேட்ச்சுக்கு ஒரு ஹைப்போ இல்ல விளம்பரமோ வேணுமா. நிச்சயமா இல்ல. எனக்கு பிடிச்ச ரெண்டு பெரும் கிரிக்கெட் ஹீரோக்கள். கங்குலி கேப்டனாக இருந்திரிந்தால் இன்னும் களைகட்டியிருக்கும். எல்லாம் ஷாருக்கின் ஷாக்கான முடிவும், புக்கென்னனின் மொக்கையான மூளையும்தான் இதற்கு காரணம்.

முதலில் ஆடிய மும்பை முன்னூறை தாண்டுவதுபோல ஆடத்தொடங்கியது. சச்சின் நியுசிலாந்தில் முதன் முதலில் விளாசியது என் கண் முன்னே ஓடியது. அந்தளவிற்கு இல்லையென்றாலும் அதில் பாதி இருந்தது. 20 வருடங்களுக்கு பிறகு ஒரு மனிதனிடம் அதே விளையாட்டை எதிர்பார்ப்பது நியாயமில்லை. ஆனால் சச்சினிடம் பார்க்கலாம். அவருக்கு அந்த திறமை இருக்கிறது.

ஆஸ்திரேலியாவின் அடிவயிற்றில் புளியை கரைத்த புலியை(விளையாட்டுல தான். தப்பா ஏதும் புரிஞ்சுக்காதிங்க சாமி) மீண்டும் பார்த்தோம். இந்த முறை அது போலிங்கில் கருணாதிகளான இஷாந்த் மற்றும் மெண்டிஸ் வயிற்றில். உண்மையில் இந்த புலி அந்தப் புலி அல்ல, இஷாந்தும் கருணை மிக்கவர் அல்ல. கருணானிதி என்றாலே அப்படித்தானா என்றெல்லாம் என்னை கேட்கக் கூடாது.

இங்கு நாம் விளையடிக் கொண்டிருக்கிறோம். அரசியலுக்கு போக வேண்டாம். அது வேறொரு பதிவில்.

மும்பை மேஹம் என்றார்கள். மும்பையில் நடந்த தாக்குதலுக்கும் இதையேத்தான் சொன்னார்கள்.

இதில் பால் சேதம்..அதில் உயிர் சேதம்.

சச்சினும் ஜெயசூரியாவும் விளையாடிய விதத்தை வைத்து கணக்கிட்டால் ஸ்கோர் 200ஐ தாண்டி இருக்க வேண்டும். விட்டுவிட்டார்கள் மும்பைக்கர்கள். ஹர்பஜன் மட்டும் வெளுத்து வாங்கினார்.187தான் எங்களால் முடிந்தது என்று ஆடிக் களைத்து ஓய்ந்தது மும்பை அலைகள்.

பின்பு வந்த கொல்கத்தா அணியினர் “வந்தார்கள் நின்றார்கள் போனார்கள்” ரேஞ்சில் வந்த சுவடு கூட இல்லாமல் உள்ளே திரும்பினார்கள். சுவடு இருந்தால்தான் ரன் எடுக்க முடியும். ஷாருக்க்கான் வடிவேலு கணக்காக அப்படியே “ஷாக்காயிட்டார்”. பணத்த கொடுத்தாச்சி…இனிமே ஒண்ணும் பேச முடியாது.

புக்கனென் மற்றும் மெக்கல்லம், இந்த இருவரையும் அவரவர் நாடுகளுக்கு கடத்தினால் கொல்கத்தா தேரும்.

கேல் என்ற எட்டடியில் நடமாடும் ஒரு பலத்தை நம்பியே டீம் இருக்கிறது. அடுத்த நம்பிக்கை நம் தாதா தான். தாத்தா இல்லீங்க தாதா. ”அன்னிக்கும் வழக்கம் போல தன் கையில் காப்பியுடன் செய்தித்தாளை புரட்டினான்” னு நம்ம சுஜாதா கதையில வர்ர கதாநாயகனைப் போல கங்குலி தன் கடமைய செஞ்சார். மத்தவங்களும் தன் கடமைகள செஞ்சாங்க.

கேட்டா கடமைய செய் பலனை எதிர்பார்க்காதேன்னு கீதையில சொன்னப் போல இருந்தாங்க. இறங்கி ஆட வர்றதுதான் தங்கள் கடமையின்னு நினைச்சுக்கிட்டாங்க போலிருக்கு.

95ல ஒரு டீம் ஆல் அவுட் ஆகியிருக்குன்னா அது ஒரு டீமா அதுக்கு போர்வீரனைப் போல ஒரு உடையலங்காரம் தேவையா?

மொத்தத்தில கங்குலி பாவம். அவரு இந்த டீமில சேர்ந்தது அவர் செஞ்ச பாவம்.

சச்சின் ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பார். நல்ல ஆடறாங்க பாய்ஸ். அண்ணன் அன்னிக்கு மேன் ஆஃப் த மேட்ச் கூட வாங்கினார்.

ஒரு ஃபோ அடிச்சார் பாருங்க…ச்..ச்..சே..அவருக்கு வயசாயிருச்சி…அவரை ஆட்டம் போச்சுன்னு சொல்றீங்க…போங்கய்யா…

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.