ஐபிஎல் – பொறுமை பாதி அதிரடி மீதி

18வது ஆட்டம்: டெல்லி டேர் டெவில்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ்

வார்னே சில பல பேட்ஸ்மேன்களையும் முந்திக் கொண்டு ஆட முன் வந்தது அவர் அவர் டீம் ப்ளேயர்ஸ்க்கு ஏதோ சொல்ல நினைத்த செய்தியாகவே பார்க்கிறேன். ஆட்ட முடிவும் அதையே பறைசாற்றியது.

ராஜஸ்தான் ராயல்ஸின் ஆட்டம் பொறுமையும் அதிரடியும் கலந்து செய்த கலவையாய் இருந்தது. ஸ்மித் இந்த ஆட்டத்தில் ஒரு தங்கத்தை செய்யும் தட்டானைப் போல மிக கவனத்துடன் ஆடி தன் அணியின் வெற்றியை ஊர்ஜிதம் செயதது மிகப் பிரமாதம்.

பிறகு வந்த யூசுப் வார்னே தன் மீதான நம்பிக்கையை இழந்ததனாலேயே தனக்கு முன் களம் இறங்கினார் என்றும் அவருக்கு மீண்டும் தான் யார் என்பதை காண்பிக்கும் விதமாகவும் விளையாடித் தள்ளினார்.

வார்னேவின் திட்டம் பலித்தது. யூசுப் பதான் இதெல்லாம் அறியாதவர். வார்னே அவர் உணர்ச்சிகளை கிளப்ப பதிலுக்கு யூசுப் பந்துகளை கிளப்ப…ராஜஸ்தான் ராயல் வெற்றி பெற்றது.

முன்னதாக சாத்தான்கள் வழக்கம் போல் ஓபனிங்கில் வழுக்க டீவில்லியர்ஸ் ஆபத்பாந்தவனாக மறுபடியும் ஒருமுறை காத்து ரட்சித்தார். நாம் பல வெளிநாட்டு வீரர்களை அக்கு வேறு ஆணி வேறாக பிய்த்து எடுத்துக் கொண்டிருக்கிறோம். நம்ம சேவாக்கை மறந்தே போயிட்டோம். அவரும் எப்படி ஆட வேண்டும் என்பதையும் மறந்தே போய்விட்டார்.

தில்ஷனோ அல்லது டீவில்லியர்ஸோ பார்த்துக் கொள்வார்கள். நாம கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கலாம்ற மாதிரி முதல் ரெண்டு பேரும் அடிக்கறதே இல்லை. அதே சமயத்தில் ஒரு அணி வென்றதா அல்லது தோற்றதா என்பதே 20/20இன் பேச்சே தவிர யார் அடித்தார்கள் யார் விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள் என்பதல்ல.

வழக்கமாக தன் சுழற்பந்து வீச்சின் மூலம் அணிக்கு உதவும் வெட்டோரி இந்த முறை வெட்டி வெட்டி ஆடி 29ஐ சேர்த்தார்.

143 அப்படியொன்றும் பெரிய ஸ்கோர அல்ல. இருந்தாலும் நல்ல ஸ்கோர்தான். நல்லா போட்டிருக்கலாம் சாத்தான்கள். மிஸ்ரா தவிர மற்ற போலர்கள் விக்கெட் வீழ்த்துவதில் மிஸரபிள்தான்.

19வது ஆட்டம்: ராயல் சேலஞர்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

இவங்க நம்மகிட்டயே தோக்கறாங்கடா…இவங்க ரொம்ப நல்லவங்கடான்னு அன்னிக்கி நைட் தண்ணிய போட்டு பீட்டர் எமோஷனலா பீட்டர் விட்டுருப்பார்.

என்ன நம்ம ஜெயிச்சுட்டோமா? என்று சந்தேகமா காலிஸ் தன்னை கிள்ளி பார்த்து கொண்டதாக நம்பதகாத வட்டாரங்களிசிருந்து செய்தி வந்தது.

நாங்க யாருன்னு இப்ப புரிஞ்சுதா?ன்னு மக்கல்லம் மறைமுகமா ஷாருக் கானை கேட்டதாக அதே ந.த.வ செய்தி. ஷாருக் கானை காதுபிடுங்க நாலு கேள்வி கேட்க வேண்டும். என் பணம் நான் எங்க வேணும்னாலும் போடுவேன். மக்கல்லம் வீட்டு குப்பத்தொட்டியில கூட போடுவேன். அத கேட்க நீ யாருன்னு கேட்டுட்டா? கேட்டா எனக்கு ஒண்ணுமில்லை. ஆனா நீங்க எல்லாம் கொதிப்படைஞ்சு நேரா அண்ணா அறிவாலயம் (நல்லா சாப்பிட்டு)போய் மதிய உணவுவரை உண்ணாவிரதம் இருந்திடுவீங்களே. வேணாம்னு விட்டுட்டுட்டேன்.

கொல்கத்தாவுக்காக தன்னால் முடிஞ்சவரை கேல் ஆடிக்கொடுக்கிறார். அவருக்கு பக்கத்துணையாக இந்த மேட்ச்சில் வான் (மீதிப் பெயரை என்னால் சொல்ல முடியவில்லை. உங்களால் முடிகிறதா பாருங்கள். இதுதான் அந்தப் பெயர்: “Wyk”. என்ன பெயரோ….ஆனால் ஆட்டம் நன்றாக இருந்தது கொல்கத்தாவுக்கு உதவியாக இருந்தது.

அட நம்ம அகர்க்கர் 6 அடிச்சுட்டாருபா. அதுவும் அவுட்டாகாம? இது மாதிரி அசம்பாவிதங்கள் நடக்கும் போதே தாதாவுக்கு ஏதோ ஒன்று சொல்லியிருக்க வேண்டும். மொத்தம் 139 ரன்களே எடுத்தது கொல்கத்தா.

பின்னர் ஆடிய ராயல் சேலஞ் அணி காலிஸுடன் களமிறங்கியது. முதல் விக்கெட்டுக்கு 69ஐ சேர்த்தது. அது அவர்களுக்கே கொஞ்சம் அதிர்ச்சிதான். அப்ப கொல்கத்தாவுக்கு?

கோஸ்வாமி கொல்கத்தா போலர்களை எல்லாம் ”கோ ஸ்வாமி” என்றார். இந்த முறையும் பீட்டர்சன் 13தான். இவர என்ன செய்யலாம்னு டீம் முதலாளி முடிவு பண்ணட்டும்.

பவுச்சர் நிதானமாக விளையாடி அணியை பத்திரமாக வெற்றிக்கு கூட்டிச் சென்றார்.

ரா.சேவுக்காக நம்ம வெடரன் கும்ப்ளேயும், கொல்கத்தாவுக்காக இஷாந்தும் நன்றாக பந்து வீசினார்கள்.

ஒரு சமயத்துல ராயல் சேலஞ் அணி சடார்ர்ருனு மேட்ச்ச விட்டுருவாங்கன்னு நினைச்சேன். நல்ல வேளை பவுச்சர் பவுண்டரி போட்டு அதை தடுத்துட்டாரு.

20வது ஆட்டம்: கிங்ஸ் பஞ்சாப் – மும்பை இந்தியன்ஸ்

சுருங்க சொன்னால் மும்பை அணி ஜெயித்திருக்க வேண்டிய ஆட்டம். பழம் நழுவி பாலில் விழ அது நழுவி வாயில் விழ அதை மெல்ல கூட வேணாம்..அப்படியே முழுங்கினால் போதும்கற அளவுக்கு மேட்ச் மும்பை கையில் இருந்தது. ”உவ்வே” என்று துப்பிவிட்டனர். வேறே என்ன சொல்ல.

அற்புதமான பந்து வீச்சு அபாரமான ஃபீல்டிங்ன்னு பின்னி எடுத்தாங்க மும்பை. பஞ்சாப் அணியின் சங்கக்காரா தவிர வேற யாருமே உப்புக்கு சப்பானியாக பேட்டிங் ஆடவில்லை.

மலிங்கா ஓடி வர்றார். வர்றார். காலபாத்துதான் போடுவார். நேரா அங்கதான் வரும். இது நாம் எல்லாருக்குமே தெரியும். அங்க பேட்டிங் ஆடறவருக்கும் தெரியும். இருந்தும் என்ன பயன்.

பஞ்சாப் அணியின் மோட்டா தான் அடித்த 5 ரன் எவ்வளவு விலையுர்ந்தது மேட்ச் முடிந்தது உணர்ந்திருப்பார். கடைசியில் போவார் போகாமால் பவரா ஒரு ஃபோர் அடித்தது தான் மும்பை அணியின் ஸ்கோருக்கும் வெற்றி பெற வேண்டிய ஸ்கோருக்கும் உள்ள வித்தியாசமா இருந்தது. கடைசி ரெண்டு பந்துகளையும் போவார்தான் தடுத்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

120 ஒண்ணும் பெரிய ஸ்கோர். ஆனா இபதானும் அப்துல்லாவும் அட்டகாசமா போலிங் போட்டு மும்பை மேஹம்ம மும்பை “நோ ஹார்ம்”னு மாத்திட்டாங்க.

டெண்டுல்கரோ, ஜெயசூரியாவோ அல்லது ப்ராவோவோ இருந்திருக்க வேண்டும். அன்று பஞ்சாப் அணியின் தினம் (உடனே கொண்டாட போயிடப்போறீங்க).

டூமினி நிதானமா விழுந்து எழுந்து ஆடி மும்பை அணி வெற்றி பெற தன்னால ஆன எல்லாத்தையும் செஞ்சார் மனுஷன். கடைசி ஓவர்ல 12 ரன் தேவை. டூமினி ஆடறார் . அவர் கூட திவாரி. பஞ்சாப் அணிக்காக பந்துவீச தயாரா அப்துல்லா.

ஒரே ஒரு சிக்ஸ் அடித்திருந்தால் மேட்ச்சின் முடிவு வேறு மாதிரி போயிருக்கும். அல்லது ரெண்டு ஃபோர் போயிருந்தாலும். அப்துல்லாவே முழு பாராட்டுக்குரியவர் என்னை பொறுத்தவரையில்.

மேன் ஆஃப் த மேட்ச்சை மொமெண்ட் ஆஃப் த மேட்ச் வைத்து முடிவு செய்ய வேண்டும்.

இருந்தாலும் தன் பொறுமையான நிலைத்து ஆடிய ஆட்டத்துக்காக சங்கக்காரா. தகுதியானவரே. மும்பை இந்தியன்ஸ் 5 ரன்னின் பாலை “உவ்வே” பண்ணியது.

This entry was posted in General, ஐபிஎல்2, கிரிகெட் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *