தேர்தல் போர்க்களம் இங்கே…நம் நாட்டு வளர்ச்சி எங்கே?

  திரு. மன்மோகன் சிங்:

எங்களுக்கு வாக்களித்தால் 100 நாட்களின் நாட்டின் பொருளாதார நிலையை சீர்படுத்துவோம்.

ஏன் சார், கடந்த 6-7 மாதமா பொருளாதாரம் மந்தமாத்தானே இருக்கு? அம்மா சோனியா கொடுத்த வேறே வேலைகள்ள ரொம்ப பிஸியா இருந்தீங்களா?

  திருமதி. சோனியா காந்தி, திரு. ராகுல் காந்தி:

இலங்கைத் தமிழர்களை காப்பாற்ற வேண்டும். அவர்கள் அங்கு அந்நியாயமாக கொல்லப்படுவதை தடுக்க வேண்டும். உடனடி போர் நிறுத்தம் தேவை. கருணாநிதிக்கு இது பற்றி வேண்டுகோள் விடுத்துள்ளோம்.

ஏம்மா, இப்பத்தான் தெரியுதா அங்க கொல்லபடற செய்தி? அன்னியர்களா நினைச்சு விட்டவங்க எப்பலேர்ந்து அந்நியாயமா கொல்லவடறவங்களானாங்க?

  திரு. அத்வானி:

நாங்கள் ஜெயித்து ஆட்சிக்கு வந்தால் 100 நாட்களில் ச்விஸ் வங்கியில் உள்ள 70 லட்சங்கோடியை இந்தியாவிற்கு கொண்டு வருவோம்.

சரி இது நம்ம ஆளுங்க பங்கு எம்பூட்டு? அட சும்ம சொல்லு வாத்தியாரே…

  திரு. ஸ்டாலின்:

குடும்பம் இல்லாத உனக்கு கோடநாட்டில் பங்களா எதுக்கு? அடுக்குமாடி வீடு எதுக்கு?

சார், என்னதான் குடும்ப இல்லைன்னாலும் அவங்க தனக்காக இதெல்லாம் வெச்சுக்கக் கூடாதுன்னு ஏதாவது இருக்கா? இல்ல ஒரு வேளை புதுசா சட்டம் கொன்டு வர ப்ளான் இருக்கா?

  திரு. அழகிரியின் சொத்து மதிப்பு 19 கோடி:

இது உங்களுக்கே ஓவரா தெரியல? நிங்க அவ்வளவு ஏழையா? டி.எம்.எஸ்சுக்கு விழா எல்லாம் எடுத்தீங்களே, உங்க உண்மையான சொத்துக்களின் பத்திரத்த எடுத்தீங்களா? எடுத்து பார்த்தீங்களா? சரியா பாருங்க சார் ரெண்டு 0 விட்டிருக்கப் போறீங்க.

தினேசு..கேட்டியா அண்ண சொல்றத? உன் சொத்து மதிப்பு எவ்வளவு சொல்லு?

  திரு. தயாநிதி மாறன் சொத்து மதிப்பு 3.55 கோடி:

இருங்க ஐயா…லேசா மாரடைக்கிறது. நானே ஹை ப்ரஷர் ஆளு. எங்கேயாவது புட்டுக்கப் போறேன்.

கலாநிதி மாறன் உங்களுக்குன்னு ஒண்ணுமே தரலியா? அப்பா சொத்து பங்கு போட்டாலும் அவ்வளவுதானா? நிச்சயமா நீங்க ஏழைதான். நான் ஒத்துக்கறேன்.

  செல்வி. ஜெயலலிதா:

நீங்க முன்னடியெல்லாம் வைகோவ அண்ணன் அண்ணன்னு கூப்பிடுவீங்களே? இப்ப அண்ணன் போஸ்ட்டுக்கு மருத்துவர் வந்துட்டதாலதானோ?

செந்தில் அண்ணே..இதுக்கு நீங்கதான் நல்ல காட்டாமைய..ச்சே நாட்டாமையா இருந்து தீர்ப்பு சொல்லணும். அம்மா செஞ்சது சரியா?

  திரு, கருணாநிதி:
  தமிழ் மொழியை செம்மோழியாக்கிய ஒரே காரணத்திற்காக காங்கிரஸை ஆதரித்துக் கொண்டே இருக்கலாம்.

ஐயா நீங்க ஆதரச்சிக்கிட்டேயிருங்க அவங்க நாட்ட அரிச்சிக்கிட்டேயிருப்பாங்க. நமக்கென்ன நம்ம வாழ்க்கைய சீரழியுது. இல்லையா?

  பிடிபட்ட தீவிரவாதி பத்திரிகையாளர்களிடம் பேச மிலிட்டிரி அனுமதி:

நல்ல இருக்கு ஜோக்கு. வாங்க வாங்க. அஜ்மல் அஜ்மல்னு ஒருத்தன பிடிச்சி வெச்சிருக்காங்களே அவன பேசச் சொல்றது? தீவிரவாதின்னால நீங்க கொன்னுதானே பிடிப்பீங்க? இப்ப என்ன புதுசா? ஓ..ஓ..தேர்தல் நேரமா? என்ன? அம்மா சொன்னாங்களா? விட்ட இதெல்லாம் ஒரு செட்டப்புன்னு உண்மைய ஒளரிடுவீங்க போலிருக்கே.

  ப்ரணாப் முகர்ஜி பேச பேச ராகுல் காந்தி அவர் மூஞ்சயே பார்க்க்கிறார். அவர் கண்கள் எனக்கு சொல்லியவை:

அடப்பாவி, என்னா பீட்டரு வுடறான். ஏண்டா, மும்பைல தீவிரவாதி அட்டாக் செஞ்சப்ப என்னடா பண்ணிக்கிட்டு இருந்த? ச்ச்சே…உங்கிட்ட நிறைய கத்துக்கணும்.

  திரு. வைகோ:

ஏன் சார் அந்தம்மா அஞ்சு, நாலு, மூணுன்னு ராக்கெட் விட கவுண்ட்டவுன் மாதிரி குறச்சிகிட்டே போகுது…என்ன அவ்வளவுதானா நம்ம வீராப்பு பேச்சு கவுரவம் எல்லாம்? ஏம்பா நம்ம அந்த பழைய வைகோவ எங்கயாவது பார்த்தீங்களா? யுவராஜு..கண்ணு….உன்னதாம்பா?

சரி நம்ம ரஜினிகாந்த் எங்கப்பா போனாரு? எந்திரன் மந்திரம் இல்லாம மாயமா காணாம போயிட்டாரு? கடைசியில அவர் பேரன் யாத்ரா பேச ஆரம்பிச்சு கேட்கப் போறான். “தாத்தா நீங்க அரசியலுக்கு வருவீங்களா மாட்டீங்களா?” றஜினி, “தெரியலைபா…தெரியல. சோவ கேட்டுத்தான் சொல்லணும்”. யாத்ரா, “இன்னும் திருந்தவே இல்லையா நீ”.
ரஜினி, “@@(#@(#*@_)_!@(#)(#$*#@)#_@#@)(!!!!!!!!!!!!!!!!”.

இந்த விஜயகந்த், விடிஆர், மருத்துவர் ஐயா பத்தியெல்லாம் எனக்கு பேச விருப்பம் இல்ல. அவங்க என்ன பேசறாங்கன்னும் தெரிஞ்சுக்க விரும்பல.

அதிஷா தன் பதிவு ஒண்ணுல கேட்கறாரு ஏன் சரத் பாபு? அவர் போல நாட்டுக்கு நல்லது செய்யணுங்கற எண்ணம் ஒரு படிக்காத ஏழை கூலித்தொழிலாளிக்கு இருக்காதா? அவர் இப்படி சொன்னா நாம அவருக்கு ஓட்டு போட்டு அமைச்சராக்குவோமான்னு. ஞாயமாத்தானே இருக்கு கேள்வி?

ஒண்ணுமே புரியல உலகத்தில
என்னமோ நடக்குது
மர்மமாய் இருக்குது
ஒண்ணுமே புரியல உலகத்தில

This entry was posted in அரசியல் and tagged , , , , , , , . Bookmark the permalink.

6 Responses to தேர்தல் போர்க்களம் இங்கே…நம் நாட்டு வளர்ச்சி எங்கே?

 1. R.Sridhar says:

  அண்னா பார்த்துங்கண்ணா ஆட்டோ அனுப்ப போறாங்க. கேள்வி எல்லாம் சூப்பர்.

  • அண்ணா..நம்ம கேள்விதானே கேட்டோம், நக்கல் பண்ணலையே? இதுக்கெல்லாம் கூட ஆட்டோ அனுப்புவாங்களா என்ன? வந்தால் வரட்டும்..நான் நக்கீரன் பத்திரிகை, சூரியனின் சுடச்சுட ப்ளாக் போன்றவற்றின் மூலம் பிரபலமாகிடுவேன் :-)

 2. விஜயசாரதி,

  என்னதான் அரசியல் கோபம் இருந்தாலும், வருங்கால (எப்போ?) பாரதப் பிரதமர், தானைத் தலைவி, புரட்சி தலைவி, தங்கத் தாரகை, இதயதெய்வம், டாக்டர் செல்வி. அம்மா அவர்களை ”திரு” என்று விகுதியிடலாமா?

  இதுக்காக உங்கவூட்டுக்கு ஆட்டோ இல்ல, ராக்கெட் விடப்போறாங்க!

 3. ஹாஹா… அந்த் கடைசி மேட்டர். அவரு அப்படித்தான் சொன்னாரா???? நாந்தான் தப்பா புரிஞ்சிக்கிட்டேன் போல….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *