ஐபிஎல் – முதல் நாள் கூத்து…

இது வழக்கமான விமர்சனம் இல்ல இல்ல இல்ல. இப்பவே சொல்லிப்புட்டேன். எனக்கு தோன்றததான் எழுதப்போறேன். அதுல நடுநடுவுல மேட்ச்சப் பத்தியும் எழுதுவேன். மத்தபடி நம்ம வழக்கமான மசாலா இந்த விமர்சனத்திலையும் உண்டுங்கறத மிகத் தாழ்மையுடன் தெரிவிச்சுக்கறேன். இனி நம்ம விமர்சனம்.

ஐபிஎல் ஆரம்பித்து இரண்டு மேட்ச் முடிஞ்சாச்சு. இதுல முதல் போட்டியில மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றார்கள். இரண்டாவது மேட்ச்சில் ராயல் சேலஞ் (உடனே கனெக்சன அங்க கொடுக்கக் கூடாது இறைவா இவங்க திருந்த மாட்டாங்களா?) அணி வெற்றி பெற்றுவிட்டது.

செ.சூ.கி இந்த முதல் ஆட்டத்துல தோற்று போயிட்டதால அத குறைச்சி மதிப்பிட முடியாது. கடந்த முறை முதலில் சில ஆட்டங்களில் மு.இ தோற்றதும் பின்பு சச்சின் சேர்க்கைக்கு பிறகு வெற்றிகள் சிலவற்றை சந்தித்ததும் நினைவிருக்கலாம். அதென்ன சச்சின் சேர்ந்த பிறகுன்னு உடனே அரசியல் பேச ஆரம்பிச்சுடுவீங்களே.

ராயல் சேலஞ் தன் முதல் ஆட்டத்தில ராஜஸ்தான் ராயல்ஸ் அணிய வீழ்த்திவிட்டது. ராயல் சேலஞ் ஆடிய (பேட்டிங்தான்) போதே தோன்றியது. பந்து ராயல் சேலஞ ரெண்டு ரவுண்டு ராவா அடித்தது போல கண்டபடி பேட்ஸ்மேன் கண்டம் பண்ணமுடியாதபடிக்கு ஸ்விங் எடுத்தது.
இரண்டு போட்டிக்கும் ஒரு மிகப்பெரிய ஒற்றுமை அங்க சச்சின் டெண்டுல்கரின் பொறுமையான அரைசதமும், ராகுலின் மிகமிகப் பொறுமையான அரைசதமும் தான். இங்க நாம பொறுமைன்னு சொல்லறது பந்து கணக்குல இல்ல ஆடும் வித்ததில. பொறுமை பொறுமைன்னு இப்படி எழுதி எங்கள பொறுமை இழக்க செய்யறானேன்னு நீங்க பொறுமையிழந்து திட்டிறாதிங்க.

ஒரு பக்கம் தோனி பல்ல கடிச்சுகிட்டு தன் அதிரடி ஆட்டத்தையும் கொஞ்சம் தள்ளி வெச்சுட்டு பொறுமையா(மறுபடியும் முதல்லேர்ந்தா? நான் வரல) ஆடிகிட்டு இருக்கும் போது மறுபக்கத்துல அரவிந்த் சாமி மற்றும் ரேவதியின் நடிப்பு பிரமாதம்…ச்ச்சே…சாரி…மறுபக்கத்துல சக அணித்தோழர்கள் அறுபத்து மூவர் வரிசையாட்டுமா பொறுமையிழந்து (வேணாம்..வேணாம் வலிக்குது) ஆட்டமிழந்து போன போது நானும் பொறுமையிழந்து கையிலிருந்த சப்பாத்தி உருண்டைய எறிந்ததில் செ.சூ.கிக்கு ஒண்ணும் நல்லது நடக்கல. மாறா வீட்ல தங்கமணி நீல்டவுன் பண்ணச்சொல்லியதுதான் மிச்சம்.

பத்ரி அவுட்டானபோது வழக்கமா பொறுமையாயிருந்து வெண்பொங்கல், சக்கரை பொங்கல் போன்ற எந்தவித உணர்ச்சிப் பொங்கல்களையும் காட்டாமல் அதை (சொன்ன அடிக்க வருவீங்க) காக்கும் தோனியே ரன்னர் க்ரீஸ் அருகே காலில் ஒட்டிக்கொண்ட க்ரீஸை மண்ணில் தேய்த்து அழித்தார். அதுவே அவர் அதை இழந்து கோபப்பட்டதை காண்பித்தது.

ஜோ ஷர்மா மட்டும் அந்த சிக்ஸர அடிக்காமா இருந்திருந்தார்னு வைங்க தோனி ட்ரெஸ்ஸிங் ரூம்ல அவர அடிக்காமா விட்டிருக்க மாட்டார். அதுவும் அவர் போடும் (கடந்த ஐபிஎல்லுக்கு ஃப்ளாஷ் பேக்) ஓவரில் எதிரணி ஆட்டக்காரர் விளாசித் தள்ளும் போது அவர் கண்ணப் பார்த்தா திருவிழால காணாமப்போன நம்ம செந்தில் ஞாபகம் தான் வரும் எனக்கு.

அடுத்து ராயல் சேலஞ் அணிக்கும் ரா.ராக்கும் நடந்த போட்டி. நான் என்ன சொல்றேன்னா தயவுசெய்து ராயல் சேலஞ் அணியின் பெயரை மாத்த சொல்லுங்க. அவங்க ஸ்டெடியா இருந்தாகூட அந்த பெயர்ல இருக்குற கிக்குனால பல சமயங்கள்ள பேட்டிங் ஆடச் சொன்னா திக்குமுக்காடி போயிடறாங்க. இந்த மேட்ச்லையும் அப்படித்தான். அடுத்தடுத்து ரெண்டு விக்கெட்டை இழந்து திணறியதில் அப்பவே எனக்கு மேட்ச் முடிவு முடிவாகிவிட்டதாக எண்ணினேன்.

ஏன்னா எண்ணும் அளவுக்குக் கூட ஸ்கோர் இல்ல. இருந்தாலும் அதை காத்து கடைசிவரை பார்க்கலாம் என்று உள்ள மனசு சொல்லிச்சு. ஆமா இவருக்கு மட்டும் மனசு உள்ளுக்குள்ள இருக்கு… எங்களுக்கெல்லாம் ஒரு பெட்டில போட்டு பரன் மேல போட்டு வெச்சிருக்கோமா என்ன? என்று புலம்ப வேண்டாம். அப்புறம் நான் எப்போ இத மாதிரி எல்லாம் எழுதறது.

அந்த 2 போனதில் ஒரு நல்லதும் நடந்தது. பின்ன அடுத்து வந்தவங்களுக்கு பெயரினால ஏற்பட்ட போதை எல்லாம் சர்ர்ர்ருனு இறங்கிப்போச்சு. விளைவு பீட்டர்சன் 32 ராகுலின் அற்புத 66. சடார்னு பார்த்தா ஸ்கோர் 130கள்ள. இந்த ஸ்கோரே எடுபதற்கு கஷ்டம்னு சாஸ்திரி கமெண்திரிக்க கூடவே ரா..ரா..ராபினும் சேர்ந்து கொண்டார்.

சாஸ்த்திரிகள் வாயின் மேலே எனக்கு அபார நம்பிக்கையுண்டு. பல இந்தியாவின் சர்வதேச மேட்ச்கள்ள அவர் :சச்சின் அட் ஹிஸ் பெஸ்ட்”டுனு ஒரு போடு போட, உடனே தன் வாழ்நாளில் கனவுல கூட ஆட நினைக்காத ஒரு ஷாட் ஆடி டப்புனு புட்டுக்குவார் நம்ம சச்சின். சாஸ்த்திரிகள் வாக்கும் நாக்கும் அப்படி.

ஷேன் வார்ன் ஆட வந்தபோது, கும்ப்ளே ஓவர்ல மூணு பந்து சந்திக்க வேண்டியிருந்தது. மூணு பந்துலயும் கும்ப்ளே நான் ரன் கொடுக்க மாட்டேன்ன்னு பந்த் பண்ண, பின்னாடி (கீப்பர்) ராபின் ஊத்தப்பா மைக் இல்லாமலே எல்லோர் காதிலும் விழறா மாதிரி சிரிச்சதும், ஷேன் வார்ன் ஒரு பார்வை பார்த்தார் பாருங்க. “யானை சிறுத்தா எறும்பு எதிர நின்னு கேலிப்பேசுமாம்” பழமொழிய ஞாபகப்படுத்தின பார்வை அது.

சொன்னபடியே செ.சூ.கி என்ன பெரிய டீம், நாங்க கிளம்பறோம் பாருங்கன்னு பேண்ட்ட மடிச்சிக்கிட்டு வந்து போன சுவடே இல்லாம காணாம போயிட்டாங்க. ஒரு வேளை ரா.சே கட்சித் தலைவர் மருந்து சப்ளை பண்ணியிருப்பாரோ? நான் நினைக்கிறேன் ரா.சே பேட்டிங் முடிந்ததும், ரா.ரா அணியினர் இளைப்பாற நிறைய தண்ணி குடிச்சு இருப்பாங்கண்ணு. யூசுப் பதான் அவுட்டான உடனேயே சாஸ்த்திரிகள் சொல்லிட்டார், இனிமே ரா.ரா தலகீழ நின்னு தண்ணி குடிச்சாலும் ஜெயிக்க முடியாதுன்னு.

இத கேட்ட ரா.ரா அணித்தலைவர் ஷேன் வான், “திஸ் அபவ்” – இதுக்கு மேலயா?ன்னு வடிவேலு கணக்கா ஷாக்கானது வேறே விஷயம்.

இதனால சகலமானவர்களுக்கும் சொல்லிக் கொள்(ல்)வது என்னவென்றால், செ.சு.கிக்கும் மு.இக்கும் நடந்த போடியில் மு.இ வெற்றி பெற்றது. ரா,ராக்கும் ரா.சேக்கும் நடந்ததில் ரா.சே வெ.பெ.

அடுத்து இன்னிக்கு ரெண்டு மேட்ச் இருக்கு. இத பத்தி நான் இன்று எழுதி நீங்க நாளை படிக்கலாம்.

This entry was posted in General, ஐபிஎல்2, கிரிகெட், நகைச்சுவை, பொது and tagged , , , , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to ஐபிஎல் – முதல் நாள் கூத்து…

  1. மேட்சு பாத்தமாதிரியே இருக்கு இத படிக்கும்போது… கலக்கல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *