Home » நகைச்சுவை

விட்டுப்போன வேலண்டைஸ் டே

28 March 2009 18 Comments

இதில் வரும் அனைத்தும் நகைச்சுவைக்காகவே எழுதப்பட்டுள்ளது. யாரையும் புண்படுத்த அல்ல. அவர்களின் பதவி மற்றும் தொழிலை கொச்சைப்படுத்துவது என் நோக்கமல்ல. இது முழுக்க முழுக்க என் சொந்த கற்பனையே. நீங்களும் அதே நகைச்சுவை உணர்வோடு படித்து மகிழும்படி தாழ்வன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

பாகம் ஒண்ணுலயே முன்னுரைக்கு அதிகமா இடத்த செலவிட்டதனால, இந்த முறை (அதெல்லாம் வேணா சார், பண்ணா ஸ்ட்ரெயிட்டா ஹீரோ..நான் வெயிட் பண்றேன் சார்…) முன்னுரையெல்லாம் தேவையில்ல.

முந்தைய படைப்பான வேலண்டஸ் டே சினிமாக்களின் தொடர்ச்சி…….

அரசு ஸ்பெஷல்:
தைத் திருநாளயே தமிழர் புத்தாண்டு தினமாக மாற்றிய கலைஞர், ஆஸ்பத்திரியல நல்ல ஓய்வெடுத்ததுல இன்னொரு அவசர சட்டமும் கொண்டுவரப் போறாராம். அதாவது அன்னை தெரசா பிறந்த தினத்தையும், ஆண்டாள் பிறந்த தினத்தையும் இனிமே வேலண்டைன்ஸ் டே மாதிரி கொண்டாடலாம்கிறது தான் அந்த சட்டம். இனிமே பெப்ரவரி 14 கிடையாதாம். அ.தெ பிறந்த தினத்தை ”அன்பு பரிமாற்று தினம்” என்றும் (மத்த நாளெல்லாம் நாம் அரிவாளும் கையுமா அலையலாம்) ஆண்டாள் பிறந்த தினத்தை காதலர் தினம் என்றும் கொண்டாடலாமாம் (ஆண்டாள் தமிழச்சி என்பதை ஊர்ஜிதபடுத்திக் கொண்ட பிறகு நம்மையும் படுத்துவார் என்று ஆஸ்பத்திரி வட்டாரம் ஊசிப்போட்டுக் கொண்டிருக்கிறது. அதோடு நிற்கவில்லையாம். காதலர் தினத்தன்று கட்டாயமாக காதலர்கள் “காதலில் விழுந்தேன்” படத்தை ஒரு முறையாவது பார்க்கணுமாம். காதலில் விழுந்தேன் அரசுடமையாக்கப்படுமா என்பது பற்றி கூட்டாக (குடும்பமாக) பேசி முடிவெடுக்க உள்ளனர்.

அன்னை தெரசா தமிழச்சி இல்லையேன்னு கட்சியில முக்கிய (அவசரமா வந்துருக்குமோ? கேஸ் ப்ராப்ளமா இருக்கும்) அமைச்சர் சந்தேகம் எழுப்ப, இது அன்னை சோனியாவுக்காக எடுக்கப்பட்ட முடிவு. அதுமட்டுமல்லாமல் அன்னை தெரசா என்றால் அன்பு, அன்பு என்றால் அன்னை தெரசா (கவிதை மாதிரி ஏதோ சொல்லி குழப்பி…தினத்தந்தியில கூட வரப்போகுதாம்) என்பதை சுற்றி வளைத்து (ஆமாங்க, நம்ம மாறக்கூடியவர் கையை பிடிச்சிகிட்டு தான் சுற்றினார்) மறைமுகமாக தெரிவித்தாராம். இந்த வயசுல வேற கட்சிக்கெல்லாம் தாவ முடியாத காரணத்தால பேசாம் வாய மூடிக்கிட்டு இருந்துட்டாராம் முக்க்கிய அமைச்சர். தவிர இது அவருக்கு ’முக்கிய’ மான பிரச்சனை ஆகிவிடக்கூடாது என்பதினால் சைலண்டா விட்டுட்டாராம் ( தப்பா நினைக்காதீங்க, ப்ளீஸ், அவரு விட்டது விஷயத்தை தான்)

டைரக்டர்ஸ் ஸ்பெஷல் (அட நீங்க எப்பவுமே அதே நெனப்புலயே இருக்கீங்க…இது நம்ம இயக்குனர் ஸ்பெஷல்ங்கோ…வ்)

பாலச்சந்தர்: புதுப் புது காதல்கள் – 60 வயது மதிக்கதக்க, பல் கூட விழுந்துவிட்ட ஒரு விதவைக் கிழவியை 20 வயது கதாநாயகன் காதலிக்கிறான். அதற்கு அவனுக்கு வரும் எதிர்ப்புகளே கதை. “ஒருபுறம் பார்த்தால் கொல்லங்குழி கருப்பாயி, மறுபுறம் பார்த்தால் தேனி குஞ்சாரம்மா”ன்னு பாடல்களும் ரெடி.

பாரதிராஜா – 54 வயதினிலே – ஹீரோவா மனோஜ் பண்றார். அதை பார்க்கறது பார்க்காதது நான் உங்க முடிவுக்கு விட்டுடறேன். காமிரா ஹீரோயின் மூக்குக்குள்ளயெல்லாம் பூந்து வெளில வந்துருக்காம் (அழுக்கு இல்லையே).

பாக்கியராஜ் – வேலண்டைனை இழுத்து கட்டுன்னு தன் மகனை வெச்சு கொடுமைபடுத்த முடிவெடுத்திருக்கிறார். முருங்கக்காய் மேட்டர் இதிலும் உண்டாம். ஒரே சப்ஜெக்ட், ரெண்டு காதல் கதை. ஷாந்தனுவின் நிஜ அக்காவே இதிலும் அக்கா. அந்த இரண்டாவது காதல் கதை இவரைச் சுற்றிதான். இந்த படத்திலாவது அவரை நடிக்க வைத்து விடவேண்டுமென்று ஒரு முடிவோடு இருக்கிறார்.

பார்த்திபன் – காதல் கிறுக்கன் – பாகம் 2. ரோஜாப்பூ டிசைன்ல காதலி போடும் செருப்பு, ஆர்ட்டின் வடிவத்துல அவருடைய வீட்டு முகப்புன்னு பல புதுமைகளை செய்யவிருக்கிறாராம். மவுண்ட் ரோடுல பெரிய பேனர். அதில் கீழ்பாக்கம் ஆஸ்பத்திரியிலிருந்து நிஜ பைத்தியங்களை வாடகைக்கு எடுத்து லைவா உலவ விடறதா ப்ளான் வெச்சிருக்கார்.

மணிரத்னம் – திருப்பாவை – ஆண்டாள் கண்ணன் மீது கொண்ட காதலை அப்படியே மாடர்னைஸ் பண்ணியிருக்கார். ரஹ்மான் மார்கழித் திங்கள் பாட்ட மறுபடியும் ரீமிக்ஸ் பண்ணியிருக்கார். இதுக்கு அவருக்கு சில்வர் க்ளோப், பாஃப்ட்டா, வரட்டா போன்ற அவார்டுகள் நிச்சயம்ன்னு கோலிவுட்டே பேசிக்குது. கதாநாயகியா பிஸின் தேர்வாகியிருக்கார். கதாநாயகனாக என்.டி.ஆர் மகன் செய்யலாம் என்று பேச்சு (என்ன இருந்தாலும் கிருஷ்ணர் வேஷமாச்சே. இந்த ராமர், கிருஷ்ணர் வேஷத்துக்கெல்லாம் காப்பிரைட்ஸ் அவங்ககிட்ட தானே இருக்கு)

இதெல்லாத்தையும் கேட்ட நம்ம தொங்கர் பச்சான், நானும் ரேஸுக்கு ரெடின்னுட்டார். டைட்டில் – கொல்ல மறந்த காதல். ஹீரோ அவரே, ஹீரோயின் சினேஹா அல்லது நவ்யா நாயரா இருக்காலாம் (வேற யாரும் வரமாட்டேங்கிறாங்க) என்கிறார். பேச்சுவார்த்தை போயிக்கிட்டிருக்காம்.
படத்தின் கதை கரு இதுதான். படத்தின் ஹீரோ நம்ம கலாச்சாரப்படி கோவணம் கட்டுவதுதான் தமிழர் பண்பாடுன்னு பேண்ட் போட்டுக்கிட்டு போதனை செய்யற கேரக்டர். தன் காதலி ஆங்கில பாடம் எடுத்தாலும் அத தமிழ்லதான் எடுக்கணும்னு சொல்ற மொழி வெறியன். அந்த கிராம மக்களை கருத்து சொல்லியே படுத்துற ஒரு இளைஞன்.

அந்த கிராமத்து பள்ளியில வேலை பார்க்குற ஆங்கில டீச்சரை காதலிக்கிறான். அவங்களுக்கு நடுவுல ஒரு பிரச்சனை. தன் காதலி கொடுத்த ஒன்பது ரூபா நோட்ட தொலைச்சிடறான் காதலன். அத தொலைச்சதோட காதலும் தொலைஞ்சதுன்னு நிம்மதி பெருமூச்சு விடும்போது காதலி அவன்கிட்ட சொல்றா..”நீ தொலைச்சது வெறும் ஜெராக்ஸ் தான், கவலப்படாதே..என்கிட்ட இத மாதிரி நிறைய இருக்கு”ன்னு. இத கேட்ட அந்த காதலன் எடுக்கற அதிரடி முடிவுதான் படத்தின் ஹைலைட்.

கடைசியா சன் பிக்சர்ஸ் “காதலில் நொந்தேன்”ன்னு ஒரு படத்தை பூஜைப் போட்டு தொடங்கிட்டாங்க. காதலில் விழுந்தேன் படக்குழுவே இதிலும். “காதலில் நொந்தேன் – உங்களை விடமாட்டோம்” இதுதான் அந்த பட டைட்டிலுக்கு பேஸ்லைன். இப்போ குடும்பம் மறுபடியும் ஒண்ணு சேர்ந்துட்டதால, இனி கலைஞர் டி.வியிலும் இதன் விளம்பரம் வந்து தீராமல் தொல்லை கொடுக்கும்ன்னு படத்தின் இயக்குனர் காரண்டி கொடுத்திருக்காராம்.

இவ்ளோதான் அணிலார் சொல்லிட்டு போயிருக்கார். எப்பப்ப அவர் சொல்றாரோ அப்பப்ப நான் உங்ககளுக்கு சொல்வேன். இது செத்துப் போன அந்த வேலண்டைன்ஸ் தாத்தா மேல சத்தியம்! சத்தியம்!! சத்தியம்!!!

முதல் செய்திக்கும் கடைசி செய்திக்கும் ஒரு இணைப்பு இருக்கு. என்னன்னா காதலில் விழுந்தேன் மற்றும் தற்போது தயாரிப்பில் இருக்கும் காதலில் நொந்தேன் படங்களை அரசுடமையாக்க வாய்ப்புள்ளதா அணிலார் கொரிச்சுட்டு போனார்.

18 Comments »

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.