பல் பொடியிலேர்ந்து தேங்காய்ப் பொடி வரை

ஜெய் ஹோ! ரஹ்மான் ஜெயிச்சுட்டார். அவர் மன அழுத்தம் இறங்கியிருக்கும். அப்பாடான்னு பெட்ல காலவிரிச்சு விட்டத்த பார்த்து படுத்து ரெஸ்ட் எடுத்துட்டு இருப்பார். ஆனா நம்ம கண் கொடாசலும் தலை வலியும் இப்போதான் ஸ்டார்ட் ஆயிருக்கு மாம்ஸ். எங்க திரும்பினாலும் ரஹ்மான், ஆஸ்கர், இரட்டை விருதுன்னு அடிச்சு தூள் கிளப்பும் விளம்பரங்கள் தான். சில வெவஸ்தகெட்ட நிறுவனங்கள் உணர்ச்சிவசப்பட்டு ஸ்லம்டாக் ரஹ்மான்னு விளம்பரம் பண்ணும். யாரும் ஒண்ணும் கேட்க முடியாது.

நம்ம அணிலார்தான் இருக்காரே. சும்மா ஒரு இடத்துல உட்கார மாட்டார். அவருக்கு செய்திப் பசி ஜாஸ்தி. அதனால் எங்க எத கொரிக்கலாம்னுச்சீ..இது……சேகரிக்கலாம்னு அலைஞ்சுகிட்டே இருப்பார். அப்படி அலைஞ்சுகிட்டு இருக்கும் போது அவர் கண்ணுல மற்றும் காதுல விழுந்த (காதலில் விழுந்த இல்லங்க…) சில பல விளம்பரங்களை பற்றி இப்பத்தான் சொல்லிட்டு குடுகுடுன்னு ஓடிட்டார்.

கோபால் பல்பொடி இந்தியா. இலங்கை, சிங்கப்பூர் மற்றும் மலேசியாவுலதான் இதுவரைக்கும் வித்துக்கிட்டு இருந்தது. ரஹ்மான் ஆஸ்கர் ஜெயிக்க இப்போ அமெரிக்க மற்றும் லண்டன் மார்க்கெட்டையும் பிடிக்க ரஹ்மானை வளைத்துப் போட்டிருக்கிறது. ரஹ்மான் ஹி..…ன்னு பல் தெரியறா மாதிரி கையில ஆஸ்கர் விருதோட சிரிக்கறார். அந்த போட்டோவத்தான் கோபால் பல் பொடி பாக்கெட்டுல போடப்போறதா பேச்சு.

டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகை ஒவ்வொரு பக்கத்துலயும் ரஹ்மானோட ஒவ்வொரு போட்டவை போட்டு குட் டைம்ஸ் ஆஃப் இந்தியா, மெமரபிள் டைம்ஸ் ஆஃப் இந்தியா, கிரேட் டைம்ஸ் ஆஃப் இந்தியான்னு அடிச்சு நிமித்தப் போறதா பேச்சு அடிபடுது. முதல் பக்கத்துல ரஹ்மான் டைம் பார்க்கறா மாதிரி ஒரு போட்டோ. கடைசி பக்கத்துல ரஹ்மான் சொல்றாரு (நிஜமாகவே அவர் சொன்னாரான்னு தெரியாது) “நான் காலையில எழுந்தவுடனே டைம் பார்க்கறதுக்குக் கூட டைம்ஸ் ஆஃப் இந்தியாதான் யூஸ் பண்றேன். இது போதாதா.

நம்ம உடுப்பி ஹோட்டலும் கூட இப்படி இறங்கும்னு எதிர்பார்க்கவே இல்ல. அட ஆமாங்க நிஜமாத்தான். இன்றைய ஸ்பெஷல படிங்க உங்களுக்கே தெரியும்.

மசாலா தோஸ்கர், கோல்டன் இட்லி, பாஃப்டா பரோட்டா, கோடாக் கீரவடை, லாஸ் ஏஞ்சலிஸ் லட்டு

பிரபல நாளிதழ் தன்ன்டேன்னா ரெண்டுவிளம்பரத்துக்கு ரஹ்மான் ரொம்ப பொருத்தமா இருப்பாருன்னு முடிவு எடுத்து, முன்னாடி ன்டேன்னா ரெண்டுங்கறத மாத்தி திங்கள்னா ரெண்டுன்னு வெச்சிருக்காங்க.

ஆச்சி மசாலா இப்பலேர்ந்து ஆஸ்கர் மசாலாவா மாறிடிச்சுங்கோவ்வ்வ்வ்…..”புதிய ஆஸ்கர் மசாலாஇப்பொழுது கூடுதல் தமிழ் மணத்தோடு அமெரிக்க தொழில்நுட்பத்துல (இது எப்படி இர்ர்ருக்கி?).

ஹார்லிக்ஸும் காம்ப்ளானும் அவங்க ண்டைய இதுலயும் காட்டிருக்காங்க. அட ஆமாங்கங்கறேன்….

ஹார்லிக்ஸ்: தெரியுமா இப்போ ஹார்லிக்ஸ் குடிச்சா ஆஸ்கர் வரைக்கும் போகலாம்.

காம்ப்ளான்: காம்ப்ளான் ஆக்குமே ஸ்ட்ராங்கர் அள்ளித்தருமே டாலர்($) அதோடு கூட வாங்கித்தருமே அவார்டும்.

குங்குமம் இந்த வாரம்”, அப்பா..! இனி கொஞ்சம் ஓய்வெடுக்கப் போறேன்ரஹ்மான் ப்பெருமூச்சு. ”ஆஸ்கரும் ஆலிவுட்டும் தூரமில்லைவாலியின் கவிதைமற்றும் இந்த வாரப் போட்டியில் வெற்றி பெறுவோர்க்கு, ஜெய் ஹோ! பாடல் ரிங்டோன் 100 பேருக்கு.

ஏர்டெல் பத்தி கேட்கவே வேணாம். “டபுள் டால்க் டைம்”, ஸ்லம்டாக் மில்லினேர் சாங்ஸ் டவுன்லோட், ரிங்டோன்ஸ்ன்னு போயிக்கிட்டே இருக்கும்.

லைஃபாய் பாட்ட மாத்தி போட்டுப்புட்டாங்க அப்பு. “ஆரோக்கிய வாழ்வினை காப்பது லைஃபாய், லைஃப்பாய் எவ்விடமோ ஆஸ்க்ர் அவ்விடமேன்னு பாட்டு ஓட ரஹ்மான் துண்டால தலைய தொடச்சிக்கிட்டே வருவாரு. அதான் இப்ப புதிய லைஃபாய்.

இத மாதிரி நிறைய இருக்குது. எல்லாத்தையும் நானே எழுதிட்டா அப்புறம் பின்னூட்டம் போட வர உங்களுக்கு எழுத ஒண்ணுமே இருக்காதே. அதனால நான் இப்ப நிருத்திக்கர்றேன்..நெக்ஸ்டு மீட் பண்றேன்…..வர்ட்டா……..

This entry was posted in நகைச்சுவை, பொது and tagged , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to பல் பொடியிலேர்ந்து தேங்காய்ப் பொடி வரை

 1. R.Sridhar says:

  உண்மைதான். எல்லாத்திலயும் போட்டு தாக்கறாங்க. ஆனா இந்த அளவுக்கு போனா நாம மறுபடியும் ஒட வேண்டியதுதான்.

 2. பத்மஸ்ரீ விவேக் இனிமே படங்கள்லே கலாம் ஐயாவோட, ஏ.ஆர்.ஆர் படத்தையும் மாட்டி ச்சின்னச்சின்ன பசங்களுக்கெல்லாம் அறிவுரை பண்ணுவாரு – இவரை மாதிரி நீங்களும் வரணும்னு.

  (பத்மஸ்ரீ) சந்தானம் இனிமே ஆஸ்கர் மண்டையான்னு தன் தோழர்களை திட்டலாம்… (பத்மஸ்ரீ சீக்கிரத்துலே வாங்கிடுவாரு. அதனால்தான் ப்ராக்கெட்லே போட்டிருக்கேன்).

  :-)))

 3. வாங்க ஸ்ரீதர். ஓட வேண்டியதுதான். இன்னும் நிறைய இருக்குங்க….நம்மாளுங்க இருக்காங்களே…

 4. அட இன்னும் அந்த பதமஸ்ரீய மறக்கவேஇல்லியா நீங்க? அவங்க கொடுப்பாங்க…நாம கேட்டுக்கிட்டே இருக்க வேண்டியதுதான் போங்க.

  விவேக் கமெடி செம்ம காமெடி.

  இன்னொரு விஷயம் ச்ச்சின்னப்பையன்….

  இதுல நான் ரஹ்மானோட பாட்ட வெச்சு காங்கிரஸார் அரசியல் விளம்பரம் செய்யவிருப்பதை இதில் நான் குறிப்பிட மறந்துட்டேன் பாருங்க….

  இண்டு இடுக்கு…சந்து பொந்து….எல்லா இடத்துலையும் ரஹ்மானை நுழைச்சிடுவாங்க.

  பாவம் ரஹ்மான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *