Articles Archive for March 2009
General, சிறுகதை, நாட்டு நடப்பு »
கதையின் நாயகன் கணபதி சிவில் என்ஜீனியர் பட்டதாரி. ஒன்றரை வருடம் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி விட்டு, பேப்பரில் வந்த வேலைவாய்ப்பிற்கு அப்ளை செய்ததில் அபு தாபியில் ஒரு கட்டுமானத் துறையில் நிறுவனத்தில் வேலை கிடைத்து இன்றோடு 2 வருடம் 5 நாட்கள் ஆகிறது. வருடாந்திர விடுமுறையை எடுத்துக் கொண்டு சென்னை வந்திருக்கிறான்.
முதல்ல கணபதியோட குடும்பத்த பத்தியும் அவங்க குடியிருக்குற வீட்ட பத்தியும் நாம தெரிஞ்சுக்க வேண்டியது ரொம்ப அவசியம். மைலாப்பூர்ல அக்ரஹாரத்துல தான் அவன் வீடு. அப்பா, அம்மா, அண்ணன் ராமசுப்பு (சுப்பினி செல்லப்பெயர்), கல்யாணம் ஆகி அமெரிக்காவுல செட்டில் ஆன அக்கா அனு. அக்கா வீட்டுக்காரர் ஒரு பெரிய சாப்ட்வேர் கம்பெனியில வேலை செய்யறார். முன்ன மிடில் க்ளாஸ் குடும்பம். கணபதி, சுப்பினி கடாட்சத்துல இப்போ அப்பர் மிடில் க்ளாஸ். இருக்குறது வாடகை வீடாயிருந்தாலும் …
