Articles Archive for March 2009
நகைச்சுவை, பொது »
ஜெய் ஹோ! ரஹ்மான் ஜெயிச்சுட்டார். அவர் மன அழுத்தம் இறங்கியிருக்கும். அப்பாடான்னு பெட்ல காலவிரிச்சு விட்டத்த பார்த்து படுத்து ரெஸ்ட் எடுத்துட்டு இருப்பார். ஆனா நம்ம கண் கொடாசலும் தலை வலியும் இப்போதான் ஸ்டார்ட் ஆயிருக்கு மாம்ஸ். எங்க திரும்பினாலும் ரஹ்மான், ஆஸ்கர், இரட்டை விருதுன்னு அடிச்சு தூள் கிளப்பும் விளம்பரங்கள் தான். சில வெவஸ்தகெட்ட நிறுவனங்கள் உணர்ச்சிவசப்பட்டு ஸ்லம்டாக் ரஹ்மான்னு விளம்பரம் பண்ணும். யாரும் ஒண்ணும் கேட்க முடியாது.
நம்ம அணிலார்தான் இருக்காரே. சும்மா ஒரு இடத்துல உட்கார மாட்டார். அவருக்கு செய்திப் பசி ஜாஸ்தி. அதனால் எங்க எத கொரிக்கலாம்னு…ச்சீ..இது……சேகரிக்கலாம்னு அலைஞ்சுகிட்டே இருப்பார். அப்படி அலைஞ்சுகிட்டு இருக்கும் போது அவர் கண்ணுல மற்றும் காதுல விழுந்த (காதலில் விழுந்த இல்லங்க…) சில பல விளம்பரங்களை பற்றி இப்பத்தான் சொல்லிட்டு குடுகுடுன்னு ஓடிட்டார்.
கோபால் பல்பொடி இந்தியா. இலங்கை, …
