Home » General, அனுபவம், சிந்தனைகள், பொது

ஐயா….அம்மா…..ஒரு பின்னூட்டம் போடுங்கம்மா….

9 March 2009 41 Comments

தலைப்பை பார்த்துவிட்டு மேலே படிக்காமல் நேராக பின்னூட்டப் பகுதிக்கு போய் ஒரு குத்து குத்தறவங்களுக்குஉங்கள் கனவு, ஆசை எதுவாயிருந்தாலும் அது பின்னூட்டம் போட்ட அடுத்த நிமிசம் நெனவாகனும், நிறைவேறனும்னு நம்ம ப்ளாகர் குலதெய்வம் ப்ளாகர்பட்டி இடுகைச்சாமிக்கிட்ட வேண்டிகிட்டு காவடி எடுப்பேன்”. இத முழுசா படிச்சிட்டும் பின்னூட்டம் போடாதவங்களுக்கு கண்டிப்பா சாபம் கொடுக்க மாட்டேன். ஆனா உங்க கனவு ஆசை எல்லாம் எனக்கு பின்னூட்டம் போட்ட பிறகுதான்..சரியா…? என்னது சரியில்லயா…..என்ன குலதெய்வத்தோட வரம் கிடைக்கறதுன்னா அவ்வளவு சுளுவா….

இப்போ சொல்ல வர்ற மேட்டர் அது இல்லீங்கோ

இந்த எழுத்து, எண்ணங்கள் இதையெல்லாம் போடறது எவ்வளவு கஷ்டமோ அதவிட ரெண்டு மடங்கு கஷ்டம் பின்னூட்டம் போட வெக்கறது. கிட்டதட்ட பிச்சையெடுக்காத குறைதான் போங்க. தேர்தல்ல ஜெயிக்க எப்படி வோட்டு வேட்டைல நடக்குமோ கிட்ட்தட்ட அத மாதிரி தான். விசேஷம் என்னன்னா இதுலயும் கூட்டணி எல்லாம் வெச்சுக்கிறாங்க. தப்பில்லை, ஏன்னா, இது சந்தர்பவாத கூட்டணி இல்லை, தானா சேர்ந்த கூட்டணி.

ஒரு இடுகை போட்டவுடனே நமக்கு தோணுகிற அடுத்த எண்ணம், நமக்கு தெரிஞ்சவங்கள புடிச்சு, படிச்சியா? எப்படி இருந்தது? கமெண்ட் போட்டியா?ன்னு கழுத்தறுக்கறதுதான். பாவம் தெரியாம தெரிஞ்சவங்களா போயிட்டாங்க. வந்துட்டான்யா….வந்துட்டான்யா?ன்னு மனசுக்குள்ள வடிவேலு ரேஞ்சுக்கு புலம்புவாங்க. ஆனாலும் வெளிய காட்டிக்காம பொய் புன்னகையோட, ”ஹும்பார்த்தேன்..பிரமாதம்அட்டகாசம், ரொம்ப நல்ல எழுதியிருக்கே….அப்படி இப்படின்னு ரீலு மேல ரீல விட்டுட்டு நேரா ப்ளாகுக்கு (அப்பத்தான் அந்த ப்ளாகுக்கே போயிருப்பாங்க) போய் அதையே கமெண்ட்லையும் போட்டுட்டு போய்டுவாங்க. அந்த கமெண்ட்ஸ பார்த்தவுடனே ஆஸ்கர் நாயகன் .ஆர்.ரஹ்மான் போல எதையோ சாதிச்சுட்ட பெருமை. ஏன் இந்த விளம்பரம்? சினிமாக்கரங்கதான் அவுங்க படம் ஓட செய்யறாங்கன்னா? அப்படின்னு கவுண்டமணி ஸ்டைல்ல மனசாட்சி கேட்கும் போது நாம திருவிழால காணாமப் போன செந்தில் மாதிரி மூஞ்ச வெச்சுக்கறது பழக்கமா போச்சு. மனசாட்சிகிட்ட திரும்ப அதே கவுண்டமணி ஸ்டைல்லஹே..ஹே….ஹ்ஹா..ஹ்ஹாஅரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பான்னு சொல்லி அடுத்த கட்ட நடவடிக்கைக்கு இறங்கிடுவோம். என்னவா? அடுத்த பிச்சைதாங்க அது? சார், கமெண்ட் ப்ளீஸ்…(இங்கிலீசு பிச்சை)

தெரிஞ்சவன், அறிஞ்சவன், சொறிஞ்சவன்னு ஒருத்தரையும் விட்டுவைக்காம எல்லார்கிட்டேயும் தமிழ் பிச்சை கேட்ட்துபோக, ஆபிஸுக்கு போய் அங்க நம்ம கூட வேலை செய்யற யாரையும் விட்டு வைக்கறது இல்ல. அவன் என்ன வேலையா இருக்கான்? மானேஜர் கிட்ட அப்பத்தான் வாங்கி கட்டிகிட்டு வந்திருப்பான் பாவம். நாம போய்….ஹி…ஹி….என்ன மச்சான், என்ன மீட்டிங் (டேய் டாபர் மீட்டிங் இல்லடா திட்டு வாங்கிட்டு வந்திருக்கேன்..கேட்கறான்பாரு…அப்படின்னு நம்மள மன வானலியில் போட்டு வதகிட்டு இருப்பான்) அப்படி இப்படின்னு ஃபார்மாலிடிக்கு ரெண்டு கேள்வி கேட்டுட்டு, ”அப்புறம் மச்சான், படிச்சியா?” (மனசுக்குள்ள ஆமா, ஜாவால ஏதோ புதுசா வந்திருக்காம், அதை இன்னும் ஏன் படிக்கலைன்னு மானேஜர் உயிர வாங்கறான். இதுல எவன் வேறே)…ஹி…ஹி..ஹி…தோ அங்கதான் போயிகிட்டு இருக்கேன். கொஞ்சம் வெயிட் பண்ணுன்னுவான். ரொம்ப பாவம்.

யாஹூ, கூகுல் டாக்குன்னு எதையும் விட்டுவெக்கறது இல்ல. சகட்டு மேனிக்கு எல்லாரையும் ஹாய் சொல்லி கூப்பிட்டு படிச்சியான்னு கேட்கலைன்னா நமக்கு அன்னிக்கு தூக்கம் சரியா வராது அடுத்த நாள் காலையில வர வேண்டியது சரியா வராது. யாராவது ஆன்லைன்ல வர்றாங்கன்னு அலர்ட் வந்த போதும் நாம குஷியாயிடுவோம். அப்பாகும்பிட போன தெய்வம் குறுக்கே வந்தா மாதிரின்னு மனசுல நெனச்சுகிட்டுஅப்படியே ஒரு க்ளிக். அவங்களுக்கும் தெரியும் இந்த சோழியன்குடுமி சும்மா ஆடாதுன்னு.

சானல மாத்தும் போது திடீர்ன்னு சன் டிவி அதிரடி சிங்கர்ல மாட்டிக்குவோம் இல்ல அத மாதிரி ஃபீல் பண்ண ஆரம்பிச்சுடுவாங்க. இருந்தாலும் இவங்களும் மேலே சொன்னது போல கடுப்ப வெளில காட்டிக்காம எம் ஃபைன். ஹவ் அபெளட் யூ?ன்னு ரொம்ப அக்கறையா விசாரிப்பாங்க. நம்ம ஆளு, ”அதெல்லாம் விடு, என் லேட்டஸ்ட் போஸ்ட் படிச்சியா? ஹவ் ஈஸ் இட்?” ன்னு இங்கிலீசு பிச்சைக்கு அடிபோட ஆரம்பிச்சுடுவோம். ஏதோ நம்ம கிறுக்கி வெச்சுருக்கிறதே அவனுக்காக எழுதினா மாதிரியும், நம்ம ப்ளாக படிக்கறது அவன் வாழ்கையில ஒரு அங்கம் மாதிரியும் அத இதுவரைக்கும் படிக்காததே தெய்வ குத்தம் மாதிரியும் நெனப்பு. இதெல்லாம் ரொம்ப ஓவர் சொல்லிபுட்டேன்.னு அந்த வீட்டு வாசல்ல ஒரு 7 பேரு கோரஸா சவுண்ட் விடறது கேட்குது. இருந்தாலும் உண்மைய சொல்லித்தானே ஆகணும். என்ன சொல்றீங்க?

சரி அப்ப்டி சொல்லிட்டு விடறோமான்னா அதான் இல்லை. பாவம் நண்பர் ஏதாவது வேலையில மும்முரமா வேலை செய்துகிட்டு இருப்பார். போய் பொழப்பை பாருன்னு அவங்களால சொல்லவும் முடியாது. இக்கட்டான சூழ்நிலையில மாட்டிகிட்டு திண்டாடிப் போயிடுவாங்க. இன்னும் உன் கருத்துக்காக காத்திருக்கேண்டான்னு நச்சரிச்சு பிடிங்கி எடுத்துடுவோமில்லநாமெல்லாம் யாரு?

இப்படிதாங்க நாளொரு பிச்சையும் பொழுதொரு பின்னூட்டமுமா என் எழுத்துலக வாழ்க்கையும் போக்கிட்டிடு இருக்கேன்.

இந்த க்ர்ருப்ல சேர்வது, சொறிஞ்சவன தொந்தரவு பண்றது, மெயில்ல படைப்பை அனுப்பறது மற்றும் சாட்ல பிடுங்கி எடுக்கறது தவிர வேற மாதிரி பிச்சை ஏதாவது இருந்தா தயவு செய்து தெரிவிக்கவும். அப்படி புதிதாக சிந்தித்து கருத்துரையின் மூலம் அனுப்புபவர்களில் சிறந்த ஒன்றை தேர்ந்தெடுத்து கெளரவ டாக்டர் பட்டத்துக்கு சிபாரிசு செய்யப்படும்.

சரி இவ்வளவு நேரம் பின்னூட்டப் பிச்சை பத்தி பேசியிருக்கேனே, ஏதாவது பின்னூட்டம் உண்டா?

ஹும்….புரியுது….ஐயாஅம்மாஏதாவது பின்னூட்டம் இருந்தா போடுங்கய்யா….உங்க கருத்துரைய போடுங்கம்மா….ஐயா…..அம்மா….

போதுமா?

நிராகரிப்பு: ஒரு விஷயத்த எடுத்துகிட்டு அத பத்தி நீட்டி முடக்கி எழுதற கஷ்டம் இவங்களுக்கு எங்க தெரிய போவுது. தினமும் சிந்திக்கணும். வித்தியாசமா சிந்திக்கணும் என்ன சின்ன விஷயமா? இது. புரியாதவனுங்க இப்படித்தான் புலம்புவாங். கண்டுக்காதிங்க. நாமபாட்டுக்கு எழுதிகிட்டு போயிக்கிட்டே இருக்கணும்.

41 Comments »

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.