Home » General, சிறுகதை, நாட்டு நடப்பு

கல்ஃப் ரிடர்ன் கணபதி

17 March 2009 19 Comments

கதையின் நாயகன் கணபதி சிவில் என்ஜீனியர் பட்டதாரி. ஒன்றரை வருடம் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி விட்டு, பேப்பரில் வந்த வேலைவாய்ப்பிற்கு அப்ளை செய்ததில் அபு தாபியில் ஒரு கட்டுமானத் துறையில் நிறுவனத்தில் வேலை கிடைத்து இன்றோடு 2 வருடம் 5 நாட்கள் ஆகிறது. வருடாந்திர விடுமுறையை எடுத்துக் கொண்டு சென்னை வந்திருக்கிறான்.

முதல்ல கணபதியோட குடும்பத்த பத்தியும் அவங்க குடியிருக்குற வீட்ட பத்தியும் நாம தெரிஞ்சுக்க வேண்டியது ரொம்ப அவசியம். மைலாப்பூர்ல அக்ரஹாரத்துல தான் அவன் வீடு. அப்பா, அம்மா, அண்ணன் ராமசுப்பு (சுப்பினி செல்லப்பெயர்), கல்யாணம் ஆகி அமெரிக்காவுல செட்டில் ஆன அக்கா அனு. அக்கா வீட்டுக்காரர் ஒரு பெரிய சாப்ட்வேர் கம்பெனியில வேலை செய்யறார். முன்ன மிடில் க்ளாஸ் குடும்பம். கணபதி, சுப்பினி கடாட்சத்துல இப்போ அப்பர் மிடில் க்ளாஸ். இருக்குறது வாடகை வீடாயிருந்தாலும் கோவளத்துக்கு பக்கத்துல ஒரு ப்ளாட் இருக்கு. குடியிருக்கும் வீடு அந்த காலத்து கட்டமைப்பு. பழையதாகி போன சுவரின் வண்ணம், கக்கூஸ், பாத்ரூம், லேசாக பாசி பிடித்த வராண்டா. மடியில வீட்டுக்கு (சிவராமன் கல்யாணி தம்பதியினர்) சொந்தக்காரர். கீழே கணபதி ஃபாமிலி.

இந்த வீட்டில் இவர்களைத் தவிர பல்லி, கரப்பான், எலி, எட்டு கால் பூச்சிகளும் வாடகை தராமல் ஆனால் கணபதிடிப்பாக இவர்களுக்கு தொந்தரவு தந்து கொண்டு குடித்தனம் நடத்துகின்றன. கணபதி தான் தலையெடுத்ததிலிருந்து வேறு வீடு பார்க்க சொல்லி வற்புறுத்தி இருக்கிறான்.

அபு தாபியிலிருந்து இந்தியன் ஏர்லைன்ஸ் மூலம் இந்தியா வந்து முடிவில் வீட்டுக்கு வந்து சேர அதிகாலை 2 மணியாகிவிட்ட்து. அம்மா வழக்கம் போல சுப்பினியை குழாய் அடிக்க எழுப்பினாள். சுப்பினியும் வழக்கம் போல புலம்பிக் கொண்டு எழுந்தான். அன்று பார்த்து சனியன் பிடித்த குழாயில் வாஷர் போய்விட்ட்து. சுப்பினிக்கு இரட்டை வேலை. ஒரு வழியாக எல்லாம் முடிய, கோவிலுக்கு சென்ற அப்பாவும் வர, அவர்கள் ஆபிஸ் செல்ல ஆயத்தமானார்கள். அப்போதுதான் கணபதி எழுந்து வந்தான்.

இன்னும் கொஞ்ச நேரம் தூங்கறதுதானே” என்றார்.

அப்பாவிற்கு தோசை வாத்துக் கொண்டேபல் தேய்ச்சுட்டு வாடா கணபதி. காபி கலந்து வெக்கறேன்?” என்றாள் அம்மா. ”ஹும் என்ற ஒற்றைச் சொல்லில் தன் சம்மதத்தை தெரிவித்தான்.

அப்பாவையும் கூட்டிக் கொண்டு, “வர்றேண்டாஎன்று அண்ணனும் கிளம்ப, அதற்கும் ஒற்றை வரி ஓகே சொல்லி அனுப்பிவைத்தான். இருவரும் சென்றவுடன், எதோ நினைத்தவளாக சீதுவிடம்,

என்னடா கணபதி ஏதாவது ப்ராப்ளமா? என்றாள். அவள் சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துவது போல அதற்கும்ஓண்ணுமில்லமாஎன்று மறுபடியும் ஒற்றைச் சொல்லில் முடித்துக் கொண்டான்.

சொல்லுடா, ஏதோ மறைக்கறாப்ல தெரியற்தேடா? வேலையில ஏதாவது பிரச்சனையா? என்று கேட்டதுதான் தாமதம். கணபதி சீறினான்.

என்னமா இது, அதெல்லாம் ஒண்ணுமில்லை. நான் சாதாரணமாத்தான் இருக்கேன். காலையில் எழுந்தவுடனே எவ்ளோ பேசச் சொல்ற என்ன?

சரி விடுடா, ஏன் கோச்சுக்கறே? பாக்கறதுக்கு டல்லா இருக்கியேன்னு கேட்டேன் அவ்ளோதாண்டா. குளிச்சிட்டு வா சாபிடலாம்.

இல்லமா, இப்பதானே காபி சாபிட்டேன். மேகி இருக்கா? இருந்தா போட்டுக்குடு. நான் கொஞ்ச நேரம் கழிச்சு குளிக்கறேன், நீ வேணும்னா கோயிலுக்கு போயிட்டு வந்துடு. சொல்லிவிட்டு அவள் பதிலுக்கு நிற்காமல் தன் காலைக் கடன்களை முடிக்க நகர்ந்து விட்டான். ஒரு மாத லீவில் வந்திருக்கிறான். இன்னும் பேக்கிங் பிரிக்கவில்லை.

சுமார் 12 மணியளவில் குளித்து விட்டு சாப்பிட உட்கார்ந்தான்.

என்னடா சாமி கும்பிடலையா என்றாள் அம்மா. ஹும் ஆச்சு (மனசுக்குள்ளேயே போலிருக்கு) என்றான் கணபதி. இன்னும் அவனுக்காக காத்திருக்கும் அந்த செய்தி அவனை அடையவில்லை.

சாப்பிட்டு மகேஷை பார்த்துட்டு வர்றேன்மா.

சத்த வெயில் தாழ போயேண்டா.

கொஞ்சம் ஸ்பென்சர் வரைக்கும் போயிட்டு தான் போறேன்.

சரி பாத்துப்போயிட்டு வா என்று சொல்லிக் கொண்டே ரசத்தை ஊற்றினாள்.

ஸ்பென்சர் மற்றும் மகேஷை சந்தித்து விட்டு அலுத்துக் கொண்டபடியே உள்ளே வந்தான் கணபதி. சரி மெயில் செக் பண்ணலாம் என்று தன் லேப்டாப்பை தட்டினான். காபி குடும்மாசாப்பிட ஏதாவது இருக்கா.

உருளைக்கிழங்கு போண்டா போட்டு தரட்டுமா என்றாள்.

மெயிலை திறந்த கணபதிக்கு அதிர்ச்சி காத்திருந்ததது. அவன் கம்பெனி சரியாக போகவில்லை என்றும், பலரை நிதி பற்றாக்குறை காரணமாக வேலையிலிருந்து நீக்குவதாக எழுதியிருந்தார்கள். சற்று யோசித்து பாருங்கள் கணபதியின் மனநிலையை. ஆனால் இது இப்போதிருக்கும் பொருளாதார நிலமையில் அவ்வளவு எதிர்பார்க்காதது என்று சொல்ல முடியாது.

அவனின் ஆறுதலுக்கு மூன்று விஷயங்களை தாங்கிக் கொண்டிருந்தது அந்த மெயில். அவை:

1.   இது உங்கள் திறமையை வைத்து எடுக்கப்பட்ட முடிவல்ல.

2.   உங்களுக்கு சேர வேண்டிய செட்டில்மெண்ட் தொகை உங்களுக்கு கூடிய சீக்கிரம் வந்துசேரும்.

3.   தேவைபட்டால் உங்களின் புதிய வேலைக்காக ரெஃபரென்ஸ் நிச்ச்யமாக தருவோம்.

இதெல்லாம் யாருக்கு வேணும், வேலையே போயிடிச்சி.

சற்றென்று ஒரு முடிவுக்கு வந்தவனாக, தன் நண்பன் ஆரிஃப்க்கு ஃபோன் போடலாம் என்று முடிவு செய்தான்.  ச்ச்சே….அவ்வளவு தூரம் போனோமே ஒரு சிம் கார்ட வாங்க மறந்துட்டோமே என்று தன்னை நொந்து கொண்டான். அவன் மொபைல் துபாய் சிம்கார்ட் தாங்கியதால் அது இங்கே வேலை செய்யாது. அதில் உள்ள தகவல்கள் மற்றும் எண்களை பார்க்கமுடியும் என்பது அதன் ஆச்சர்யம். ஆனால் அதில் இப்போது கணபதி பேசமுடியாது என்பது அவன் ரோமிங் எடுத்துக் கொள்ளாததால் வந்திருக்கும் அவஸ்தை.

அவசர அவசரமாக  கிட்டதட்ட ஓடினான். இன்று கடைக்கு சென்று ஒரு சிம் கார்டு வாங்கிவிட வேண்டும் என்று நினைத்திருந்தான். அதற்குள் இந்த செய்தி முந்திக் கொண்டது. இப்போ சிம்கார்ட் வாங்கி அதை ஆக்டிவேட் செய்ய நேரமில்லை. உடனே பேசியாக வேண்டும்.

உடனே ஆரிஃப்க்கு போன் போடலாம் என்று முடிவு செய்தவனாக அம்மாவிடம்நான் கொஞ்சம் வெளில போயிட்டு வர்றேன்மா என்றான்.

என்னடா கணபதிணா இப்பதானே காபி கேட்டே. இந்த குடிச்சுட்டு போடா என்றாள் அம்மா.

நீ வேறேமாசொன்ன புரியாது. இப்ப காபிதான் ரொம்ப முக்கியமா. வந்து குடிக்கறேன் என்று பறந்தான் கணபதி.

இப்போதே. இதோ டயல் செய்துவிட்டான். ஆரிஃப் எடுடா ஃபோன என்று முணுமுணுத்தான். அவன் கஷ்டம் அவனுக்கு.

ஹலோ! ஹலோ! ஆரிஃப்! டேய் ஆரிஃப், என்னடா? ஏதோ மெயில் வந்திருக்கு. ஒண்ணும் புரியல மச்சான். அதான்.

இல்லடா, இங்கயும் நம்ம சந்தோஷ், ஹசன், பிந்த்ரா எல்லாரையும் கூப்பிட்டு சொல்லி இருக்காங்கடா. ஒரு மாசம் டைம் கொடுத்திருக்காங்க. எங்கிட்ட இத பத்தி ஒண்ணும் பேசல இதுவரைக்கும் என்று விஷயத்தை சொன்னாலும், தான் அந்த லிஸ்டில் இல்லை என்ற தற்காலிக சந்தோஷத்துடன் ஒலித்தான் ஆரிஃப்.

என்னடா இப்படி பண்ணிட்டாங்க. இப்பத்தான் லோன்ல ஒரு இடம் வாங்கிப்போட்டிருக்கேன்.

தெரியல கணி. நீ வேணும்னா நம்ம பாஸ்கிட்ட ஒரு தடவை பேசி பாரு. என்ன சொல்றாருன்னு பாரு மச்சான் என்று இப்போது அக்கறையாக ஒலித்தான்.

ஆமாம்டா. நான் கூட அதான் யோசிச்சேன். அட்லீஸ்ட் என் சாமன்களை எடுத்து வர அங்கு நான் வரணுமே. என்ன சொல்றாருன்னு பார்ப்போம். சரிடா நான் வெக்கறேன். சுரேஷுக்கு ஃபோன் போடு பேசி பார்க்கறேன்.

,கே, அப்டேட் பண்ணு மாமா என்று ஃபோனை வைத்தான் ஆரிஃப்.

கணபதிக்கு இருப்பு கொள்ளவில்லை. அவன் பாஸிடம் ஒரு நாளைக்கு மூன்று முறை பேசியிருக்கிறான். இருந்தும் எண் ஞாபகத்தில் வர மறுக்கிறது. அவன் மனம் இருக்கும் நிலை அப்படி.

எண்ணை எஸ் யுஎன்று டைப் செய்து தேடினான். வேண்டிய சுரேஷ் வராமல் கண்ட சுரேஷ் வந்தனர். இப்போது அவர்கள் தேவையில்லை அவனுக்கு. அவனுக்கு தேவையான சுரேஷ், அவன் பாஸ் சுரேஷ் வேண்டும். அவனின் வேலை நிலையை பற்றி தெரிந்து கொள்ளவேண்டும். மொபைலும் கூட அவனை அலக்கழித்தது. யோசித்தான், என்னவாக போட்டு வைத்திருக்கிறோம். மொபைல் மீது அவனுக்கு உடைத்தெரியும் அளவிற்கு வெறுப்பு வந்தது. வந்துவிட்டது, ஆமாம், பாஸ் என்று போட்டு வைத்திருந்தோமே. அப்பாடா……….

ஒரு வழியாக நம்பர் கிடைத்த நிம்மதியில் பாஸ் சுரேஷை மொபைலில் கூப்பிட்டான். ரிங் போய்க்கொண்டே இருந்தது. எடுக்கவில்லை. வேண்டுமென்றே கட் செய்கிறாரா? அவன் பதற்றமும் குழப்பமும் அதிகரித்தது. மறுபடியும் போடலாம். அதே ரிங், அதே கட். இந்த முறை தன்னையும் மீறி சுரேஷை திட்ட ஆரம்பித்தான். விடமாட்டேன், நீ எடுக்கும் வரை விடமாட்டேன். இன்னொரு முறை முயற்சி செய்யலாம். அதே ரிங்இந்த முறை எடுத்தார்.

அவர் வடக்கர். ரொம்ப ஸ்ட்ரெயிட் ஃபார்வார்டு. கணபதியின் மேல் தனி அக்கறை உண்டு. அவன் வேலை அப்படி.

ஹலோ! சுரேஷ் ஹியர்.

சார்! நான் கணபதி பேசறேன் சார்! பிஸியா? உங்கக் கூட கொஞ்சம் பேசணும் சார்.

எஸ் கணபதி லிட்டில் பிட், டெல் மீ. ஹவ் ஆர் யூ? என்றார் சுரேஷ்.

ஐம் நாட் ஃபைன் சார், இன்னிக்கு மெயில் ஒரு வந்திருக்கு, என்ன லே ஆஃப் பண்ணிட்டதா. ஒண்ணும் புரியல. ஆரிஃப் கிட்ட பேசினேன். என்ன சார் இப்படி பண்ணிட்டீங்க?

இல்ல கணபதி, எனக்கும் உன்னைப் போல இன்னிக்கு காலைலதான் தெரிந்தது. ஈவன் ஐஆம் சர்ப்ரைஸ்டு டு ஹியர்.  சொல்லிக்கிட்டு இருந்தாங்க. இப்படி திடீர்ன்னு செய்வாங்கன்னு நெனச்சுக் கூட பார்க்கல. இங்க நிலம சரியில்ல. நானே ரொம்ப நாள் கணபதிடின்யூ பண்ண மாட்டேன்னு தோணுது. ஒண்ணும் பேச முடியல. சம்பளம் குறைச்சலா வாங்கற சில பேர்தான் ரீடெயின் பண்ணியிருக்காங்கன்னு நெனைக்கறேன் கணபதி.

சார், அது எப்படி சார்? என் வீசா இருக்கு, நான் என்னோட சாமான்கள எல்லாம் விட்டுவிட்டு வந்திருக்கேன்.

நான் பேசறேன் கணபதி. அதுக்கு என்ன பண்ணலாம்னு யோசிக்கலாம். யூ டோண்ட் வறி. உன் ரெச்யூம் அனுப்பு. நான் எனக்கு தெரிஞ்ச சில பேருக்கு ஃபார்வார்டு பண்றேன். பார்க்கலாம் கணபதி. ஓகே அப்புறம் பேசறேன் கணபதி, எம்டி கூப்பிடறார். டேக் கேர்.

மறுப்பு எதுவும் சொல்ல முடியாமல் ( இந்தநானே கணபதிடின்யூ பண்ண மாட்டேன்வார்த்தையில் ஏமாந்ததில் நியாயம் இருக்கிறது) சரி சார். ஏதாவது பண்ணுங்க சார். ப்ளீஸ் என்று ஏமாற்றத்துடன் ஃபோன் கட் செய்தான்.

அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்ற குழப்பம் அவனை எதுவும் சிந்திக்க விடவில்லை. இதை எப்படி அப்பாவிடம், அம்மாவிடம் அண்ணனிடம் சொல்ல போறேன் என்று எண்ணிக்கொண்டே வந்தான்.

வாடா சீது. எங்க போயிட்ட அவசரமா. காபி எடுத்துண்டு வரட்டுமா? இரு போண்டாவும் கொண்டுவரேன் என்றாள் அம்மா.

என்ன லேஆஃப் பண்ணிட்டாங்கமா. வேற வேல பாத்துக்க சொல்லி மெயில் வந்திருக்கு.

என்னடா உளறிக்கொட்டற. நீ சொல்றது எதுவும் புரிய மாட்டேங்குது. அம்மா கணபதியை உலுக்கி விட்டாள். டேய்! கணபதி, டேய்! உன்னத்தாண்டா..என்று மேலும் உலுப்ப….திமிரிக் கொண்டு எழுந்தான் கணபதி.

ச்சே கனவா? தூக்கதுல உளறிருக்கேன் போல இருக்கு என்று தெளிந்து, ”கனவுமா என்றான்.

என்னடா கனா? ஏதாவது கெட்ட கனாவா?” கேட்டாள். பதில் இல்லை. அவள் காத்திருக்கவும் இல்லை.

சரி சரி

அப்பாவிற்கு தோசை வாத்துக் கொண்டேபல் தேய்ச்சுட்டு வாடா கணபதி. காபி கலந்து வெக்கறேன்?” என்றாள் அம்மா. ”ஹும்என்ற ஒற்றைச் சொல்லில் தன் சம்மதத்தை தெரிவித்தான்.

அப்பாவையும் கூட்டிக் கொண்டு, “வர்றேண்டாஎன்று அண்ணனும் கிளம்ப, அதற்கும் ஒற்றை வரிஓகேசொல்லி அனுப்பிவைத்தான்.

ஓண்ணுமில்லை என்ற ஒற்றை வரியுடன் எழுந்தான் கணபதி. பல் கூட தேய்க்கவில்லை. முதலில் மெயில் செக் பண்ணனும். இரும்மா வர்றேன் என்று லேப்டாப்பை நோக்கி விரைந்தான்.

நல்ல வேளை ஒண்ணும் இல்ல. ஜன்க் மெயில் டெலீட் செய்துவிட்டு, பெருமூச்சும் ஒண்ணு விட்டு, லேப்பை மூடினான்.

19 Comments »

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.