Home » General, சிந்தனைகள், நகைச்சுவை, நாட்டு நடப்பு, பொது

வேலண்டைன்ஸ் டே

12 February 2009 15 Comments

vdayfinalவந்துவிட்டது காதலர் தினம். எந்த வலைப்பதிவை பார்த்தாலும் இதைப் பற்றி ஒரு பதிவேனும் (கட்டாயப் பாடத்தை போல) நிச்சயமாக இருக்கும். கவிதையாகவோ, கட்டுரையாகவோ எதேனும் ஒரு வடிவத்தில். பதிவர் வட்டாரத்தில் இதை பற்றி யார்யார் பதிகை இடவில்லையோ அவர்களை சங்கத்திலிருந்து நீக்குவதாக அணிலார் கொய்யாவை கொதறிக்கொண்டே சொல்லிவிட்டுப் போனதால் “பாட்டாவே படிச்சிட்டியா. அப்ப நானும்…ம்…ம்”னு குணா கமல் ஸ்டைல்ல ஒண்ணு போட்டு வெச்சுருவோம்னு (எதுக்கு வம்புன்னு) முடிவு செஞ்சுட்டேன்.

எனக்கென்னவோ இந்த தினத்தை கொண்டாடுறதுல உடன்பாடு இல்ல. என் மனைவியை மனைவியாவதற்கு முன்னால ஒரே ஒரு வருஷம் கிஃப்ட் வாங்கிக் கொடுத்தேன். ஆனா அப்பவே அவகிட்ட எனக்கு இதுல விருப்பம் இல்லன்னு சொல்லிட்டேன். “ஒரு நாளென்ன ஒரு நாள் நாம் தினமும் ஒருத்தருக்கு ஒருத்தர் ஆதாரமா இருப்போம், அன்ப பரிமாரிக்குவோம்” அப்படி இப்படின்னு சில பல டையலாக் எல்லாம் விட்டு சமாளிச்சாச்சு.

இப்ப இருக்குற பொருளாதர வீழ்ச்சி, அதனால் ஏற்பட்ட வேலையாள் குறைப்பு, ரியம்பர்ஸ்மெண்ட் சுட், அல்லவன்ஸ் கட் அது இதுன்னு பிரச்சனைய போர்வையா போர்த்திக்கிட்டு தூங்கற நேரத்துல நாம இத அவசியமா கொண்டாடணுமான்னு ஒரு கேள்வி வரலாம். அதே சமயத்துல மன திருப்திக்கு கொண்டாடணும்னு நினைச்சா ஒவரா சீன் போடாம கொஞ்சம் அமுக்கி வாசிக்கறது நல்லது.

எனக்கு தெரிந்த சில யோசனைகளை இங்க அள்ளி வீசறேன். தேவையானதை எடுத்துகிட்டு தேவையற்றதை, உங்க நண்பருக்கு யாருக்கும் தேவைப்பட்டால் அவர்களுக்கு இதை ஃபார்வார்டு செய்து புண்ணியத்தை சேர்த்துக் கொள்ளலாம். நொந்து நூலா, அந்து அவுலா போயிருக்குற இந்த பொருளாதார நேரத்துல இதை சமாளிக்க சாக்குபோக்குகள் தேவை. அதற்கு சில யோசனைகள்:

முக்கியக் குறிப்பு: எல்லா யோசனைகளிலும் ரோஜாப்பூவை சேர்த்துக் கொள்ள வேண்டும். ஏன்னா வேலண்டைன்ஸ் டே இல்லாமல் ரோஜா இருக்க்லாம் ஆனா ரோஜா இல்லாம (நடிகர் திலகம் ஸ்டைல்ல படிக்கவும்).

கணவன் மனைவியிடம்:

1.   அன்பு பரிமாற்று தினத்தின் ரெண்டு நாளைக்கு முன்னாலயே ஒரு குண்ட தூக்கிப் போடணும். ஆபிஸ்ல கொஞ்சம் பிரச்சனை. ஏதோ லே ஆப்பு (ஆஃபா இல்ல ஆப்பா. ரெண்டும் ஒண்ணுதான்) அப்படி இப்படின்னு பேச்சு அடிபடுது. ஒண்ணும் புரியல அப்படீன்னு ரொம்ப காஷுவலா எடுத்துவிடணும். இதுல முக்கியமா முந்திரி கொட்டத்தனமா “ஆன அதுக்காக நம்ம வேலண்டைன்ஸ் டேக்கு ப்ளான் பண்ணாம இருக்க வேணாம், அது பாட்டுக்கு அது இது பாட்டுக்கு இதுன்னு சொல்லவேக் கூடாது. இன்னொன்னு, மொபைல் கால் எதுவும் மனைவி எடுக்காம பார்த்துக்கணும்.

2.   13ஆம் தேதி ஆபிஸ் முடிஞ்சு வீட்டுக்கு வந்து ஷூ கழட்டிக் கொண்டே உங்க மானேஜரை திட்ட ஆரம்பிக்க வேண்டும். சில முணுமுணுப்புக்கள் நல்லது. நிச்சயமா மனைவி என்ன ஆச்சுன்னு கேட்பாங்க. இதுக்காகத் தானே முணுமுணுப்பேன்னு மனசுல நினைச்சுக்கிட்டு “பின்ன என்னமா சனிக்கிழமையும் வேலையிருக்குன்னா மனுஷனுக்கு ரெஸ்ட் வேணாமா, அதுவுமில்லாம வேலண்டைஸ் டே வேறே. நம்ம பர்சனல் லைஃப பார்க்க வேணாமா”? அது இதுன்னு சகட்டு மேனிக்கு அப்பாவி மானேஜர வதக்கி எடுங்க.

3.   இந்த தடவை வேலண்டைன்ஸ் டேக்கு என்னோட கிஃப்ட் என் சமையல் டியர். இன்னிக்கு காலை காபியிலிருந்து நைட் டின்னர் வரை நான் தன் சமைப்பேன் அப்படீன்னு சொல்லிட்டா ரொம்ப ஈஸியா தப்பிச்சுக்கலாம். நீங்க உணவு ஆக்க நேரம் ஆக்க ஆக்க, அவங்களும் ஹெல்ப் பண்றேன்னு வந்துருவாங்க. நல்ல டைம் பாஸா இருக்கும் ரெண்டு பேருக்கும்.

4.   சும்மா மோதிரம், ப்ரேஸ்லட்டுன்னு வாங்காம, ஒரு ப்ளாஸ்டிக் தட்டு வாங்கி அதுல உங்க மனைவி பேர எழுதி பரிசா கொடுங்க. கேட்டா தினம் சாப்பிடும் போது உன்ன பார்த்துக்கிட்டே சாப்பிடற ஃபீலிங்கே தனிதான்னு இன்னொரு பிட்டு.

5.   அட இதுவும் நடக்கலைன்னு வைங்க…மெயின் மேட்டர டச் பண்ணணும். “நாம ஏன் இந்த தடவை உங்க வீட்டுக்கு போயி அங்க கொண்டாடக் கூடாது?” இட் வில் பி டிஃபரெண்ட் யார். *அப்படி போடு அரிவாள*

இதத் தவிர ஸ்ரீலங்காவில் போர், கலஞர் உடல்நலக் குறைவு போன்ற எண்ணற்ற காரணங்கள் கைவசம் இருக்கு.

மனைவி கணவனிடம்:

1.   14ஆம் தேதி வரை கணவனை விட்டுப் பிடிக்கணும். அன்றைக்கு காலையில எழுந்து ஒரு முத்தம் மற்றும் “ஹாப்பி வேலண்டைஸ் டே டியர்”. ஒரு பத்து நிமுஷம் கழிச்சு, என்னங்க லேசா தலைவலியா இருக்கு. நாம இன்னிக்கு வெளியே போய்த்தான் ஆகணுமா? அப்படின்னு லைட்டா ஆரம்பிங்க. நாளோட ஆரம்ப மேட்டர் ஒண்ணு போதாதா கவுக்க.

2.   என்னவோ தெரியலீங்க இப்பெல்லாம் கூட்டமே ஆகமாட்டேங்குது எனக்கு. பீச்சுக்கு போகலாமா? நிம்மதியா உட்கார்ந்துட்டு வந்துருலாம். நல்ல காத்தும் சுவாசிச்சா மாதிரி ஆச்சு. என்ன சொல்றீங்க?ன்னு ஒரு மாற்றுக் கொண்டாட்டத்தை சொல்லலாம் (இதுக்கு மொத்தம் 50-100 ரூபாதான் செலவாகும்கிறது இதனோட சிறபம்சம்).

3.   ஹனி!(இங்கயே நம்மாளு கவுந்தாச்சு) நாம இன்னிக்கி ஃபுல்லா ரொமான்ஸ் மூவிஸ் பார்க்கலாமே டிவிடில? நாம சேர்ந்து ஒண்ணா வீட்ல படம் பார்த்தே ரொம்ப நாளாச்சு. எதுக்கு தேவையில்லாத அலைச்சல். அதோட இந்த செக்யூரிட்டி, பார்கிங் ப்ராப்ளம் எல்லாத்தையும் தவிர்க்கலாம். என்ன சொல்றீங்க? பதிலுக்கு உங்க கணவர் ”ஏபெக்ஸ் அல்டிமாவில் வரும் தாத்தாவைப்” போல “ஐ தின்க் யு ஆர் ரைட்?ன்னு சொல்லுவார். அதுக்காக நீங்க திரும்ப அந்த பாட்டியப் போல “ஐஎம் ஆல்வேஸ் ரைட்டுன்னு சொல்லணும்னு அவசியம் இல்லை.

4.   கோயிலுக்கு போகலாமா செல்லம்(எத்தன தடவை தான் கவுபீங்க எங்க அண்ணண)? அன்னைய தேதில நிச்சயமா செம கூட்டம் பொங்கி வழியும். அப்படி ஒரு கோயில் உங்களுக்கு தெரியலைன்னா இருக்கவே இருக்கு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில். கூட்டம் காரண்டி. இத கேட்ட உடனே அண்ணன் 3ஆவது பாயிண்ட்டுக்கு தலையசைப்பது உறுதி.

5.   அண்ணன் சொன்ன நாலாவது பாயிண்ட்டு மாதிரி (காபி வித் அனு மாதிரியும்) ஒரு காபி கப்புல உங்க ரெண்டு பேர் போட்டவையும் பதிஞ்சு பரிசா கொடுக்கலாம்.

இரு தரப்பினருக்கும் காமனா செம மேட்டர் ஒண்ணு இருக்கு. அதாங்க வி.டே ஸ்பெஷல் தொல்லைக்காட்சி நிகழ்ச்சிகள் (இன்னும் புத்துக்கு பால் தெளிக்க்கும் நாள் சிறப்பு நிகழ்ச்சிதான் வரல. மத்த எல்லா நாளும் தொல்லைக்காட்சிகள் கணக்குல வந்துருச்சு). கண்றாவி படமா இருந்தாலும், ஹே! அது ரிலீஸ் ஆன போதே தியேட்டர்ல பார்க்கணும்னு இருந்தேண்டா செல்லம். மிஸ் ஆயிருச்சு. இப்ப கண்டிப்பா பார்த்துரணும் அப்படின்னு ஒருத்தருக்கு ஒருத்த பிட்ட மாத்தி மாத்தி போட்டுக்லாம்.

கணவன் மனைவியைப் போல நம்ம காதலர்கள் விஷயம் தனித்து பார்க்க யோசிக்கணும்னு அவசியம் இல்ல. ஏன்னா நம்ம கலாச்சாரப் படி பார்த்தாலும் வேறு எந்த சாரத்தைப் பத்தி பார்த்தாலும், செலவு செய்யறது காதலன் தான். மச்சி என்ன கிஃப்ட்டுடா வாங்கியிருக்க உன் ஆளுக்குன்னு நம்ம நண்பர்கள் கேட்கும் போது ஒரு தனி பெருமை தான் (எனக்கு தில்லு முல்லு தேங்காயின் இண்டெர்வியு தான் நினைவுக்கு வருது, “சட்டையில என்ன பொம்ம, அதுல உனக்கென்ன பெரும”). சரி இப்ப நம்ம பசங்க எப்படி எஸ்கேப்(விவேக் ஸ்டைல்ல) ஆகாலாம்கிறதுக்கு சில ரோசனை (ரோதனைகள்ன்னு வேணும்னே மாத்திப் படிக்கக் கூடாது….அவ்வ்வ்வ்வ்வ்….):

1.   காதலன் ஓரிரு நாளுக்கு முன்பே காதலியிடம் தான் ஆபிஸ் வேலையாக வெளியூர் செல்லயிருப்பதாகவும் வருவதற்கு குறைந்தபட்சம் ஒரு வாரம் ஆகும் என்று சொல்லிவிட்டு அலைபேசியை அனைத்து வைப்பது முழு நிவாரணி. “ஐ வில் மிஸ் யு டியர்” டயலாக் காதலியை சாந்தப்படுத்த உதவும்.

2.   இந்த வேலண்டைன்ஸ் டேக்கு நீங்கள் சிகரெட் பிடிப்பதை உங்கள் காதலிக்காக விடப்போவதாக வாக்குறுதி அளிக்கலாம். நல்ல விளைவு: உடல் பிழைக்கும், காசு மிச்சம், நல்ல பெயர் கிடைக்கும் காதலியிடம். பின் விளைவு: விட முடியாமல் போனால், திருட்டு தம்முதான் ஒரே வழி. இது போன்று நம் பழக்க வழக்கங்களுக்கு ஏற்றார் போலே வாக்குறுதிகளை பரிசாக வாரி இரைக்கலாம்.

3.   பொதுவாக உங்களுக்கு இந்த டேஸ் மேலேயெல்லாம் நம்பிக்கை இல்லையென்று கூறி எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்ளும்படி குணா ஸ்டைலில் (மானே! தேனே!) ஹனி, டியர், செல்லம் எல்லாம் சேர்த்து நாசூக்காக சொல்லிவிடுவது இந்த ஆண்டுக்கு மட்டுமல்ல வரபோககிற எல்லா ஆண்டுகளுக்கும் கைகொடுக்கும்.

4.   எப்படியிருந்தாலும் ஒருத்தருக்கு ஒருத்தர் கிஃப்ட் பரிமாற்றம் செஞ்சுப்போம். அதுக்கு பதிலா ரெண்டு பேருமே எதுவுமே கொடுத்துக்க வேணாம்னு ஒரு வர்த்தகரீதியான ஒப்பந்தம் செஞ்சுக்கலாம்.

5.   உன்னை எனக்கும் மேலே நேசிக்கறேன், உனக்கு இந்த நிலையற்ற பொருள்களை கொடுத்து நம் உறவுமுறையை ஒரு பொருள்ள அடக்க விரும்பலைன்னு ஒரு செண்டிமெண்ட் ஸ்டேட்மெண்ட் விடலாம்.

6.   ஸ்ரீராம் சேனா ஒண்ணு போதாதா? இந்த ஆயுதத்தை இருபாலாரும் உபயோகப்படுத்தாலாம் என்பது இதன் சிர்ர்ர்ர்ர்றப்பம்சம்.

7.   உங்க நிவாரணியா இப்போ பலபேர் படம் எடுத்துட்டு இருக்காங்க. உதாரணதிற்கு சில: நாயகன் (லேட்டஸ்ட்), எல்லாம் அவன் செயல், சூர்யா, வில்லு, படிக்காதவன். இத உபயோகப்படுதிக்கிட்ட, (டைம் பாஸ் காதலர்கள்) Once for all வெலண்டைன்ஸ் டே பிரச்சனையை வாழ்க்கையிலிருந்து நீக்கிடலாம்.

8.   ”ஆச்சுவலா டியர் நாம அன்னை தெரசா பிறந்த தேதியில தான் கொண்டாடணுமே.” அப்படீன்னு நீங்க ஆரமிபிச்சு முடிக்கறதுக்குள்ளே “என் லவர் லூசாயிட்டான்”ன்னு மனசுல கத்திகிட்டே ஓடியே போயிடுவாங்க. இன்னொரு ஆப்ஷன் ஆண்டாள் பிறந்த தேதி.

உண்மையாவே மேலே குறிப்பிட்டுள்ள ஏதேனும் ஒரு தினத்தை கொண்டாடலாம். கலைஞர் கிட்ட மனு கொடுத்த வர்க் அவுட் ஆகும். ஆனா அவங்க ரெண்டு பேருமே தமிழர்கள் தான்னு நிருப்பிக்கணும்.

இந்த யோசனைகள் எல்லாமே இரு தரப்பினருக்கு தேவையில்லை அல்லது சேராது. அவை:

1.   சத்யம் ஊழியர்கள்

2.   பெங்களூரு வாசிகள்

இந்தப் பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இங்கே ‘ஓ’ட்டுப் போடவும்.

பின்னூட்டம் இடறது எந்த விதத்துல உபயோகம்னா, எனக்கு யார் யார் வந்தீங்கண்ணு தெரியும், உங்க பதிவுக்கு நான் வந்து உங்க சிறந்த பதிப்ப படிக்க எனக்கும் ஒரு வாய்ப்பு கிடைக்கும்.

15 Comments »

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.