Home » இந்திய சினிமா, சிந்தனைகள், நகைச்சுவை, பொது

வேலண்டைன்ஸ் டே சினிமாக்கள்

16 February 2009 10 Comments

வேலண்டைனெஸ் டே பழக்கம் வருஷா வருஷம் அதிகமாகி வர்றதால நம்ம கோலிவுட்டும் இதை சரியா பயன்படுத்திக்க போறதா ஒரு தகவல் கிடைச்சுது. வழக்கம் போல நம்ம அணிலார் தான் நியூஸ் கொண்டு வந்தார்.

வேலண்டைன்ஸ் டே காரணமா ரோஜாப்பு ஏற்றுமதி அதிகரித்ததை கண்ட நம் திரைத்துறையினர் இந்த நல்லதொரு சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, வேலண்டைன்ஸ் டே அடிப்படையில பல கழுத்தறுப்புகள் (ஆமாங்க, படங்கள் தான்) தயாரிச்சு வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப் போறதா எடுத்த முடிவுதான் இப்ப கோடம்பாக்கம் முழுவதையும் நாரடிச்சுக்கிட்டு இருக்கு. அவசர அவசரமா நடிகர்களும் பட டைட்டில கூட புக் பண்ணிட்டாங்களாம். ஒரு சில படங்களின் பெயர்கள் உங்களுக்காக சொல்றேன் இத வெளில சொல்லக்கூடாதுன்னு சத்தியம் வாங்கி என் கையை அணிலார் எச்ச கொய்யாவால் நிரப்பிட்டு போயிட்டார். நீங்களும் வெளில சொல்லாதீங்க ப்ளீஸ்:

விஜய், நயன்தாரா நடிக்க பிரபுதேவா தம்பி நாத்தேந்த்ர பிரசாத் இயக்கத்தில் “வில்லு-டைன்ஸ்-டே”. ஹீரோ தன் வேலைகள்ள மிக முக்கியமானதா கருதற காதல் ஜோடிய சேர்த்து வைக்கிறது, சிரிப்பே வராத காமெடி போடறதுன்னு அவர் அவர் வழியில போயிட்டிருக்கார். அப்படி சாதாரண அறுவையா போகுற ட்ராக்குல, அம்மாவோட ஃப்ளாஷ் பேக் வருது. விஜய் (கவனிக்க) இன்னும் சின்னப் பையனா இருக்கும்போது அவர் அப்பா அடிச்ச பந்து வில்லன் வீட்டுக் கக்கூஸ்ல போய் விழுந்திடுது. அதை எடுக்க விடாத வில்லன், அவரை ஆடத்தெரியாதவன்னு மிகப்பெரிய வார்த்தைய சொல்லி அவரோட தெரு கிரிகெட் சகாப்தத்த முடிக்கிறார். இத பொறுக்க முடியாத விஜய் சீனியர், இறந்து விடுகிறார். வில்லனை எப்படி கடித்துக் கொதறுகிறார், அப்பா விட்டுவிட்டுப் போன தெரு கிரிகெட்டை எப்படி திரும்ப ஆரம்பிக்கிறார் என்பது தான் மீதிக்கதை. இதுல வழக்கம் போல 9தாரா ஒண்ணும் கழட்டப் போறதில்லை. ட்ரெஸ்ஸும் கூட வீட்ல கழட்டி வெச்சுட்டுதான் வர்றார்.

தனுஷ் தன் பங்குக்கு வெட்டி-டைன்ஸ்-டே வை புக் செய்திருக்கிரார். மனிதர் இந்த படத்துலேயும் நீங்க வேலைக்கு போகவேணாம்ன்னு சொன்னதில செம குஷியாயிட்டார். ஒரு சேஞ்ஜுக்கு இந்த படத்தில கார்ல ஊர் சுத்தறார். ஒரு பெண்ணை காதலிக்கிறார். டூயட் பாடுறார். தன் தங்கையின் கணவரை கிண்டல் செய்த காலேஜ் பெண்களிடம் சண்டையிட்டு மண்டை உடைத்துக் கொள்கிறார்ன்னு படம் செம விறுவிறுப்பா வித்தியாசமா போகுது.

சிம்புவும் விடல. அவரு “கடலையிட்டவன்”னு ஒரு செம கிக்கான கதையையும் கூட ரெடி பண்ணிட்டாராம். 5 ஹீரோயின், 7 சுப்பர் ஹிட் ரீமிக்ஸ் பாடல்கள்ன்னு யுவனின் இசையில் அசத்த ரெடியாயிட்டார். கதை படி, தன் அண்ணனை ஒரு பெண் ஏமாற்ற, அவர் தற்கொலை செய்துகொள்கிறார். ஆத்திரம் அடைந்த தம்பி சொம்பு….ச்.ச்ச்.ச்சே..சொரி..சிம்பு இதுபோல திரியும் பெண்களை முதலில் பேசாமல் கவர்ந்து, பின்பு பேசியே சாவடிக்கிறார்.

நம்ம சத்யராஜ் தன் மகனோட சேர்ந்து (வேறே யாரும் அவர் மகனை சேர்த்துக்க மாட்டேங்கிறாங்க) “லொள்ளு-டைன்ஸ்-டே”வை புக் பண்ணியிருக்கார். இந்த படம் வெளிவந்த பிறகு இன்னொரு பெரிய ரவுண்ட் வருவது உறுதி என்கிறார். (எந்த கிரவுண்டுன்னு சொல்லவே இல்லீங்களே கடைசிவரைக்கும்.ஆவ்வ்வ்வ்வ்…..)

முதல் படத்திலேயே தன் இயல்பான நடிப்பால ரசிகர்கள ஈவு இரக்கமே இல்லாம கொலை செஞ்ச ரித்தீஷ் சைலண்டா “காதல் பரிசு” பேரை திருப்பி வாங்கியிருக்கார் (கமல் பட டைட்டில்னாலே நம்ம ஆளுக்கு ஒரு தனி குஷிதான்) . பட பூஜைக்கு ஸ்டாலினை கூப்பிட்டு அவரும் தனது அலுவல்களில் மும்முரமாக இருந்தாலும், ஒத்துக் கொண்டிருப்பதாக கேள்வி. மீதி ஜனத்தொகையை தீர்த்து கட்டும் தலையாய கடமை அவர் தலையில் விழுந்திருக்கிறது (இதுக்கு அவர் தலையில் ஒரு பாறாங்கல் விழுந்திருக்கலாம் என்று யாரோ முணுமுணுப்பது கேட்கிறது).

காதல் பரிசு கைமாறிப் போன சோகத்துல இருந்தாலும், நம்ம கலைஞானி தேராவதாரம் என்கிற டைட்டில வாங்கியிருக்கார். இந்த படத்துல 13 அவதாரங்கள். 10 அவதாரம் தசாவதாரத்தில பண்ணதுதான். 11ஆவது அவதாரமா வேலண்டைன்ஸ் தாத்தாவா வர்றார். அந்த கதாபாத்திரம் படத்தின் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தும்ன்னு விஷயம் லைட்டா அவுட்டாகிருக்கு. இயக்குனர் ரவிகுமார் வேடத்தையும் கமலே போட்டுக் கொண்டு படத்தை இயக்குகிறார். ரவிகுமார் பாணியில படத்தின் கடைசில ஒரு பாட்டுக்கு வந்து டான்ஸும் உண்டு.  இது 12ஆவது அவதாரம். 13ஆவது அவதாரம் கமல் ஒரு ரசிகனா அந்த படத்தை தேயும் வரை பார்ப்பதுன்னு வித்தியாசத்துக்கு மேலே வித்தியாசம். ”படம் ஓடாதுன்னு யார் சொன்னா, ஓடினா நல்லாத்தான் இருக்கும்”. இது கமல் க்ளைமாக்ஸில் பேசும் ஒரு வசனம்.

ரஜினியும் இளமைப்பட்டாளத்தோடு போட்டிக்கு ரெடியாகிறார். வாசுதான் இயக்கம். கதை இன்னும் முடிவாகவில்லை. மற்ற மொழி படங்களை பார்துக்கொண்டிருக்கிறாராம். இதவரை பார்த்தவற்றில், திருடும்படி இருந்தது “பிரேம பெந்தம்”ங்கிற படம்தானாம். நல்ல நிலமையில இருக்குற ஒண்ணு ரெண்டு தயாரிப்பாளர்களையும் மொட்டை அடிப்பதாக ரஜினியிடம் வாக்குறுதியளித்திருக்கிறார். இதுல தலைவருக்கு இரண்டு வேடங்கள். ஒன்று மனித இயந்திரம், இன்னொன்று கிராபிக்ஸ் ரஜினி. அதுதான் வேறே படத்துல வருதேன்னு கேட்டதுக்கு, இது ஒரு ட்ரையல் மாதிரின்னு சொல்லியிருக்கார்.

விஷால் தன் சொந்தத் தயாரிப்பில் “வால்-அண்ட்-டைன்ஸ்-டாய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்” என்ற டைட்டில் புக் பண்ணிட்டார். முருகதாஸுகாக வெயிட் பண்றார். ஹீரோயினா? என்ன கேள்வி கேட்கறீங்க…நம்ம 9தாரா தான். படம் ஒரு கம்ப்ளீட் ஆக்‌ஷன் ரொமாண்டிக், காமெடி த்ரில்லராம். ”என்ன நென்சுட்டு இருக்கீங்க?”, “ஏய்..ஏய்..” போன்ற நெடிய வசனங்களுக்கு பஞ்சமில்லை என்கிறது படக்குழு.

பரத் ஹரி காம்பினேஷன்ல உருவாகிக் கொண்டிருக்கிறது வேல்-அண்ட்-டைன்ஸ்-டே. படப்பிடிப்பு முழுக்க முழுக்க வேலூரிலேயே எடுக்க ப்ளான் செய்திருக்கிரார்கள். ”நான் ஆஃப் ஆகவரல ஆப்பு வைக்க வந்திருக்கேன்” போன்ற ஆனாவுக்கு ஆனா, பானாவுக்கு பானா டயலாக்ஸ் காரண்டி.

ஆனா இதே பேருக்கு பேரரசும் போட்டியிடுவதாக ஒரு வதந்தி. அவர் அந்த படத்த பழனியில எடுக்கறதா இருக்காராம். விஜய் கிட்ட டேட்ஸ் கேட்ட சந்திரசேகர் அரைகிலோ எங்க மளிகைக் கடையில வாங்கிக்கோன்னு சொன்னதுல மனுஷர் உச்ச டென்ஷன்ல இருக்கார். படத்துல ஒரு டயலாக் “உனக்கு உங்க வீட்டுக்குத்தான் அல்வா கொடுக்கத் தெரியும், ஆனா எனக்கு உனக்கு, அவனுக்கு, தயாரிப்பாளருக்கு, தியேட்டர் அதிபர்களுக்கு, படம் பார்க்கவரவங்களுக்கு, ஹீரோவுக்கு, ஹீரோயினுக்குன்னு எல்லாருக்கும் அல்வா கொடுக்கத் தெரியும்”. இது சாம்பிள் தானாம். படம் முழுக்க அவரால எவ்வளவு முடியுமோ அவ்வளவு எழுதியிருக்காராம். இது தவிர பஞ்ச் டயலாக்குகளுக்கும் பஞ்சமில்லையாம். சாம்பிள்: நீயா தீண்டினா கஷ்டம், நானா தீண்டனா குஷ்டம், இப்ப சொல்லு கஷ்டமா குஷ்டமா!!!

காதல் மன்னன் அஜித் அவர் ரேஞ்சுக்கு பில்லா-டைன்ஸ்-ஏய் டைட்டில் பிடிச்சிருக்கார். “நான் பாட்டுக்கு போறேன், நீ பாட்டுக்கு போ, உன்னை விட பெரியவன் நான்”ன்ற ரேஞ்சுல ஒபனிங் சாங்கோட ஆரம்பிக்குது படம். முதல் பாதியில பச்சை கலர் ட்ரெஸ்ல வந்து பச்சை பச்சையா பேசுவாராம். அடுத்த பாதியில காதல் வர்க் அவுட்டாகிறதுனால முழுக்க முழுக்க மஞ்ச கலர் ட்ரெஸ்ல வந்து எதிரிங்க நெஞ்சுல இருக்கிற மஞ்சா சோத்தையெல்லாம் எடுக்கிறார். கதையின் கரு என்னான்னா, ஹீரோ ஒரு ரேஸ் பைத்தியம். நல்லா சைக்கிள் ஓட்டுவார். ஊருக்குள்ள நடக்கிற சைக்கிள் போட்டியில கலந்து கொள்கிறார். அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெறுகிறார். வேளை வர கல்யாணம் ஆனால் கல்யாணத்துக்கு அப்புறம் அவர் படம் போல அவர் சைக்கிளும் ஓடாம மொக்கார் பண்ணுது. அவரும் என்னனவோ செய்யறார். எதுவும் வேலைக்கு ஆகமாட்டேங்குது. உண்மையிலேயே அவருக்கு நல்லா சைக்கிள் ஓட்ட வரும். இப்படியே போயிக்கிட்டு இருக்கிற அந்த சோகக் கதையில அப்ப அப்ப அது, அதுன்னு எதுக்குன்னே தெரியாம சொல்லிட்டு போவார். கடைசில வில்லனே அவர் நிலமைய நினைச்சு இரக்கப்பட்டு விட்டு கொடுத்து ஜெயிக்க வைக்கிறார்.

 சூர்யா கெளதம் மேனன் மறுபடி இணையறாங்க. படத்தின் பேரு காதலிக்க காதலிக்க. இதுலயும் ”அவங்க அஞ்சு பேரு அவங்களுக்கு காதல்னா என்னான்னே தெரியாது” போன்ற டையலாக் உண்டு (அந்த அஞ்சு பேர் யாரா? விஷயத்த சொன்னா கேட்டுக்கணும். இதமாதிரி கேள்வியெல்லாம் கேட்டு தொந்தரவு பண்ணப்டாது….ஆஅஅஅஆஅ அப்புறம் கெளதம் மேனன் டென்ஷனாகி டயலாக் மாத்தி நாங்க 8 பேருன்னு சொல்லிடுவார். 5 தாங்கமுடியல, இது 8ஆ…)

இவர்களலெல்லாம் இப்படி போக நம்ம புரட்சி கலைஞர் தன் கட்சி பணிகள் அவரை அழைத்தாலும், இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள பேராசாயான்ஸ்-டேன்னு டைட்டில புடிச்சிட்டார். படம் முழுக்க நாம் எதிர்பார்ப்பது போல ஒண்ணாம் வாய்ப்பாடிலிருந்து ஆரம்பித்து கால்குலஸ் வரை அரசாங்கத்தின் பல தப்பான கணக்கு வழக்குகளை தட்டிக்கேட்கிறார். குறிப்பா அந்த ஊர் நாட்டாமை மற்றும் அவர் குடும்பத்தினரின் மீது செம பகை. தமில்ல (இது அவர் லாங்குவேஜ்) அவருக்கு பிடிக்காத ரெண்டாவது வார்த்தை கூட்டுக்குடும்பம். வேலண்டைன்ஸ்டேக்கு உபயோகப்படுத்தற ரோஜாப்பூ ஏற்றுமதியில ஊழல் நடக்கறதா தெரியவர, அதை தடுக்கும் முயற்சில அவரும் அது செம அமொவுண்ட்டுன்னு தெரியவருது. அவரும் நாட்டாமையாக ஆசைப்படறார். அதை அடைந்தாரா இல்லையாங்கிறது தான் க்ளைமாக்ஸ்.

வழக்கம் போல இந்தியாவுல எத்தன தோட்டம் இருக்கு அதுல எத்தன தோட்டத்துல ரோஜா பயிரிடறாங்க, எவ்வளோ பூ வாடுது, மீதி என்ன, ஏற்றுமதிக்கு நிர்ணயிக்கப்பட்ட விலை என்னன்னு முழு கணக்கையும் ஒரே மூச்சில சொல்ற மேட்டர் எல்லாம் இருக்கு. இது ஹைலைட்டு

படம் முழுக்க தன் கட்சி கொடியின் கலர்லேயே காஸ்ட்யூம்ல வரார். படத்துல எல்லார் வீட்டுலேயும் துவைத்து காயப்போடுற துணி கூட தன் கட்சி கொடியாதான் இருக்கணும்னுகிறது கேப்டனின் உத்தரவு. அந்த படத்துல வருகிற கில்லிதாண்டு டீம்க்கு பு.க தான் கேப்டன்.

மற்றபடி உதட்ட பிதுக்கி ஹ்ஹ்ஹூன்னு சொல்ற அயிட்டங்கள் எல்லாம் அஞ்சு நிமிஷத்துக்கு ஒரு முறை முறையே வந்து கொண்டிருப்பதற்கு உத்தரவாதம் என்கிறது கட்சி மேலிடம். அது தவிர படம் பார்க்க வருபவர்களுக்கு இலவசமா ¼ கிலோ அல்வா கொடுக்கிறார்.

கடைசியா விக்ரம். இவரு எப்பவுமே வித்தியாசமா யோசிக்கற ஆளாச்சே. அதனால இந்த படத்துக்கு டைட்டில் “பூமா”ன்னு வெச்சிருக்கார். கதைக்கு லிங்குசாமி ரொம்ப கஷ்டப்படல. பீமாவை அப்படியே ரிவர்ஸ் பண்ணிட்டார். ஆனா அதே விக்ரம் வித்தியாசம் இருக்கு (யாருக்கும் சொல்லாதீங்க, பூமா காரெக்டர் பண்ணப் போறது நம்ம விக்ரம்).

இவ்ளோதான் அணிலார் சொல்லிட்டு போயிருக்கார். எப்பப்ப அவர் சொல்றாரோ அப்பப்ப நான் உங்ககளுக்கு சொல்வேன். இது செத்துப் போன அந்த வேலண்டைன்ஸ் தாத்தா மேல சத்தியம்! சதிதியம்!! சதிதியம்!!!

சற்றுமுன் கிடைத்த தகவல்:

தன் பையனே இந்த வேலண்டன்ஸ் டே ஸ்பெஷல பயன்படுத்தி படமெடுக்கும் போது, நாமும் படமெடுத்தா என்னன்னு நம்ம விஜய ராஜேந்தர் லேட்டஸ்டா ப்ரெஸ் நியூஸ் குடுத்திருக்காரு.

படத்தின் பேரு “கடலை போட்ட சுடலை”. வழக்கம் போல அவர்தான் எல்லாம். ஹீரோயின் நம்ம “மலமல” மும்தாஜ். உடம்ப குறைக்க ஜிம்முக்கு போயி அடுக்கு மொழி வசனம் பேசி அங்கிருப்பவர்களை எல்லாம் ஓடவைக்கும் கதாநாயகன், அவரின் பேச்சில் மயங்கி அவரிடம் தன்னையறியாமல் தன் மனதை பறிகொடுக்கும் கதாநாயகி, அவரின் காதலை தனக்கு தங்கச்சி இல்லைனாலும் பக்கத்து வீட்டு நண்பன் தங்கச்சியோட கல்யாணமே தன் கனவாக வைத்திருப்பதால் காதலை ஏற்றுக் கொள்ளவும் முடியாமல், இவளவிட்டா நம்மகிட்ட யாரும் ஏமாற மாட்டாங்கன்னு புரிஞ்சு தவிக்கிற தவிப்புன்னு…டோட்டல் செண்டிமெண்டுல போகுது ட்ராக்.

“கடல போட்ட சுடல

சுடல வாங்கல மெடல

உடல விடல சுடல

சுடல விடல கடல

கடல சுடல விடல

விடல கடல சுடல

அத்தப் பொண்ணு விடல

அவ ஆசை மாமன் சுடல

அத்த பொண்ணு விடல

விடல பொண்ணும் விடல

அவன நெனச்சு தொட்டா

அடுப்பும் கூட சுடல

டண்டனக்கா டனக்குனக்கா நக்கா நக்கா நக்கா டண்டனக்கா”ன்னு தாறுமாறா எக்குத்தப்பா பாட்டுக்களோட ரெடியாகிட்டிருக்கு.

பாட்ட தப்பில்லாம மூணுதடவை ரிபீட் பண்றவங்களுக்கு விஜய டி.ஆரின் அடுத்த படத்தில் அற்புதமான வேடம் காத்துக்கிட்டு இருக்கு. ரெடியா? ரெடி…ஜூட் …..

10 Comments »

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.