துணுக்குச் செய்திகள்

பார்த்தது..Objects

சன் ம்யூசிக் பார்த்துக்கொண்டிருந்தேன். ‘பொய் சொல்லப் போறோம்படத்திலிருந்துஒரு வார்த்தை பேசாமல்பாடல் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. கதாநாயகின் வண்டியில் கதாநாயகன் உட்கார்ந்து கொண்டு போகிறார்( கதாநாயகி, நாயகன் பற்றிய விஷயமில்லை. அதனால் அவர்கள் யாரென்பதை பற்றிய கவலை வேண்டாம்). விஷயத்துக்கு வறேன் சார்….

………உட்கார்ந்து கொண்டு போகிறார். அப்போது கதாநாயகியின் பார்வை வண்டியின் கண்ணாடிப் பக்கம் போகிறது..கூடவே காமிராவும். கண்ணாடியில் கதாநாயகனின் முகம் தெரிகிறது. அதில் எழுதியிருக்கும் வாசகம் “Objects In The Mirror Are Closer Than They Appear”. ரொம்பச் சின்ன விஷயம் தான். நாம் தினசரி நம் வண்டியில் பார்க்கும் ஒன்றுதான். இருந்தாலும் அந்த இடத்துக்கு அதை உபயோகப்படுத்தியது இயக்குனரின் புத்திசாலித்தனத்தை காட்டுகிறது. இதத்தான் டைரக்டோரியல் டச்ன்னு சொல்வாங்க இல்ல.

படித்தது

இது நம் இடதுப்பக்கம் (இந்தியாவில்) உள்ள கார் அல்லது இரு சக்கர வாகனக் கண்ணாடியில் மட்டுமே இருக்கு, அது ஏன் இடதுப்பக்கம் மட்டும்?

இடதுப்பக்கம் ஒவர் டேக் செய்ய போக்குவரத்துச் சட்டத்தில் இடமில்லை

ஏற்கனவே அது ஓட்டுனரின்(கார்) பார்வையிலிருந்து தள்ளி இருப்பதால், ரேஞ் கிடைக்காது என்பதால், கான்வெக்ஸ் எனப்படும் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட கண்ணாடி. இடப்பக்கம் மட்டும் பொருத்தப்படுகிறது.

நீங்கள் பார்க்கும் உருவம்/பொருள் நீங்கள் நினைப்பதைவிட அருகில் இருக்கிறது என்ற வாசகம் நடைமுறையில் உதவாது. ஏனென்றால், உங்களுக்கு தென்படும் உருவமோ/பொருளோ சிறியதாக தெரிவதால், நாம் தூரத்தினை தப்பாக அளக்கக் கூடும். விளைவு அதே கணக்கில் சடாரென்று ஒரு திருப்புத் திருப்பும்போது தவறு(விபத்து) நடக்க வாய்ப்பு உண்டு. ஆனால் இதை காரணம் காட்டி விபத்து வழக்கில் தப்பித்துக் கொள்ளலாம் என்ற ஒன்று இருந்து அது தெரிந்திருந்தால் அது இன்னும் மோசம்.

”And if life is a highway
Then your soul is just a car
And objects in the rear view mirror
May appear closer than they are….”

This entry was posted in சிந்தனைகள், பொது and tagged , , , . Bookmark the permalink.

3 Responses to துணுக்குச் செய்திகள்

 1. viji says:

  அருமையான் பதிவு.

  தங்கள் பதிவை http://www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். http://www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் நன்றி. தங்கள் பதிவை எளிதாக சேர்க்க கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.

  http://www.newspaanai.com/easylink.php

 2. valaipookkal says:

  Hi

  We have just added your blog link to Tamil Blogs Directory – http://www.valaipookkal.com.

  Please check your blog post link here

  If you haven’t registered on the Directory yet, please do so to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.

  Sincerely Yours

  Valaipookkal Team

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *