Home » General, இந்திய சினிமா, தமிழ் சினிமா, நாட்டு நடப்பு, பொது

கலைமாமணி மொக்குமாவு மீனா

28 February 2009 11 Comments

 

சமீபத்திய மிகப்பெரிய தமாஷ் கலைமாமணி விருதும் அதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களும் தான். அரசு சகட்டுமேனிக்கு சும்மா அள்ளி வீரியிருக்கிறது. அவர் இவர் என்றில்லாமல் எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் என்ற கொள்கையில் அடித்து நிமித்தியிருக்கிறது அரசு. எதற்காக இந்த விருது என்று யோசிக்கத் தோன்றுகிறது. கலைத்துறையை சார்ந்தவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் எண்ணத்தில் இது கொடுக்கப்பட்டால் அதற்கு தனியாக ஒரு விருதை பரிந்துரை செய்யலாம். அதற்கு பெயர் கூட யோசித்து வைத்திருக்கிறேன். “என்ன பண்ணாலும்” விருது. பின்ன என்னங்க?

எங்க வீட்டுக்கு பூ கொடுக்கும் பூக்காரம்மா ஜோதி தனக்கு அந்த விருது கிடைக்க என்ன செய்யவேண்டும் என்று கேட்டாள். ஆச்சரியமாக இருந்தாலும் அதிர்ந்து போயிருந்தாலும், கொஞ்சம் தெளிந்து அவளிடம் எதை வைத்து இப்படி பேசுகிறாய் என்று கேட்டதற்கு, அவள் வீட்டருகில் உள்ள தோழி மொக்குமாவு மீனாவுக்கு கடுதாசு வந்திருப்பதாகவும், விருதை அரசு வீட்டிற்கே வந்து கொடுக்கும் என குறிப்பிட்டிருந்ததாகவும் கூறினாள்.

அது மட்டுமல்லாமல், ரஜினிகாந்த் வீட்டில் ரொம்ப நாட்களாக வேலை பார்க்கும் முத்துவிற்கும் கடுதாசு வந்திருப்பதாக ஒரு வதந்தி.

சரிதான் இதில் ஆச்சர்யப்பட ஒன்றும் இல்லை போலிருக்கிறது என்று முடிவுசெய்துவிட்டு, நமக்கு எப்படி கிடைக்கும், அதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டேன். என் மனைவி இரவுக்குள்ள ஒரு விருதாவது வாங்கிவரலைன்னா சாப்பாடு கிடையாதுன்னுட்டா. இப்ப என்ன செய்ய?

மேலே சொன்னது ஒரு சின்ன கற்பனைதான். இருந்தாலும் இப்ப கலைமாமணி விருது வழங்கறது இந்த லட்சணத்துலதானே இருக்கு. இப்படியே போச்சுன்னா இன்னும் ரெண்டு வருஷத்துல தமிழ் சினிமாவில அந்த விருதை வாங்கதவங்க யாருமே இருக்க மாட்டாங்க.

என்னங்க கூத்து இது. இத கேட்க யாருமே கிடையாதா? யாருக்கு விருதுன்னு யாரு முடிவு பண்றது. அந்த கமிட்டிக்கு முதல்ல ஒரு நோட்டீசு விடணும். ரசிகர்கள் வோட்டுக்காகவா இல்ல அந்த கலைஞர்களின் ஜாதி வோட்டுக்காகவா?

அசின் எத்தன வருஷமா தமிழ்ல நடிச்சிட்டு இருக்காங்க? ஐஸ்வர்யா தனுஷுக்கு எதுக்கு விருது? ஞாயப்படுத்த ஆயிரத்தெட்டு காரணம் கொடுக்கலாம். உண்மைன்னு ஒண்ணு இருக்கு இல்ல?

ஒரு பக்கம் நம்மில் ஒரு தமிழன் அமெரிக்கா போய் ஆஸ்கர் வாங்கிட்டு வர்றான். இங்க என்னடான்னா ஒரு வரைமுறையே இல்லாம சும்மா தூக்கிக் கொடுத்துட்டு இருக்கு அரசு. நாகேஷ் உயிரோட இருந்தப்ப அவருக்கு ஒரு பாராட்டு விழா நடத்தணும்னு தோணலை.

கலைமாமணி விருதுக்கு இருந்த மதிப்பு போயாச்சு. இனிமே யாருக்கு கொடுத்தால் என்ன. அடுத்தது ஜோக்கர் துளசிக்கும் கூட கொடுப்பாங்க. மற்ற துறையில சாதிச்சவங்க நிறைய பேரி இருக்காங்க. ஆனா அங்கீகாரம் கிடைக்கிறது சில பேருக்குத்தான். இந்த வருடமும் எந்த மாற்றமும் இல்லை.

ஒரு சீரியல நாலு வருஷமா இழு இழுன்னு ரப்பர் மாதிரி ஒருத்தர் இழுத்தடிப்பாராம். அவருக்கு இவங்க விருது கொடுத்து கெளரவபடுத்துவாங்களாம். கலைக்கு எவ்வளவு பெரிய சேவை செஞ்சிருக்கார் திருச்செல்வம். தப்புத் தப்பு கலைமாமணி திருச்செல்வம்.

பாரத் ரத்னா, பத்ம விபூஉஷன், பத்ம ஸ்ரீ, கலைமாமணி எதுக்குமே இன்றளவில் ஒரு மரியாதை இருப்பதாக தெரியவில்லை. கொடுக்க வேண்டியவங்களுக்கு கொடுக்கக் காணும். இவங்க இஷ்டத்துக்கு இவங்க விருப்பப்பட்டவங்களுக்கு மட்டும் வாரி வழங்குறாங்க.

இந்த அரசு உடனடியாக இதில் திருத்தம் கொண்டு வரவேண்டும். கலைமாமணி என்றால் அதற்கு ஒரு அளவுகோல் வைத்து முறைபடுத்த வேண்டும். வேளில போனா எல்லாரும் கேட்கறாங்க. பதில் சொல்லி முடியல. அப்படி சரி செய்ய மாட்டோம்னு சொன்னாங்கன்னா குறைந்த பட்சம் அந்த விருத மளிகைக் கடைகள்ள விற்பனைக்கு கொண்டுவந்தாங்கன்னா கூட பரவயில்ல.

கலைமாமணி விருது கிடைக்க சரியான வழி சொல்லி பின்னூட்டம் இடுபவருக்கு அதற்காகவே அவருக்கு அந்த விருதுக்கு பரிந்துரைக்கப்படுவார். 2010க்கான விருது வேணுமா? அனுப்புங்க ஐடியாவ.

11 Comments »

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.