Home » அனுபவம், நகைச்சுவை

பாரின் ரிடர்ன் தோஸ்து

20 February 2009 13 Comments

பாட்டில் மணியின் சொந்த அனுபவங்கள்

நைனா! நம்ம பசங்க வாய்க்கையில் ரெண்டு மூணு வருசத்துக்கு அமெரிக்கா, பக்ரீன், டுபாய்ன்னு போயிட்டு வந்துட்டு உடற ரவுசுகீதே…..எப்பாபார்டி செம பீட்டர் உடும்பாஎனக்கு தெர்ஞ்சத தோ எத்துவுடறேன்அத்த நீ கேட்டுக்கோஇன்ன பிரியுதா?

நம்ம ஏர்போட்ல கால வெச்ச உடனேவே ரவுசுதான்இன்னாபா இது இம்மாபெரிய கியுவுன்னு அல்த்துப்பான்.

வெளில வந்து கஸ்டதுக்கு டாக்ஸி வோட்வனாண்ட வுடாம பீட்டர்லயே பேரம் பேசுவான். அங்க ஊர்ல மீட்டர் சுடுதா இல்லியான்னு பார்க்கமே பட்டா சொல்ற துட்ட புட்டுபுட்டு வெப்பான்.

கொஞ்ச நாளிக்கு தல மார்ல்ப்ரோ தான்….கெடைக்கலைன்னா…555 வெச்சு அட்ஜீஸ் பண்னிக்கும். ஆனா வயக்கமா குடிக்கற கோல்ட்ஃப்ளாக் ரெண்டு மாசம் கயிச்சுதான்.

அண்ணாத்தே முன்னடிலாம் பசங்களோட டாஸ்மார்க்ல தான் கட்டிங் உட்டுப்பாரு. ஊர்லேர்ந்து வந்த உடனே பாரு, பீருன்னு அலைவானுங்க..

சரி இத்தெல்லாம் கூட உட்டுறலாம் வாத்தியாரே….

25 வருசோ அவன் வூட்லயே குப்ப கொட்டிட்டு, சும்மா ஒரு ரெண்டு வருசோ பாரின் போயிட்டு வந்துட்டு, ஃபேன், லைட்டு சுச்சு கூட தப்பா போடும், பசங்களோட ஊர்சுத்த அயன் பண்ண சர்ட் தான் போடுவேண்ணு அடம்புடிக்கும் பார்ட்டி.

அவனுக்கு அண்ணாத்த இல்ல தம்பி இருந்தான்னு வைய்யு, பட்டா நாசம். பீட்டரு உட்டுகினே கெடப்பான். அங்க முடி இன்னாமா வெட்டுவான் தெரியுமா, ரோட்ல எத்தினி குப்பத்தொட்டி தெரியுமான்னு

அம்மாகிட்ட பாத்ரூம் க்ளீன் பண்றவ வரலியான்னு கேட்பான். அங்க ஊர்ல இவனும் இவன் ரூம் மேட்டும் மாத்தி மாத்தி கயுவி விட்டுகினு இருந்தத நைனா மறந்தே போயிடுவாரு.

ஊட்ல கண்ட எட்த தொட்சி காட்டி, அம்மா இம்மாந்தூசிகிது தொடிக்கலையான்னு கேட்பான். ஆனா….

அந்த கப்பட்ச சார்ட்ஸ பத்து நாளு போட்டு பேஜார் பண்ணும்பா பார்ட்டி. இத்த உட்டேன் பாரு, ஹாண்டி காம். நைனா படம் புட்சிக்கினே இருபாரு பி.சி.ஸ்ரீராம் கணக்கா….

டோமரு என்னாண்ட பேசசொல்ல கூடோ இங்கிலீசு வந்துரும் நடுல….அடங்கு மாமேய்ன்னு ஒரு கொர்லு குட்தாதான் அடங்கும் சவுண்டு.

எனக்கு தெரிஞ்ச ஒரு பேமானி (கூட பட்சவந்தான்) அமெரிக்கா போயிட்டுவந்தான் அண்ணாத்த. சொன்னா நம்ப மாட்டே……பீச்சாங்கையில் சோறு துண்ணுக்கினு இருதான்பா. நான் கூட கேட்டேன் இன்னாட இப்படின்னு, அதுக்கு அவரு சொல்றாரு அங்க சோத்து கையில லேப்டாப் செஞ்சிகினே சோறு துண்ணுவானாம். அவன் மூஞ்சில என் பீச்சாங்கைய வெக்க.

தெனிக்கும் 1 மணி இல்ல 2 மணிக்குதான் குளிக்கும். அப்ப அப்ப நண்பர்களோட இருக்கும் போது பர்ஸ எட்து எட்து பார்க்கும் டோமரு..வேறே எதுக்கு அண்ணாத்த, என் வவுதெரிச்சல கெளப்பத்தான்.

கரெண்ட்டு போச்சினு வை, நம்ம பீட்டரு சத்தம் தாங்கவே முடியாது, அவரு அதெல்லாம் அவரோட வாய்க்கையில பார்த்த்தே இல்லியாம்.

நெட்டு அது போற ஸ்பீடுலதான் எப்பவும் போயிக்கினு இருக்கும், டேபிள தட்டறதும், மேஜைய குட்றதும், என்னான்ற…

மிக்கயமான ஒண்ண வுட்டுபுட்டேனே, பாரின் போய் வந்த கொஞ்ச நாளிக்கு நைனா வூட்டுக்குள்ளயே செருப்பு போட்டு சுத்திகினு கெடக்கும். அதுவும் அண்ணாத்தே ஊர்மேய வெல ஜாஸ்தி செருப்பு, ஊட்டுக்க்குள்ள மேய நீலக்கலர் ரப்பர் செருப்புன்னு (விதவிதமா செருப்பு சீப்பு கண்ணாடி….)

யப்பா சாமி, அவங்கூட வண்டில ரெண்டு மாசத்துக்கு போவத நைனா…உன்னாண்ட கெஞ்சி கேட்டுகறேன். போற ரூட்ல எல்லாம் மத்தவங்கள இங்கிலீசுல திட்டிகினே வருவான். அதுகூட அட்ஜீஸ் பண்ணிக்கலாம் வாத்தியாரே, அவன உட்கார வெச்சி ஓட்டிப்பாரு..நான் இன்னா சொல்றேன்னு பிரியும்.

வாத்தியாரே சரி நான் இத்தோட நிறுத்திகறேன். இதுக்குமேல சொன்னா நாளைக்கு அவன் ஏற்பாட்ல இருக்குற ட்ரீட் தரமாட்டான். இதுக்கு மேல நீங்க எயுதுங்க….டாங்க்ஸ்…வர்றேன்பா………

ஆனா இதெல்லாம் நண்பன் கொஞ்ச நாளிக்குதான் செய்வான். அப்புறம் பயய நண்பனா மாறி, பாக்கு போட்டு கண்ட எட்துல துப்பிகினு கெடப்பான்.

அல்லான் டமாசுக்கு எய்தினது….கோச்சிகாதிங்கபா…..

 இளசுகளின் பைக் ரவுச படிக்க இத்த அமுக்கிக்க அண்ணாத்த.

 

 

 

13 Comments »

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.