Home » General, இந்திய சினிமா, தொ(ல்)லைக்காட்சி, நகைச்சுவை, பொது

நினைவலைகள்…சிரிப்பலைகள்

4 February 2009 2 Comments

தங்கப்பதக்கம் படம் ஒரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பினார்கள். அதில் சோவின் நகைச்சுவையை மிகவும் ரசித்தேன். ஏற்கனவே பல தடவை பார்த்துவிட்டாலும் பார்க்க பார்க்க சிரிப்பு வருகிறது. இதோ என்னால் முடிந்த அளவிற்கு உங்களுக்கு:

சோ இரட்டை வேடங்களில் வந்து கலக்குவார். அதிலும் அரசியல்வாதி வேடத்தில் பின்னிப் பெடலெடுக்கிறார். அண்ணண் சோ போலீஸ் ஏட்டு. தம்பி அரசியல்வாதி. ஒரு காட்சியில்:

அ.சோ: வாடா, வீட்ல இருந்த பணத்தை எடுத்தியா?

த.சோ: அண்ணா!!! அத நான் தேர்தல்ல போட்டியட டெபாஸிட்டுக்கு எடுத்துக்கிட்டேன்.

அ.சோ: அண்ணண் பணத்துல கைய வெச்சது தம்பிதானா? (புரியுதா???) உனக்கு என்னடா தெரியும்? தேர்தல்ல நிக்கற?

த.சோ: எனக்கு ஒண்ணுமே தெரியாது அண்ணா!!! அதனாலதான் நிக்கறேன் அண்ணா!! உட்கார முடியல அதான் நிக்கறேன் அண்ணா!!!


தம்பி சோ தன் அண்ணியிடம் (மனோரமா) உள்ளங்கையை காட்டி, வையாபுரி என்ற தன் பெயரை வைகை வளவன் என்று மாற்றிக்கொண்டதை சொல்லும் விதமே வெகு ஜோர். இப்போது துக்ளக் பத்திரிகையில் கூட வைகை வளவன் என்ற புனைப்பெயருடன் ஒருவர் எழுதிக்கொண்டிருக்கிறார் என்று நினைக்கிறேன்.


நம்ம வை.வ தேர்தலில் ஜெயித்துவிட்டு வீட்டுக்கு அண்ணாவை (அவர் அண்ணணை சார்) பார்க்க வருகிறார். தனிக்குடித்தனம் போவதாக சொல்கிறார்:

அண்ணி (மனோரமா): என்ன தம்பி பழசையெல்லாம் மறந்துட்டியா?

அண்ணா: இப்ப அவன் பெரிய மனுஷன். அப்படித்தான் நடந்துப்பான். பெரிய மனுஷனா  ஆகணும்னா ரெண்டு விஷயம் முக்கியம். 1. பழசை மறக்கணும். 2. நல்லவங்கள மதிக்கக் கூடாது. அது ரெண்டுமே தம்பிக்கிட்ட இருக்கு.

வை.வ: அண்ணா!!!

அண்ணா: அண்ணா சொன்ன நல்ல விஷயத்தையெல்லாம் விட்டுட்ட அப்புறம் என்ன அண்ணா..அண்ணாண்ணு.

இன்னொரு காட்சியில் லஞ்சம் கொடுக்க வந்த ஒருவரிடம் தன் கையை விரித்துக்காட்டி, இந்த கையை பத்தி என்ன நினைச்ச என்று கேட்டுவிட்டு தன் உதவியாளரிடம் பக்குவாமாக எடுத்துச் சொல்லு என்று சொல்லும்போது அரசியல் காமெடியின் உச்சக்கட்டம்.

சுருளிராஜன் ஜெயிலில் இருக்கும் தன் தம்பியை காப்பற்ற வேண்டி நம்ம வை,வளவனை தேடி வருகிறார்:

சு: என் தம்பியால ஒரே பிரச்சனை..

வை.வ: இந்த தம்பிகளால எப்பவுமே பிரச்சனைதான். மேல சொல்லுங்க..

சு: என் தம்பி ரெண்டு தடவை ஸ்டிரைக் செய்து ஜெயிலுக்கெல்லம் போயிருக்கான்..

வை.வ: அடடா!! இது சுதந்திர போரடத்துல ஜெயிலுக்கு போனதோட பெரியவிஷயமாச்சே! தியாகிதான்!!

சு: என் தம்பி கொஞ்சம் குடிச்சிருந்திருக்கான். அதுல எதிர் கட்சிக்காரன் கூட நடந்த சண்டையில அவன கத்தியால வயித்த கிழிச்சிட்டான். அதுல பாருங்க குடல் வெளிய வந்துருச்சு..

வை.வ: ஓ! சாரயமா?

சு: இங்கிலீசு மருந்துங்க..

வை.வ: அப்ப இங்கிளீஷ் தியாகி…ஞாயமா பார்த்தா வெளிய வந்த குடலத்தான் உள்ள தள்ளணும். வேண்டியத செய்யறேன். ஆனா கொஞ்சம் செலவாகும்.

படம் முழுக்க கலக்கு கலக்கு என கலக்கி எடுக்கிறார். அவர் அண்ணா, தம்பி என்று யாரை குறிப்பிடுகிறார் என்று உங்க எல்லோருக்குமே புரிந்திருக்கும். படம் பார்த்தவர்கள் நினைவலைகளை தட்டிவிடுங்கள். இன்னும் பார்க்காதவர்கள் கண்டிப்பாக பா.விடுங்கள்.

2 Comments »

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.