Home » அனுபவம், கிரிகெட்

”பாஸ் நாங்க ஆடப்போறோம் பாஸ்”

10 February 2009 5 Comments

கருணா : மாமேய்…மேட்ச் பிக்ஸ் பண்ணியே, கன்பர்மேசன் பண்ணியா? அவனுங்க டையத்துக்கு வரவேமாட்டானுங்க.

வெங்கடேசு : இல்ல மச்சி சொல்ட்டேன் இந்த வாட்டி. லேட் ஆச்சுனா வேறே டீம் கூட ஆரம்பிச்சுடுவோம்ன்னு. வருவானுங்கடா….

டாக்டர் : எங்கடா பையன இன்னும் காணும்?

கொமாரு : ஏய்..அவனுக்கு ஏதோ எக்ஸாமாண்டா. வந்துடறேன்னான்.

வெங்கடேசு : வந்துட்டான்…அங்க பாரு…இந்த சீனுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லடா அவங்கிட்ட.

ஒரு நாலு பேர் சேர்ந்தாப்போல வா மாமே…ஹே!! ஹே!! ஹே!! என்று வரவேற்ப்பார்கள். ஏனென்றால் அவன் ஸ்டார் பேட்ஸ்மேன். சினிமா பாஷையில மினிமம் காரெண்டி.

சத்தி : இன்னா எக்ஸாம் மச்சி? நல்லா எய்தினியா?

கொமாரு : கீச்சான்…நேத்து நைட் எல்லாம் தண்ணி… இன்னும் மப்பே தெளியில வாத்தியார்க்கு.

ராஜேஷ் : தோடா எல்லா எங்களுக்கு தெரியும், நீ எப்ப வந்த?

கொமாரு :ஏய், என் மேட்டரு வேற மச்சி, வூட்ல பழுப்பு (குழாய்) பேஜார் பண்ணிட்சி..அத்த சரி செய்ய ஆள் கூட்னுவாண்ட்டு ஒரே ரப்சர்…

அதற்குள் வேறு ஒரு டீம் நம்ம பசங்க பிடிச்ச பிட்ச்சை பிடிக்க முயல…நம்ம ஆட்கள்..கோரசாக..”பாஸ் நாங்க ஆடப்போறோம் பாஸ்” இங்க. பீச்ல பிட்ச் பிடிக்கறது அவ்வளவு சுலபமான விஷயம் இல்ல. மத்தியானம் மேட்ச்சுக்காக 2.30 மணிக்கே வந்துடணும். இதுக்குனே எல்லா டீம்லையும் ஒரு 3-4 பேர் இருப்பானுங்க. வாராவாரம் லேட்டா வர்றவனை புலம்பி திட்டி தீர்ப்பானுங்க இருந்தாலும் அடுத்த வாரமும் சார்ப்பா 2.30 க்கு வந்து பீச்ச பெருக்கி துடைச்சி கோலம் எல்லாம் அவங்க தான் போடணும்.

இந்த லேட்டா வர்றானே, அவன் கொஞ்சம் கூட கவலையே படமாட்டான். ஏதாவ்து ஒரு காரணம் யோசிச்சு வெச்சிகிட்டுதான் வருவானே. மாமா! அப்பறம் போய் பார்த்தியாடா அவள? எந்த ஏரியா? அப்படின்னு வாழ்கையின் மிக முக்கியமான அந்த ரெண்டாவது மேட்டர ஆரம்பிப்பான். (முதல் மேட்டர் நம்ம கிரிக்கெட்டுதான்)

நம்ம பசங்க எல்லாம் பக்காவா டீம் அசோசியேஷன் முடிவு பண்ணி ரெடி பண்ண டீ-சர்ட் தான். சில டீம் அவங்க அவங்க பேர் போட்ட தன் ராசியான நெம்பர் வெச்ச டீ-சர்ட். சில டீம் இன்னும் கொஞம் ஒவரா போயி ஒரு சர்வதேச அணியின் வீரர்களின் பெயரில்.

மணி 3 ஆயிடும். எதிரணி பசங்கள்ள 4 பேர் தான் வந்திருப்பானுங்க. கேட்டா, இப்பதான் ஃபோன் பண்ணேன் மச்சான். வரானுங்க. கேப்டன் கவலை கேப்டனுக்கு. மேட்ச் போட்ட பாவத்துக்காக அவன் டீம்ல ஆள் வரலைன்னாலும் எதிர் டீம்ல வரலைன்னாலும் இவன் தான் பொறுப்பு. காய்ச்சிடு வாங்க.

நம்ம பசங்க பிஸியா பீச்ல காதல் ஜோடிகள் செய்யும் (இவன் கண்ணுக்கு) காதல் குறும்புகளை பார்த்து அங்க அவன் என்ன செய்யறான்னு இங்க இருந்தே தெள்ளத் தெளிவா ரன்னிங் கமெண்ட்ரி கொடுக்க ஆரம்பிச்சுடுவாங்க.

ஒவ்வொருத்தனுக்கும் மனசுல சச்சின், சேவாக்ன்னு நினைப்பு. சில பேர் ப்ரெட் லீ(ஜெட் லீ இல்லங்க), மேட்ச் ஆரம்பிச்ச பிறகும் ப்ராக்டீஸ் பண்ணுவாங்க. இதுக்கு நடுவுல ஸ்டெம்ப் எந்த டீம் பொறுப்புங்கற கொழப்பத்துல ரெண்டு பேருமே எடுத்துட்டு வந்திருக்க மாட்டாங்க. அத சரி செய்யனும். ”மச்சான்! பாலு! கொஞ்சம் போயிட்டு வந்துறா…ப்ளீஸ்” என்று நம்ம கேப்டன் கிட்டதட்ட கால், கை, தலை, முதுகுன்னு எல்லாத்துலையும் விழுவான். ஒரு வழியா ஸ்டெம்ப் வர, அத நடவிடாம நம்ம சச்சின், சேவாக், அசார் எல்லாம் ஆ(ட்)டிக் கொண்டிருப்பார்கள்.

டேய்! !@#@#)(…நிறுத்துங்கடா..போதும்…மேட்ச் ஆரம்பிக்க வேணாமா? கேப்டன் சூடாயிருப்பான். அவன் தானே அதையும் செய்யனும். பீச் கிரிக்கெட்டுல தான் ஒரு கேப்டன் மார்க்கரோட அதிகமா வேலை செய்யனும்.

டாஸ்லாம் போட்டாச்சி! நம்ம ஃபீல்டிங்…வா…வா..போய் நில்லு, .

அதுவரை மகிழ்ச்சியா இருந்த நம்ம ச, சே, அ, க எல்லாம் லைட்டா டவுன் ஆயிடுவாங்க. ராம் நீ மிட் விக்கெட் போயிடு..மச்சான்(கருணா) நீ உன் எடத்துக்கு போயிட்றா. சாரதி மண்ல போயிடு (திரும்ப மச்சான் நான் வீட்லேயே போயிட்டேன்டான்னு சொல்லத்தோணும், ஆனா அது சமயம் இல்ல. கேப்டன் அசிங்க அசிங்கமா திட்டுவான்).

ஒரு வழிய மேட்ச்சும் ஆரம்பிச்சுடும். அப்படி நம்ம பக்கமாவே போயிக்கிட்டு இருக்குறா மாதிரி ஒரு ஃபீல்ங் கிடைக்கும். 8ஆவது ஓவர்ல அவங்க 34/3ன்னு இருப்பாங்க. அங்கேர்ந்து இந்த மிட் விக்கட் மற்றும் ஸ்கொயர் லெக்ல ஃபீல்டிங் பண்றவன் பாடு திண்டாட்டம் தான். ஓடு ஓடுண்ணு ஓடணும். நான் ஸ்வீப்ப்ர் கவர்லேர்ந்து மச்சான்(கேப்டனைதான்) ஸ்கோர் என்னடான்னு கேட்டா (பல முறை கேட்கணும், ஏன்னா சரியா காதுல விழாது) 74 அப்படின்னு சொல்லுவான். தூக்கிவாரி போட்டுரும். அப்படி இப்படின்னு ஆடி ஓடி அலைஞ்சு திரிஞ்சு 16 ஓவர்ஸ் முடிஞ்சா, ஸ்கோர் பார்த்தா 92ன்னுவாங்க.

சரி இப்ப ஆட (பேட்டிங் தான்) ஆரம்பிக்கணும். நம்மாளுங்க விட்ட வேலைய ஆரம்பிச்சுடுவானுங்க. அதாங்க மேலே சொன்னேனே. ஆங்,,,அதேதான்.

முதல்ல போனவன் போன வேகத்துல திரும்பி வந்துருவான். மகேஷ் நீ எறங்குடான்னு கேப்டன் சொன்னது அவனுக்கு மூணாவது தடவை தான் விழும். சில சமயம் நம்ம பயலுக பேட்டிங் பண்ண கூப்பிடும் போதுதான் ஒண்ணுக்கே வரும். யோசிக்கவே மாட்டான், வாவ்! எவ்ளோ பெரிய புதர்ன்னு (சிங்காரவேலன் வடிவேலு ஸ்டைல்ல) போய் இருந்துட்டு வந்துருவான். இதுல காமெடி என்னான்னா, பல சமயம் பந்து அங்க தான் போய் விழும். கிரிக்கெட்டின் மகத்துவமே (அ)(எ)தையும் பொருட்ப்டுத்தாமல் அந்த பந்த பொறுக்கி போட வைக்கிறதுதான். சானி, சேறு, சகதி எதுவும் பார்த்தது கிடையாது பார்க்கவும் தெரியாது. அது ஒரு காலம். என்ன சொல்றீங்க. இப்போ, விஷயமே வேறே.

56க்கு 6ன்னு 9 ஓவர்ல ஸ்கோர் நிக்கும். டீமே சோகத்தின் உச்சிக்கு போயிடும். அப்பலேர்ந்து ஆரம்பிக்கும் அர்ச்சனை. அவனவன் பேசுவான். விக்ரம் அவுர் வேதாள்ள வர்றாமாதிரி சற்றும் எதிர்பாராத விதமா, பசங்க நாலு காட்டுக் காட்டி, கஷ்டப்பட்டு கிட்ட வந்துருவாங்க.

இப்பத்தான் பசங்க சூடாவாங்க. பெளலிங் போடும் போது எதிர் டீம் குடுத்த தப்பான வைட், நோ பால் எல்லாம் நினைவுக்கு வரும். இந்தா வாங்கிக்கோன்னு சும்மா அடிச்சி விடுவாங்க.

இதனால எனக்குத் தெரிஞ்சு சண்ட வந்து மேட்ச் சில சமயம் ந்..ந்..நின்னுபோயிருக்கு. ஆனா பல சமயம் தொடரும். கடைசில ஒரு 5 ரன்ல தோத்தாங்கோலி தான்.

இனிமேதான் மேட்டரே. ஒருத்தனுக்கொருத்தன் சேப்பல் மாதிரியும், ரவி சாஸ்திரி மாதிரியும், ஆட்டத்துல எங்க எங்க என்னன்ன தப்பு பண்ணிணோம்ன்னு ஒரு பெரிய லிஸ்ட் எடுப்பாங்க. சரி இப்படி பேசிட்டு அடுத்த வாரம் வந்து கிழிதான்னு பார்த்தா………விடுங்க……..திரும்ப அதே 93 அதே 5-10 ரன் அதே டீம் மீட்டிங் அதே அடுத்த வாரம்….எங்க டீம்ல ஒரு பொன் மொழி இருக்கு யாராவது மேட்ச் என்ன ஆச்சுன்னு கேட்டா,

”நாங்க எப்போ ஜெயிச்சிருக்கோம் இப்ப தோக்கறதுக்கு (கமா) எப்போ தோத்துருக்கோம் இப்ப ஜெயிக்கறத்துக்கு”ன்னு சொல்லிடுவோம். ஏதாவது புரியுதா….எனக்கு புரியல…ஆனா இதை கிட்டத்தட்ட ஒரு 12 ஆண்டுகளா சொல்லிகிட்டு திரியறோம்.

முடிவுல குறைந்தபட்சம் ஒரு ரெண்டு பேருக்காவது முட்டிக்கும். அப்புறம் சமாதானமாகி குரு ஸ்வீட்ஸ்ல மொக்க போட்டுகிட்டு ஒருத்தன ஒருத்தன் சதாச்சிகிட்டு கடைக்காரனை கலாச்சிகிட்டு ஒரு வழியா நாளை முடிச்சுப்போம், இது பல ஆண்டுளா தொடர்ந்தது. இப்பதான் கல்யாணம், குழந்தகுட்டின்னு வாழ்க்கை ரொம்ப மாறிடிச்சு (ஆனா இன்னும் கூட நண்பர்களில் சிலர் ஆடறாங்க)

வயசாயிருச்சு..கேப் ஆயிருச்சு..”ன்னு திரைப்பட கலைஞர்கள் குமுதத்திலேயும் ஆ.விலேயும் நடிகர்கள் மனம் திறக்கறாப்பல நாமும் சொல்லிக்க வேண்டியதுதான்.

இந்தப் பதிவு என் கிரிக்கெட் டீமுக்கும், பீச்சில் ஆடும் அனைத்து நெஞ்சங்களுக்கும் சமர்ப்பணம்.

5 Comments »

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.