Articles Archive for January 2009
General, நாட்டு நடப்பு »
நையாக்ரா நீர்வீழ்ச்சி பார்த்துக்கிட்டு இருந்த ராமசுப்பு சடனா பேஜாராயிட்டான் . அங்க வந்த பொண்ணுங்கள நீர்வீழ்ச்சி மாதிரி செம ஜொள்ளு விட்டுக்கிட்டிருந்த கஜாவின் கையை சொறிந்தான்.
ராமசுப்பு: என்னடா? சொல்லு.
கஜா: மச்சான் அது புஷ்தானே?
ராமசுப்பு: டேய்…ஆமாம்டா! (அதே பேஜார்).
கஜா: என்னதான் ஒபாமா ப்ரெஸிடெண்ட் ஆயிட்டாலும், அடுத்த நாளேவா சைட் சீயிங் வரணும். திஸ் ஈஸ் டூ மச்.
சரி, நாம வேலைக்குச் சேர்ந்த ஒபாமாவின் அத்தியாவசியமான உடனே செய்ய வேண்டிய கடமைகளை பார்த்தோம். இந்த நேரத்துல நம்ம, கடந்தகால தலைவர், புஷ் என்ன செய்துக் கொண்டிருப்பார் (அ) செய்ய வேண்டும்?
1. ப்ராவிடெண்ட் ஃபண்டு ஃபார்ம் எல்லாம் நிரப்பணும். அப்பத்தானே செலவுகளை சந்திக்க முடியும்.
2. அமெரிக்காவுல பென்சன் எல்லாம் இருக்கும்னு நினைக்கிறேன். அதுக்கு வேண்டிய வேலைய பார்க்கணும். இதுல என்ன கஷ்டம்னா, அவர் இப்போ ப்ரெஸிடெண்ட் இல்ல, அதனால் பேப்பர்ஸ் வேகமா மூவ் …
