Articles Archive for January 2009
General, அனுபவம், சிந்தனைகள், பொது »
நேற்று பிக் பஜார் சென்று வந்தேன். அங்கு போன பிறகுதான் தெரியும் அது பிக் பேஜார் என்று. தி நகர் ரங்கநாதன் தெருவுக்குள் நுழைந்த ஒரு உணர்வு. என்ன ஒரு சின்ன வித்தியாசம் என்றால், வெய்யிலில் அலைய மாட்டோம், கூவி அழைத்து விற்பனை செய்வதிலிருந்து எல்லா விலைகளிலும் பொருட்கள் கிடைக்கும் என்பதுவரை, இது ஒரு ரங்கநாதன் தெருவே.
கூட்டம் அலைமோதுகிறது. வாங்குபவர்கள், நோட்டம் பார்க்க வந்தவர்கள் என ஒரு மினி சென்னையே உள்ளுக்குள் உலவுகிறது. “இந்த மாதம் உங்கள் சேமிப்பு என்ன?” என்பது போன்ற விளம்பரங்களின் விளைவே இந்த கூட்டம் என கருதுகிறேன்.
என்னுடைய நேற்றய அனுபவம் இங்கே:-
1. அநேகமான பொருள்களின் விலைக்குறைப்பு என்பது முக்கால்வாசி உங்கள் வீட்டின் அருகில் உள்ள மளிகை கடையிலேயே கிடைக்கிறது.
2. நாம் நினைப்பது போல அப்படியொன்றும் பெரிதாக சேமிப்பதாக எனக்கு தெரியவில்லை. ரூ.3000க்கு சாமான் …
