Home » General, நாட்டு நடப்பு

ஒபாமா, மறுபெயர்: மாற்றம்

21 January 2009 5 Comments

ஒபாமா ஒரு வழியாக (அவர் வீட்டிலிருந்துதான்) வந்து பதவிப் பிரமானம் செய்து கொண்டாகிவிட்டது. இனி அவரை ஒபாமா என்று யாரும் அழைக்க மாட்டார்கள். நீங்கள் ஆங்கிலப் படங்கள் பார்த்திருக்கிறீர்கள் தானே. அதில் மிஸ்டர். பிரெஸிடெண்ட் என்று தானே அழைப்பார்கள். அது எனோ இன்னும் நம் இந்தியத் திரைப்படங்களில் வரவில்லை. இந்த வலைப்பதிவு அதைப் பற்றி பேசப்போவதும் இல்லை.

பிறகு எதை பற்றி உளரப்போகிறாய் என்று நீங்கள் புலம்புவது காற்று மார்க்கமாக கசிந்து வந்து என் காதுகளில் தொப் தொப்பென விழுந்து காது வலி உயிர் போகிறது.

ஒபாமா (ஸாரி சார், நான் இந்தியன்) பதவி ஏற்றவுடன் என்னென்ன செய்வார். திரு. சத்தியமூர்த்தி தன் ஆங்கில வலைப்பதிவில் மிக தமாஷாக எழுதியுள்ளார். அதேயே இங்கு தமிழில் (நகைச்சுவை தமிழில்தானே அதிகம்).

1. அவர் இனி தினமும் செல்ல வேண்டிய ஆபீஸ் (ஒயிட் ஹவுஸ்) முகவரியை மனப்பாடம் செய்வது மட்டுமின்றி ஒரு சிறிய தாளில் குறித்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் சேர்ந்தவுடன் பல ஃபார்ம்களில் எழுத வேண்டுமே.

2. புதிதாய் குடி புகுந்த வீட்டுக்கு ரெண்ட் அக்ரிமெண்ட் போட வேண்டும்.

3. அக்ரிமெண்ட் நகல் வைத்து பழைய முகவரியிலிருந்து தனது தொலைபேசி, ரேஷன் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு என அனைத்தையும் புதிய முகவரிக்கு மாற்ற வேண்டும். குறைந்தபட்சம் ஒரு யெல்லோ ஹவுஸாவது அவருக்கு குடியிருக்க கொடுத்து இருக்க மாட்டார்களா என்ன?

4. புஷ் காலி செய்யும் போது விட்டு சென்ற குப்பைகளை அகற்ற வேண்டும் (வேலைக்காரி கிடைக்கும் வரை முதல் சில நாட்களுக்கு க்ளீனிங் வேலை அவரே தான் செய்ய வேண்டும்).

5. புஷ் காலி செய்யும் முன் அவர்தம் பேரப்பிள்ளைகளின் வீர விளையாட்டினால் சோபா, மேசை, நாற்காலிகள் குறைந்தபட்ச சேதம் அடைந்திருக்கும். அதை சரி செய்ய வேண்டும்.

6. அடுத்த காரியமாக தன் பிள்ளைகளின் உதவியுடன் தன் தொடைக்கணினியை(laptop) ஃபிக்ஸ் செய்து கூடவே ப்ரிண்டரும் செட் செய்ய வேண்டும் (அங்கே சமையல் அறையிலிருந்து அவர் மனைவி “வந்ததும் வராததுமா அத எடுத்தாச்சி, வேறே வேலையில்ல இந்த மனுஷனுக்கு” என்று புலம்புவதை கேட்டும் கேட்காததைப் போல இருப்பார்).

7. ஒருவழியாக செட் செய்த பிறகு, இப்போது எல்லா வங்கிகளுக்கும், இன்சூரன்ஸ் கம்பெனிக்கும், வார பத்திரிகைக்கும் இந்த முகவரியை மாற்றுமுகவரியாக மாற்ற கடிதம் எழுத வேண்டும்.

8. இதற்கு நடுவில் அவர் பிள்ளைகள் கேபிள் டிவி ஆக்டிவேட் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கும்படி மனு கொடுத்து கூடவே தொந்தரவும் கொடுப்பார்கள். அவர் பிரெஸிடெண்ட் ஆனவுடன் வாங்கும் முதல் மனு இதுவாகத்தான் இருக்கும்

9. ”ஏங்க இங்க நம்ம வீட்டு பக்கதுலயே ஒரு நல்ல ஸ்கூல் இருக்குதாங்க. என் ஃப்ரெண்ட் சொன்னா. முதல்ல அப்ளீக்கேஷன் ஃபார்ம் வாங்கிடுவோம்” என பாத்திரங்களை அடுக்கிக் கொண்டே சொல்லுவார் ஒபாமாவின் மனைவி. ஒபாமா தான் ப்ரெஸிடெண்ட் என்ற சிபாரிசை இங்கே உபயோகப்படுத்த முடியுமா? இது இந்தியா அல்லவே.

10. அக்கம் பக்கம் உள்ளவர்களை தொடர்பு கொண்டு பேப்பர் போடும் பையன் நாளை வந்தால் ஒரு குரல் (திருக்குறள் இல்லீங்க) கொடுக்கும்படி சொல்லவேண்டும். முடிந்தால் அவனது முதலாளியின் முகவரியை திரட்ட வேண்டும் (அப்படியே பெண்களுக்கான மற்றும் குழந்தைகளுக்கான பத்திரிகைகளும் சொல்ல வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொள்வார். இல்லைன்னா பிரச்ச்னை விஸ்வரூபம் எடுக்குமே).

11. மிக முக்கியமான வேலை. எந்த சுவிட்ச் எதுக்கு என்று தெரிந்து வைத்துக் கொள்ளவேண்டும். முடிந்தால் சின்னச் (”F”, “T”, “NL”) சின்ன பேப்பர் கட்டிங் ஒட்டவேண்டும்.

12. எலக்ட்ரிசிடி மீட்டர் ரீடிங் எடுத்து குறித்துக் கொள்ளவேண்டும் (ஒபா!, இங்க ஃபேன் ஒடல. கொஞ்சம் பாருங்க என்று அன்பு மனைவியின் குரல்).

13. தன் நண்பர்களுக்கு எல்லாம் ஈமெயில் மூலம் தான் வேலை மாறிவிட்டதையும், தன் தற்போதைய (நிரந்தரமானதல்ல) கைப்பேசி எண், மற்றும் தாம் இன்னும் விரிவாக பிறகு ஈமெயில் செய்வதாக (பதவி ஏற்று இரண்டாவது வாக்குறுதி) தெரிவிக்க வேண்டும்.

14. ஒரு வழியாக ஆபீஸ் வந்ததும், பெட்ரோல், மெடிக்கல், டெலிஃபோன் களுக்கு ரீயம்பர்ஸ்மெண்ட் எப்படி, ஏது என்ற குறிப்புகளை தெரிந்து கொள்ள வேண்டும் (எல்லா ஆபீஸ்லேயும் இதுக்குனே ஒருத்தர் இருப்பார்).

15. இவர் இங்கு நாளை தொடங்கும் அதே சமயத்தில் அங்கு அவர் மனைவி வேலைக்காரி தேடும் பணியில் இருப்பார் (கிளம்பும் போது “இந்த மனுஷன் தன் பொருளைக் கூட ஒழுங்கா வெச்சுக்க மாட்டார் என்று புலம்பியபடி ஹாலில் நடுவில் கிடக்கும் ஒபாவின் (செல்லப் பெயர்) உள் பனியனை எடுத்து சோபாவில் வீசிவிட்டு போவார்).

16. வீட்டிற்கு போகும்போது டூப்ளிகேட் சாவி செய்யனும் என்றும் அது எத்தனை என்றும் லன்ச் (வெளியில் தான், முதல் நாளாச்சே) சாப்பிடும் போது ஞாபகப்படுத்திக் கொள்வார்.

இதனால் என் இனிய சக ப்ளாக்கர்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால் இது போன்ற இன்னும் பல விஷயங்கள் ஒபாமாவுக்கு இருப்பதால் இந்தப் பதிவு மாற்றத்துக்கு உட்பட்டது. நீங்களும் உங்கள் மனதுக்கு தோன்றியதை வழி மற்றும் மறுமொழியலாம்.

5 Comments »

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.