சின்மயி இல்லாத ஏர்டெல் சூப்பர் சிங்கர்

இந்த நிகழ்ச்சியைப் பற்றி அதிகமாக விவரிக்கத் தேவை இல்லை என்று நினைக்கிறேன். அநேக இசைப் பிரியர்களுக்கும் இந்த நிகழ்ச்சியை பிடிக்கும். இதற்கு பல்வேறு தரப்பட்ட காரணங்கள் இருந்தாலும், சின்மயி ஒரு முக்கியமான காரணம் என்பதை நீங்களும் என்னுடன் சேர்ந்து ஒத்துக் கொள்வீர்கள்.

எனக்கு தெரிந்தவரை பஜாஜ் சப்தஸ்வரங்கள் தவிர்த்து மற்ற எந்த ஒரு இசை நிகழ்ச்சியும் இந்த தாக்கத்தை ஏற்படுத்தியதாக தெரியவில்லை. நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதும் ஒரு கலை. இதில் என்ன ஒரு விசேஷம் என்றால், இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாவது ஸ்டார் விஜய் டிவியில். இது வடநாட்டு ஸ்டார் டிவியின் ஒரு அங்கம் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே.

தமிழ், தமிழ் எங்கள் மூச்சு, அதுவே எங்கள் பேச்சு என்று பறைசாற்றிக் கொள்ளும் பல தொலைக்காட்சிகள் நல்ல தமிழ் உச்சரிக்கும் தொகுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் தவறியது / தவறுவது சாதரணமாக விட்டுவிடமுடியவில்லை.

ஸ்டார் விஜய்யின் ஏர்டெல் சூப்பர் சிங்கர் தொகுப்பாளினி சின்மயி ஒரு எடுத்துக் காட்டு. அவர் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விதத்திற்கே பல ரசிகர்கள். நானும் ஒருவன் என்பதில் இரட்டிப்பு (1. நன்றாக தொகுத்து வழங்குவது. 2. திருவல்லிக்கேணியை சேர்ந்தவர்) மகிழ்ச்சி. அவர் குரலும் அதில் விளையாடும் தமிழும் கேட்பதற்கு இனிமை. ஒரு பெண் அதுவும் இந்தக் காலத்துப் பெண் அதுவும் சினிமா இசையை மைய்யமாக கொண்ட ஒரு நிகழ்ச்சியில், இப்படி தமிழ் பேசி தொகுத்து வழங்குவதென்பது அரிய ஒன்றாகக் கருதுகிறேன். சந்தேகமிருந்தால் மற்ற தொலைக்காட்சியில் வரும் இசை நிகழ்ச்சிகளை பாருங்கள்.

அவர் பதிவுகளை படித்ததில், அவரை பற்றியும் கொஞ்சம் தெரிகிறது. அவருடைய எழுத்தார்வம், ஆங்கிலத்திலும் புலமை, உரியவர்களுக்கான அவருடைய மனது, தேசப்பற்று, பெரியவர்கள் மீது அவர் வைத்திருக்கும் மரியாதை, இசை மீது அவர் கொண்டுள்ள அபிரிமிதமான காதல் இப்படி நீங்கள் படிக்க படிக்க தித்திப்பாகவே தெரிகிறார்.

நம்மில் எத்தனை பேருக்கு அவர் சில காலமாகவே “டப்பிங்” பேசுவது தெரியும். உன்னாலே உன்னாலே, தாம்தூம் போன்ற அண்மையில் வந்த படங்களில் கூட பேசியிருக்கிறார். அவர் கர்நாடக சங்கீதத்தில் தேர்ச்சிப் பெற்றவரும் கூட. சின்மயி சினிமாவில் பாடியும் இருக்கிறார். கோல்டன் க்ளோப் பெற்ற ரஹ்மான் சினிமா இசைக்கு கொடுத்த பல தங்கத்தில் இவரும் ஒருவர்.

போட்டியாளர்களில் மூவர் எனக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ தெரிந்தவர்கள் தான். அவர்களிடம் பேசும்போது சின்மயி உற்சாகபடுத்தும் விதத்தை குறிப்பிட்டுச் சொல்வார்கள்.

தொகுத்து வழங்க இனி அவர் இல்லை இந்த நிகழ்ச்சியில் என்ற செய்தியை அவருடை பதிவிலிருந்து தெரிந்து கொண்டேன். ஒருவேளை அதை நான் பார்திராமல் இருந்திருந்தால், அடுத்த வாரம் வருவார் என்று வாராவாரம் என்னை நானும் அவரது ரசிகர்களும் தேற்றிக்கொண்டிருப்போமோ?

எது எப்படி இருந்தாலும், இந்த சிறிய வட்டத்துக்குள்ளிருந்து வெளிப்பட்டு இன்னும் நிறைய சாதிக்க எல்லாம் வல்ல அந்த நாரயணனை ப்ராத்திக்கிறேன்.

சின்மயி, உன் இடத்தை இன்னொருவர் வந்து நிரப்புவார் ஆனால் உன் போல் அவரும் இந்த நிகழ்ச்சியை நடத்துவாரா?

பன்பலைவரிசையில் ஆஹா! என்ன காபியில் சின்மயி பிய்த்து உதறுவதை கேளுங்கள்.

This entry was posted in சிந்தனைகள், சினிமா இசை, தொ(ல்)லைக்காட்சி, பொது and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

18 Responses to சின்மயி இல்லாத ஏர்டெல் சூப்பர் சிங்கர்

 1. prasanna says:

  சின்மயி விலகிக்கொண்டார் என்ற செய்தி மிகவும் வருத்தத்துக்குறியது. யுகேந்திரன் – மாலினி தொல்லை தாங்க முடியல….

 2. சின்மயிக்கு பதிலாக நேற்றும் இன்றும் வரும் யுகேந்திரன் மற்றும் அவர் மனைவி மாலினி ஜோடியில், மாலினியின் தமிழ்! “என்ன கொடுமை சார் இது” ரகம். ஒரு வேளை விஜய் டிவி எவ்வளவோ பாத்துட்டாங்க (வேற டிவியில) இத பாக்க மாட்டாங்களா”ன்னு நெனச்சுட்டாங்களோ?

 3. நாட்டுல எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கு … இப்ப சின்மயி வராம விட்டதுதான் பிரச்சனையா? அவ வராததுதான் பொருளாதார பிரச்சனைக்கு காரணமா? அவர் வந்தா ஈழத்தமிழர் பிரச்சனைதான் தீருமா? இதுக்கு இவர் நாராயணனக்கூட பிரார்த்திக்கிறாரம்…. ஏன் நாராயணன்ட சொல்லி ஈழத்தமிழர காப்பாத்த வேண்டியது தானே…
  இதுக்கு ஒரு துப்புகெட்ட பதிவு வேறு……. நாசமா போக ……..

 4. Raja says:

  //நானும் அவரது ரசிகர்களும் தேற்றிக்கொண்டிருப்போமோ?
  நானும் வாரவாரம் தேடிக் கொண்டிருந்தேன். சீனிவாஸ்க்காக இன்னும் பார்க்காலாம்.

 5. vijayasarathyr says:

  வணக்கம் பிரஷாந்தன்.

  உங்க பாஷையில கேட்டா, நாங்க நாசமா போனா நாட்டின் பொருளாதாரமும், ஈழத்தமிழர் பிரச்சனையும் தீர்ந்திடுமா என்ன?

  ஏன் இந்த கொலை வெறி உங்களுக்கு. இது பிரச்சனைகளை அலசும் பதிவல்ல. என் சிந்தனைகளை மட்டுமே பிரதிபலிக்கும் ஒரு இடம். பொருளாதார பிரச்சனை, ஈழத்தமிழர் பிரச்சனை எல்லாத்துக்கும் தனியா நிறைய பேர் எழுதறாங்க. நானும் அதனை படித்து என் எண்ணன்ங்களை சொல்லியிருக்கிறேன்.

  போராட்டங்களும், அரசியல் சார்ந்த திணிப்புகளும் சேர்ந்தது தான் நம் அன்றாட வாழ்க்கை என்றாகிவிட்ட பிறகு, அந்த அந்த பிரச்சனைகளின் உள்ளே இருந்து நம்மால் முடிந்ததை செய்வதுதான் ஒரே வழி. சும்மா வாழ்க்கையின் மேல் நீங்கள் கொண்ட வெறுப்பை மற்றவர்களிடம் காண்பிப்பது வழியல்ல.

  உங்கள் மறுபொழிக்கு நன்றி. மீண்டும் வாங்க.

 6. நீங்க சொல்லுரதும் சரிதான் …. என்ன செய்ய ரொம்ப நொந்து போய்ட்டோம்…..

 7. அன்புள்ள ப்ரஷாந்தன்,

  இலங்கை தமிழர் வாழ்வில் அமைதி பிறக்க எங்கள் குடும்பத்தாரின் ப்ரார்த்தனைகள். உங்கள் மறுமொழி பார்த்து ஒரு கேள்வி, உங்களிடம்: “இந்த பிரச்சனையால், நீங்கள் ப்ரொஸிங் செய்வதை நிறுத்தவில்லையே? இந்த பதிவின் தலைப்பறிந்து இங்கு வந்திருக்கிறீர்களே! இலங்கை தமிழரை பற்றி மட்டும் கவலையிருந்தால் நீங்கள் இதற்கு வந்துகூட இருக்கக்கூடாது என்பதுதானே சரி?

  அன்புடன்
  சத்தியமூர்த்தி

 8. சத்தியமூர்த்தி அவர்களின் கேள்வி அருமையானது….. நீங்கள் சொல்வது சரிதான் .. தவறுதான்… தாழ்மையுடன் ஏற்றுக்கொள்கிறேன்… இனைய வெளிக்கு நான் இப்பொழுதுதான் அறிமுகமானவன் …
  அந்த பின்னூடம் இட்ட அன்றூ நான் இருந்த மனநிலை அப்படி.. இதை நியாய படுத்த நான் முயற்சிக்கவில்லை… ஆத்திரக்காரனுக்கு புத்தி மத்திமம் என்று விளங்கிக்கொண்டேன்.
  மன்னியுங்கள் …. வாழ்த்துங்கள் ….

 9. Pingback: Digitising Thoughts » Blog Archive » மலேசியா வீட்டு மருமகள் இப்படி செய்யலாமா?

 10. கதிரவன் says:

  நன்று நண்பர்களே நமக்குள் பிணக்கு வேண்டா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *