Home » நாட்டு நடப்பு

மெகா பஜாரு..படா ஜோரு

29 January 2009 5 Comments

”லூலூக்கு போவோமுங்க அங்க ஒண்ணுமே வாங்கமாட்டோம்…
காரிபோர் போவோமுங்க நாங்க டைம் பாஸிங் பண்ணவேணும்….”

நான் வெளியூர்களுக்கு வேலை நிமித்தமாக (கெக்றான் மெக்றான்) சென்றிருக்கிறேன் (துபாய், சார்ஜா, அபி தாபி, பக்ரீன் போன்ற). அங்கு இருக்கையில் இதே போல் மாத மளிகை தேவையை பூர்த்தி செய்ய காரிஃபோர், லூலூ (தமிழ்ல எழுதும்போது பெயர் காமெடியாத்தான் இருக்கு) நண்பர்களுடன் செல்வது வழக்கம் (”வழக்கம்” நிர்மலா பெரியசாமி தோணியில்). ஏனென்றால் ”அடிக்கடி” போவோம். சும்மா இருந்து ”கடி”த்தாலும் போவோம்.அங்கே ”அடிக்கு அடி” தான் போவோம். அப்பொழுதுதானே நேரத்தை வீணாக்க முடியும்.

அங்கெல்லாம் ஷாப்பிங் ஒரு பொழுது போக்காகவே இருக்கிறது என்பது என் கருத்து. குடும்பத்துடன் வெளியே போக ஒரு சந்தர்ப்பமாகவே இருந்திருக்கிறது. கிடைக்கும் இரண்டு நாள் லீவை ஒரு நாள் அதிலேயே கழித்துவிடுவோம். ஆம் சிலர் கழிப்பது கூட அங்கேதான் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

மத்தியானமாக கிளம்பி வெளியில் ஒரு உடுப்பியிலோ அல்லது சரவணபவனிலோ சாப்பாட்டுக் கதையை முடித்துக் கொண்டு, அப்படியே லூ லூ போய்விட்டு நைட் டாக்ஸியில் வரும்போதே இரவு சாப்பாட்டுக்கு மீண்டும் உ அல்லது ச யிலோ ஹோம் டெலிவெரிக்கு சொல்லிவிட்டு அந்த நாளை இனிதே முடித்துக் கொண்டுவிடுவோம்.

தள்ளுபடி….

சும்மா சொல்லக்கூடாது, அங்கே தள்ளுபடியோ தள்ளுபடிதான் போங்க. 5 திர்ஹாமுக்கு (துபாய் ரூபாய்) 10 குளியல் சோப், 25 திர்ஹாமுக்கு ஃபாமிலி பாக் மேகி பாக்கெட் நாலு கிடைக்கும். உண்மையிலேயே அங்கு கிடைக்கும் தள்ளுபடி நம்மை செலவு செய்யும்படி செய்யும் கூடவே உபயோகமானதாகவும் இருக்கும். இதை ஒரு வியாபார யுக்தியாகக் கருதி என்னற்ற பொருட்களின் மேல் தள்ளுபடி கொடுத்தாலும் அநேகமான பொருட்கள் நமக்கு தேவையானதாக இருப்பதே இதன் சிறப்பம்சமாக கருதுகிறேன். நானே நேரடியாக அனுபவித்தும் இருக்கிறேன்.

இடம்…

இன்னொரு நல்ல விஷயம் என்னவென்றால் அங்கு நம் வாகனங்களை நிறுத்துமிடம் மிக பெரியது. வாகனத்தை நிறுத்துவதற்கும் சரி அதை திரும்ப எடுக்கும் போதும் சரி மற்ற வாகனங்களை பற்றிய கவலை வேண்டாம். நம்மூரில் நம்ம கார் முன்னேதான் ஒரு ஸ்கூட்டர் நிற்கும், நம் ஸ்கூட்டருக்கு பின் கண்டிப்பாக இன்னொரு ஸ்கூட்டரோ அல்லது ஒரு சைக்கிளோ நிற்பது உறுதி. அது நாம் அங்கு போவதற்கு முன்னமே தெரிந்துவிடும். இது நிச்சயமாக இடப்பற்றாக்குறை என்று காரணம் காட்டி விடமுடியாது..விடவும் கூடாது.

உற்றார் உறவினர்….

நாம் ஊரிலிருந்து வருகிறோம் என்ற செய்தி குடும்பத்தாருக்கு எட்டிய உடனே லிஸ்ட் ரெடியாகிவிடும். அந்த சோப் போன தடவை வாங்கிவந்தியே…அது பக்கத்து வீட்டு பங்கஜத்துக்கு வேணுமாம் என்று தாயார் முதல் சாமானை லிஸ்டில் சேர்த்துவிடுவார் (அது சரி, அது என்னங்க ’பக்கத்து வீட்டு’ அப்படின்னாலே பங்கஜம் தானா? பாவம் அந்த பங்கஜம்)

நாமும் அங்கு வித்து போகாத வாசானாதிரவியங்களை (தள்ளுபடியில் போட்டால் மட்டுமே. இல்லையென்றால் என்ன த.படில போட்டிருக்கோ அதுதான்) எக்கசக்கமாக வாங்கிவந்து ரோட்டுல தெய்வமேன்னு போகிறவனையெல்லாம் கூப்பிட்டு கொடுப்போம். செம கப்பாக இருந்தாலும், ஃபாரின் செண்ட்டென்று பெருமைப்பட்டுக் கொள்வார்கள். இந்த வரிசையில் நெடுங்காலமாக இடம்பெற்று வரும் சில பொருட்கள் பெளடர், செண்ட், சோப், சவர ப்ளேடு,, பென், குழந்தைகள் ஸ்கூல் பாக்ஸ் செட், ட்ரை ஃப்ரூட்ஸ். சிலர் தலையனை, பெட்ஷீட்டு, பெட்டிகள்ன்னு கொஞ்சம் பெரிய லிஸ்டோடு வருவார்கள். இன்னும் சிலர் ரமலான் காலத்தில் டிவி, மைக்ரோ வேவ், எமெர்ஜென்சி விளக்கு என்று மெகா பட்ஜெட்டோடு வருவார்கள்.

நானும் எனது அண்ணணும் இது போன்று ஷாப்பிங் போனால், அங்கு முக்கியமாக முதலில் வாசனை திரவியங்கள் விற்கும் கடைக்கு சென்று கடைக்காரருக்கு வாங்குவதாய் ஒரு மனப் பிராந்தியை உண்டு பண்ணி காசு கொடுக்காமலேயே இரண்டு நாட்களுக்கு போதுமான செண்ட் ஆடைகளில் அடித்து கொண்டு வந்து விடுவோம் (கர்சீப் உள்பட).

சாக்லெட், திராட்சை, முந்திரி போன்ற பொருட்கள் அங்கு கொட்டிக் கிடக்கும். நான் வலது பக்கத்தை பார்த்துக்கொண்டே இடது கையை விட்டு இரண்டு (இரண்டுன்னா இரண்டா….ஒரு கைங்க) அள்ளி போட்டுக் கொள்வேன் (வாயிலதான்). நாங்க டேஸ்ட் பார்க்கிறோம்…ஏன் இப்படி எத எடுத்தாலும் தப்பாவே நினைக்கிறீங்க எங்களை.. L

இங்க நம்ம நாட்டுல பின்பற்றாத பல விஷயங்கள் அங்கே பின்பற்றுவோம். உதாரணத்திற்கு சில:

1.   அங்க ட்ராலி நகர்த்தும் போது அடுத்தவ்ர் மீது பட்டுவிட்டால் 256 சாரி/எக்ஸ்யூஸ் மீன்னு அடிச்சிவிடுவோம். நம்ம ஊர்ல இடித்து விட்டு எதுவுமே நடக்காதது போல் போயிகிட்டே இருப்போம்.

2.   மத்தவங்களுக்கு சாமான் எடுத்துக் கொடுத்து உதவுவோம். இங்க முதல்ல நம்ம கதை அப்புறம்தான் மத்ததெல்லாம்

3.   கார் பார்க் செய்யும் போது மத்தவங்க கார் மேலே ரொம்ப அக்கறை எடுத்து பார்த்து பார்த்து நிறுத்துவோம். இங்க போறபோக்கில ஒரு கோடு போட்டு போயிகிட்டே இருபோம். நம் கார்ல ரெண்டு கோடு விழுந்தத வீட்டுக்கு போய்தான் கவனிப்போம் அது வேறே விஷயம். என்ன கொடுமைன்னா..அவன சகட்டுமேனிக்கு திட்டித்தீர்ப்போம்.

4.   அடுத்தவங்க குழந்தைகள நேருவோடா ஜோரா கொஞ்சுவோம். இங்க “வளர்த்து இருக்காங்க பாரு புள்ளைய..புள்ளையா அது” டயலாக் தான்.

5.   மத்தவங்க இடிச்சிட்டா..”இட்ஸ் ஓகே”ன்னு சொல்லி முடிக்கிறது அங்க. ஏன் சார், என்ன அவசரம், போங்க(வெறுப்பாய்)ன்னு நம்ம 185க்கு வந்த ரத்தக்கொதிப்பை வெளிப்படுத்துவோம்.

இவ்வளவு தாங்க என் சொந்த அனுபவத்தில தெரிஞ்சது…இதுக்கு மேலே உங்க அனுபவத்தை எழுதுங்க…

இப்படி என்னதான் ஜாலியா(?) ஊர்சுற்றினாலும், நாள் முழுவதும் நம்ம மனசுல நம்ம பொண்டாட்டி, பிள்ளைங்க, வயதான பெற்றோர்கள் நினைவுதான் ஓடிகிட்டு இருக்கும். அதுவும் ஒரு வகையான வருத்தம் கலந்த துக்கம். அதப்பத்தி ஒரு இடுக்கை போடலாம் என்றிருக்கிறேன்.

5 Comments »

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.