டேய்…அங்க நிக்கறது புஷ்தானே?

நையாக்ரா நீர்வீழ்ச்சி பார்த்துக்கிட்டு இருந்த ராமசுப்பு சடனா பேஜாராயிட்டான் . அங்க வந்த பொண்ணுங்கள நீர்வீழ்ச்சி மாதிரி செம ஜொள்ளு விட்டுக்கிட்டிருந்த கஜாவின் கையை சொறிந்தான்.

ராமசுப்பு: என்னடா? சொல்லு.
கஜா: மச்சான் அது புஷ்தானே?
ராமசுப்பு: டேய்…ஆமாம்டா! (அதே பேஜார்).
கஜா: என்னதான் ஒபாமா ப்ரெஸிடெண்ட் ஆயிட்டாலும், அடுத்த நாளேவா சைட் சீயிங் வரணும். திஸ் ஈஸ் டூ மச்.

சரி, நாம வேலைக்குச் சேர்ந்த ஒபாமாவின் அத்தியாவசியமான உடனே செய்ய வேண்டிய கடமைகளை பார்த்தோம். இந்த நேரத்துல நம்ம, கடந்தகால தலைவர், புஷ் என்ன செய்துக் கொண்டிருப்பார் (அ) செய்ய வேண்டும்?

1.   ப்ராவிடெண்ட் ஃபண்டு ஃபார்ம் எல்லாம் நிரப்பணும். அப்பத்தானே செலவுகளை சந்திக்க முடியும்.

2.   அமெரிக்காவுல பென்சன் எல்லாம் இருக்கும்னு நினைக்கிறேன். அதுக்கு வேண்டிய வேலைய பார்க்கணும். இதுல என்ன கஷ்டம்னா, அவர் இப்போ ப்ரெஸிடெண்ட் இல்ல, அதனால் பேப்பர்ஸ் வேகமா மூவ் பண்ண, ஒரு மைக்கேல்லேயோ அல்லது ராபெர்டையோ பிடிக்கணும்.

3.   பத்திரிகைலேர்ந்தும், தொலைக்காட்சியிலேர்ந்தும் நிறைய இண்டெர்வியூ (வேலைக்கு இல்லைங்க) கால்ஸ் வரும். முன்னாடி மாதிரி இல்ல, இப்ப அவங்களும் நிறைய எசகுபிசகான கேள்வி கேட்பாங்க இவரும் கரெக்ட்டா பதில் சொல்லணும்.

4.   சொல்ல முடியாது நம்ம உலக நாயகனின் அடுத்த படத்துல நடிச்சாலும் ஆச்சர்யபடறத்துக்கு இல்ல (தசாவதாரம் – 2). புஷ் முகமூடிக்கு பதிலா புஷ்ஷே நடிக்கலாம்.

5.   வீட்டு பக்கத்துல இருக்குற சர்ச்சுக்கு இனிமே டெயிலி காலை மாலை என டூ டைம்ஸ் போயிடுவாரு.

6.   கோபால் பல்பொடி போல இந்தியா, இலங்கை, மலேஷியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு உல்லாச சுற்றுப்பயணம் மேற்கொள்ளணும்.

7.   மனைவியோட இந்தியாவுக்கு வந்து மஹாபலிபுரம், கன்னியாகுமரி மற்றும் ஆக்ராவின் தாஜ்மஹல் எல்லாம் சுத்திப் பார்க்க ஸ்கெட்யூல் போடுவார் (நடுவில அவர் மனைவி வந்து ”ஏங்க அப்படியே அந்த வேளாண்கன்னிக்கு போயிட்டு வரலாங்க, நீங்க நல்லபடியா ரிலீவ் ஆனா வர்றதா வேண்டிகிட்டிருக்கேன்” அப்படின்னு ஒரு அடி போடுவாங்க).

8.   .முக்கியமா சொல்லவந்த பாயிண்ட வுட்டுப்புட்டேனே…அதாங்க “பயோக்ராஃபி” எழுதறது. நிறைய பேர் பத்தி வெளிச்சம் போட்டு காட்டுவார். அவரை திட்டனதை கூச்சப்படாம எழுதுவார். புக் டைடில் என்ன வைப்பார்?

9.   வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் லைப்ரரி சென்று வருடச் சந்தா செலுத்தி உறுப்பினர் ஆகணும. புக்ஸ் எடுத்து தலைகீழாக படிக்கணும்

10.  பார்பராவின் ஜாதக நகல் எடுத்துக் கொண்டு நல்ல வரன் தேடும் வேலையில் இறங்கிடுவார்.

11.  வீட்டில் எலி, கரப்பாங்களை ஒழிக்கும் (சதாமை ஒழித்தவராயிற்றே) நடவடிக்கைகளில் இறங்கிவிடுவார். அதுதான் ஈராக்குடன் நடந்த போரில் நிறைய ஆயுதங்களை பார்த்தவராயிற்றே.

12.  இனி காலையில் எழுந்தவுடன் அனைத்து செய்தித்தாள்களை மேலும், கீழும், சைடாகவும் துழாவித் துழாவி படித்து எல்லா உலகத் தலைவர்களின் முழுப்பெயரையும் சரியாகத் தெரிந்து கொள்ளணும்.

13.  நமக்கு இன்னோரு ப்ளாகர் கிடைத்து விட்டார். இது தானே தற்போதைய ட்ரெண்ட்.

14.  தான் செய்த அனைத்து நிஜ வாழ்க்கை காமெடியையும் வடிவேலுவிடம் விற்க வேண்டும்.

15.  உலக வரைபடம் வாங்கி லெளராவுடன் சேர்ந்து நாடுகளை கண்டுபிடிக்க வேண்டும் (ஆமாங்க! ஆமா. என்ன கேள்வி இது, லெளராதான் கண்டுபிடிப்பார்).

This entry was posted in General, நாட்டு நடப்பு and tagged , , , , , , , . Bookmark the permalink.

6 Responses to டேய்…அங்க நிக்கறது புஷ்தானே?

 1. RAM says:

  Nalla Comedy…”Bush-kke intha nilamai thana…avar peria oil tycoon appadinnu sonnanga…

 2. விஜய்,

  அருமையாக இருக்கு. புஷ்ஷ வச்சி ஒண்ணும் காமெடி கீமெடி பண்ணலயே?

 3. vijayasarathyr says:

  வாங்க ராம். ரொம்ப நன்றி. என்ன செய்யறது வயசான காலத்துல வேல போன அவருக்கு மட்டுமா, நம்ம தலைவர்களுக்கும் இதுதான் கதி.

  என்ன புஷ் ஆயில் டைக்கூனா? சரியா சொல்லுங்க சார், தமிழ்ல வேறே மாதிரி இருக்கு. :-)

  ஆ(ய்)யில் டைக்கூன் பத்தி கொஞ்சம் விரிவா சொல்லுங்க.

 4. vijayasarathyr says:

  சத்தியா,

  வணக்கம் வெச்சிக்கிறேன். மெய்யாலுமே இங்கிலீபிசுல புஸ்ஸ பத்தி படா டமாசா இருந்துச்சு பா…பட்சி பட்சி சிர்ச்சி சிர்ச்சி வவுறு நோவெத்துட்சி…

  அட்தது இன்னா நைனா?

 5. prasanna says:

  தஸ்ஸு புஷ்ஷுண்ணு இங்கிலிபீசுல எழுதாம, தமிழ்லயே புஷ்ஷ புஸ்ஸாக்கிட்டீங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *