Home » General, அனுபவம், சிந்தனைகள், பொது

பிக் பஜார்; படா பேஜாரு…

25 January 2009 9 Comments

நேற்று பிக் பஜார் சென்று வந்தேன். அங்கு போன பிறகுதான் தெரியும் அது பிக் பேஜார் என்று. தி நகர் ரங்கநாதன் தெருவுக்குள் நுழைந்த ஒரு உணர்வு. என்ன ஒரு சின்ன வித்தியாசம் என்றால், வெய்யிலில் அலைய மாட்டோம், கூவி அழைத்து விற்பனை செய்வதிலிருந்து எல்லா விலைகளிலும் பொருட்கள் கிடைக்கும் என்பதுவரை, இது ஒரு ரங்கநாதன் தெருவே.

கூட்டம் அலைமோதுகிறது. வாங்குபவர்கள், நோட்டம் பார்க்க வந்தவர்கள் என ஒரு மினி சென்னையே உள்ளுக்குள் உலவுகிறது. “இந்த மாதம் உங்கள் சேமிப்பு என்ன?” என்பது போன்ற விளம்பரங்களின் விளைவே இந்த கூட்டம் என கருதுகிறேன்.

என்னுடைய நேற்றய அனுபவம் இங்கே:-

1.   அநேகமான பொருள்களின் விலைக்குறைப்பு என்பது முக்கால்வாசி உங்கள் வீட்டின் அருகில் உள்ள மளிகை கடையிலேயே கிடைக்கிறது.

2.   நாம் நினைப்பது போல அப்படியொன்றும் பெரிதாக சேமிப்பதாக எனக்கு தெரியவில்லை. ரூ.3000க்கு சாமான் வாங்கினால், ரூ.300 சேமிப்போம். இதில் ஆட்டோவுக்கான ரூ.100 போய்விடும். அலைஞ்சு திரிஞ்சு நாம் தேடி எடுத்ததற்கான சன்மானமே அந்த ரூ.200 என்று கருதுகிறேன். நான் வழக்கமாக வாங்கும் மளிகைக் கடையில் தொலைப்பேசியில் சொன்னால் வீட்டிற்கே சாமான் வந்துவிடும்.

3.   சேமிக்கிறோம் என்றெண்ணி இரண்டு மாதத்திற்கான சாமான் வாங்கிவிடுவோம். நம் மளிகைக் கடையில் ஒரு மாத கணக்கே வரும். க்ரெடிட் கார்டில் வாங்குபவர்கள் தேவையில்லாமல் 2 மாதத்திற்கு வாங்குவதினால், வட்டி கட்ட வேண்டி வரும். இவர்களுக்கு அந்த ரூ.200 சேமிப்பும் கிடையாது.

4.   நமக்கு தேவையான அன்றாட பொருட்களின் மேல் தள்ளுபடி கிடைப்பது அரிது.

5.   இடப் பற்றாக்குறையை தீர்க்க உடனடியாக ஏதாவது செய்தால் நன்றாக இருக்கும்,

6.   பார்க்கிங் மற்றொரு தொல்லை. இது பிக் பஜாரின் குறையல்ல. ஆனாலும் கொஞ்சம் சிரமமாகவே இருக்கிறது.

7.   நமக்கு தேவையான பொருள்கள் பல கம்பெனிகளின் தயாரிப்புகளில் கிடைப்பது மிக நல்ல விஷயமாகப்படுகிறது. எந்தத் தயாரிப்புகளை வாங்கலாம் என்ற முடிவெடுக்க நல்லதொரு வாய்ப்பினை அளிக்கிறது. அதுவே நம் உள்ளூர் கடைகளில் வாங்கினால் கிடைப்பது கடைக்காரன் கொடுப்பதுதான்.

8.   ஒரே இடத்தில் எல்லா பொருட்களும் கிடைப்பது நம் அலைச்சலை தவிர்க்கிறது அத்தோடே நம் நேரத்தையும் சேமிக்கிறது.

9.   தள்ளுபடி இருந்தால் மட்டுமே முக்கால்வாசி மக்கள் பொருட்களை பார்க்கிறார்கள். மற்றவைகளை (நல்ல பொருளாய் இருந்தாலும்) சீண்டிப்பார்த்து சிரமம் எடுத்துக் கொள்வதில்லை.

10.  என்னதான் வீட்டிலிருந்து கிளம்பும் முன் வாங்கவேண்டிய சாமான்களின் லிஸ்ட் எடுத்துக் கொண்டு போனாலும், அங்கு தேவையற்ற பல சாமான்களை வாங்கிவிடுவோம். உபரியாக வாங்க வேண்டியதை முக்கியமாக வாங்கி, முக்கியமானதை விட்டுவிட்டு வருவோம். இதனால் அதிகமான செலவு மற்றும் முக்கியத் தேவைகளை வாங்காதது போன்ற மைனஸ் பாயிண்டுகள் உண்டு.

இதே சுப்பர் மார்க்கெட் வெளிநாடுகளில் எப்படி என்பதை இந்தப் பதிவின் தொடர்ச்சியாக அடுத்த பதிவில் பதிக்கிறேன் (பெரிய சிற்பி..பதிச்சிட்டாலும் அப்படின்னு நீங்க சொல்றது என் காதுல விழவே இல்லைங்க).

9 Comments »

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.