புயலாய் வந்த ஒரு இசை

தமிழ்நாட்டு மக்கள் என்ன தவம் செய்தார்களோ நமக்கு ஆசிர்வதித்து அனுபப்பட்ட இசை மேதைகள் போல் வேறு யாருக்கும் கிட்டவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

90களில் தென்றலென மிதந்து வந்து நம்மை தன் வசமாக்கிக்கொண்ட அந்த இசை – ஆம் அதற்கு ரஹ்மான் என்ற பெயரும் உண்டாம் – தென்றலல்ல புயல் என்று புரிய கொஞ்ச காலம் தேவைப்பட்டது நமக்கு.

மெதுவாக அந்த தென்றல் குறைந்த காற்றழுத்த தாழ்வு மணடலமாக மாறி விட்டது என்று நாம் பெருமைப்பட்டு கொண்டிருந்த நேரத்தில் அது புயலாகவே மாறி இருந்திருக்கிறது. நாம் தான் உணரவில்லை போலும்.

கவிஞர் வாலி ஒரு கவிதையில்(20-09-2006):
இசைப்புள்ளியின் இறைக்கைகள்
இரு துருவங்களைத் தொடும்; அவை
உலகத்தார்
உட்செவி வயல்களில்
நல்லிசை
நாற்றுகளை நாளும் நடும்! என்றார்.

இன்று ரஹ்மான் அதை தொட்டேவிட்டார்
வாலியின் சொல்லை மெய்பித்துவிட்டார்
”கோல்டன் க்ளோப் அவார்டு”
அது இசைப்புயலின்
மேற்கத்திய தேசத்துக்கு க்ரீன்கார்டு!

சபாஷ் ரஹ்மான்!
உங்கள் வெற்றி தொடரட்டும்
அந்த அண்டார்டிகாவிலும் உங்கள் இசை ஒலிக்கட்டும்.

இந்த புயல் கரையை கடக்காமல் தமிழ்நாட்டிலேயே தக்கவைத்துக் கொள்ள வேண்டும்
அவ்வப்போது நாங்கள் அவர்கட்கு (வட மற்றும் மேலை நாடு) அனுப்பி வைக்கிறோம்.

This entry was posted in சினிமா இசை. Bookmark the permalink.

One Response to புயலாய் வந்த ஒரு இசை

  1. Prasanna says:

    Its definitely a great achievement and ARR has made every Indian proud. More importantly its a great honour for tamilians. Lets wish ARR to achieve greater heights..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *