கற்றது தமிழ்

வெகு நாள் ஆகிறது வலைப்பதிவு செய்து. மறுபடியும் ஆரம்பிக்கலாம் என்று முடிவு செய்து ஆனால் இனி தமிழில் மட்டுமே என்ற தீர்க்கமான முடிவு செய்துவிட்டேன். முதல் பதிவு ஒரு நல்ல எனக்கு பிடித்த ஒன்றாக இருக்கவேண்டும் என்று நினைத்தேன். அதற்கேற்றார்ப்போல் அமைந்தது கலைஞர் தொலைக்காட்சியில் கற்றது தமிழ் திரைப்படம்.

இந்தப்படம் ஏன் வெற்றி பெறவில்லை என்ற என் கேள்விக்கு இன்னும் விடையில்லை. கதாநாயகன் ராம் இயற்கையாக நடிப்பதற்க்கு அப்படியொன்றும் ப்ரயத்தனப்பட்டாற்ப்போலே தெரியவில்லை. அவர் வாழ்ந்திருக்கிறார் என்பது தான் உண்மை.

படத்தின் பெயருக்கு ஏற்றார் போல, பல இடங்களில் தமிழ் வாசனை தெரிகிறது அதுவும் வாழ்ந்திருக்கிறது.

“நான் உயிரோடிருப்பதே எனக்கு வலிக்கும் போதுதான் தெரிகிறது” – இது அந்த படத்தில் ஒரு பாடலில் வரும் வரி. எல்லோருமே சொந்தக் குரலில் தான் பேசியிருக்கிறார்கள். இருந்தும்??!!

அது ஏனோ பல நல்ல படைப்புகள் தமிழ் சினிமாவில் வந்துபோன போதும் எதுவுமே தேசிய அளவிலோ அல்லது உலகளவிலோ அங்கீகாரம் பெரிதாக கிடைத்தாக தெரியவில்லை.

அவ்வப்போது ஏதேனும் ஒரு படத்திற்கு கிடைக்கும். அதையெல்லாம் நான் வெறும் ஆறுதலாவே கருதுகிறேன்.

ஆனால் ஒன்று, இவையெல்லாம் நம்மை தடுத்துவிடப்போவதில்லை. நாம் உயரே போய்க்கொண்டுதான் இருக்கிறோம். ஏ.ஆர். ரஹ்மான் வென்ற “கோல்டன் க்லோப்” அவார்டே அதற்கு சான்று. இப்பொழுது “நான் கடவுள்” வருகிறது. அதற்க்கென்ன கிடைக்கிறது என்று பார்ப்போம்.

This entry was posted in இந்திய சினிமா and tagged , , , , . Bookmark the permalink.

5 Responses to கற்றது தமிழ்

 1. நானும் இந்த படம் பார்த்தேன். ஆனால் கதாநாயகனாக நடித்தவர், ஜீவா அல்லவா? அவருடைய ராம் படத்தின் சிறந்த நடிப்பின் நினைவில் அவர் பெயரை ராம் என்று சொல்லிவிட்டீர்களோ?

  ஜீவா நிச்சயம் ஒரு முதல் தர நடிகர்தான்.

 2. vijayasarathyr says:

  மிக்க நன்றி.

  நீங்கள் சொல்வது போல அவரின் ராம் படத்திற்கு பிறகு ஏனோ அவரை நான் ராமாகவே குறிப்பிடுகிறேன்.

 3. RAM says:

  I have read two beautiful articles….1. About “TRIPLICANE”….SUPERB DESCRIPTION…2. CINEMA…NO IDEA….Pl continue sir…

 4. BUVANESH says:

  neenga intha padathai ippo than tv la parthutu nalla iruku yen oodalainu soldringa,ithu ungaluku konjam ovara illaya intha padam vanthu 2 varusam aaga poguthu ippo than intha padathai pathi ungaluku theriyutha?yenaku pidicha padathula katrathu tamil than top .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *