இதெல்லாம் இருந்தா….அது…..

 

 1. சனிக்கிழமையில எங்க பார்த்தாலும் எல்லா தெருவிலும் ஒரே கூட்டமா இருக்கா?
 2. வசவசன்னு வண்டிகள் அலையுதா?
 3. நீங்க பார்க்கும் வீடுகள்ள 10க்கும் மேற்பட்ட குடித்தனங்கள் இருக்குதா?
 4. அப்படீ நடந்து போகும் போது உங்க எதிர்தாப்புல ஒருவர் வேஷ்டி கட்டிக்குட்டு சட்டப்போடாம செகப்பு துண்டால அக்குள துடைச்சிக்கிட்டு வறாரா?
 5. தெருவுக்கு 3 கோவில் இருக்குதா?
 6. அட்ரஸ் கேட்ட்கும் போது நீங்க சந்திக்கும் 5 4 பேரு பார்த்தசாரதியா?
 7. வாடகைக்கு வீடு தேடும் போது நீங்க கேட்ட வாடகைக்கு பல வீடு கிடைக்குதா?
 8. ரோட்டுல சிறுவர்கள் தானாகவே பந்து இல்லாமயே பந்து வீசி அத பேட்டும் இல்லாம வீசின பந்த அடிச்சி அப்படியே கேட்ச் பிடிச்சிக்கிட்டே போறானா?
 9. இடம் எந்நேரமும் ரொம்ப பரபரப்பா இருக்குதா?
 10. பூக்காரி மெட்ராஸ் பாஷையில சகட்டுமேனிக்கு அவ வூட்டுகாரன திட்டிக்கிட்டு இருக்காளா?
 11. சாயந்திரம் 6 மணிக்கு மேலே மடிசார் மாமியும் பஞ்சக்க(ஷ்ட்ட)ச்ச மாமாவும் தென்படுகிறார்களா?
 12. இரவு 2 மணிக்கு மேலேயும் ஆள் நடமாட்டம் இருக்குதா?
 13. ஆட்டோஸ்டாண்ட்ல ஆட்டோ எடுக்க போனா அந்த ட்ரைவர்கிட்ட சாராய வாடை வருதா?
 14. எந்தத்தெருவுல பார்தாலும் ஒரு சின்ன கூட்டம் க்ரிகெட் விளையாடிக்கிட்டு இருக்கா?
 15. நிறைய மேன்ஷன்ஸ் தென்படுதா?

இன்னும் புர்லையாஅட இன்னாபா நீ சரியான டீப் லைட்டாக்குர சரி அத்தவுட்டு இத்த பட்சிக

குளம், தெரு கிரிகெட், W.V.ராமன், ராகவேந்திரர் கோயில், பார்த்தசாரதி கோயில், கோஷ்டி (பெருமாள் ஊர்வலம் வரும்போது முன்னாடியும் பின்னாடியும் வருபவர்கள்), மெரினா பீச், தெரு ஓர கடைகள், மேன்சன்ஸ், ரத்னா கபே, சேப்பாக்கம் மைதானம், பாரதியார் வீடு, ஹிண்டு ஹை ஸ்கூல், திரு. சந்திரசேகர் (நோபல் பரிசு பெற்றவர்) இவைகளில் எதைச் சொன்னாலும் உடனே நினைவுக்கு வருவது

இதெல்ல்லாம் இருந்தா () பார்க்க நேர்ந்தாஅது எங்கதிருவல்லிக்கேணி () திருஅல்லிக்கேணி () வ்ருந்தாரண்யம்ங்கோ…..

அப்புறம் இன்னொரு மேட்டரு…அந்த நாள் கனவுக்கன்னி தேவிகா இந்தக் காலத்து கனவுக்கன்னி திரிஷா ரெண்டு ஃபிகர்ஸ்ம் நம்ம திருவல்லிக்கேணி ஏரியா தானுங்கோ…

சரி இத்தெல்லாம் உட்டா கூட நம்ம ஜாதி(ப்ளாக்)ய சேர்ந்த சின்மயி same same ஏரியா தெற்தா…

இத்தப்போல நம்மலாண்ட நெரியா மேட்டர்குது…

This entry was posted in நாட்டு நடப்பு and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

6 Responses to இதெல்லாம் இருந்தா….அது…..

 1. பெருமைதாங்கோ.

  கணித மேதை ராமனுஜம், எழுத்தாளர் சுஜாதா, பெருந்தலைவரின் தலைவர் சத்தியமூர்த்தி, கனகா அம்மா நடிகை தேவிகா, நடிகை ராஜசுலோசனா, “காசேதான் கடவுளடா, கல்யாண பரிசு” காமெடி புகழ் சித்ராலயா கோபு இவங்கள்ளாமும் தில்லிக்கேணி தாங்கோ.

  லேடஸ்ட்டா, தமிழ் பட நம்பிக்கைல ஒண்ணு என்னான்னா, ஒரு சீன் தில்லிக்கேணில எடுத்தா படம் ஹிட். வாரணம் ஆயிரத்துலகூட “ஏத்தி ஏத்தி” பாட்டுக்கு ஒரு பிட் பா.சா. கோவில் பக்கம் எடுத்திருக்காங்கோவ்.

 2. R.Sridhar says:

  மெய்யாலுமா? படா ஷோக்கா மாட்டர் உட்ரியே. அப்படியே நம்ம பீச்சாண்ட கரிகெட் ஆட்னதையும் எடுத்தூடறது. திருவள்ளுவர் கூட உஙக ஆளுன்னு கேள்வி

  கொட்டிவாக்கம் கஜா

 3. vijayasarathyr says:

  இம்மா மேட்டர சும்மா அப்டியே குத்துட்டபா…டாங்க்ஸ்..

 4. vijayasarathyr says:

  அண்ணாத்த இன்னாத்துக்கு இம்மா ஃபீல் ஆவர…சொல்ட்ட இல்ல…நம்ம கேம் நைனா கிரிகெட்டு…தோ…வந்துனேகுது பார்…

 5. சும்மா தூல் கிளப்புரீங்க!சென்னைதமிழ் மணக்கிறதே? ???????தொடரட்டும் உங்கள் தமிழ் சேவை!
  அன்புடன்
  கமலா

 6. vijayasarathyr says:

  வணக்கம் கமலா..

  நம்ம ஊரு லாங்குவேஜ் நாம பேசாம யாரு பேசறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *