கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க

நான் என்னுடைய அடுத்த பதிப்பு வியாழக்கிழமை எழுதலாம் என்று இருந்தேன். ஆனால் நேற்று பார்த்த ஏர்டெல் சூப்பர் சிங்கர் என்னை உடனடியாக எழுதும்படி செய்துவிட்டது.

 வழக்கம் போல எத செய்தாலும் எப்படி பாடினாலும் குத்தம் கண்டு பிடிச்சே பொழப்ப நடத்தறது நம்ம உன்னிக்கும் சுஜதாவுக்கும் ஒண்ணும் புதுசு கெடையாது.

 உன்னி சார் கொஞ்ச நாள் கச்சேரில பிஸியா இருந்துட்டு இப்பதான் நிகழ்ச்சிக்கு ரிடர்ன் ஆகியிருக்காரு. இந்த ப்ரோக்ராம்ல ஒரு விஷயத்தை பாராட்டியே ஆகணும். வாராவாரம் எதாவது புதுசா பண்றாங்க.

 இந்த வாரம் “கவி வாரம்”. அதாவது க.தாசன், வாலி மற்றும் வை.முத்து பாடல்களை தேர்வு செய்து போட்டியாளர்கள் பாட வேண்டும்.

 போட்டியாளர்களில் ஒருவர் (ரவி) என்னுடன் பணி புரிபவர் என்று சொல்லி கொள்வதில் மகிழ்ச்சி மற்றும் பெருமை கொள்கிறேன். நேற்று விஜய்நாராயணன் வித்தியாசமான மிக கருத்துள்ள பாடலை பாடினார். அது “அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே” என்ற பாடல். நன்றாக பாடினார். இன்னொரு விஷயம் இந்த பாடகர் என் நண்பனின் உறவுக்காரர். அசாத்தியமான திறமை படைத்தவர். மறுபடியும் ம மற்றும் பெ.

 நடுவர்களின் கமெண்ட்ஸ்:

முக்கியமான தகவல்: போட்டியாளர்கள் பாடப்போகும் பாட்டை “அவர் எலிட் ஜட்ஜ் ஜம்புலிங்கம்ஸ்” 10 தடவை கேட்டிருவாங்க.

 உன்னிக்கிருஷ்னன்: நன்னா இருந்தது விஜய். அந்த ஃபீல் இருந்தது. வாய்ஸ் க்ளேரிடியும் இருந்தது. நன்னா இருந்தது. ஒவர் ஆள் (இப்படித்தான் அவர் சொல்லுவார் ஆனா பாடறவங்கள நிறைய குறை சொல்லுவார்) இட் வாஸ் குட்.(இவருக்கே பல பழைய பாடல்கள் தெரியாதுங்கறது ப்ரோக்ராம் பார்த்தா புரியும்.).

ஸ்ரீனிவாஸ்: Over all its good. But தப்பான பாட்டு choose பண்ணிட்டேங்களோன்னு(சில பேர் இப்படித்தான் பேசிப் பழகறாங்க) தோன்றது, இல்ல? (தப்பான பாட்டா? ஏன்? இந்த கேள்வி உங்களுக்கு வரலாம். எனக்கும் வந்தது. விளைவு இந்த பதிவு). டைமன்ஷன்ஸ் நல்லா இருக்கு விஜய்.

 சுஜாதா: அவங்க சொன்னதுதான் மிக கொடுமை. தமிழுக்கே அவமானம்.அவங்க கமெண்ட்ஸ்: நல்லா இருக்கு. பின்னே விஜய் கூடி வேற பாட்டு பாடியிருக்கலாம் இல்லே?  என்ன பேசறோம்ன்னு தெரியாம பேசறாங்களா? அந்த காலத்து டூயட் பாடினாதான் பாட்டா? கவிதையா? கவிதைன்னா என்னான்னு தெரியுமா? என்ன விலைன்னு கேட்பாங்க போலிருக்கு.

 நான் ரசிக்கும் சில பெண் பாடகிகள்ள அவங்களும் ஒருத்தர். ஆனா அது வேறே இது வேறே.

 அவங்களுக்கு அஜீஷ் (இன்னொரு போட்டியாளர்) மேலே ஒரு தனி ஆர்வம் உண்டு. அதாவது நம்ம கவாஸ்கர் மாதிரி. சச்சின் அழகா கேட்ச் விட்டார், சூப்பர ஒண்ணுக்கு போவார், அவர மாதிரி யாரும் போல்ட் ஆக முடியாதுன்னு…

 பாடின பாடல்கள்ளயே இந்த(விஜய் பாடின) பாட்டுதான் எதார்த்தத்த எடுத்து சொன்ன பாட்டு. எத்தன தடவ எத்தன பேரு இந்த பாட்டோட சிறப்ப பேசியிருப்பாங்க.

நீங்க போடற மறுமொழிகள்தான் இதுக்கு தீர்வு. சின்மயி ப்ளாக்ல மெம்பரா இருக்கறவங்க இத அங்க போஸ்ட் பண்ணுங்க.

கண்ணதாசா…அவங்களுக்காக அறியாம செய்த தவறுக்காக நான் உன்னிடம் மன்னிப்புக் கோருகிறேன்.

This entry was posted in சினிமா இசை, தொ(ல்)லைக்காட்சி and tagged , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

6 Responses to கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க

 1. நானும் இந்த நிகழ்ச்சி பார்த்தேன். எனக்கும் மிக பிடித்த பாடல் இந்த “அண்ணன் என்னடா”.

  சுஜாதா, சீனிவாஸ், உன்னி மூவருமே, விஜய் அந்த பாடலை நல்லா பாடாததா சொல்லல. அவங்க சொன்னது என்னான்னா, “இது நல்ல கருத்தான பாடல். நீங்க நல்லா பாடினிங்க. ஆனா அந்த பாடல், உங்க தெறமய காட்ற அளவுக்கு சங்கதி இல்லாத பாட்டு”.

  நானும் முதல்ல உங்கள போலதான், அதிர்ச்சியானேன். பின்னாலதான் அவுங்க கருத்து புரிஞ்சுகிட்டேன் (மேல் சொன்னபடி).

  நீங்க இந்த பாடலோட அடுத்து பாடினவங்க பாடிய பாடல பொருத்தம் பாத்திங்கன்னா, நடுவர் கருத்து விளங்கிடும்.

  ரவி பாடிய “செந்தமிழ் தேன்மொழியாள்” அப்புறம் ஒரு பெண் பாடிய “நாளை இந்த வேளை பார்த்து” (அது சுசீலாவுக்கு தேசிய விருது கொடுத்த பாடல்) ரெண்டுமே பாட்றவறோட திறமைய காட்றதா இருந்தன.

 2. vijayasarathyr says:

  நன்றி சத்தியமூர்த்தி.

  நானும் அந்த அவங்க சொன்ன கருத்த புரிஞ்சுகிட்டேன். ஆனா அவங்க ஒண்ணு புரிஞ்சுக்கணும். அவங்க பேசறது தொலைக்காட்சியில. அதுக்கு ரீச் அதிகம். அதானல நம்ம கமெண்ட் ரொம்ப க்ளியரா இருக்கணும். என்னோட இந்த (மேலே சொல்லப்பட்ட கருத்து) ப்ளாக் அதற்கான ஒரு முயற்சிதான்.

  ரவி என் நண்பரா இருந்தாலும், எனக்கு தெரிந்த, என் கேள்வி ஞானத்துக்கு எட்டினவரையில அவர் ஒரிஜினல் பாட்டுல இருக்கறாமதிரி ஹை பிச்ல பாடல.

 3. Vikram says:

  நான் அன்றய நிகழ்ச்சியை பார்க்கவில்லை.

  ஆனால், பாடிய பாட்டில் அவர்கள் கண்டுபிடிக்கும் குற்றங்கள் சில நேரங்களை தவிர மற்ற நேரங்களில் மிகவும் ஓவராகத்தான் இருக்கிறது!

 4. Prasanna says:

  நானும் உங்களைப் போல இந்த ப்ரோக்ராமை பார்க்கும் ஆயிரக்கணக்கான மக்கள்ள ஒருவன். இருக்குற 3 ஜட்ஜுல, சுஜாதாவை தவிர மற்ற இரண்டுபேரால ஒரு சில பாட்டதான் பாடமுடியும். அது அவங்க ரெண்டு பேருக்கும் தெரியும். இருந்தும் ஏதவது ஒரு குறை சொல்லிண்டே இருப்பாங்க. ப்ரசன்னான்னு ஒரு சிங்கர் அவர் என்னோட நண்பர். என்னைப் பொறுத்தவரைக்கும் அவர் தான் ரொம்ப வெர்ஸடைல். இருந்தாலும் அவரையும் ஆரம்ப காலக்கட்டத்துல ஏதாவது சொல்லிண்டே இருந்தாங்க. இவங்கள “அதிரடி சிங்கர்” ஜ்ட்ஜ் பண்ணச் சொல்லணும். அப்பதான் புரியும்.

 5. vijayasarathyr says:

  ப்ரசன்னா உங்கள் மறுமொழிக்கு மிக்க நன்றி.

  ஸ்ரீனிவாஸ் எவ்வளவோ பரவாயில்லை என்னைப் பொறுத்தவரை. தப்பு கண்டுபிடிப்பது தான் அவர்களின் வேலை. ஆனால் அதில் கொஞ்சம் தெளிவு வேண்டும் என்பதுதான் என் கருத்து.

 6. Prasanna says:

  அதிலும் உன்னி ஒரு முறை ”அப்படிப் போடு போடு போடு” என்ற பாடலுக்கு சொன்ன கமெண்ட் ரொம்ப படா தமாசு. அந்த பஞ்ச் இருக்கணுமாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *