எண்ணங்களின் தொகுப்பு

கடந்த சிலநாட்களாக நான் தினமும் காலை வணக்கத்தை ஒரு கருத்துடனோ அல்லது ஒரு கவிதையுடனோ தெரிவிப்பது என்று நினைத்தேன். அப்படி எழுதிய சில கருத்துக்களும் கவிதைகளும் நீங்களும் ரசிக்க இங்கே…பிடித்தால் ஒரு லைக்தான் போட்டுட்டு போங்களேன்!

நன்றும் தீதும் சிறிய ஒலிவருட தூரத்தில்தான் இருக்கிறது.. நீ சொல்லும் சொல்லே உனை நோக்கி வருவது நன்றா அல்லது தீதா என்பதை டீஎமானிக்கிறது.

குழப்பமென்னும் மேகம் கலைய பிறக்கும் வெளிச்சம் என்னும் தெளிவு!
சோர்வடைந்த மனம் பிரச்சனைகளை மட்டுமே பார்ர்கும் நிலையடைகிறது. தெளிவு பெற்ற மனம் வாய்ப்புகளை மட்டுமே எதிர்நோக்குகிறது!

காரிருள் போக்கவல்லவன் பகலுக்குத் தலைவன்
பாரினில் நிகரற்றவன் ஆயிரமாயிரக் கைகளால்
பளிச்சென்ற வெளிச்சப் போர்வையை விரிக்க
தெளிந்த நற் காலை!

தோவியுன்னை அண்டினால் அது வாழ்க்கைக்கான தோவியல்ல. அது வெற்றியை சற்றே தள்ளிப்போடும் வெறும் கண்கட்டி வித்தையே!

நல்வாழ்க்கை என்னும் நிலத்தில்
நற்சிந்தனைகளை நீ பயிரிடு
ஏகபோகமாய் சாகுபடி செய்திடு
உனக்கானது போக மிச்சத்தை
பிறர்க்கு மனங்குளிர அளித்திடு!

இன்றும் விடிந்தது நேற்றை அழித்து
என்றும் புதியது ஈன்ற இந்நிகழ்காலம்
ஒன்றுமே கொணரவில்லை போனது போகட்டும்
நன்றொன்றே செய் ஆனது ஆகட்டும்!

வெற்றிக் கனி உனதென்று நெற்றிப் பொட்டில் நிதம் அடித்துச் சொல்லும் கதிரவனின் காலை!

உன்மேல் நம்பிக்கை வைத்திரு
அதற்கான காலம்வரும் காத்திரு
சுற்றி பலர் கொக்கரித்தாலென்ன
வெற்றிக் கனியை சுவைத்திடு

செய்முறைக் கல்வி அனைவருக்கும் அளித்திட
தொய்முகங் கண்ட விவசாயம் நிமிர்ந்திட
நோய்க்காக்கும் மருத்துவம் எம்சனத்தைக் காத்திட
தாய் நாடும் இனி நிமிர்ந்திடும்

ஆர்ப்பரிக்கும் அக்கினித்தேவனின்
கதகத கதிர்வீச்சாய்
உன் லட்சியமும்
தைரியமும் உன்னோடு
வெற்றி என்றும்
உன் பின்னோடு!

நீர்பட்டு முளைக்கும் மொட்டு நீ
எதிரெவன் வந்தாலென்ன உனதாகும் தருணங்கள்
வான் எட்டும் முரசு கொட்டு
இனிதாகும் இனி வரும் காலங்கள்

அழகிய ராமன்
அயோத்தியில் பிறந்தான்
சீர்மிகு ராமன்
சீதையை மணந்தான்
குணமிகு ராமன்
குகனையும் ஈன்றான்
அற்புத ராமன்
அனுமனை வென்றான்
இலக்குவன் ராமன்
இராவணனை கொன்றான்
தூயவன் புகழ்பாடு
மாயவனை போற்று
கம்பன் வர்ணனை சொன்னதுபோல
மையோ அவன் கருமை
மரகதமோ கருமை அழகு
பாற்கடலோ அதன் அளவு
அதையே எண்ணி இருந்திடு
அவனை எண்ணி வியந்திடு

 

Posted in Featured, Headline, கவிதைத் தொகுப்பு, சிந்தனைகள், பொது | Leave a comment